Friday, May 14, 2021

old proverb

 

தெரிந்த பழமொழி, தெரியாத  அர்த்தம்  - 5    --  நங்கநல்லூர் J K  SIVAN ---

இத்தகைய  பதிவினால்  ரெண்டு வித லாபம்.  
ஒன்று  இந்த கொரோனா காலத்தில்  கொஞ்சம் நன்றாக  பொழுது போகும்.  
மற்றொன்று  இது வரை நாம்  அறியாதது, சிந்திக்காததை , யார் மூலமாகவோ  தெரிந்து கொள்ளச் செய்யும்.  .
 
''ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!''  என்பது எல்லோரும் அறிந்த ஒரு பழைய மொழி. 

இதை  நாம்  ஒரு பெண்  தான்   குடும்பத்தை அழிப்பவள்  அதை சீராக்குபவள்  என்று தான் புரிந்து கொள்கிறோம்.  ஆனால்  இதன் உண்மை அர்த்தம்  அற்புதமானது.

எந்த நல்ல காரியம்  நடந்தாலும்  அதற்கு  ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு, உதவி, அவளது எண்ணம், தீர்மானம் எல்லாம் அவசியம். அப்போது தான் அது சீர்படும்.  அதே போல  உறுதியான  மனதுடன் அவள் செயல்பட்டு  தீங்குகளை அழிப்பாள் .  நமது  நவராத்ரி நாயகி  மகிஷாசுர மர்த்தினி இல்லையா, தவம் செயது தீயவர்களை  அழிக்கவில்லையா. பெண்ணுக்கு சக்தி என்று பெயர் உண்டே.

இன்னொரு  வேடிக்கையான  பழ மொழி,    ''பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!  இது  சாப்பாட்டு  ராமன்கள்  சம்பந்தமானது என்று தான்  நாம்  புரிந்து கொள்கிறோம்.  கல்யாணத்தில் எப்போது  இலை  விரிக்கிறார்கள் என்று  பார்த்துக்கொண்டே இருந்து முதல் வரிசையில் உட்கார்ந்து கொள்பவர்கள் பற்றி அல்ல இது.
அதே மாதிரி சண்டை என்று  சேர நேர்ந்தால்  படையின் பின்  வரிசையில் நின்று  கொண்டால்  நாம் உயிர் தப்புவோம் என்ற அர்த்தமும் அல்ல.  

இதன் உண்மையான அர்த்தம்.   எப்படி  சாப்பிட போகும் போது நமது வலது  கை  முன்னோக்கி  நகர்கிறதோ, அது போல்   யுத்தகாலத்தில்,   வில்லில்  அம்பை  பொருத்தி  எவ்வளவு தூரம்     வில்லின் நாணை  வலதுகையால் பின்னால்  நிறைய  இழுத்து  அம்பை  விடுவித்தால்   அந்த  அளவுக்கு  அது   வேகமாய்ப்   பாயும்.    இந்த  பழமொழி நமக்காக அல்ல, அந்தக் கால  போர் வீரர்களுக்கு  சொல்லப்பட்டது. 

இன்னொரு  நாம்  அடிக்கடி உபயோகிக்கும் பழமொழி  '' வீட்டுக்கு வீடு வாசப்படி  ''  இதைச் சொல்லும்போது நாம்  ஒவ்வொரு  வீட்டிலும் ஒரு விதமான  பிரச்னை, சங்கடம் இருக்கத்தான் செய்யும் அதில் என்ன ஆச்சர்யம் என்கிற  மாதிரி பொருள் படும்.  

ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் வேறு.     உன்னதமான  நமது வாழ்க்கை எனும்   வீட்டுக்கு  ஆன்மீகம், பக்தி  நம்பிக்கை  சுறுசுறுப்பு  என்று  வாசற்படி ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்  அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு  தான் வாழ்க்கையில்   ஈடுபடவேண்டும்  என்ற அறிவுரை.  

அடுத்ததாக  '' கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!''

இது நாயை பிடிக்காதவன்  அதை எங்காவது பார்க்கும் போதெல்லாம்  அடிக்க கல் தேடுவது பிறகு தேடிப்பிடித்து ஒரு கல்லை கண்டுபிடித்து  நாயை அடிக்க தேடினால்  அது கிடைக்காமல் கோபமாக இருப்பது போல் ஒரு அர்த்தம் நமக்கு யாரோ    நாயைப் பிடிக்காத ஒருவர்  சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  அப்படி ஒரு நாயை அடிக்க கல் கிடைத்தாலும் அதை எடுத்து நாய் மீது அடிக்க முயல்வதற்குள்  அந்த கெட்டிக்கார நாய் ஒரே ஓட்டமாக ஓடி  காணாமல் போகிறது என்று நினைப்பது வழக்கம்.    இந்த பழமொழியின்

அர்த்தம் வேறு. 

ஒவ்வொரு  சிவன்  கோவிலிலும்   கால  பைரவர்  சன்னதி உண்டு. அதில் அவர் வாகனம் நாய்   சிலை வடிவில்  காணப்படும்.  அந்த   நாய்ச் சிலையை    கலைக் கண்   கொண்டு  பார்த்தால்  சிற்பி  வடித்த அழகிய  நாய் உருவம் தான் தெரியும்.    பக்தி அற்ற,  பைரவரை வணங்காத  வனுக்கு  அந்த  உருவம்  வெறும் கல்லாக த் தான் தோன்றும்.    நாய்   தெரியாமல்,  அவன் கண்ணுக்கு  வெறும் கருங்கல்  தான் தெரியும்  

இந்த பழமொழி சொல்லும்  அறிவுரை  என்னவென்றால் நாம்  எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...