பாரதியார் - நங்கநல்லூர் J K SIVAN
''காலமெல்லாம் காத்திருப்பேன் ..''
காத்திருப்பது ஒரு ஆனந்த அனுபவம். எல்லோரும் அறிந்த அனுபவித்த நிதர்சன உண்மை. அது எப்போது, யாருக்காக? என்பது தான் ஆளுக்கு ஆள் வித்யாசப்படும். நகத்தைக் கடிப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது, உற்று உற்று தெருமுனையை பார்ப்பது, இப்போது மொபைலில் கூப்பிடுவது....
இந்த பதிவில் நான் சொல்லும் அனுபவஸ்தன் பார்த்து பார்த்து அவன் கண் பூத்து போய்விட்டது. அவன் மனநிலையை சொல்கிறான்:
''நான் அவளையே நினைத்துகொண்டிருந்தேனா, எந்த பெண்ணைப் பார்த்தாலும் ஒருவேளை அவள் தானோ என்று உற்று உற்று பார்த்து அவர்களும் என்னை ஒரு மாதிரி ஸ்கேன் பண்ணி விட்டு தான் போனார்கள். சிலர் முணுமுணுத்தது நல்லவேளையாக என் காதில் விழவில்லை. அது நிச்சயம் என்னைப்பற்றிய நல்ல வாசகமாக இருக்காதே.
வேண்டுமென்றே அவள் என்னை ஏமாற்றிவிட்டாளா? என்ன சொன்னாள்? என்ன அடையாளம்? மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த ஆற்றங்கரை தான். வேறே எந்த ஆறுமே இல்லையே இந்த பக்கத்திலே. கிழக்கு மேற்கு வடக்கில் இடமே இல்லை.இந்த தெற்கு பக்கம் தான் அதோ அந்த மூலையில் ஒரு தோட்டம் துறவு, கொஞ்சம் ஒதுக்கிலே, ஜன நடமாட்டம் கம்மி. செண்பக செடிகள் நிறைய வளர்க்கிறார்கள் இந்த தோட்டத்திலே. ஒருவேளை பூ வியாபாரமோ ?

ஆமாம் இந்த இடத்தில் தான், இங்கு தானே காத்திரு உன்னை சந்திக்கிறேன் என்று சொன்னாள். நம்பும்படியாகவே தான் சொன்னாள். எவ்வளவு நேரமாகி விட்டது நான் இங்கு வந்து. அவளை மிஸ் பண்ணவே இல்லையே.
இந்த கல்லின் மேல் நெடுநேரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேனே. மேலே வானத்தில் அந்த சந்திரன் பூரணமாக வந்து ஒளியை எங்கும் வீசுகிறானே. அவள் சொன்னது ஞாபகம் இருக்கிறது. தான் மட்டும் வரவில்லையாம். அவள் தோழியும் கூட வருவாளாம் துணைக்கு. அவள் எதற்கு ? தேவையா ??
எல்லாம் சுத்தப் பொய், வடிகட்டின பொய். பேத்து மாத்து. என் நெஞ்சு வெடித்து விட்டது. இதோ பார் தூள் தூளாக அதை. பொட்டலம் கட்டலாம் போல் ஆகிவிட்டதே. உடல் திகு திகு என்று எரிகிறது. கோபத்தாலா அல்லது ஏமாற்றத்தாலா? ஒன்றுமே சாப்பிடாமல் பட்டினியோடு அல்லவோ ஓடிவந்தேன், உன்னை காணவேண்டும், ஒருவேளை நேரமாகி விட்டால் நீ காத்திருந்து திரும்பி சென்று விடுவாயோ என்ற அல்ப ஆசை, எதிர்பார்ப்பு. அதற்காக இதோ வேதனையில் சித்ரவதை எனக்கு. பசியும் வயிற்றைக் கிள்ளுகிறது.
