Monday, May 17, 2021

old proverbs

 



தெரிந்த பழமொழி, தெரியாத  அர்த்தம்  - 6    --  நங்கநல்லூர் J K  SIVAN ---

இந்த பழமொழி நிறைய  பேருக்கு  தெரிந்திருக்காது என்று நம்புகிறேன்.  

''புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து'' .   மனசுலே  ரொம்ப  கவலை, கஷ்டம்  துன்பமா?   போய்   பேசாமல் ஒரு சிகரெட், சுருட்டு, பீடி  எடுத்து   வைத்துக்கொண்டு  கொல்லைப்பக்கமோ,  வாசலில் திண்ணை கிட்டே யோ போய் ஊது என்று அர்த்தமல்ல.  

''நீ  எதுக்குடா குடிக்கிறே ?''  
என் மனசுலே இருக்கிற  கஷ்டம் துயரம்  ஏமாற்றம்  கவலை  எல்லாம் மறந்து போக தம்பி""
உன் மனசுலே இருக்கிற கஷ்டம் துயரம் எல்லாம் தான் இப்போ  போயடுத்தே  இன்னும்  ஏன் இந்த குடிப்பழக்கம் என்று சிலநாள் கழித்து கேட்டால்  அப்போது என்ன பதில் சொல்கிறான்:
'மனசு சந்தோஷமாக இருந்தால் தானே  குடிச்சு கொண்டாட முடியும்?''

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்  புகையிலை குடி பழக்கங்கள் வந்துவிட்டால் லேசில் நம்மை விட்டு போகாது.  இப்போது கொரோனா கால  பழக்கமான   
வெளியில் போய் வந்தால்  கால் கை ,முகம் கழுவுதல், 
வெளியே எதுவும் சாப்பிடாமல் இருத்தல்,  
யார் மேலேயும் படாமல் தள்ளி நிற்பது, 
வீட்டு சாப்பாட்டோடு நிறுத்திக் கொள்வது. 
அனாவசியமாக எங்கும்  போகாமல் இருப்பது,  
வெந்நீர் குடிப்பது.  முக கவசம், 
இதெல்லாம் அப்புறம்  தினசரி வாழ்க்கை பழக்கமாகிவிடும்.  நல்லது தான்.  

மேலே  சொன்ன பழமொழிக்கு என்ன அர்த்தம்   ''மனது புண்பட்டிருக்கும் போது புகை விடு வதல்ல''.  
புண்பட்ட மனதை  ''புக'' விட்டு ஆற்று.   அதாவது  மனது புண்பட்டிருக்கும் போது,  தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு   diversion   ஆற்றி கொள்ள வேண்டும் என்பது தான்.   துன்பம் நேர்கையில் யாழெடுத்து  வாசிப்பது.   இப்போது தான் புரிகிறது ஏன்  நீரோ என்ற ரோமாபுரி ராஜா  அவன் ஊரே, அரண்மனையே  பற்றி எரியும்போது ஏன்   ஆனந்த  பைரவி    பிடிலில்  வாசித்தான் என்று! தலைக்கு மேலே  வெள்ளம் போனால்  சாண்  என்ன முழமென்ன  சமாச்சாரம்.. என்று  இருக்கிறான். 

''விருந்தும் மருந்தும் மூன்று நாள்''    யாராவது  விருந்தாளி  கூட சில  நாள்  தங்கிவிட்டால்  முதலில் வாழை  இலை  சாப்பாடு அப்புறம்  அலுமினியம் தட்டில்  லொட்டென்று  விழும் சாதம்  என்று தான் நாம் இதுவரை புரிந்து கொண்டோம். அதன் உண்மை அர்த்தம் வேறு.

பழைய காலத்தில்  வீட்டுக்கு  வந்து மருந்து தரும்    நாவிதர், மருத்துவர்,  வாத்யம் வாசிப்பவர்,  என்று பல வேலைகளை செய்பவர்  திண்ணையில் வந்து உட்கார்ந்து மருந்து  எல்லோருக்கும் கொடுப்பார்.  

ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு  மருந்து உண்ண வேண்டும்  என்று  பத்தியம் எல்லாம் சொல்வார்.

இந்த பழமொழியை  வெளியே சொல்லிக்கொண்டு போனால்  நிச்சயம்   ஆசிரியர்கள் எனும் வாத்தியார்கள் அடிக்க வருவார்கள்.  போலீஸ் காரனைப் பற்றி சொல்லவே  வேண்டாம்.  சாதாரணமாகவே நிறைய அடிப்பான்.    அந்த பழமொழி:

''போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை''
ஒரு  வேலையும்  இல்லாத உதவாக்கரை  பட்டம் சூட்டப்பட்டவனை அந்தக்காலத்தில் பட்டாளத்துக்கு  ஆள் எடுக்கும்போது அனுப்புவார்கள்.   அந்த மாதிரி  வேறு  வேலைக்கு  போக  துப்பு,  வழி இல்லாதவனை  வாத்யாராக  கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க  எடுத்துக்கொள்வார்கள்... என்று  ஒரு ஐதீகம்.      இதன்  உண்மையான பொருள்வேறு.  அதைத் தெரிந்து கொண்டால்  ஆச்சர்யமாக இருக்கும்  

''மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவன்,  வழி காட்டுபவன்,  traffic  constable போலீஸ் வேலைக்கு  தகுந்தவன்.  
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது தான்  சரியான  அர்த்தம்.  


இப்போதைக்கு இது போதும்.  அடுத்ததில் இன்னும் சில தருகிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...