தேனான வேமனா - நங்கநல்லூர் J K SIVAN
அடிக்கடி ஒரு தலைப்பில் எழுத முடியாத காரணம் அநேக தலைப்புகளில் எழுதி வருவதால் தான். எதற்கு அநேக தலைப்புகளில் எழுதவேண்டும். ஒன்றையே எழுதி முடித்தபின் அடுத்ததற்கு போகலாமே என்பது நல்ல கேள்வி. ஒரு தலைப்பு பல மாதங்கள் கூட தொடரும். மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்ற தலைப்பில் எழுத 3 வருஷங்கள் ஆயிற்றே!!
ஒரு தலைப்பில் படிக்க பிடிக்காதவர்களை கட்டாயப்படுத்தியா படிக்க வைக்க முடியும். உலகத்தில் அநேகருக்கு அநேக விஷயங்களில் ஈடுபாடு. அனைத்து நண்பர்களும் ரசிக்கும் படியான, கோவில்கள், மகா பெரியவா, ரமணர், விவேகாநந்தனர், வேமனா, கம்பர், என் பழைய கால நினைவுகளை, சங்கீத விஷயம், சுற்றுலா, பழம் தமிழ் கவிதைகள், புராணங்கள், ஆதி சங்கரர், சூர் தாஸ், தாகூர், சிவாஜி, பழமொழி, தத்துவ, வாழ்க்கை நெறிமுறைகள் இன்னும் எத்தனையோ விஷயங்கள் எழுத வாய்ப்பு இருக்கும்போது ஒவ்வொன்றாக முடிந்தபோது தொடுவோமே என்ற எண்ணத்தால் இது போல் ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடைவெளி கூடுகிறது. மன்னிக்கவும்.
இன்று மீண்டும் தெலுங்கு தத்துவ ஞானி வேமனாவை சந்திக்கிறோம். வேமனா வேறு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை, தனக்கே இதையெல்லாம் அறிந்துகொள் என்று முதலில் தனக்கு பாடம்.
என் அருமை தெலுங்கு தெரிந்த, படிக்கத் தெரிந்த நண்பர்களே, எங்கே உங்கள் ஒருவரையும் காணோம். என்னய்யா உங்கள் தத்வ ஞானி வேமனாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விட வில்லை நீங்கள், ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ?
Apadaina velanarasi bandhula joodu................ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu...................భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ
கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் பிறரது உதவி தேவைப்படும்போது நண்பர்களை, உறவை, மற்றவர்களை எல்லாம் நாடுவாய். அப்போது தான் இத்தனை நாள் தேனாக பாலாக உன்னோடு பழகிய அவர்களுக்கு உன் பந்துக்களுக்கு உன் மேல் எவ்வளவு அக்கறை என்பது புரியும். உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார் என்பது புரியும்
நீ பரம ஏழையாகும்போது தான் உன் மனைவியின் உண்மை அக்கறை உன்மேல் எவ்வளவு என்பது புரியும். ''இல்லானை இல்லாளும் வேண்டாள்'' பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.
Chippalonabadda chinuku mutyambayye....................చిప్పలోనబడ్డ చినుకు ముత్యంబయ్యె
nitabadda chinuku nita galise....................................నీటబడ్డ చినుకు నీట గలిసె
Brapti galugu chota phalamela tappura......................బ్రాప్తిగలుగు చోట ఫలమేల తప్పురా
Viswadhaabhiraama, Vinura Vema........................... విశ్వధాభిరామ, వినుర వేమ
மழை பெய்கிறதே அதில் எங்கோ ஒரு சொட்டு வாய் திறந்த சிப்பிக்குள் வீழ்ந்தால் முத்தாகிறது.
பெரிய சமுத்ரத்தில் அது வீழ்ந்தபோது கடல் நீரோடு கலந்து அடையாளமில்லாமல் உப்பு நீராகிறது.
புரிந்துகொள். உண்மையான பக்தி உனக்கிருந்தால் அதன் பலன் மேன்மையானதென்று. சரியாடா வேமா, என்கிறார் வேமனா.
Veshabhashalerigi Kashayavastramul...................వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్
gattagane mukti galugabodhu...............................గట్టగానె ముక్తి గలుగబోదు
talalu bodulina talapulu bodula.............................తలలు బోడులైన తలపులు బోడులా
Viswadhaabhiraama, Vinrua Vema.......................విశ్వధాభిరామ, వినుర వేమ
வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கபடமாட்டாய். கதர் சட்டை தொப்பி ஒருவனை காந்தி ஆகாது. கதர் வேஷ்டி காமராஜாக்கி விடாது. தாடி உன்னை தாகூராக்காது. தலைப்பா வால் பாரதியாகிட முடியாது. பேச்சின் தோரணை மாற்றிக் கொண்டதால் நீ உயர்ந்து விட மாட்டாய். உன் காவியுடையும், மொட்டைத்தலையோ தாடியோ, ஜடாமுடியோ, உனக்கு மோக்ஷத்தை அளிக்காது. உன் எண்ணமும் செயலும் தான் உன் மதிப்பின் எடை கல். புரிந்துகொள்.
