Thursday, December 1, 2022

UNEASINESS


 மனக் கிலேசம்...  நங்கநல்லூர்  J K  SIVAN 


எப்போது கேட்டாலும்  அலுக்காமல்   என்னுள்ளே  கிருஷ்ணனை  பலப்படுத்தும் ஒரு பாடல் இது. 

''ஆட்டுவித்தால் யாரொருவர்   ஆடாதாரே கண்ணா”  என்ற T.M.S. பாட்டை  மீண்டும் ஒருநாள்  கேட்டுகொண்டிருந்தபோது   இந்த எண்ணம் தோன்றியது.   சகாதேவனும்  கண்ணனும் சந்திக்கும்  கற்பனை. அதை  எழுத  உட்கார்ந்தேன். 

பாண்டவர்கள்  எல்லாவற்றையும்  தருமனின் சூதாட்டத்தினால் இழந்து பஞ்ச பராரியாக  அமைதியான வனத்தில்  இருக்கிறார்கள்.   பேரே  அமைதியாக இருக்கிறதே.  காம்ய வனம். 'calm' ய வனம்.  

சல சலவென்று  தெள்ளிய  நீரோடு  ஒரு  சிற்றாறு   ஓடிக்கொண்டிருக்க   அதன்  இரு கரைகளிலும்   அடர்ந்த    வாச மிகு  மலர்கள்   காற்று  வீசிய போதெல்லாம்   நறுமணத்தை வாரி அள்ளி  வீசியது.  சகாதேவன் தனியாக   எதோ யோசனையில்  ஆழ்ந்திருந்தான்.   தங்களுக்கு நேர்ந்ததையெல்லாம்  ஒன்றன் பின் ஒன்றாக  யோசித்துக் கொண்டே  அருகில் இருந்த  சில சிறு கற்களை அந்த  ஓடையில் வீசிக்கொண்டிருந்தான்.  கிருஷ்ணன்  வந்ததையோ, தன் பின்னால் நிற்பதையோ   கவனிக்க வில்லை.   கிருஷ்ணன்   சகாதேவன் கவனத்தைக்   கலைக்க   கனைத்ததையும்  கேட்கவில்லை. சஹாதேவன்  தோளை  தொட்டு  உலுக்கினான் கண்ணன் 
“”சஹாதேவா!!  எந்த கோட்டையை  பிடிக்க யோசனை.?”
“அட கிருஷ்ணா,  பூனை போல்  பேசாமல்  வந்து நிற்கிறாயே. எப்போது வந்தாய்?
''நான் வந்து வெகு நேரமாகிறது.  கேட்டதற்கு   பதில்  சொல்: எந்த கோட்டையை  பிடிக்க யோசனை.?”
''இருந்ததையே கோட்டை விட்டவர்களுக்கு  எதற்கு  புதிய கோட்டை ?”
“யுத்தம்  வந்துவிட்டதே  என்ன செய்யலாம்  என்று  யோசனையா?”
“யுத்தம்  வரும்  என்று தான் முன்பே தெரியுமே எதற்கு  எனக்கு அந்த கவலை  கிருஷ்ணா?”
“அப்படியென்றால் கௌரவர்களை  ஜெயிக்க முடியாதோ என்ற  கவலையா?”
“அதைப்பற்றி  நான்  எதற்கு கவலைப்படவேண்டும்?”
“ஏன்  உனக்கு  பொறுப்பில்லையா?”
 “எல்லாம்  என்னிச்சைப் படியாகவா  நடக்கிறது கிருஷ்ணா?”  
சஹாதேவன் சிரித்தான் .
“என்னமோ  சஹாதேவா!!   நீ பேசுவது,  நடந்துகொள்வது  எல்லாம்  எப்போதுமே  எனக்கு புரியாத   புதிராகவே இருக்கிறது”
''...............................................''
“ என்ன பதிலையே காணோம் சகாதேவா??”“
''..................................''
”ஏதோ  மறைக்கிறாய்  சகாதேவா!!!.  சொல்லேன்”
 “விதியை  மதி  வெல்லுமா  கிருஷ்ணா??”
“ஏன்  இந்த பீடிகை??  புரியும்படி சொல்லேன்!!”
“தெரியாதவர்களுக்கு  விளக்கி மறுபடியும் சொல்லலாம். எல்லாமே புரிந்தவனுக்கு  எதற்கு  புரியவைக்க வேண்டும்?”.
“இது தான் உன்னிடம்  எனக்கு  பிடித்த  விஷயம்சகாதேவா ...  சொல்லாமல்  சொல்வது    உனக்கு கைவந்த கலை”“ “கிருஷ்ணா.  இந்த  யுத்தம்  வரும்  என்று உனக்கு ஏற்கனவே  தெரியுமல்லவா?
''.....................................''
''இந்த யுத்ததில் யார்  அழிவர்,  யார் மீள்வர் என்பதும் உனக்கு தெரியுமல்லவா ??
“என்ன பேசுகிறாய் சகாதேவா,எனக்கும் இந்த  யுத்ததிற்கும்  என்ன சம்பந்தம்?   நான்  உங்கள் நண்பன்.  இயன்ற உதவி புரிகிறேன. அவ்வளவு தானே!''
” ஹ ஹ ஹ””    கிருஷ்ணா,   நீ   எங்களுக்கு மட்டுமா உதவுபவன்?''
'' சஹாதேவா.   நீ  தான்   இப்போது என்னை  சோதிக்கிறாய்''  
“ கிருஷ்ணா, பொம்மலாட்டத்தில்   பொம்மைகள் ஆட அந்த   இயக்குபவன் அல்லவோ  கயிற்றை இழுத்து பிடித்து  அவன்  அசைப்பதற்கு ஏற்ப  அல்லவோ  பொம்மைகள்  ஆடுகின்றன.    இந்த யுத்தம்,  அதன் காரணம், அதன் விளைவு, முடிவு
 எல்லாம்  உன்  கையில் என்று  எனக்கு மட்டும்  தெரியும்  கண்ணா!.   நான் ஏன் கவலைப் பட  வேண்டும்?  உன்னை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.  

