மஹா மஹோபாத் யாய பிரம்மஸ்ரீ பைங்காநாடு
கணபதி சாஸ்திரிகள்.- நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம் -
இந்த ஸ்லோகத்தை ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் தினமும் சொல்வதை நேரில் கேட்டிருக்கிறேன். இதை இயற்றியது யார் என்று யோசித்ததே இல்லை. மஹா பெரியவாளின் குரு பைங்காநாடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் குருவாயூர் தரிசனம் பெற சென்றபோது அங்கே இயற்றியது என்று அறிந்து மிக்க மகிழ்ந்தேன்.
ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம் மிகவும் மகிமை வாய்ந்த ஸ்லோகங்களுள் ஒன்று. அனுதினமும் இதனைப் பாராய ணம் செய்வதால், சர்வ ரோகங்களும் ஸ்ரீகுருவாயூரப்பனின் க்ருபையால் நீங்கும். குறிப்பாக, வாத நோய்களிலிருந்து பூரண குணமடைய இதைப் பக்தியுடன் தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.
श्रीवातपुरनाथाष्टकम्
कुन्दसुमवृन्दसममन्दहसितास्यं
नन्दकुलनन्दभरतुन्दलनकन्दम् ।
पूतनिजगीतलवधूतदुरितं तं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ १॥
குந்தஸூம ப்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம்
நந்தகுல நந்தபர துந்தலன கந்தம் |
பூத நிஜ கீத லவ தூத துரிதம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||
நமக்கு பகவான் கொடுத்த ஹ்ருதயம் இருக்
கிறதே அதுவே ஒரு தாமரை மலர். அதில் குடியிருக்க வேண்டியவன் ஸ்ரீ குருவாயூரப்பன். அவனை அதில் நிலை நிறுத்துங்கள். ஆஹா என்ன அழகு அவன் மந்தஹாசமாக புன்னகைப்பது, ஒரு கூடை மல்லிகைப் புஷ்பங் களை கொத்தாக சேர்த்து வைத்திருப்பது போல் அல்லவா இருக்கிறது அந்த புன்னகை. அப்படிப்பட்டவன் எவ்வளவு ஆனந்தமாக நந்தகோபன் கிரகத்தில் குழந்தையாக ஆனந்தத்தை அளித்திருப்பான் என்று ஒரு கணம் சிந்திப்போம். அவனைப் பற்றி ஒரு துளியாவது பக்தர்கள் பாடினாலே போதுமே அவர்கள் துயரங்கள் துன்பங்களை எல்லாம் துடைத்தெறிந்து விடுவானே.
नीलतरजालधरभालहरिरम्यं
लोलतरशीलयुतबालजनलीलम् ।
जालनतिशीलमपि पालयितुकामं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ २॥
நீலதர ஜாலதர பாலஹரி ரம்யம்
லோலதர ஸீலயுத பாலஜன லீலம் |
ஜாலநதி ஸீலமபி பாலயிது காமம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||
நமது ஹ்ருதய கமலத்தில் ஸ்ரீ குருவாயூரப்பனை நிலை நிறுத்தி வணங்குவோம். அவனது பேரழகுக்கு ஈடு சொல்லவேண்டுமானால் அதோ தெரிகிறதே நீல ஆகாசத்தில் நிறைய சுத்தமான ஜலத்தை சுமந்து கொண்டு திரியும் கருநீல மேகங்கள் எல்லை இல்லாமல். அதைதான் சொல்லவேண்டும். குழந்தைகளோடு குழந்தையாக என்னமாக அவன் லீலாவிநோதங்கள் செய்பவன். எவ்வளவு தான் தீய எண்ணங்கள், தீய செயல்கள் புரிந்தவனாக இருப்பினும் அவன் முன் வணங்கி நின்றால் அவனையும் குருவாயூர் கிருஷ்ணன் காக்க தவறுவதில்லையே.|
कंसरणहिंसमिह संसरणजात-
क्लान्तिभरशान्तिकरकान्तिझरवीतम् ।
वातमुखधातुजनिपातभयघातं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ३॥
கம்ஸரண ஹிம்ஸ மிஹ ஸம்ஸரண ஜாத
க்லாந்திபர ஸாந்திகர காந்திஜர வீதம் |
வாதமுக தாது ஜனி பாத பயகாதம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||
குருவாயூரப்பன் கிருஷ்ணனை ஹ்ருதயத் தாமரையில் வைத்து வணங்குவோம். கம்சன் எத்தனை தீங்குகள் செயது அவனைக் கொல்ல முயற்சித்தும் கடைசியில் தானே க்ரிஷ்ணனால் கொல்லப்பட்டான். பல வித கஷ்டங்கள் நிறைந்த, இந்த உலகத்தின் சோர்வை நீக்கி , நம்பிக்கை ஒளியை அளிப்பவன், முடக்கு வாதம், கீல்வாதம் என்று பல வித நோய்கள் எலும்புகளை இயங்கவிடாமல் துன்புறுத்துவதைத் தீர்த்து அவை குறையின்றி இயங்க வைப்பவன் அந்த ஸ்ரீ குருவாயூரப்பன் ஒருவனே அல்லவா?
