Sunday, May 16, 2021

SURDAS


 ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்   J K  SIVAN


'45.   அடுத்த  அடி  எடுத்து வை'' 

எந்த குழந்தையும் முதலில் நடக்க  முயற்சிக் கும்போது  அதைக் காணும் பெற்றோர்களுக்கு  முகத்தில் மலரும்  சந்தோஷத்தை, ஆனந்தத்தை உலகத்தில் எந்த கண்ணாடியும் பூரணமாக காட்ட முடியாது.  குழந்தை  தாயின் இரு கை களைப்  பயத்தோடு பிடித்துக் கொண்டு  ஒரு  வித பீதி கலந்த  ஆர்வத்தோடு முதல் அடி  எடுத்து வைக்கிறான். தனது உடலை அசைத்து மற்றொரு காலடி வைக்க சில நிமிஷங்கள் ஆகிறது.  இப்படித்தான்  நடை பழக ஆரம்பிக் கிறது  குழந்தை. 

கோகுலத்தில்  ஒரு தாயைச் சுற்றி அநேகர் கூட்டமாக  இந்த அதிசயத்தைப் பார்க்கிறார்கள். அனைவரின் கை  தட்டலை  மிரள மிரள  சிரித்துக்கொண்டே  பார்க்கிறான்  கிருஷ்ணன்.
தனது  பிஞ்சுக் கைகளை நீட்டி அம்மாவின் கைகளைத் தேடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டான்.  அவன் முகத்தில் ஒரு பீதி கலந்த  ஆர்வம். நடக்க  விருப்பம்.  தான் கீழே விழுந்துவிடுவோமோ, அம்மாவின் கை  நம்மை கெட்டியாக பிடித்துக் கொண்டு காப்பாற்றும் என்று அந்த காக்கும் கடவுள் நடிக்கிறான்.
யசோதை பரமானந்தத்தில்  மூழ்கிவிட்டாள் . 
''இந்தா  என் கையைப் பிடிச்சுக்கோ  என்று அவன்  நம்பிக்கையோடு நீட்டிய  இரு கைகளை தாங்கிப் பிடிக்கிறாள்.  இதோ ஒரு காலை தரையிலிருந்து தூக்கப் போகிறான். தயக்கம் நிறைய.  மெதுவாக  தூக்கி விட்டான். 

உலகத்தையே அளந்த காலடி மெதுவாக  அந்தரத்தில் இப்போது அடுத்த  கணம் மெதுவாக கீழே  இறங்கி   தரையில் ஊன்றிக்  கொண்டு விட்டது.  உடல்  கொஞ்சம் முன்னோக்கி  அசைகிறது. அடுத்த  காலை இப்போது தூங்குகிறான் கண்ணன்.    

கிருஷ்ணன் நடக்க அம்மாவிடம் கற்றுக்கொள் கிறான்.  

''மெதுவா  அந்த  காலை எடுத்து வை'' அவன்
வலது காலை பிடித்து தூக்கி மேலே அசைத்து மெதுவாக கீழே வைக்கிறாள். அவன் சிரிக்கிறான்.  அம்மா  அது விண்ணை அளந்த கால் என்று சொல்லாமல் சிரிக்கிறான். 
 யசோதை புண்யம் செய்தவள் . அவளுக்கு   மனது நிறைந்த  சந்தோஷம்.  கண்ணன் நடக்கிறான். குடும்ப தெய்வத்தை எல்லாம்  வேண்டிக்கொள்கிறாள். கண்ணன் நடக்கவேண்டும் என்று. அந்த தெய்வங்களின் தெய்வமே  எதிரே நடக்க முயல்கிறது என்று அறியவில்லை அவள்.  என் கிருஷ்ணன் தீர்காயு சோடு இருக்கணும்''   என்று அம்மாவின் மனது பிரார்த்திக்கிறது.  

''பலராமா  இங்கே ஓடிவாடா, இதோ பார் தம்பி, நடக்கிறான்''.   அவனும் இவனே, இவனும் அவனே தான் அல்லவா?   

சிறிது நாளில்  ''பலராமா   க்ரிஷ்ணனோடு  இங்கேயே   முற்றத்தில் விளையாடு '' என்கிறாள்  யசோதா. 

ஸூர்தாஸ்  இந்த  கிருஷ்ணனின்  ''நடை ' ராஜ   வைபவத்தை மனக்கண்ணால்  கோகுலம் சென்று கண்டு களித்து  கிருஷ்ண லீலாம்
ருதத்தில்  யசோதையின் ஆனந்தத்தை பரிமாறுகிறார்.  


Krishna Learning To Walk
H ands stretched out hesitantly, A foot on the ground unstably, Yasoda, teaching the Lord to walk. Sometimes watching His adorable face Storing away the joy in her heart, Sometimes praising the family deity: Give long life to her Kanhaiya. Sometimes calling to Bal Two to play in her courtyard. Surdas see the Lords leela The lustre of bliss of Nandraiya (Yasoda).

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...