நாம் சந்தோஷப்படலாம்..
#நங்கநல்லூர்_J_K_SIVANநாம் எல்லோருமே ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.
சிலர் வீட்டில் ஒரு குளிர் சாதன பேட்டி பிரிட்ஜ் fridge இருக்கிறதே.
அநேகருக்கு உடம்பில் அடுத்த நாள் அணிய துணி, ஆடை, இருக்கிறது.
சிலருக்கு ஏதோ பழசானாலும் ஒரு ஒட்டு வீடாவது குடிசையாவது இருக்கிறதே, கால் நீட்டி படுக்க இடம் இருக்கிறதே.
கணக்கெடுத்து பார்த்தால் இப்படி இருக்கும் நாம் உலகத்தில் வாழும் ஜனங்களில் முக்கால்வாசி ஜனங்களை விட பணக்காரர்களாம்..
அடேயப்பா என்ன நிலைமையில் மற்றவர்கள், பரம ஏழைகள் உலகெங்கும் வாழ்கிறார்கள் என்று யோசிக்கவே நடுங்குகிறது.
நமக்கு பர்ஸ் இருக்கிறது, அதில் ரூபா காசு இருக்கிறது. எங்கே வேண்டுமானாலும் பஸ்ஸிலோ, ட்ரைனில் நின்று கொண்டோ போக முடிகிறது. நாம் பணக்கா ரர்களாக இல்லையே என்று வருத்தப்படவே வேண்டாம்.
மேலே சொன்ன சின்ன விஷயங்கள் இருந்தால் கூட, உலகத்தில் உள்ள மக்களில் முதல் 18 சதவீத வசதி படைத்த பணக்கார மக்களில் நாமும் ஒருவர் என்று புள்ளி விவர கணக்கு பார்ப்பவர்கள் சொல்கிறார்கள். .
அப்படியென்றால் மற்றவர்கள், அதாவது, 82 சதவிகித மக்களின் கஷ்டம் நமக்கு தெரியவில்லை. ஏதோ நாம் தான் வசதி இல்லாதவர்கள் என்று அங்கலாய்க்கிறோம்
கையில் காசு இல்லை, கடன் இன்னும் பாக்கி இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக கட்டி கடனை தீர்க்கிறோம், ஏதோ ஊருக்கு கடோசியில் ஒரு சின்ன வீடு, ஐயையோ அதில்லை, சின்னதாக ஒரு வீடு வாங்கி விட்டோம். அப்போலோவோ வேறே ஏதோ ஆஸ்பத் திரி மருத்துவ செலவில்லை. சைக்கிளில் 20 கி.மீ. மிதித்துக் கொண்டாவது வேலைக்கு செல்கிறோம், கார் இல்லை.... ஸ்கூட்டர் இல்லை,
''யோவ், நீ ஏழை இல்லை... ''
உலகத்தில் உள்ள எத்தனையோ லக்ஷம் மக்கள், இந்த வாரம் சாகப்போகிறவர்கள், வியாதியால் சகலமும் இழந்து, நரக அவஸ்தை படுபவர்களில் நானும் நீயும் சேர்த்தி கிடையாது என்று தெரிந்து கொண்டு ஆனந்தமாக தையா தக்கா என்று குதிப்போம்.. கிருஷ்ணா தேங்க்ஸ் டா என்று சொல்லுவோம். ஏதோ நமக்கு ஆயுசு கெட்டி டா .
கடைசியாக ஒரு குட்டி சேதி சொல்லி விட்டு ஓடி விடுகிறேன்.
நீ இந்த பதிவை பார்த்தாயா?, படித்தாயா?, புரிந்து கொண்டாயா?..
ஆஹா அப்படியென்றால் உலகத்தில் உள்ள 3 கோடி மக்களில், கண் பார்வை இன்றியோ, படிக்க முடியாதவர்களோ, படித்தாலும் புரிந்து கொள்ள முடியாத மனோ நிலை கொண்டவர்கள், பைத்தியங் களில் நீ கிடையாது என்று சந்தோஷப்படவேண்டும்...
மறுபடியும் நரசிம்மா உனக்கு தேங்க்ஸ்.
No comments:
Post a Comment