जातुधुरिपातुकमिहातुरजनं द्राक्
शोकभरमूकमपि तोकमिव पान्तम् ।
भृङ्गरुचिसङ्गरकृदङ्गलतिकं तं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ४॥
ஜாதுதுரி பாதுக மிஹாதுர ஜனம் த்ராக்
ஸோக பரமூகமபி தோக மிவ பாந்தம் |
ப்ருங்கருசி ஸங்கர க்ருதங்கலதிகம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||
ஹ்ருதயக்கமலத்தில் குருவாயூரப்பனை வைத்து வணங்குவோம். அவன் சாதாரணமானவன் அல்ல. ஒரு சிறு இலை, ஒரு உத்ரணி தீர்த்தம், ஒரு காய்ந்தகனி அர்ப்பணித்தாலே போதுமே, சகல துன்பங்களையும் தீர்க்க ஓடிவருபவனாயிற்றே, அவன் பார்ப்பதற்கு தான் சேய் . அன்பாக அரவணைப்பதில் தாய், ஊமையும் அவனால் பேசும், செவிடும் கேட்கும். கரிய மாணிக்கமென, கருவண்டுகள் ஒன்றாக கூட்டமாக அமைந்ததுபோல் அவன் திவ்ய ஸ்வரூபம் கண்ணைப் பறிக்கிறதே .|| 4 ||
पापभवतापभरकोपशमनार्था-
श्वासकरभासमृदुहासरुचिरास्यम् ।
रोगचयभोगभयवेगहरमेकं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ५॥
பாபபவ தாபபர கோபஸ மநார்த்தா
ஸ்வாஸ கர பாஸ ம்ருதுஹாஸருசி ராஸ்யம் |
ரோக சய போக பய வேக ஹர மேகம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே || 5
குருவாயூரப்பன் கிருஷ்ணன் முக காந்தி, புன்னகை ஒன்றே பக்தர்களை கொள்ளை கொள்கிறதே. பலஜன்ம பாபங்கள் பயனாக விளையும் துன்பங்கள், கோபதாபங்கள் அனைத்தையும் விளங்குபவன் அல்லவா குட்டி கிருஷ்ணன். வியாதி, நோய்கள் தரும் துன்பங்களால் வாடும் மனங்களின் துயர் பயம் எல்லாம் நீக்கும் அவனை ஹ்ருதய கமலத்தில் வைத்து துதிப்போம்.
घोषकुलदोषहरवेषमुपयान्तं
पूषशतदूषकविभूषणगणाढ्यम् ।
भुक्तिमपिमुक्तिमतिभक्तिषु ददानं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ६॥
கோஷமுல தோஷஹர வேஷமுப யாந்தம்
பூஷஸத தூஷக விபூஷண கணாட்யம் |
புக்திமபி முக்திமதி பக்திஷூத தானம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே || 6
பார்ப்பதற்கு அவன் சிறிய, பசு மேய்க்கும் இடைச்சிறுவன். ஆஹா அவன் சர்வாலங்கார , சர்வாபரண பூஷிதனாக காட்சி தரும்போது நூற்றுக்கணக்கான சூரிய ஒளியல்லவா அங்கே தெரிகிறது. பக்தி சிறிது இருந்தால் கூட போதுமே, அந்த காருண்யமூர்த்தி குருவாயூர் குட்டி கிருஷ்ணன் முக்தி அளித்து பேரானந்தம் தருபவனாயிற்றே. அவனை ஹ்ருதய கமலத்தில் வைத்து பஜிப்போம்.
