கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN
''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீர் குரல் பாடல் என்னை சிறுவயதிலேயே கவர்ந்த ஒரு சினிமா பாட்டு. கர்நாடக சங்கீத கல்யாணி ராக பின்னணி கொண்டது. 1956ம் வருஷம் சந்தானம் என்ற ஒரு படத்தில் நாகேஸ் வர ராவ் பாடுவதாக ஒரு காட்சி கருப்பு வெளுப்பில் யு ட்யூபில் பார்த்தேன்.
நாகேஸ்வர ராவ் அக்கால வழக்கப்படி ஒரு பியானோ எதிரில் உட்கார்ந்து அதற்கும் தனக்கு சம்பந்தமே இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டு வாயசைப்பார், விரலசைப்பார்.
எதிரே சாவித்ரி குளத்தில் வாத்து இறக்கை அடிப்பது போலொரு டான்ஸ் பண்ணிக் கொண்டு தன்னைத் தானே ப்ரதக்ஷிணம் பண்ணுவார். பார்க்க வேடிக்கை யாக இருக்கும்.
இசை தக்ஷிணாமூர்த்தி.
மிகச் சின்ன பாட்டு என்றாலும் இன்றும் என் மனதில் இடம் பெற்று என்னை பாட வைக்கும் சக்தி கொண்டது.
https://youtu.be/q3IBZac0lk8
No comments:
Post a Comment