Monday, December 5, 2022

 




DEAR FRIENDS, BREAKING THE  IMPOSED REST KEEPING AWAY FROM COMPUTER FOR A WEEK ON MEDICAL ADVICE I AM COPYING ONE OF MY EARLIER POSTS ON LORD SIVA AND ANNAMALAI DEEPAM....

HOPING TO


MEET YOU ALL AGAIN FROM NEXT MONDAY...

சர்வம் சிவ சக்திமயம்.    #நங்கநல்லூர்_J_K_SIVAN
 
விஞ்ஞானம் சொல்கிறபடி  நியூட்ரான் சாது.  தானாக  இயங்காத  சக்தி அற்ற விஸ்தாரமான பொருள். அதே அளவு ப்ரோட்டான் படு சுட்டி. சக்தி மிக்கது. ரெண்டும் ஒன்று சேர்ந்தால் தான் அளவற்ற சக்தி.  

இதை தான் நமது ரிஷிகள்  பழங்காலத்தில்  சிவன் அசையாமல்  தியானத்தில்,மோனத்தில் இருக்கும் பரம்பொருள் , சக்தி அவனோடு இணைந்து அர்த்த நாரீஸ்வரனாக  சிவன்  எல்லையற்ற சக்தி கொண்ட வன்  என்கிறார்கள்.   மிகப்பெரிய அழிவுக்கான சக்தி யை  அணுவால் பெறுகிறோம். ரேணு என்றால் துகள்.  அம்பாளுக்கு ரேணுகா என்று பெயர்.  அவள் சிவனோடு இணைந்து  இந்த ப்ரபஞ்சம்  சர்வ சக்தி பெற்றதாக இருக்கிறது. சகலத்தையும்  அழிக்கும் சர்வ ஸம்ஹார  மூர்த்தி  சிவன். 

ப்ரோடோனில் அணுத் துகளை உற்பத்திசெய்வது  எலக்ட்ரான்.  இதையே பிரபஞ்ச  சிருஷ்டி கர்த்தா ப்ரம்மன்  என்று ரிஷிகள் நமக்கு சொல்கிறார்கள்.   யோகம் ஜீவனை  ஆத்மா எனும் பரமனோடு இணைக்கிறது. 

மௌனமாக இருந்த தட்சிணாமூர்த்தியே  முதன் முதலில் யோகத்தை உணர்த்தியவர்.  மொஹஞ்சதாரோ ஹாரப்பா   நாகரிக புதை பொருள் ஆராய்ச்சி பழம் பெரு  மக்கள்  சிவனை வணங்கியதை காட்டுகிறது. சிவன் கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு
முந்தியவன்,  பழமனாதி .   வேத மந்திரங்கள், உப நிஷதங்கள்  மௌனத்தை பற்றி, யோகத்தை பற்றி எல்லாம்  பக்கம் பக்கமாக  சுலோகம் ஸ்லோகமாக சொல்கிறது. தியானத்தால் ரிஷிகள் கண்ட அனுபவம் நமக்கு பரிசாக  அவை  கிடைத் துள்ளன. 

பிரபஞ்சத்தில் முதல்  சிருஷ்டி  லிங்கம்.  அதன் உருவம்  வினோதமானது. ஆங்கிலத்தில்  எல்லிப்ஸாயிட்   ellipsoid .  அதாவது கோளமாக  உருண்டையாக இல்லாமல்  நீள  உருண்டை.   பிடி கொழுக்கட்டை மாதிரி.  அப்படி தான்  நமது உலகத்தை,  அக்ஷரேகை , தீர்க்க ரேகை பூ மத்ய  ரேகை  கோடு போட்டு கொஞ்சம் சாய்வாக இருப்பது போல் காட்டுகிறது.  சிவ லிங்கம் கூட  கொஞ்சம் ஒருபக்கம் சாய்ந்து தான் இருக்கும்.  சரியாக கவனித்து பாருங்கள்.  எனவே  சிவலிங்கம் சர்வ அணுசக்தி மயம் . கருங்கல்லுக்கு  அணுவின் அதிர்வலைகளை  வெளிப் படுத்தும் சக்தி உண்டு.  ஆகவே  சிவலிங்கம் ஒரே கருங்கல்லால் granite ல்  அமைக்கப்படுகிறது.   granite   எரிமலையின்  விளைவு.   அதன்  அணுசக்தி   அதிர் வலை தாக்கத்தை  குறைக்க  அதன் அருகே நிறைய  ஜலம் வேண்டும். ஆகவே  சிவ லிங்கத்துக்கு  சதா அபிஷேகம். ஜல தாரை.  சிவனின் தலையில் குளிர்ந்த  கங்கை.ஜலகண்டேஸ்வரரை திருவானைக்காவலில் பார்க்கிறோம். அப்புலிங்கம் ஜம்பு லிங்கம் , ஜம்பு கேஸ்வரர் என்று சிவனுக்கு ஒரு பெயர். அப்பு  என்றால் நீர்.  அளவற்ற சக்தியை வெளிப்படுத்து வதால் சிவனுக்கு  அக்னி லிங்கம் என்று பெயர், நெற்றிக்கண்  சகலத்தையும்  க்ஷண காலத்தில் அழிக்க வல்லது.  திரி புரத்தையும்  அழித்தது.   இன்று திருவண்ணாமலை தீபத்தில்  சிவன் ஒளிமயம் என அறிவுறுத்த  அகண்ட தீபம் வணங்கப்படுகிறது.

 ஒரு பக்கம்  நமது  வேதகால  ரிஷிகளின்  உண்மை யான  கூற்றுகளை  கேலிக்கூத்தாக நம்மவர்களே பரிகசிப்பது வேதனை அளித்தாலும், இன்னொரு  பக்கம், மேலை நாட்டு  விஞ்ஞானிகளும் ஆராய்ச் சியாளர்களும் நமது முன்னோர்கள் கடைப்  பிடித்த  வழி முறைகளும் வாழ்க்கை நெறிகளும் அர்த்த முள்ளவை  என்று  ஒப்புக்கொள்வதும்  வேத உப நிஷத்துகளின்  உண்மைகள்  சிறப்பானவை என்று  ஆதரிப்பதும்  மனதுக்கு  இதமாக  உளது. 

புராணங்கள், வேதங்கள் புருடா இல்லை என்று புரியவேண்டும். புரியாதவன் அப்படி சொல்ல உரிமை கொண்டாடட்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...