தேனான வேமனா- 4 --- நங்கநல்லூர் J K SIVAN
ஒரு வார காலமாக எங்கெங்கெல்லாமோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வேமனாவைப் பார்க்க முடியவில்லை. இன்று வசமாக மாட்டிக்கொண்டார். அவரிடமிருந்து சில பாடல்களை கழற்றிக்கொண்டுவிட்டேன்.
நிக்கமைன மஞ்சி நீலம் ஒக்கட்டி சாலு
தளுகு பெளுகு தட்டெடேல?
காடு பத்ய மிலனு சாலதா ஒக்கடைன
விஸ்வதாபி ராம வினுர வேமா
ஒரு பெரிய தட்டு ரொம்ப கலர் கலராக கண்ணைப்பறிக்கும் கண்ணாடி கற்கள் மினு மினுக்கி அதால் என்ன பயன்? ஒரு நல்ல ஜாதி நீலக்கல்லுக்கு முன் அவை அத்தனை கலர் கலர் கற்கள் ஈடாகுமா ? இதை எதற்காக உனக்கு சொல்கிறேன் தெரியுமாடா வேமா, நிறைய குப்பை குப்பையாக எதெல்லாமோ படிப்பதை விட பளிச்சென்று ஒரு சிறு அர்த்தமுள்ள, மனசில் ஆழமாக பதியும் ஒரு ஸ்லோகமோ, பதிகமோ, பாடலோ, ஒன்றே ஒன்று போதுமே.
ஆலி மாடலு வினி அன்ன தம்புலு பாஸி
வேறெ போவுவாடு வெர்ரி வாடு
குக்க தோக பட்டி கோதாவரிதுனா
விