கல்லிலே கலைவண்ணம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
தஞ்சாவூர் போகிறவர்களுக்கு பெரிய கோயில் கண்ணில் படாமல் எங்கும் செல்ல முடியாது. ஆயிரம் வருஷங்களுக்கு மேலாக எத்தனையோ இயற்கை உற்பாதங்கள் நிகழ்த்தும் அவை எதுவும் பாதிக் காமல் ப்ரஹதீஸ்வரன் ஒருவனால் மட்டும் தலை நிமிர்ந்து நிற்க முடியும். உலகத்திலேயே ஒரு அதிச யமான கோயில். உலக அதிசயமாக வெள்ளைக்காரன் சொல்லாவிட்டால் ஏற்காவிட்டால், அது அதிசயம் அற்புதம் இல்லாத கோவில் ஆகிவிடுமா?
.அப்படியென்ன தஞ்சை பெருவுடையார் கோயில் அதிசயங்கள் என்றா கேட்கிறீர்கள். இதோ ஒவ்வொன் றாக விரலை மடக்கி எண்ணிக் கொள்ளுங்கள்.
அவ்வளவு பெரிய,உயர கோபுரத்தின் நிழல் ஏன் தரையில் விழவில்லை?
கோவிலின் அடித்தளம், அஸ்திவாரம் அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலே எந்த இஞ்சினீய ராவது ஆயிரம் வருஷங்களுக்கு முன் இப்படி கட்ட நினைத்ததுண்டா, முடிந்ததா? அஸ்திவாரமே நிழலை தன்னுள் இழுத்துக் கொள்கிறதாம்.
உலகத்திலேயே பிரம்மாண்டமான சிவலிங்கங்களில் முதன்மையானது, பழைய லிங்கம் தஞ்சாவூர் பெருவு டையார்.
கர்பகிரஹத்தை ஒட்டி ரெண்டு நிலைகள், மாடிகள், அந்த அளவு உயரமானது சிவலிங்கம். எல்லோரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. சில அர்ச்சகர் களுக்கு மட்டுமே அந்த உரிமை. தலையை எட்டி உள்ளே பார்க்கலாம். கொஞ்சம் நாமும் காணலாம்.
கர்பகிரஹத்தின் மேல் பாகம் பருப்பு தேங்காய் கூடாக கோபுரத்தின் உட்புறம் எதுவும் தடை, தடங்கல் இல்லா மல் உச்சி வரை போவதால், ஓம் என்று ஒலித்தால் அது விமானத்தின் உட்புறம் மேலே சென்று எதிரொலிக்கும். அந்த ப்ரணவ சப்தம் எங்கும் வியாபித்து சகல சக்திகளையும் காத்து அருளக் கூடியது. எவ்வளவு அற்புதமாக சிந்தித்து மஹான்கள் யோகிகள் இவ்வாறு அமைத்திருக்கிறார்கள்!
ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் போக்குவரத்து குதிரையை யானையை காளைமாட்டை மட்டுமே நம்பி இருந்த காலத்தில் சௌராஷ்ட்ரம், குஜராத் எங்கே இருக்கிறது என்று சோழனுக்கு தெரியுமா? குஜராத் பெயர் கேள்விப் பட்டிருந்தாலும் அங்கே அற்புதமான உறுதியான கிரானைட் கல் இருப்பதாவது தெரியுமா? இன்றைய கணக்குப்படி தஞ்சாவூருக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே 2100 கி.மீ. ஆயிற்றே? அப்போது அநேககமாக எங்குமே மலை வனாந்திர பிரதேசமல்லவா?
சோழ ராஜா ஒரு உயரமான பீடத்தை அமைத்து அதன் மேல் நின்று ப்ரஹதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறான்.
இதில் என்ன வேடிக்கை என்றால் சில ஞான சூன்யங் கள், ''இல்லை இல்லை, இது ராஜராஜ சோழன் கட்டிய கோவில் இல்லை, யாரோ வெளி மாநில, வெளி நாட்டுக் காரன் இங்கே வந்து கட்டியது'' என்கிறார்கள். கேட் டால் இப்படிப்பட்ட ஒரு கோவிலை கட்ட சோழர்களுக்கு தெரியாது, சோழநாட்டில் வசதி இல்லை என்பார்கள். நரம்பில்லாத நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும், எப்படி வேண்டுமானாலும் திரும்பும்.
சிமெண்ட் கான்க்ரீட் தெரியாத காலத்தில் பெரிய பெரிய கருங்கல் பாறைகளை எது இணைத்தது? கம்பிகள் கிடையாதே? 216 அடி உயர கோபுரத்தில் ஒரு கம்பி கூட இல்லையே. இடைச்செருகல் கல்லாலேயே கல்லை இணைத்த அசகாய சூரர்கள் சோழ மேஸ்திரி கள். சுற்று வட்டாரத்தில் 50 கி.மீ.தூரத்துக்கு கல்லே கிடையாதே. எங்கிருந்து இத்தனை கல், பெரிய பெரிய சைஸ்களில் வந்தது, கோவிலானது? 130,000 டன்
கல் அந்த கோவில் கட்ட ஆகும் என்று நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்களே. 78-80 டன் எடை கொண்ட விமான கலசம் எப்படி அவ்வளவு உயரே மேலே சென்றது??? கிரேன் போன்ற நவீன வசதி தெரியாதே.
