ஹிந்து கோவில்கள் சிலைகள்.... நங்கநல்லூர் J K SIVAN
இது பொய்யல்ல. நமது கலாச்சாரம் உலகில் எங்கெங்கோ வெல்லாம் பரவி இருந்திருக்கிறது என்பதற்கு தக்க ஆதாரங்கள் நிதர்சனமாக நமக்கு அடிக்கடி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
தென் கிழக்கு ஆசியாவில் வியட்னாம் என்று ஒரு நாடு. நமது சோழர்கள் பாண்டியர்கள், வடக்கே சில ராஜாக்கள் எல்லாம் ஒருகாலத்தில் புஷ்பகம், சாவகம்,காம்போஜம் என்று பழம்பெயர்கள் கொண்ட பல தேசங்களுக்கு கடல் கடந்து சென்று ஹிந்து நாகரீகம் அங்கெல்லாம் பரவி இருக்கிறது.
வியட்நாமில் பல்லாயிரம் ஹிந்துக்கள் இன்றும் வாழ்கிறார்கள் . அந்த ஹிந்து கலாச்சாரம் ரொம்ப சிதிலம் அடைந்திருக்கிறது. இறந்தபின் நந்தி வந்து அவர்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
ஹோ சி மின் நகரத்தில் இன்றும் சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது .அதோடு தெண்டாயுத பாணி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் கூட உண்டு. தமிழர்கள் சென்று வணங்குகிறார்கள்.
வியட்நாமில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்று இருந்தாலும் சமீபத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் நாலாயிரம் வருஷம் வயதான மஹா விஷ்ணு கிடைத்திருக்கிறார். தலை மட்டும் தான் தெரிகிறது. வேத காலத்து மஹா விஷ்ணு.
தெற்கு வியட்நாமில் மீகாங் ( மா கங்கா என்று பெயர் இருந்திருக்கிறது) டெல்டா ஆற்றங்கரையில் விஷ்ணுவைப் பார்த்து வெளியே எடுத்துள்ளார்கள். விஷ்ணு எப்போதும் நீர்ப் பக்கம் தானே இருப்பார்.
ஒரு துயரமான எண்ணம் என்னவென்றால் ஹிந்து கோவில்கள், பண்பாடு, நம்பிக்கை, நாகரீகம் எல்லாவற்றையும் வளர்த்தவர்களை விட அவற்றை அழிப்பவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். அது இன்றளவும் தொடர்கிறதே.
தாஜ் மஹால் ஒரு காலத்தில் தேஜோமய ஈஸ்வரன் கோவில். மெக்காவில் சிவலிங்கம், இந்தோனேசியாவில் ஹிந்து கோவில்கள். தாய்லந்தில் கம்போடியாவில் ஹிந்து கோவில்கள் எல்லாம் இன்னும் அழிக்காமல் இருந்து வரும்போது நமது தேசத்தில் கோவில்கள் , குளங்கள், அக்ரஹாரங்கள், விக்ரஹங்கள் உருமாறி குறைந்து கொண்டே போக காரணம் யார்?. நாம் தானே? அடுத்த தலைமுறையாவது இதில் அக்கறை காட்டுமா ?? காட்டவேண்டாமா?
No comments:
Post a Comment