உடல் உள்ள நலம் - 3 -- நங்கநல்லூர் J K SIVAN
என் அருமை என் போன்ற வயதான சகோதர சகோதரிகளே,
நாம் அழகிய முகங்களை தேடும் பருவத்தை கடந்துவிட்டோம், இப்போது இனிய அழகிய இதயங்களைத் தேடுகிறோம். அழகானதெல்லாம் நல்லதாக இருப்பதில்லை, நல்லதாக இருப்பவை என்றுமே அழகானவை தான்.
ஒவ்வொரு சமயம் யோசித்துப்பாருங்கள். ஏன் இந்த கிருஷ்ணன் நமது கை விரல்களுக்கு இடையே இடைவெளி, இடுக்கு வைத்திருக்கிறான்? ஏன் ஐந்து விரலும் ஒன்றாக சேர்ந்திருக்கவில்லை? காரணம் அவனுக்கு தெரியும்.
நம்மை நேசிப்பவர்கள், நமக்கு வேண்டியவர்கள் யாராவது வந்தால் நம்முடைய விரல் த இடுக்குகளில், இடைவெளிகளில், அவர்கள் விரல்களை நுழைத்து நம் விரல்களோடு கோர்த்துக்கொண்டு நட்போடு
இழைய!! அந்த இணைப்பு சாஸ்வதமானது. மனதை இனிக்கச் செயகிறது.
சந்தோஷம் தான் சிறந்த இனிப்பு. நாம் சந்திக்கும் சோதனைகள் தான் நமக்கு பலம். அவற்றை சமாளிப்பதில் வெற்றி தான் நமக்கு ஒளி தரும் விஷயம்.
மற்றவர்கள் மீது நாம் எடுத்துக் கொள்ளும் அக்கறை இருக்கிறதே அது அவர்களை மகிழ்விக்க அல்ல. நம்முடைய உள் அன்பை வெளிப்படுத்த. ஆங்கிலத்தில் அழகாக இதை சொல்வோம். ''care is to express & not to impress people'' .
சில வார்த்தைகளை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, சமஸ்க்ரிதத்திலோ, அந்தந்த மொழியிலே படித்தால் அதற்கு தனி ருசி. தமிழில் பாரதியை, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரை, சமஸ்க்ரிதத்தில் காளிதாசனைப் போல.
கிருஷ்ணன் கொடுத்த கண்களால் நாம் நல்லவற்றையே, அவன் படைப்பில் சிறந்ததையே காண்போம். அது தான் கண்கள் பெற்ற பயன். இதயம் தீயவற்றை மறந்து, தீயவர்களை , அவர்கள் செயல்களை மன்னிக்கட் டும். மனது இறைவன் மேலே ஆணி அடித்தது போல் நிற்கட்டும். அது தான் தெய்வ நம்பிக்கை.
அன்பு எல்லோரையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும். ஒன்று சேர்க்கும். பாசம் வளரும். ஒரு சின்ன ஒரு வரி கதை கேளுங்கள் சொல்கிறேன்.
ஒரு தாய் மூளைக்கட்டி அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள் . அவள் மகன் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து பணம் கடன் வாங்கி அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
ரெண்டு மூன்று நாளில் சிகிச்சை பலனளிக்காமல் அவள் பாவம் இறந்து விட்டாள் . மகனும் மற்ற உறவுகளும் அவள் உடல் அருகே. உடல் அடக்கம் பண்ணியாச்சு. மகன் வீட்டுக்கு வந்துவிட்டான். அழுது அழுது உடல் வாடினான். அம்மாவின் அறையில் அவள் படுக்கை அருகே ஒரு மேஜையில் ஒரு சிறு ஒரு காகிதப் பொட்டலம் கண்ணில் பட்டது.
பொட்டலத்தில் சில மாத்திரைகள். அந்த காகிதத்தில் ரெண்டு வரி.
''என் ஆசை மகனே, இந்த மாத்திரைகளை மறக்காமல் சாப்பிடு. அழுதால் உனக்கு மார்பில் சளி பிடித்துக் கொள்ளும், நெஞ்சு வலி வரும்... அதற்கான மாத்திரைகள் இவை.. உன் ஆசை அம்மா ''
இது தான் எல்லா அம்மாக்களும். இந்த தாய் அன்புக்கு, படிப்பு, உயர் வகுப்பு, பணம் எதுவும் தேவையில்லை ஸார் .
நமது வாழ்க்கை ஒரு படகில் சுகமான பிரயாணம் போன்றது. காற்றடி த்த பக்கம் படகு செல்லும் . இன்றைய பிரயாண கணங்கள் நாளைய நினைவு. ஆகவே ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாக கழிப்பது அவசியம். அது இன்ப கணமோ , துன்ப கணமோ ,ரெண்டையும் ஒன்றாகவே பாவித்து அனுபவிப்போம். அது இறைவன் தந்த '' நமக்கு ஏற்ற, தகுந்த'' பரிசு.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒரு பாடம். வாழ்க்கை என்பது இருக்கும் வரை வளர்ந்து கழியவே. அதில் ஒவ்வொரு கணமும் மாறுதல்களை தருகிறது. எந்த கணமும் முந்தையது போல் அல்ல. தனித்வம் கொண்டது. நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க தான் அது தருணங்கள், கணங்கள். நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பங்கிட்டுக் கொள்வதில் உள்ள சுகம் எழுத்தில் தெரியாது. அவரவர் அனுபவத்தில் உணர முடிவது.
வாழ்க்கையை பஞ்சுடன் ஒப்பிட்டு பாருங்கள். துன்பம் துக்கம் எனும் நீரில் நனைந்தால் சுமையாகும். சிரித்து மகிழ்ந்தால் இன்னும் லேசாகி மேலே ஆனந்தமாக பறக்கும் தன்மை கொண்டது. '' கோவிந்தனுக்கு என்ன ஒரே சந்தோஷம், ஆகாசத்தில் பறக்கிறான்'' என்று அதனால் தான் சொல்கிறோம்.
இன்னொரு விஷயம் மறக்கும் முன்பு சொல்லிவிடுகிறேன். வாழ்க்கையின் ஒரு நல்ல தத்வம் என்ன தெரியுமா, தனிமையில் நமது எண்ணங்களை கட்டுப்பாட்டில் வைப்பது. மற்றவர்களோடு சேர்ந்திருக்கும்போது நமது வார்த்தைகளை கட்டுப்படுத்திக் கொள்வது.''
பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பது அவர்கள் நிறைய சம்பாதித்து பணக்காரர்களாக வேண்டும் என்று எண்ணக்கூடாது. படிப்பதால் அவர்கள் வாழ்வில் சந்தோஷமாக இருக்கவேண்டும். வளர்ந்தவர்களான பின் அவர்கள் எதற்கு மதிப்பு எதற்கு விலை கொடுக்கவேண்டும் என்று புரிந்து கொள்ள உதவும்.
ஒரு ஆங்கில வார்த்தை படித்து டயரியில் எழுதி வைத்திருந்தேன். இன்று கண்ணில் பட்டது. ஒருவனின் குணத்திற்கும் அவனது அகம்பாவத்துக்கும் என்ன வித்யாசம்? குணம் உன்னை மற்றவர்களிடமிருந்து தனியாக வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. ஆனால் அகம்பாவம் உன்னை மற்றவர்களிடம் பிரித்து வைத்து வித்தியாசமாக காட்டுகிறது. The main difference between Attitude and Ego is that : “Attitude makes u different from others,
While Ego makes u alone from others…”
நேரமிருக்கும்போது இன்னும் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment