உடல் உள்ள நலம் -4 -- நங்கநல்லூர் J K SIVAN
என் அருமையான, என் போன்ற வயதான சகோதர சகோதரிகளே,
ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக போய்க் கொண்டிருக்கிறது இப்போது. வாழ்க்கையே வெறுத்து விடும் போல் இருக்கிறது ஸார் ''என்று சிலர் பெருமூச்சு விடுகிறார்கள். அதுவும் ஆறடி தள்ளி நின்று கொண்டு, வாயை மூக்கை மூடிக் கொண்டு, கையை கழுவி உதறிக் கொண்டு இந்த பேச்சு.
இதுவும் கடந்து போகும், எதுவும் சாஸ்வதமானதல்ல. இந்த கொரோனா நோயின் கொடுமை என்ன வென்றால் அது யார் மூலம் எப்போது, எப்படி வந்தது என்று அறிந்து கொள்ளும் முன்பே பலபேரை அது தொற்றிக் கொள்வதால் தான். அநேக நண்பர்களை, வயது வித்தியாசமின்றி இழந்து விட்டேன்.
குடை மழையை நிறுத்தாது,ஆனால் மழையிலிருந்து தலையை உடம்பை பாதுகாக்கும். அதுபோல் நாம் தக்கபடி நம்மை பாதுகாத்துக் கொண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம் இரவும் பகலுமாக வாட்ஸாப், முகநூல், மொபைல், டிவி பேப்பர் எல்லாவற்றிலும் நாம் எப்படி எல்லாம் நடந்துகொள்ளவேண்டும் எதையெல்லாம் கடைப்பிடிக்க விஜெண்டும் என்று சொல்கிறார்களே. அதைக்கேட்ட பிறகாவது பின்பற்ற வேண்டாமா? என்னால் ஜீரணிக்க முடியாதது ஆளுக்கு ஆள் சொல்லும் வைத்தியங்கள். அதைத் தின்னு , இதைத் தின்னு என்று தலையைத் திங்க வைப்பது தான் கஷ்டமாக இருக்கிறது.
நம்பிக்கை என்பது வைத்தியரின் மருந்து அல்ல என்றாலும் அதால் எந்த சோதனையையும் தைரியமாக எதிர்கொள்ள முடிகிறது. எது பாசிட்டிவாக இல்லாவிட்டாலும் நமது கண் பார்வை பாசிட்டிவாக இருக்க வேண்டும். அதன் மூலம் எல்லோரையும் அன்பாக நேசிக்க முடியும். அன்பு தான் இன்ப மயம் . நிறையபேருடன் போனில் இப்போதெல்லாம் பேசமுடிகிறது. அன்பாக விசாரித்தால் பாதி தெம்பு. முடிந்தால் வீடியோவில் நிறைய பேரைப் பார்த்து நலம் விசாரித்தால் அதுவே தனி உற்சாகம்.
என்னால் முடியுமா? என்ற தயக்கம் வேறு. என்னால் முடியும்? என்ற பாசிட்டிவ் நம்பிக்கை வேறு. கழுகுக்கும் மற்ற பறவைகளுக்கும் என்ன வித்யாசம் தெரியுமா? மழை பொழிந்தால் மற்ற பறவைகள் எங்காவது ஒதுங்க இடம் தேடும். கழுகு அப்படியல்ல . மழையைப் பொழிகின்ற மேகத்துக்கும் மேலே சென்று சௌகரியமாக பறக்கும். மழை நீர் அதை நனைக்காதே. இது தான் மனிதன் சோதனைகளில் சிக்கி வாடுவதற்கும் என்ன தான் வரட்டும் வரட்டுமே என்ற பாசிட்டிவ் மன உறுதி POSITIVE ATTITUDE இருப்பவனுக்கும் உள்ள மனோ நிலை.
நமது வளர்ச்சி எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நமக்கு பேசத்தெரிவதற்கு முன்பு, நமக்கு வார்த்தைகள் தெரியவில்லை, வார்த்தைகள் புரியவில்லை. ஒவ்வொன்றாக புரியவைத்தவள் நமது தாய். நமக்கு அவள் மூலம் தான் எல்லாம் புரிந்தது. அப்புறம் தான் நாம் காலேஜ் படித்தோம், இங்கிலிஷ் பேசினோம், வெளிநாடு பறந்தோம். இப்படி நாம் வளர்ந்த பிறகு அம்மாவை எப்படி அடக்குகிறோம்? அம்மா ஏதாவது சொன்னால், ''அம்மா நீ வாயை மூடு. உனக்கு ஒன்றுமே புரியாது...'' Mom, you dont understand anything !!!"
நிறைய விஷயங்களில் நாம் மாறிவிட்டோம். மாறுதல் அவசியம், காலத்தோடு சந்தர்ப்பத்தோடு நீயும் மாறவேண்டும் என்கிறார்களே, எல்லாவற்றிலுமா மாறுதல்??? அதற்கு தான் பகுத்தறிவு தேவை. இந்த பகுத்தறிவு அரசியல்வாதிகள் பேசும் வகை அல்ல.
No comments:
Post a Comment