ஆதி சங்கரர் --- நங்கநல்லூர் J K SIVAN
சாதனா / உபதேச பஞ்சகம் - 2
இப்போது நாம் ஏறப்போவது 9வது முதல் 16வது படி வரை . அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட். வாழ்க்கைப் படிகளில் ஏறுவது அவ்வளவு சுலபமில்லை.
सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्।
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्॥२॥
சங்க ஸத்ஸூ விதீயதாம் பகவதோ பக்திர் த்ருத தீயதாம்
ஸந்த்யாதி பரிசீயதாம் த்ருததரம் கர்மாஷு ஸந்த்யஜ்யதாம்
சத்வித்வானுபஸ்ரூப் யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா சேவ்யதாம்
ப்ரம் மைகாக்ஷரமர்த்யதாம் ஸ்ருதிசிரோவாக்யம் சமாகர்ண்யதாம்
9. சத் சங்கம் என்று சொல்கிறோமே. அது வேறொன்றுமல்ல. நல்லவர்களோடு கூட்டு வைத்துக் கொள்வது. நமக்கு புதிதாக நல்ல பழக்கங்கள் வருவது லேட் ஆனாலும் இருக்கும் கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதனால் நிச்சயம் குறையும்.
10. பகவான் மேல் பக்தியை தொடர்ந்து வளர்க்க வேண்டும். கடவுள் நம்பிக்கை சத் சங்கத்தால் எளிதில் மலரும்.
11. மனம் எப்போதுமே வெவ்வேறு உணர்ச்சிகளைக் கிளப்பும் . அதன் கொந்தளிப்பை தவிர்த்து அமைதியைப் பெற முயற்சி செய்யவேண்டும்.
12. நமக்கு என்று சில கர்மாக்கள் இருக்கிறது. அதை விடவும் முடியாது. அதுவும் நம்மை விடாது. எதெல்லாம் விட முடியுமோ அவற்றை ஒவ்வொன்றாக விட்டு விட்டு செய்யவேண்டிய கர்மாக்களை விடாது பற்றின்றி செய் என்கிறார் சங்கரர்.
13. கற்றறிந்த ஆச்சர்யனை தேடி சரணடைந்து குருவாகக் கொள்.
14. ஆச்சர்யனின் பாதுகை கூட வழிபடுவதற்கு உரியது.
15. ஏக அக்ஷரமான ஓம் எனும் சக்தி வாய்ந்த பிரம்மத்தை அளிக்கும் மந்திரத்தை விடாமல் உச்சாடனம் செய்.
16. நமக்கு தெரியாவிட்டாலும் யாராவது வேதங்களை பாராயணம் செய்வதை காதால் கேட்போம். நல்ல சப்தம் காதில் விழுந்தாலே நாம் கொஞ்சம் உயர்வோம்.
அடேயப்பா, ஆதிசங்கரரின் உபதேச பஞ்சகத்தில் இதுவரை பதினாறு படிகள் ஏறிவிட்டோமே. இன்னும் கொஞ்சம் ஏறுவோம். ஒரு படிக்கட்டு - எட்டு படிகள் கொண்டது. சுலபமாக ஏறுவதற்கு மனதில் தெம்பை தருகிறார் ஆதி சங்கரர்.
எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள் கிறோம். சாதன பஞ்சகம் / உபதேச பஞ்சகம் என்று இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். . ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு 8 படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை நாம் தான் ஏற்கனவே 8 படிகள் ஏறிவிட்டோமே. இத்துடன் நாம் உயரே போய் 16 படிகள் மேல் நிற்கிறோம். அடுத்து வரும் படிகளில் ஏறுவோமா?
No comments:
Post a Comment