Saturday, May 15, 2021

 


ஸூர்தாஸ்   -  நங்கநல்லூர்   J K  SIVAN

44.    கிளம்படா  கிருஷ்ணா..


Krishna Goes To The Woods
O Krishna, darling of Gokula, awake
I have brought you milk, curd and sugar-candy come and partake of these delicacies:
 your pals are at the door, calling you to play;
 the sun has risen and it's time to go to the woods.
Hearing her words Krishna joyfully arose and after breakfasting departed for the woods
Says Suradasa, my heart's always where the Lord is.


கிருஷ்ணன்  வளர்ந்து பையனாகி விட்டான்.  கோகுலம் , பிருந்தாவனம் மதுராவில்  எல்லாம்  பையன்கள் பள்ளிக்கூடம்  போனதில்லை,  ஐந்து ஆறு வயதிலேயே  மாடு  பசு மேய்க்க பழகி விடுவார்கள்.  கன்றுக்குட்டிகள் பேசும் பாஷை புரிந்து கொள்வார்கள்.   கிருஷ்ணன் இப்போ தெல்லாம்  காட்டுக்கு பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகிறான்.

அம்மா  யசோதா அவன் உத்யோகத்துக்கு  போவதற்கு வேண்டிய  ஆயத்தங்கள் செய்து தருவாள்.  எல்லா அம்மாக்களுக்கும் செய்வது தான். 

''என் கண்ணுக்குட்டி , கிருஷ்ணா, எழுந்துக் கோடா. பையா,  பொழுது விடிந்து  நீ  கிளம்ப வேண்டாமா?   இதோ பார்  உனக்கு  பால்   ஒரு   சொம்பு  நிறைய கொண்டுவந்திருக்கிறேன். குடி.   இதைத்தவிர  உனக்கு பிடிக்குமே என்று புது, புளிக்காத  பசுந்தயிர்,  கல்கண்டு போட்டு கொண்டு   வந்திருக்கிறேன். இந்த பாத்திரத்தில் நிறைய இருக்கிறது. அது உனக்கு மட்டுமல்ல டா கிருஷ்ணா, உன்னோடு விளை யாடும்  மற்ற சிறுவர்களுக்கும் சேர்த்து தான் தந்திருக்கிறேன்.  

அதோ பார் வாசலில், உன் நண்பர்கள்  உன்னோடு விளையாட வந்து நிற்கிறார்கள்.  எல்லோரும்  கிளம்புங்கள் பசுக்கள் தயாராக  நிற்கின்றன.  உங்களைத் தேடுகிறது. எல்லாமே.  சூரியன் சுள்ளென்று  கிழக்கே  உறுத்துகிறான் பார்.  

அம்மாவின்  குரல்  கண்ணனைத் தூக்கத்திலி ருந்து எழுப்பியது.  எழுந்தவன் முகம் கை கால் எல்லாம் கழுவி பல் துலக்கிவிட்டு  பசியோடு வந்தவன்  பால், தயிர் எல்லாம் வேண்டுமளவுக்கு பருகினான்.  அவன் கண்கள் வாசலில் நிற்கும் மற்ற நண்பர்களை  துழாவின.  முகத்தில் புன்னகை.  கையில் குச்சி, மேலே ஒரு கம்பளி யோடு  கண்ணன் காட்டை நோக்கி  கிளம்பிவிட்டான் நண்பர்கள் புடை சூழ.


''கிருஷ்ணா,   நீ மட்டுமா  போகிறாய், இல்லை யடா,  என்  இதயத்தையும் அல்லவா  தூக்கிக் கொண்டு சென்று விட்டாய்''  என்கிறார்  ஸூர்தாஸர்    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...