சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN --
சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.
संतोषस्त्रिषु कर्तव्यः स्वदारे भोजने धने।
त्रिषु चैव न कर्तव्योऽध्ययने जपदानयोः॥ ०७-०४
saṃtoṣastriṣu kartavyaḥ svadāre bhojane dhane।
triṣu caiva na kartavyo’dhyayane japadānayoḥ॥ 07-04
வீட்டுக்கு ஒளி தருபவள், மஹாலக்ஷ்மியாக மங்கல விளக்கான மனைவி, அவளால் தான் அந்த வீட்டில் வயிறார மற்றவர் கள் உண்கிறார்கள், அவளால் தான் அந்த வீடு சுபிக்ஷமாக இருக்கிறது. ''அவங்க தான் ஆறை நூறு ஆக்குவாங்க''. சாமர்த்திய காரங்க. இது திருப்தி தரும் விஷயம். ஆனால் எதில் திருப்தி இருக்க கூடாது தெரியுமா, கற்பதில், தியானத்தில், தான தர்மம் செய்வதில். மேலும் மேலும் அதில் ஈடுபட ஈடுபட ஆனந்தம் பெருகும். .
दीपो भक्षयते ध्वान्तं कज्जलं च प्रसूयते।
यदन्नं भक्षयेन्नित्यं जायते तादृशी प्रजा॥ ८ – ०३
dīpo bhakṣayate dhvāntaṃ kajjalaṃ ca prasūyate।
yadannaṃ bhakṣayennityaṃ jāyate tādṛśī prajā॥
விளக்கின் ஒரே வேலை, இருட்டைப் போக்குவது. ஆனால் அதே நேரம் புகையையும் படரவைக்கிறது. அது எண்ணையின் கோளாறு என்பாரும் உண்டு. அது போலவே உணவு. அது ஒருவன் உயிர் வாழ அவசியம். ஆனால் அவன் எதை சாப்பிடுகிறான் என்பதைப் பொருத்து தான் அவன் சந்ததி உருவெடுக்கும். .
क्रोधो वैवस्वतो राजा तृष्णा वैतरणी नदी ।
विद्या कामदुधा धेनुः संतोषो नन्दनं वनम् ॥८-१४॥
krodho vaivasvato rājā tṛṣṇā vaitaraṇī nadī ।
vidyā kāmadudhā dhenuḥ saṃtoṣo nandanaṃ vanam ॥8-14॥
கோபம் ஆத்திரம் என்கிறோமே அது யார் தெரியுமா? கண்ணால் காண முடியாத எமதர்மராஜனின் அம்சம். உருவகம். மரணத்தின் சாயல். தாகம் என்பது நரகலோகத்தில் ஓடும் வைதரணி ஆறு. அதே நேரம் ஞானம் அறிவு என்பது காமதேனு மாதிரி. அதன் மூலம் தேவையானதைப் பெறலாம். திருப்தி, போதும் என்கிற தன்மை இருக்கிறதே அது தான் ஐயா, இந்திரன் தோட்டத்து முந்திரி.
கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்
ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.
“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதைகள் புறப்பட்டு போய் விடுவார்கள் ”.
இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம். நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே ஜரா எனும் வேடனின் அம்பு காலில் தைத்து, மறைந்து விட்டார். மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. இமயத்தில் பனி உள்ள வரை கங்கை இருக்கும். கிராம தேவதைகள் வழிபாடும் நாடு முழுதும் உள்ளது. இன்னும் காலம் நிறைய இருக்கிறது கலி முற்றி முடிவுக்கு வர.
ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.
இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.
क्रोध से तात पियो चरणन से स्वामी हतो जिन रोषते छाती
बालसे वृध्दमये तक मुख में भारति वैरिणि धारे संघाती ।।
मम वासको पुष्प सदा उन तोडत शिवजीकी पूजा होत प्रभाती ।
ताते दुख मान दैव हरि में ब्राह्मण कुलको त्याग चिलाती । 15- 16।।
“ ஹே மஹா விஷ்ணு, என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால் உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)
இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். சமீபத்தில் தானே மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொயது அதன் தளங்களினால் சிவ பூஜை செய்வதையும் இது விமர்சிக்கிறது.
भूतल खनी के बीच सभी ने जो शिखरधारी प्रसिध्द कियो है ।।
तिहुँ लोक के धाक तुम को धराकुच अथ कहि यह को गिनती है।
ताते बहु कहना है जो वृथा यशलाभहरे निज पुण्य मिलती है ।।१९।।
“கிருஷ்ணா நீ பலே ஆளடா. உன் இடது காய் சுண்டுவிரலால் கோவர்தன கிரி மலையை உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன்னைப் புகழ்ந்து பாடுகிறார்கள். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேனே. என்னை யாராவது புகழ்கிறார்களா ? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது! உன்னைத்தான் சொல்கிறேன்.
No comments:
Post a Comment