ஸூர்தாஸ் --- நங்கநல்லூர் J K SIVAN ----
43 ஆஹா கிருஷ்ணன் பேசுகிறானே ...
எல்லோரும் ஓடி வாங்கோ. பாப்பா பேச ஆரம்பிச்சுடுத்து... முதல் வார்த்தை ''அம்மா..''..
ஒவ்வொரு தாய் தந்தைக்கும், வீட்டில் மற்ற தாத்தா பாட்டிக்கும் அண்ணா தங்கைக்கும் ஒரு குட்டி பாப்பா பேச ஆரம்பித்து விட்டது என்றால் கிடைக்கும் சந்தோஷத்தை வெறும் எழுத்தால் சொல்ல முடியாது. அனுபவம் போதும்.
இந்த சந்தோஷத்தை நாம் மட்டுமா அனுபவித்தவர்கள். கோகுலத்தில் ஒரு மாளிகையில் அடேயப்பா எவ்வளவு கோலாகலம்.
குட்டி கிருஷ்ணன் முதல் வார்த்தை பேச ஆரம்பித்துவிட்டான். கீதை சொன்னவனின் முதல் பேச்சு. ''அம்மா அம்மா அம்மா ''
யசோதை ஆனந்த சாகரத்தில் மூழ்கினாள் . சற்று இடைவெளிக்கு பிறகு ''அப்பா அப்பா'' என்றான். நந்தகோபன் காற்றில் ஆகாசத்தில் பறந்தான்.
கொஞ்ச நாளில் பலராமனின் வருத்தமும் மறைந்தது. குட்டி தம்பி கிருஷ்ணன் ''அண்ணா'' என்று பலராமனைக் கூப்பிட்டு விட்டானே.
கண்ணையா கண்ணையா என்று வாய் ஓயாமல் யசோதா அவனைக் கூப்பிட்டாள். கூப்பிட்ட போதெல்லாம் அவளை உடனே பார்த்தான். யார் அழைத்தாலும் உடனே ஓடி வருபவன் ஆயிற்றே.
கோகுலம் பிருந்தாவனம் ஆகிய கிராமங்களில் எங்கும் பசுக்கள் ஆயிற்றே. ஆகவே சிறிது வளர்ந்து நடக்க ஓட ஆரம்பித்த கண்ணனை யசோதா பொறுப்பாக எச்சரிக்கிறாள் . தாயல்லவா?
''கண்ணையா , வெளியே போகாதேடா. அங்கே எல்லாம் போய் விளையாடாதே. யாருடைய பசுவாவது வந்து உன்னை முட்டி விடும்.''
அவன் பசுநேசன், எல்லா பசுக்களும் காந்தத்தை அணுகும் இரும்பு போல் கண்ணனைத் தேடும் என்று அவளுக்கு எப்படி தெரியும். அவன் ''கோ'' விந்தன் என்பதை அவள் எப்படி அறிவாள்?
கிருஷ்ணன் விளையாடுகிறான் பேசுகிறான் என்ற ஆனந்தமே கோகுலத்தில் உள்ள எல்லா கோபர்கள் கோபியர்களை ஆனந்த கோலா கலத்தில் ஈடுபட வைத்தது.
அடடா, இந்த காட்சியை நேரே கண்டு யார் அனுபவித்தது.? கண்ணனைக் கண்ணில்லாத ஸூர்தாஸ் மனக்கண்ணால் ஆனந்தமாக ரசிக்கிறார் என்று அவர் பாடல் சொல்கிறது. ''நான் உன்னை சரணடைந்தேனடா'' என்கிறார் ஸூர்தாஸ்
Mohan's begun to say 'Maiya Maiya,'
No comments:
Post a Comment