Wednesday, May 26, 2021

PESUM DEIVAM






 


பேசும் தெய்வம் -    நங்கநல்லூர்   J K   SIVAN 

13   சகல  கலா வல்ல மஹா பெரியவா 

மஹா பெரியவாளை  நாம் ''பேசும்  தெய்வம்'' என்று போற்றுகிறோம்?  நம்மால் செய்யமுடியாததை, நினைக்காததை, நிறைவேற்றுவது அவருக்கு எளிது. மிக உயர்ந்த பதவியில் சட்டென்று ஒருவரை உட்காரவைத்தால் அவர்  எந்த விதத்தில் அதற்கு தகுதி பெற்றவர் என்கிற கேள்வி வருகிறதல்லவா?

பதிமூன்று வயதில் ஜகத்குரு பட்டம் என்பது என்ன  சாமான்யமானதா?  அதென்ன  குடும்ப வாரிசா?  இதில்  தெய்வத்தின் சங்கல்பம் நிறைய இருக்கிறது.  

13வயதிலிருந்து  21 வயது வரை தன்னை ஸ்புடம் போட்ட தங்கமாக்கிக்  கொண்டார்  மஹா பெரியவா. எண்ணற்ற பெரியவர்கள், மஹான்கள், ஞானிகள், கலைஞர்கள் , ஆகியோரை நாடெங்கும் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்று, ஆலோசித்து,  ஆராய்ந்து  தேர்ந்தவர்  மஹா பெரியவா.  

23 வது வயதில்  ஆகஸ்ட்  1917ல்  கும்பகோணம்  காமகோடி  மடத்தில்  ஒரு  அத்வைத  மாநாடு , அத்வைத சபா  ஏற்பாடு செய்தார் மஹா பெரியவா.   தேசத்தின் பல பாகங்களிலிருந்து  எங்கிருந்தெல்லாமோ  வேத பண்டிதர்கள், சாஸ்திரிகள் இதில் ஆர்வமாக பங்கேற்றார்கள். அவர்களது சேவையை  அங்கீகரித்து மஹா பெரியவா அவர்களை கௌரவித்து விருதுகள் வழங்கினார்.   ஒரு சில பெயர்கள்   நம்மை  பிரமிக்க வைக்கும்.  

 பழமானேரி பிரம்மஸ்ரீ  ராமஸ்வாமி சாஸ்திரிகள்,  
பிரம்மஸ்ரீ திருவிசநல்லூர்   ஸ்ரீ  வேங்கடசுப்பா சாஸ்திரிகள்,
மன்னார்குடி  மஹாமஹோபாத்யாய   ஸ்ரீ   யஞ சுவாமி சாத்ரிகள் 
சிதம்பரம்  மஹாமஹோபாத்யாய ஸ்ரீ   தண்டபாணி சாஸ்திரிகள்.                                                                                              திருவையாறு   ஸ்ரீ விஸ்வநாத சாஸ்திரிகள்,  Pudukottai Royal Treasurer.
ப்ரவசன கர்த்தா  ஸ்ரீ தேதியூர்  சுப்ரமணிய சாஸ்திரிகள் 
விஜயநகரம் மஹாமஹோபாத்யாய ஸ்ரீ தாதா  சுப்பராய சாஸ்திரிகள் 
குண்டூர்  ஸ்ரீ  துந்துகிரி நரசிம்ம சாஸ்திரிகள் 6. Thundhugiri Narasimha Shastrigal, Guntur.
மஹாமஹோபாத்யாய   ஸ்ரீ  N.S. அனந்தகிரிஷ்ண  சாஸ்திரிகள், கல்கத்தா சர்வகலாசாலை.
மஹாமஹோபாத்யாய  ஸ்ரீ A.சின்னசாமி சாஸ்திரிகள், கல்கத்தா சர்வகலாசாலை.
ஸ்ரீ  T.V  ராமச்சந்திர தீக்ஷிதர் , காசி ஹிந்து சர்வகலாசாலை 
காசி பண்டிதராஜ  ஸ்ரீ ராஜேஸ்வரி சாஸ்திரி திராவிட்.
ஸ்ரீ  T.V.  லக்ஷ்மிநாராயண சாஸ்திரிகள்,  மடத்தின் ஆஸ்தான வித்வான்.
சிதம்பரம் ஸ்ரீ ராமசுப்பா சாஸ்திரிகள்.
போலகம்   ஸ்ரீ   ராமா சாஸ்திரிகள், சமஸ்க்ரித காலேஜ், சென்னை. 
போலகம்  ஸ்ரீ  சுந்தர சாஸ்திரிகள், திருச்சி,
ஸ்ரீபாதம்  லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகள்,  தெற்கு கோதாவரி ஜில்லா 
ஸ்ரீ  மண்டலிங்க  வேங்கட சாஸ்திரிகள், எல்லூர் 
மஹாமஹோபாத்யாய  மதுரை  ஸ்ரீ  K.S. க்ரிஷ்ணமுர்த்தி சாஸ்திரிகள், சென்னை 
ஸ்ரீ T.A.  வெங்கடேஸ்வர  தீக்ஷிதர், ப்ரொபஸர், பாரதிய வித்யா பவன்  பம்பாய்.y.
ஸ்ரீ  காளி ரங்காச்சார்யார்,  புதுக்கோட்டை  ராயல் ட்ரெஷரர் 
ஸ்ரீ  S.R.  கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 
 
அவரவர்கள் சேவைகளை அங்கீகரித்து  விவரிக்கப்பட்டு , சபையில் அவர்களை அழைத்து சிறந்த  விருதுகள்  ''சாஸ்த்ர ரத்நாகரம் '  போன்றவை மற்றும்  மாலைகள் அணிவித்து , ரெட்டை  பொன்னாடைகள் போர்த்தி, வெள்ளி பூணல்கள் . மற்றும் பரிசுகள் வேறு,   அளிக்கப்பட்டு கௌரவி க்கப்பட்டனர்.  அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. 
    
இந்த சந்தர்ப்பத்தில் நான் கொஞ்சம் பெருமைப்படவும்  சந்தர்ப்பம் இடமளிக்கிறது.
மஹா பெரியவா  என்னுடைய  அம்மா வழி தாத்தா  கம்பராமாயணம், புராணங்கள், உபன்யாச, ப்ரவசன கர்த்தா புதுக்கோட்டை   பிரம்மஸ்ரீ   வசிஷ்ட பாரதிகளுக்கு   ''புராண சாகரம்''  விருது  அளித்து  கௌரி சங்கர  உத்ராக்ஷ ஆபரணம்  அளித்து  கௌரவித்தது,   ரொம்ப பெருமையாக இருக்கிறது.(எனது தாத்தா  ஸ்ரீ  T S  பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் குரு ).  புரசைவாக்கம்  என் தாத்தா இல்லத்துக்கே  மகா பெரியவா வந்திருக்கிறார்.(அந்த விருது  காலத்தில் கோளாறால் மறைந்து போய் அந்த வாசகம் மட்டும் எனக்கு கிடைத்தது. என் புத்தகத்தில் அதை பதிவிட்டிருக்கிறேன்)   அச்சில்  நாராயணஸ்மரணை  என்றிருப்பதைத்  திருத்தி  நாராயணஸ்ம்ரிதி என்று படிக்கவும்.  

என்னுடைய  எந்த ஜென்மத்திலோ நான் செய்த ஸத்கர்மா வாசனையில்  நான்  புரிந்துவரும்  ஆன்மீகப் பணி  அங்கீகரிக்கப்பட்டு,  பெரியவா பூஜ்ய ஸ்ரீ ஜெயந்த்ர சரஸ்வதி  ஸ்வாமிகள்  3.10.2015  அன்று  எனக்கு   அவருடைய 81வது ஜெயந்தி அன்று  தி.நகர்  கிருஷ்ணகான சபாவில்    ''பகவத் சேவா ரத்னா''  விருதை அளித்ததை  என் வாழ்நாளில் நான் அடைந்த மகத்தான பாக்யம் என்று கருதி தலை வணங்குகி றேன்.  என் உடல்நிலை சரியின்றி என்னால் அந்த மகத்தான விழாவில் பங்கேற்க இயலாமைக்கு வருந்தினேன். வீடு தேடி எனக்கு விருது வந்தது, என்னை மடத்து நிர்வாகிகள் கௌரவித்ததை மறக்க முடியாது.   என் பணியை இரவும் பகலும் தொடர்கிறேன். இதெல்லாம் காசு கொடுத்து  வாங்குவதல்ல.

மேலே சொன்ன சதஸ், அத்வைத சபாவில் மஹா பெரியவா   மாணவர்களுக்கு நமது  ஆன்மீக  நெறி, ஹிந்து சனாதன தர்மத்தில் அக்கறை உண்டாக்க ,ஆங்கிலத்தில் கட்டுரை போட்டி நிகழ்த்தினார் .அந்த கட்டுரைப்   போட்டிக்கு அவர் தந்த தலைப்பு என்ன தெரியுமா?“Ways to practice and protect Sanathana Dharma keeping with the changes in time”      சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பெரிய நகரங்களிலிருந்து அநேக மாணவர்கள் பங்கேற்றார்கள். , முதல் மூன்று பரிசுகள் பெற்று கௌரவிக்கப்பட்டார்கள். பணமுடிச்சு, புத்தகங்கள்  பரிசளிக்கப்பட்டது.
முதல் பரிசு பெற்ற மாணவர்,  ஸ்ரீ   V .R   ராமச்சந்திர தீக்ஷிதர்  பின்னர்  சென்னை சர்வகலாசாலையில் சரித்திர  ஆசிரியராக  பணியாற்றியவர். காலேஜ்கள், உயர்நிலை பள்ளிகளில் ஸ்காலர்ஷிப் உதவி ஏற்படுத்தியவர்  மஹா பெரியவா. கல்விக்கு, நமது  சனாதன தர்மத்துக்கு அவர் செய்த பேருதவி  இணை கூறமுடியாதது.

தொடரும் 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...