Friday, May 7, 2021

VEMANAA

 


  தேனான வேமனா- 3 ---            நங்கநல்லூர் J K SIVAN


வேமனாவின் ரெண்டடி  பாடல்கள்  எளிதில் புரிகிறதா?  தெலுங்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. அதன் வார்த்தைகளை படித்துப் பார்த்தாலே, கொஞ்சமாக தெலுங்கு கற்றுக்கொண்டுவிடலாம். நான் அப்படி தான் சில மொழிகளைக்  கற்றுக் கொள்பவன்.  சப்தம்  தெலுங்குக்கும்   சமஸ்க்ரிதத்துக்கும்  நெருங்கியதாக இருக்கிறது.


Tappulennuvaru Tandopatandambu...................తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu............................లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru................తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema................... విశ్వధాభిరామ, వినుర వేమ


உன்னைச் சுற்றிப்பார்.  மனிதர்கள்  இதில் மும்முரமாக இருக்கிறார்கள்?   எங்கே  எதில்,  எதால்   தப்பு கண்டுபிடிக்கலாம்   என்று  அலைவோர் தான் கண்ணில் படுகிறார்கள்.  வேடிக்கையாக இருக்கிறது.   தப்பு செய்யாதவன்   யாரேனும்  ஒருவன் உலகில்  உண்டா?  மற்றவன் தப்பை  எண்ணுகிறவன்,  செயலில் குற்றம் கண்டுபிடிக்கிறவன்,  ஏன்  தன்னுடைய தப்புகளை  எண்ணிப் பார்ப்பதில்லை.  தன்னுடைய  தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வதில்லை.  !

குலமுலோன நொகடு குனவந்துடுண்டின
குலமு  வெலயு வானி  குணமு சேத
வேலையு வுனமுலோன  மலயஜம்  புன்னட்ளு
விச்வதாபி ராம  விநுரை வேமா

அடேயப்பா, ஒன்றா இரண்டா,  நம்முள்  எத்தனையோ  ஜாதி,  குலங்கள்  எல்லாம் இருக்கிறது.   அந்த  ஒவ்வொரு குலத்திலும்   யாராவது  ஒருத்தன்  நல்ல குணமுள்ளவனாக   மட்டும் இருந்துவிட்டா னேயானால்  அந்த  குலமே அவன்   ஒருத்தனின் நற்குணத்தால்   சீரும்  சிறப்பும் அடையுமே.  எத்தனையோ  காட்டு மரங்கள் அடர்ந்த .காட்டில்   ஒரே  ஒரு  சந்தன மரம்  இருந்தால் கூட   போதுமே  காடு  முழுதும்  கமகம என்று  மணக்குமே.
 

கோபமுனனு கனத கொஞ்சமை போவுனு
கோபமுனனு  மிகுல  கோடு கலகு
கோப மடசெ னேனி கோர்கேலு ஈடேரு
விச்வதாபி ராம  விநுர வேமா


எவ்வளவு தான் படைத்தவனாக இருந்தாலும்,  ஒருத்தனுடைய பெருந்தன்மை  மரியாதை கவுரவம்  எல்லாமே அவன் கோபம் கொள்ளும்போது  காற்றில்  பறந்து போகிறதே. அதுமட்டுமில்லை.  எல்லையில்லாத துன்பமும்  வந்து சேர்கிறது.  இதை ஏன் அவன் உணர்வதில்லை?     ஒரு ரகசியம் --   கோவத்தை விடு.உனக்கு  எவ்வளவு நன்மை வந்துசேரும்,  நினைச்சதெல்லாம்  நிறைவேறும். அனுபவித்து  பார்.


சம்பதகினயட்டி சத்ருவு தனசேத
சிக்கெனெனி  கீடு செயராது.
பொசகமேலு செசி பொம்மனுடே மேலு
விச்வதாபி ராம  விநுர வேமா


அடே  வேமா, உனக்கு தான் சொல்கிறேன்.  நன்றாக  யோசித்து பார்.   உன்னுடைய வைரி,   வெகுநாள்  எதிரி,   ஒருவன்  ஒருநாள் உன்னிடம்  வகையாக மாட்டிக்  கொண்டு விட்டான்.    அவனே  துளியும்   எதிர் பார்க்காதபடி,  ஒரு  தீங்கும்   நீ   அவனுக்கு செய்யாமல்,  அவனுக்கு  நீ  அன்போடு நன்மையே  செய்து   "நீ போய்ட்டு  வாப்பா"  என்று அனுப்பிவைக்கிறாய். ஆஹா  அடுத்த  நிமிஷமே  அந்த  ஆள் அடியோடு மாறி  விடுவான். இது அவன்  மனம்  மாற  சிறந்த மார்க்கம்.  


சிக்கியுன்ன வேளா சிம்ஹம்புனைனணு
பக்க  குக்க கரசி பாத சேயு
பலிமி லேனி வேளா பந்தம்பு செல்லது

நிறைய பலம்   மிக்க  சிங்கமாயிருந்தாலும்  அதன் சக்தி  குறைந்து போய்விட்டால்    கேவலம் ஒரு   சொறி நாய்  கூட அதைக்   கடித்து துன்புறுத்த முடியும்.  உன்னுடைய  மனோ பலத்தை   மட்டும் நீ    குறைய  விட்டு விட்டாயானால்  உனக்கு   உறுதியும் இருக்காது, பெருமையும் சேராது. புரிந்துகொள்.
 
தனது நாத்மயந்து தைவம்பு கலுகங்க
தீர்த்த யாத்ரல கீல   திருகு நறுடு
கந்தபு துநுகல  காட்தெ மோசினயட்லு
விச்வதாபி ராம  விநுர வேமா

ஒரு வேடிக்கை  பார்த்தாயா?   நமக்குள்ளேயே ஆண்டவன்  இருக்கிறான்   என்பதே தெரியவில்லை. அவனை   எங்கேயோ  தேடிக் கொண்டு  நேரத்தையும்  பணத்தையும் விரயம்  செய்துகொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறோமே.  இது  தேவையா?   நீயோ,   நானோ இப்படிச்  செய்கிறவர் களாயிருந்தால்,   தான்   சந்தனக்கட்டையை   சுமக்கிறோம் என்பது கூட   தெரியாமல் நடக்கிற  கழுதைகளாக அல்லவோ மாறிவிடுகிறோம்!

தல்லி  தன்ருல மீத தயலேணி  புத்ருண்டு
புட்டநேமி  வாடு கிட்டநேமி
புட்டலோனி செதலு  புட்டவா  கிட்டவா
விச்வதாபி ராம  விநுர வேமா
 
பெற்ற   அப்பா அம்மா  மீது கொஞ்சம்  கூட   பாசமில்லாத ஒரு   மகன் இருந்தென்ன,   இல்லாதென்ன?  புற்றில் பிறந்து, யாருக்கும் உபயோகப்படாமல்  உழன்று  கடைசியில் அந்த  புற்றிலேயே  சாகும்  கரையானுக்கும் அவனுக்கும்  எந்த   ஒரு வித்தியாசமும்   எனக்குத் தெரியவில்லையேடா   வேமா !.

(வேமனாவிடம் மேலும்    சில  புத்திமதி  பெற்று தருகிறேன்)    .

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...