நமது எதிர்காலம் -- நங்கநல்லூர் J K SIVAN
புது அரசாங்கம் வந்து விட்டது. கொரோனாவும் அதிகரித்து இன்னும் ரெண்டு வாரம் எலிகள் எல்லாம் வளையில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு.
சரி என்னுடைய பாம்பு பஞ்சாங்கம் எதிரே என்னைப்பார்த்து மஞ்சளாக சிரித்ததால் நீ என்ன சொல்கிறாய் இந்த வருஷம் பற்றி என்று அதைக் கேட்டேன்.
ஒன்பது கிரஹங்களும் என்ன பலன் தரும் இந்த பிளவ/ பிலவ வருஷத்தில் என்று படித்தேன். அதிக பயமும், கொஞ்ச சந்தோஷமும் தருகிறதே. ஒன்றும் என்கரேஜிங்கா ENCOURAGING ஆ இல்லையே என்ன செய்வது. படியுங்கள் பஞ்சாங்கம் சொல்வதை:
ஸஸ்யங்களில் தானியங்கள் குறைவு. பூமியில் பயம் உண்டாகும்.
ராஜா: செவ்வாய்: அதன் பலன்: திருடர்கள், நெருப்பு, பசி இவைகளால் பீடை. மழைக்கு கெடுதி. அரசர்களுக்குள் சண்டை.
மந்திரி:புதன்: மழை, பயிர், குறைவு. உலகத்திற்கு வாயு பீடை உண்டாகும்.
சேனாதிபதி: செவ்வாய். (ராஜாவே சேனாதிபதியும் போல இருக்கிறது).: உலகத்தில் அக்னி பயம். ஜனங்கள் சிதறுண்டு துக்கமடைவார்கள். மறுபடியும் அரசர்களுள் சண்டை என்கிறது.
ஸஸ்யாதிபதி சுக்ரன்: வெளுப்பு நிலங்களில் வெள்ளை தானியங்கள் உண்டாகும்.(என்ன என்று புரியவில்லை)
தான்யாதிபதி குரு: பூமி எங்கும் மழை பொழியும்??!! எல்லா பயிர்களும் விருத்தியடையும்:!!? பசுக்கள் பால் அதிகம் கொடுக்கும். எப்படி குரு மட்டும் ராஜா, மந்திரி, சேனாதிபதி மாதிரி இல்லாமல் நல்ல சேதி சொல்கிறார் ?
அர்க்காதி பதி செவ்வாய்: சில இடங்களில் ஜனங்களுக்கு ரோகம் இருக்காது. ஆரோக்யம். தான்யம், பயிர், காற்றோடு கொஞ்சம் மழை வருமாம்.
மேகாதிபதி செவ்வாய்: அதிக காற்று வரும். அதிக விலை இருக்கும்?? பாதி தேசத்தில் நல்ல மழை?? கருப்பு தான்யம் விளையும்.
ரஸாதிபதி சூர்யன்: நெய் , எண்ணெய், தேன் , மற்றும் சில மதுரமான பதார்த்தங்கள் மலிவாக கிடைக்குமாம்!
நீரஸாதிபதி சுக்ரன்: வைரம், முத்து, வெள்ளி, பருத்தி, சுலபமாய் உண்டாகும்.
ஆவர்த்த மேக பலன்: மேகங்கள் காற்றில் அங்கும் இங்குமாக அலைந்து மிகுதியாக மழை பெய்யும்.
திருவாதிரையில் சூர்யன் பிரவேசிப்பதால் : பயிர்களுக்கு கெடுதி.
ஷன்மண்டல பலன்: நல்ல நன்மை உண்டாகும்????!
நண்பர்களே, ஜோசியர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது. இப்படியும் அல்ல, அப்படியும் அல்ல என்கிற மாதிரி இருக்கிறது இந்த பஞ்சாங்கம் சொல்வது. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வருஷா வருஷம் இப்படித்தான் பல காலமாக கொண்ணூர் மாணிக்க முதலியார் சுவீகார குமாரர் கொ . லோகநாத முதலியார் பார்யாள் கொ . செல்வரங்கம்மாள் பௌத்ரன் M S. பச்சையப்ப முதலியார் குடும்பத்தித்தினரால் அவர்களது மனோன்மணி விலாச பிரஸ்ஸில் பதிப்பிக்கப்படும் மஞ்சள் கலர் பாம்பு பஞ்சாங்கம் ஏதாவது சொல்கிறது. ஒரு தடவையாவது இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். .
No comments:
Post a Comment