Thursday, May 27, 2021

GEETANJALI

 கீதாஞ்சலி --   நங்கநல்லூர்  J  K  SIVAN

தாகூர்


 61. கண்ணா  உன்  அழகின் ரகசியம் ?


1.  The sleep that flits on baby's eyes---does anybody know from where it comes?
Yes, there is a rumour that it has its dwelling where,
 in the fairy village among shadows of the forest dimly lit with glow-worms,
 there hang two timid buds of enchantment.
From there it comes to kiss baby's eyes.
The smile that flickers on baby's lips when he sleeps---does anybody know where it was born?
Yes, there is a rumour that a young pale beam of a crescent moon touched the edge of a vanishing autumn cloud,
 and there the smile was first born in the dream of a dew-washed morning---
the smile that flickers on baby's lips when he sleeps.
The sweet, soft freshness that blooms on baby's limbs---does anybody know where it was hidden so long? 
yes, when the mother was a young girl it lay pervading her heart in tender and silent mystery of love---
the sweet, soft freshness that has bloomed on baby's limbs.


குழந்தையும்  தெய்வமும் கொண்டாடும் இடத்திலே மட்டும் இல்லை.  எல்லா  இடத்திலேயும் தான்...குழந்தை தான் எங்கும் எப்போதும் என்றும் தெய்வம் , நாம் உணர்ந்தாலும்  உணராவிட்டாலும் கூட அது தெய்வம்.  குழந்தை தூங்கும் அழகை வர்ணிக்க இயலாது.

\''தூக்கமும்  கண்களை  தழுவட்டுமே'' அங்கே  தான் புரியும்.  எப்படி தானாகவே திடீரென்று   தூக்கம்  குழந்தையின் கண்களை வருடுகிறது. யாருக்காவது தெரியுமா? தெரியாவிட்டால் கோகுலத்தில்  யசோதை வீட்டுக்குள் எட்டிப்பாருங்கள்  தொட்டிலில் நன்றாக தெரியும்...

தூரத்தில் எங்கோ  ஒரு  தேவதைகள் வசிக்கும்  கிராமம் சுற்றிலும்  காடு  மின்மினிப்பூச்சிகள் தான் அங்கே ஒளி  விளக்கு. அங்கே  ரெண்டு  அழகிய  கண் கவரும்  தாமரை மொட்டுக்கள். அவற்றின் அழகு, மேன்மை தான் மழலை விழிகளை அணைத்து அவனை  உறங்கச் செய்வது.  என் பேத்தி தூங்கும் அழகே அழகு... எவ்வளவு நேரம்.....  கணக்கே இல்லாமல்  ரசித்திருக்கிறேன்.
குழந்தை தூங்கும்போது சிரிக்குமே  பார்த்ததுண்டா? ஓ.  அடிக்கடி.
ஆஹா  எவ்வளவு அழகு?  அது எங்கிருந்து  பிறந்தது  என்பதாவது தெரியுமா ? பாட்டிமார்கள்  கதை சொல்வார்கள்.   வானத்தில் தொலை  தூரத்தில் ஒரு  பிறை சந்திரன் தெரிகிறதே  அதன் ஒளிக் கீற்று பெரிய ஒரு மேகத்தின் வாலைப்  பிடித்துக் கொண்டிருக்கிறதே  தெரிகிறதா. மேகம்  ஓடமுடியாமல் தவிக்கும் போது,
திணறும்.... 
அங்கே தான் புன்னகை மலர்ந்து  மலர்களின் மிருதுவான இதழோரத்தில்  ஜொலிக்கும் பனித்துளி முத்துக்களாகி   தூங்கும் குழந்தையின்   உதடுகளில்  நாம் காணும்  புன்னகை ஆகிவிட்டது.   

கிருஷ்ணப்பா,   குழந்தையாயிருந்தபோது உன்  கைகள், கால்கள் விரல்கள், மூக்கு, கன்னம்  வயிறு,  எல்லாமே  பட்டு பட்டாகத்  தொடும்போது,  மகிழ்ச்சி தருகிறதே  அந்த அழகு, மிருது, எப்படி என்று  கேட்டால் அதற்கும் பதில் தயார். 

உன் தாய் யசோதை, கொடுத்து வைத்தவள்,   சிறுமியாக இருந்தபோது அவள்  இதயம் எவ்வளவு மென்மையாக இருந்தது  அவளுக்கு எத்தனை கருணை, அன்பு, பாசம், நேசம்,  எவ்வளவு நல்லவளாக இருந்தாள்  அதெல்லாம்  உருவமாகி  அவளுள்  பின்னால் உன் தேகமாயிற்று அல்லவா. நீ  தான் அது,  அந்த  மென்மைக்கு முக்கிய  காரணம்.

 தாகூரை இன்னும் ரசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...