''ஏ நிலவே உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதே. அழகாக மிதந்து மேகங்களை எல்லாம் அணைத்து உன் தாரகைகளோடு ஜொலிக்கிறாய். இந்த உலகத்தையே இன்ப வெள்ளத்தில் குளிப்பாட்டுகிறாய். நான்....? என் நிலையை பார்த்தாயா? எல்லாருமே தூங்கும் நேரத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறேன்? அவளைப் பிரிந்து வேறென்ன செய்ய முடியும்? இதைவிட நரகம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன ?
சரி நானாவது வந்து உன்னை பார்க்கலாம் என்றால் அது இன்னும் மோசம். கடுமையானது. வீட்டில் எப்போதும் யாராவது காவல் உனக்கு? எப்படி உன்னைச் சந்திப்பேன்? பார்க்கவேண்டும் என்று நினைக்கும்போது எல்லாம் எப்படி உன்னை த்தேடி வர முடியும்? உன்னைச் சுற்றி இத்தனை காவலா?
கண்ணம்மா, நீ என்னம்மா, ராணி!! உன்னை எப்போதும புடை சூழ்ந்து தானே இருப்பார்கள்? எத்தனை எத்தனையோ ஆசை என் மனதில், மன்னார்சாமி கோட்டை கட்டினேன். உன்னோடு சேர்ந்து இருக்க வேண்டும். இரவெல்லாம் உன்னோடு சிரித்து பேசி பாட வேண்டும், விளையாடவேண்டும். கொஞ்ச வேண்டும். குலாவ வேண்டும். உன்னை அப்படியே குண்டுக் கட்டாக கட்டி ஆயிரம் தடவை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த குறை என்னோடு இருக்கவேண்டும் என்று விதியோ?. இந்த குறை தீர்ந்து உன்னோடு பரவசமாக உன்னைப் பாடிக்கொண்டே நாள் முழுதும் உன் அருகில் நிற்க நான் ஒரு தவமும் பண்ணவில்லையே. எப்படி சாதிப்பது?
ஏதோ ஒரு படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் வெகு அழகாக இனிமையான குரலில் பாவத்தோடு நெஞ்சில் நிற்கும் ராகமாக இந்த மஹாகவி பாரதியின் பாடலை பாடி இருக்கிறார். நான் அதை கேட்டிருக்கிறேன். கேட்டவர்களும் அதை மறந்திருக்கமாட்டார்கள். என் கிருஷ்ணனை, மாயக் கண்ணனை ஒரு காதலியாக கண்ணம்மா என்று கற்பனை செயது பாசத்தோடு அழைத்து ஒரு கவிதை உலகில் உலவ ச் செயகிறார் பாரதியார் இந்த பாடலில். மேலே சொன்ன உணர்ச்சிகளை அவர் பாடலில் கண்டு ரசிக்கலாம். இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் https://youtu.be/FL0PR6sQhOU
கண்ணம்மா -- என் காதலி
குறிப்பிடம் தவறியது
(செஞ்சுருட்டி-ஆதிதாளம். சிருங்கார ரசம்)
தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந் தால்வருவேன் -- வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ -- தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் -- இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.
மோனத் திருக்குதடீ -- இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் -- பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
கடுமை யுடையதடீ -- எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்தபின்னும் -- எண்ணும்போதுநான்
அங்கு வருவதற்கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை -- கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள் -- எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.3
கூடிப் பிரியாமலே -- ஓரிராவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே, -- உன்றன்மேனியை
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் -- குறைதீர்ந்துநான்
நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் -- நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி’!
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தாழுவுது பார்.
மோனத் திருக்குதடீ-இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
.கடுமை யுடையதடீ -எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் -என்னும்போது நான்
அங்கு வருவதற்கில்லை.
கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள்-எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.
கூடிப் பிரியாமலே -ஒரிராவெலாம்
கொஞ்சிக் குல வியங்கே
ஆடிவிளையாடியே,-உன்றன்மேனியை
ஆயிரங்கோடிமுறை
நாடித் தழுவிமனக் -குறைதீர்ந்துநான்
நல்ல களிஎய்தியே
பாடிப் பரவசமாய் -நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி!

No comments:
Post a Comment