சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN --
சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.
न पश्यति च जन्मान्धः कामान्धो नैव पश्यति ।
मदोन्मत्ता न पश्यन्ति अर्थी दोषं न पश्यति ॥
கண் பெற்றிருப்பது நமது பூர்வ ஜென்ம புண்யம். பிறக்கும்போதே கண் பார்வை இல்லாமல் இருப்பவர்களை ஒரு நிமிஷம் நினைத்துப் பார்ப்போம். உலகத்தை உறவை எவரையும் எதையும் காணாமல் எப்போதும் இருட்டில் ஒரு வாழ்க்கை. அது போல் தான் பேராசையில் விழுந்தவன் கதியும். நல்லது எதுவுமே அவன் கண்ணுக்கு தெரியாதே. கர்வம், அஹம்பாவத்தில் ஆழ்ந்து மூழ்கியவனுக்கும் அதே நிலைமை. நல்லது எதுவும் அறியாமல் தீமை செய்வதிலேயே காலம் கழிப்பான். பணத்தை தேடி சேமிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டவன் அது பாவம் செய்வதால், தவறு செய்வதால் வருகிறதா என்று பார்க்க முடியாது.
स्वयं कर्म करोत्यात्मा स्वयं तत्फलमश्नुते ।
स्वयं भ्रमति संसारे स्वयं तस्माद्विमुच्यते॥
ஒரு பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுக்கும் ஜீவன் கர்ம வினைக்கேற்ப பிறவியும் உருவமும் பெறுகிறது. அதன் மூலம் அவன் நல்லது தீயது, இன்பம் துன்பம் எல்லாம் அனுபவித்தே தான் ஆகவேண்டும். எல்லாம் அவன் செய்த வினைக்கேற்ப. அவன் செயலால் அவன் சம்சார சாகரத்தில் மூழ்குகிறான். தனது முயற்சியால் நல்வினையால் தான் அதிலிருந்து மீள வேண்டும்.
राजा राष्ट्रकृतं पापं राज्ञः पापं पुरोहितः ।
भर्ता च स्त्रीकृतं पापं शिष्यपापं गुरुस्तथा ॥
அரசனின் பொறுப்பு ரொம்ப ஜாஸ்தி. குடிமக்களின் பாபங்கள் அவனைத்தான் சேரும். அரசனின் பாபங்களை அவனது ப்ரோஹிதன் அடைகிறான். மனைவியின் பாபங்களுக்கு கணவன் பொறுப்பேற் கிறான். சிஷ்யர்க ளுக்காக குரு அவஸ்தை பட்டு துன்பத்தை சுமக்கிறார்.
ऋणकर्ता पिता शत्रुर्माता च व्यभिचारिणी ।
भार्या रूपवती शत्रुः पुत्रः शत्रुरपण्डितः ॥
ஒருவனுக்கு அவனது வீட்டில் எது பெரும் பாபச் சுமை தெரியுமா? எங்கு பார்த்தாலும் நிறைய கடன் வாங்கியுள்ள தந்தை. தவறுகள் நிறைந்த தாய். அழகான மனைவி. படிப்பு ஏறாத, கல்வி அறிவில்லாத மகன். இதற்கு மேல் ஒருவனுக்கு என்ன துன்பங்கள் வாழ்வில் தேவை ?.
लुब्धमर्थेन गृह्णीयात् स्तब्धमञ्जलिकर्मणा ।
मूर्खं छन्दोऽनुवृत्त्या च यथार्थत्वेन पण्डितम् ॥
பிறர் பொருள் மேல் ஆசை வைப்பவனை பரிசுகள் கொடுத்து வசப்படுத்தலாம் . பிடிவாதக்காரனை இரு கை கூப்பி வணங்கி தலையாட்டி அவன் நன்மதிப்பைப் பெறலாம், ஒரு முட்டாளை ஆஹா நீ சொல்வது தான் அப்பா ரொம்ப சரி, உன்னைப்போல் யோசிப்பவர்கள் எவரும் இல்லை என்று உற்சாகப்படுத்தி வசமாக்கலாம், நன்றாக படித்த கல்விமானை சத்தியமான உண்மை வார்த்தைகள் சொல்லி வசமாக்கலாம்.
वरं न राज्यं न कुराजराज्यं
वरं न मित्रं न कुमित्रमित्रम् ।
वरं न शिष्यो न कुशिष्यशिष्यो
वरं न दार न कुदरदारः ॥
ஒரு சிறு கிராமம் போன்ற நாட்டை ஆள்வதை விட்டு ராஜ்யமே இல்லாமல் இருக்கலாம். ஒரு அயோக்கியனை நண்பனாகக் கொள்வதை விட நண்பர்களே இல்லாமல் இருக்கலாம். மட சாம்பி ராணி ஒருவனை சிஷ்யனாகக் கொள்வ தை விட சிஷ்யர்கள் இல்லாமலேயே ஒரு குரு இருக்க லாம். ராக்ஷஸி ஒருவளை மனைவியாகக் கொள்வதை விட கல்யாணமே பண்ணிக்கொள் ளாமல் இருக்கலாம்.. இதெல்லாம் என் சொந்த அபிப்ராயங்கள் இல்லை. பல ஆயிரம் வருஷங் களுக்கு முன் கௌடில்யர் என்ற சாணக் கியர் எழுதியவை. படித்துவிட்டு வேண்டாததை மறப்பது உங்கள் சௌகர்யம்..
சாணக்ய நீதி இன்னும் தொடரும்.
No comments:
Post a Comment