இன்று ஏதோ  என்னையும்  மீறி  ஒரு சங்கடத்தில்  மூழ்கி  அதால்  பெரும் சேதம் விளையப் போகிறதோ என ஓர் நிம்மதி 
யின்மை எனக்குள்  தோன்றுகிறது.    ஏன் அப்படி,  அது என்ன என்று தான்  சிந்தித்துகொண்டிருந்தேன்.  எது  வரினும் அது நீ  அறிவாய்  எனவே  நீயே  அத்தகைய  சங்கடத்திலிருந்து  மீட்பவன்.  மீட்க வேண்டும்,   என்று  தான் உன்னைப்    பற்றி  நினைத்துக்   கொண்டிருந்தேன். நீ  வந்து நிற்கிறாய்.''

“சஹாதேவா,  நான்  என்னப்பா  செய்ய முடியும்??. “”நீங்கள்  அனைவரும்  உங்கள்  துன்பத்தை  நீங்களே  விலைகொடுத்து வாங்கிவிட்டு  அதற்கு என்னை  ஏன்  குறை சொல்ல வேண்டும்??.  உன்னைத்  தேடி  துரியோதனன் வருகிறானாம்  எதற்கு என்று உன்னைக் கேட்க தான் வந்தேன்.ஆனால்  நீ அதைப்  பற்றியே  வாய் திறக்கவில்லையே ''
“எனக்கே  தெரியாது கண்ணா.   ஆனால்  இதுவே  ஒரு வேளை  என் சங்கடமோ என தெரியவில்லை,  கண்ணா””
“நடப்பது நடந்தே தீரும்,   வருவது பற்றி இன்று  ஏன் கவலை கொள்கிறாய். என் மேல்  பாரத்தை போட்டுவிட்டேன் என்றாயே  நான் தானே அதை இனி  சுமக்க வேண்டும்.  அவ்வாறே ஆகட்டும்.”””
கண்ணன்  சென்றான்.
++
சகாதேவன்  ஞானி, சிறந்த  வானசாஸ்திரி.  துரியோதனன் சஹாதேவனை  மஹா பாரத யுத்தத்தில்  வெற்றி பெற  பூஜை செய்வதற்கு  ஒரு  சிறந்த  நாள் பார்த்து கொடுக்கச்  சொன்னதும்,   சகாதேவன் அமாவாசைக்கு நாள்  குறித்துக்  கொடுத்தான். தன்னை நம்பி தனது சாஸ்திர  அறிவை மெச்சி  துரியோதனன் உதவி கேட்கும்போது சகாதேவன் பொய்  சொல்ல மாட்டான்,   சரியான  வெற்றி தரும் நாளைக்  குறித்து கொடுப்பான் என்று துரியோதனன் அறிவான்.  அவனுக்கு சகாதேவன் துரோகம் செய்யமாட்டான் என்றும்  கண்ணனுக்கு தெரியும்.   ஆகவே  கிருஷ்ணன்   போதாயன அமாவாசையாக ஒரு நாளை மாற்றி  களபலி கொடுத்து  பாண்டவர்க்கு வெற்றி தேடி தந்ததும்  பாரதத்தில் படிக்கிறோமே. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...