पापकदुरापमतितापहरशोभ-
स्वापघनमामतदुमापतिसमेतम् ।
दूनतरदीनसुखदानकृतदीक्षं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ७॥
பாபக தூரப மதி தாப ஹர ஸோப
ஸ்வாப கன மாபததுமபாதி ஸமேதம் |
தூனதர தீன ஸூக தானக்ருத தீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே || 7
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் , எத்தனை ஜென்ம பாபங்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும். வியாதிகள் வாட்டினாலும் நொடியில் அவற்றை அகற்றுபவன் குருவாயூர் குட்டி கிருஷ்ணன். கார்மேக வண்ணன், கருநீல கண்ணன் உமாபதியுடன் இணைந்த ரமாபதி அவன் அல்லவா. சர்வ சக்தி வாய்ந்த அந்த குருவாயூரப்பனை, பக்தர்கள் படும் துயரங்களை, துன்பங்களை அகற்றும் பக்தவத்சலம் குருவாயூரப்பனை ஹ்ருதயக்கமலத்தில் நிறுத்தி வணங்குவோம்.
पादपतदादरणमोदपरिपूर्णं
जीवमुखदेवजनसेवनफलाङ्घ्रिम्
रूक्षभवमोक्षकृतदीक्षनिजवीक्षं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ८॥
பாதபத தாதரண மோத பரிபூர்ணம்
ஜீவமுக தேவஜன ஸேவன பலாங்க்ரிம்
ரூக்ஷ பவ மோக்ஷக்ருத தீக்ஷ நிஜ வீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே || 8
குருவாயூரப்பன் திருவடி போற்றி, அவனை ஹ்ருதய கமலத்தில் வைத்து வணங்குவோம். தேவர் மாந்தர் அனைவரையும் பாகுபாடின்றி பக்தர்களாக காத்தருளி கருணை பொழியும் குருவாயூரப்பன், க்ஷண காலத்தில் பழைய ஜென்ம கர்மங்களைபோக்கி அருளும் சக்திமான். அவனை இதயத்தாமரையில் ஏற்றி அமர்த்தி வணங்குவோம்.
भृत्यगणपत्युदितनुत्युचितमोदं
स्पष्टमिदमष्टकमदुष्टकरणार्हम् ।
आदधतमादरदमादिलयशून्यं
वातपुरनाथमिममातनु हृदब्जे ॥ ९॥
ப்ருத்ய கண பத்யுதித நுச்யுசித மோதம்
ஸ்டஷ்டமித மஷ்டக மதுஷ்ட கரணார்ஹம் |
ஆததத மாதரத மாதிலய ஸூன்யம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||
இது பலச்ருதி. இதில் இந்த எட்டு ஸ்லோகங் களை ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகமாக இயற்றிய மஹா பெரியவாவின் குரு பைங்காநாடு ஸ்ரீ கணபதி சாஸ்திரி ஒரு காரண்டீ கொடுக்கிறார். யார் இந்த எட்டு ஸ்லோகங்களை மனப்பூர்வ மாக குருவாயூரப்பனை மனதில் இருத்தி பாராயணம் செயகிறார்களோ, அவர்களுக்கு பாரபக்ஷமில்லாமல் குட்டி கிருஷ்ணன் அருள் புரிவான்.
|| ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து ||
इति महामहोपाध्याय ब्रह्मश्री गणपतीशास्त्रीविरचितं श्रीवातपुरनाथाष्टकम् ॥
இதி மஹாமஹோபாத்யாய ப்ரஹ்மஶ்ரீ கணபதீஶாஸ்த்ரீவிரசிதம் ஶ்ரீவாதபுர நாதாஷ்டகம் ॥
No comments:
Post a Comment