Cheppulona rayi chevilona joriga...................చెప్పులోన రాయి చెవిలోన జోరీగ
kantilona nalusu kali mullu.............................కంటిలొన నలుసు కాలి ముల్లు
intilona poru intinta gadaya............................ఇంటిలోన పోరు ఇంతింత గాదయ
Viswadhaabhiraama, Vinura Vema................ విశ్వధాభిరామ, వినుర వేమ
அன்றாட வாழ்வில் எது துன்புறுத்தும்? . செருப்புக்குள் மாட்டிக்கொண்டு காலை உறுத்தும் ஒரு துண்டு கல். காதைச் சுற்றி சுற்றி பறந்துகொண்டு கத்தும் கொசுவோ ஈயோ. கண்ணில் நுழைந்து உறுத்தும் தூசி, காலுக்குள் குத்தி உள்ளே உடைந்து போன ஒரு முள், வீட்டில் மனைவியோடும் குழந்தைகளோடும் மற்றவரோடும் நீ போட்ட சண்டை. உன்னால் இதையே தாங்கமுடியவில்லையே நீ எப்படி மற்றவர்கள் துன்பத்தைத் தீர்க்கபோகிறாய் ? சொல்லடா வேமா? என்கிறார்
Tappulennuvaru Tandopatandambu...................తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu............................లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru................తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema................... విశ్వధాభిరామ, వినుర వేమ
உன்னைச் சுற்றிப்பார். எங்கே எதில், எதால் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று அலைவோரையே தான் பார்க்கிறோம். தப்பில்லாதவன் யாரேனும் ஒருவன் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகி றவன் தன்னிடம் உள்ள கூடை தப்புகளை ஏன் எண்ணிப்பார்க்கவில்லை. ஆஹா இது என்ன வேடிக்கை! யோசித்து பாரடா வேமா என்று தன்னை கேட்டுக்கொள்கிறார் வேமனா..
Inumu virigeneni irumaaru mummaaru...................ఇనుము విరిగెనేని ఇరుమారు ముమ్మారు
kaachi yatakavachu kramamu gaanu......................కాచి యతకవచ్చు క్రమము గాను
manasu virigeneni mari chercharaadaya.................మనసు విరిగెనేని మరి చేర్చరాదయ
Viswadaabhiraama, Vinura Vema.......................... విశ్వధాభిరామ, వినుర వేమ
கனமான பலமுள்ள இரும்பை ரெண்டாக மூன்றாக உடைத்தாய். அதை மீண்டும் ஓட்டவைத்தாய். அட, பழையபடி அது ஒன்றாக பலமாக சேர்ந்துகொண்டதே. ஆனால் ஒரு மனிதனின் மென்மையான மனத்தை உடைத்தாயே, உன்னால் எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடிந்ததா? வேமா இதை முதலில் புரிந்து கொள்ளடா?
Medi pandu chooda melimaiyundu...................మేడి పండు చూడ మేలిమైయుండు
Potta vippi chooda purugulundu......................పొట్ట విప్పి చూడ పురుగులుండు
Pirikivani madibinkamilagura..........................పిరికి వాని మదిని బింకమీలాగురా
Viswadhaabhirama vinura Vema..................... విశ్వధాభిరామ, వినుర వేమ
ஒரு சில பழங்களை உனக்கு தெரியும். பார்க்க அழகாக பள பளவென்று நாக்கில் ஜலம் ஊறும் . தின்பதற்கு ஆசையாக இருக்குமே உள்ளே பிரித்துப் பார்த்தால் கூடைப் புழு நெளியுமே. அதைத் தூக்கித்தான் எறியவேண்டும்
நீ பார்க்கும் மனிதர்களும் அப்படித்தான். வீரனாக காட்டிக் கொள்பவன் உள்ளே அவன் கோழையாக இருக்கலாம். . தர்மிஷ்டனாக தெரிவான். ஆனால் சொந்தக் காசு ஒரு தம்படி கூட தரமாட்டான். படு கஞ்சன். பக்திமான் வேஷத்தில் இருந்தும் உள்ளே அவன் ஒரு கிராதகன். வெளிப்பகட்டில் மயங்காதேடா வேமா...
இன்னும் வேமனாவை கேட்போம்.
No comments:
Post a Comment