கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN
தாகூர்
56. நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?
56 .Thus it is that thy joy in me is so full.
Thus it is that thou hast come down to me.
O thou lord of all heavens, where would be thy love if I were not?
Thou hast taken me as thy partner of all this wealth.

In my heart is the endless play of thy delight.
In my life thy will is ever taking shape.
And for this, thou who art the King of kings hast decked thyself in beauty to captivate my heart.

And for this thy love loses itself in the love of thy lover,
and there art thou seen in the perfect union of two.
எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா கிருஷ்ணா. உனக்கு என்னை பிடித்திருக்கிறது. என்னுள்ளே நீ களிக்கிறாய் என்று நான் உணரும்போது நான் ஆகாசத்தில் பறக்கிறேன். விண்ணில் உன்னைப்போல் கருடனில்லா மலேயே, நான் தனியாகப் பறக்கிறேன். நீ எங்கோ இருந்தவன், இருப்பவன் அல்ல. என்னுள்ளே இருப்பதற்கு வந்துவிட்டாய் என்று நான் அறிந்து மகிழ்கிறேன்.

உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா? என் போன்றோர் இதயம் உனக்கு கிடைக்காவிட்டால் எங்கே உன் கருணையை, அன்பை நிரப்புவாய்?
உன்னிடமிருந்து பெருகும் அன்புச்செல்வத்தில் எனக்கும் பங்குண்டு. நானும் ஒரு பங்காளி. இந்த என் இதயத்தில்,கண்ணா, உன்னுடைய ஆனந்தமான எல்லையற்ற விளையாட்டை ரசிக்கிறேன்.
இந்த என்னுடைய மானுட வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று சொன்னால் பெரிய தப்பு. நீ விரும்பியபடி அது நடக்கிறது என்றால் தான் சரி. நீ ராஜாதி ராஜனடா கண்ணா, எவ்வளவு நேர்த்தியாக அழகுடன் என் இதயத்தை கொள்ளை கொண்டவன். நான் உன் காதலி. உன்மேல் நான் கொண்ட அளவற்ற காதலில் உன் காதல் எங்கோ எப்படியோ கரைந்துவிட்டதடா. நீயும் நானும் இருவரல்ல, தனித்தனி அல்ல, உனக்கு அடையாளம் கிடையாது. நீ என்னில் கலந்து, கரைந்து, மறைந்து நானாகிவிட்டாய். இல்லை நான் நீயாகி விட்டேனா ? ரெண்டும் ஒன்றே அல்லவா?

No comments:
Post a Comment