சரியான பதப்பட்ட கிரானைட் கல்லில் தான் உளியால் சிற்பங்கள் செதுக்க முடியும் என்கிறார்கள். அதெல்லாம்
யார் தேர்ந்தெடுத்தார்கள், வரவழைத்தார்கள்? எங்கி
ருந்து, எப்படி, எப்போது வந்தது? அடேய் சோழா, நீ பலே ஆளடா!
ராஜ ராஜன் தன்னை சிவபாத சேகரன் என்று தான் சொல்லிக்கொள்வான். அந்த பக்தி தான் அவன் எண்ணத்தை கோவிலாக்கி இன்றும் உறுதியாக நம்மிடையேயும் , நம் நெஞ்சிலும் நிற்கிறது. என்றும் நிற்கும்.
பின்னால் வந்த மதவெறி முஸ்லிம்கள் இந்த கோவிலை யும் இடிக்க எண்ணினார்கள் என்று நினைக்கவே எரிச்சலும் அருவருப்பும் வருகிறது. ப்ரஹதீஸ்வரர் ஆலய சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது.
பரஹதீஸ்வரருக்கு ஏற்ற பெரிய நந்திகேஸ்வரர். பெரிய கிரானைட் பீடத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவர் பீடமே 80 டன் இருக்கலாம் என்கிறார்கள். நந்தினி பீடத்தை மேல் விமானம் எண்கோணம் வடிவில் 25 டன் எதையாவது இருக்குமாம். எப்படி ஐயா இதை நிறுவினார்கள்?
எகிப்தில் பிரமிட் கட்டிய பாராவோ PHARAOH ராஜாக் கள் 45 டிக்ரீ கோணத்தில் சார்பாக சாய்வாக சாரம் மேடை உறுதியாக கட்டி அதன் மேல் கல்லை ஏற்றின தாக படிக்கிறோம். கல்லைக்கட்டி யானைகள், குதிரை கள் சாரத்தின் மேல் இழுத்துச் சென்றதாம்.
ராஜராஜனும் ஆயிரக்கணக்கான யானைகள் குதிரை களைபயன்படுத்தி இருப்பானோ? வேகமாகவா இப்படி பெரிய கனமான கற்கள் மேலே போகமுடியும்? எத்தனை மாதங்களோ?
ஒரு முக்கியமான விஷயம். முனிவர்கள், ரிஷிகள், வேத மந்த்ரங்கள் உச்சரித்து அதனால் கற்கள் எடை குறைந்து மேலே ஏற்ற முடிந்தது என்கிறார்கள். நான் நம்புகிறேன். வேறு எப்படியும் முடியாது எனும்போது இப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையா?.
பெருவுடையார் கோவிலில் ரகசிய சுரங்க பாதைகள் நூற்றுக்கணக்கான இருக்கிறதாம். ஆலயத்திலிருந்து ராஜராஜன் அரண்மனைக்கு, அருகே உள்ள பல ஊர் களுக்கு செல்ல உபயோகித்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு இந்த சுரங்க வழிகள் தேவையாக இருந்திருக்கிறது. சில பாதைகள் உணவு, தண்ணீர் கோட்டைக்குள் கொண்டு வர என்றே இந்த ஏற்பாடு.
திருவனந்த புரம் பத்மநாப சுவாமி கோவிலுக்குள்ளும் கூட ரகசிய அறைகள், சுரங்க பாதைகள் இருக்கிறது. கதவுகளை மந்திரம் சொல்லி தான் திறக்கவேண்டும் என்பது நியதி. அதே போலவே தஞ்சாவூர் ப்ரஹ தீஸ்வரர் ஆலயத்திலும். ரகசியமாக குசுகுசு என்று பேசியே செய்திகளை மூன்று மாடி உயரத்துக்கு அனுப்பினார்களாம்.
கோவில் கோபுரத்தில் பார்த்திருப்பீர்களே தொப்பி போட்ட ஒரு அந்நியனை. யார் அந்த ஐரோப்பியன்? எப்படி சோழ சிற்பி அவனை கல்லில் படம் பிடித்தான்?
கங்கை கொண்ட சோழபுரத்தில் மற்றும் திருநெல்வே லியில் இருப்பதைப் போலவே தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்வரம் பேசும் கல் தூண்கள் உண்டு. மொத்தத்தில் தமிழர்கள் விஞ்ஞானம், உயர்ந்த கணித ஞானம், சாஸ்திரம், மின்காந்த அதிர்வலைகள், வேத மந்த்ர சக்தி,அதி உன்னத சிற்ப கலைஞானம், ஓவியம், ஆகம சாஸ்திரம், அனைத்தையும் பக்தியுடன் கலந்து அறிந்தவர்கள், நமக்கு வழங்கியவர்கள். பிரகதீஸ்வரர் ஆலயம் ஒன்றே போதும் இதற்கு சான்றாக. கருங்கல் தாமரை இதழ் மென்மையோடு கையாளப்பட்டுள்ளதே.
ரொம்ப சொல்லவேண்டாம். ப்ரஹதீஸ்வரர் ஆலயத் தின் ஒவ்வொரு கல்லும் மௌனமாகவே ஒரு சரித்திரம் சொல்லும் தகைமை கொண்டது. ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு தஞ்சாவூருக்கு போய் பெருவுடையார் கோவிலில் ஒவ்வொரு சிற்பமாக முடிந்தவரை ரசியுங்கள். ப்ரஹதீஸ்வரனை நமஸ்கரித்து சோழனை வாழ்த்துங்கள்.
No comments:
Post a Comment