ஸூர்தாஸ் --- நங்கநல்லூர் J K SIVAN
42 டிபன் ரெடி
நாம் காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் சூடான காப்பியைத் தேடுகிறோம். பல் தேய்த்து முகம் கழுவியதும் காலை உணவை கண் தேடுகிறது. ராஜா மாதிரி காலை உணவை சாப்பிடணும் என்பது பழமொழி.
ஆமாம், கிருஷ்ணன் ராஜா, உலகுக்கே, பிரபஞ்சத்துக்கே ராஜா. அவனைத் துயிலெழுப்புகிறாள் அன்னை யசோதை.
''அடேய் ஹரி, குட்டிப்பையா, எழுந்திரடா,, பொழுது விடிந்து விட்டது. சூரியன் கிழக்கே மேலே உஷ்ணமாக எழும்புகிறான் பார். எழுந்திரு செல்லமே, அதோ பார் ஒரு பெரிய மண் கூஜா நிறைய சில்லென்ற குளிர்ந்த நீர் வைத்திருக்கிறேன். பல் தேய்த்து, முகத்தை கழுவிக்கொள் . எந்த அவசரமும் வேண்டாம். எதுவும் தலைபோகிற காரியம் ஒன்றும் இல்லை. நிதானமாகவே நிறைய கைகள் நிறைய ஜலம் எடுத்து முகம் பூரா கழுவிக் கொள்ளப்பா . களைப்பெல்லாம் தீர்ந்து ஆரோக்யமாக இருக்கும். நிறைய நேரம் இருக்கிறது.
''உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். இன்று உனக்கு பிடித்த காலை உணவு தயார் பண்ணி இருக்கிறேன். உனக்கு பிடித்தது எதுவென்று எனக்குத் தெரியாதா?
நீ உலர்ந்த பழங்களை விரும்புபவன். பாலேடுடன் வெண்ணெய் ஒரு கிண்ணத்தில். கொம்புத்தேன் ஒரு கிண்ணத்தில். உனக்கு பிடித்த மெத்து மெத்தென்ற கோதுமை சப்பாத்திகள் ஒரு பாத்திரத்தில் சூடாக செயது மூடி வைத்திருக்கிறேன். வா எவ்வளவு வேண்டுமோ எடுத்து சாப்பிடு என் கிருஷ்ணப்பா.
யசோதையின் பாச மிகுந்த கண்கள் படுக்கையில் சோம்பல் முறித்துக்கொண்டு திரும்பி படுக்கும் கிருஷ்ணன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவள் அவனை ஆசையாக எழுப்புவதில் முனைந் திருக்கிறாள். ''ஆஹா என் செல்வம் என்ன அழகு, என்ன அழகு'' என்று வியக்கிறாள். கொடுத்து வைத்த புண்யவதி அல்லவா யசோதை!
இதை நாம் காண முடியுமா. கண்ணில்லாத ஸூர்தாஸ் மனக்கண்ணில் கண்டு களித்துப் பாடுகிறார். அதை யாரோ வ்ரஜ பாஷை யிலிருந்து ஆங்கிலத்தில் நாலு வரி எழுதி இருக்கிறார்கள். அது என் கண்ணில்பட்டு உங்களை அடைகிறது.
Breakfast
O Hari, 'tis morn, awake, there's water in the jar for you to wash your face no need to hurry there's plenty of time.
I'll bring you whatever you like for your breakfast- dried fruits, butter, honey and bread.
Says Suradasa, Yashoda's heart overflows with joy when her gaze alights on her darling boy.
O Hari, 'tis morn, awake, there's water in the jar for you to wash your face no need to hurry there's plenty of time.
I'll bring you whatever you like for your breakfast- dried fruits, butter, honey and bread.
Says Suradasa, Yashoda's heart overflows with joy when her gaze alights on her darling boy.
No comments:
Post a Comment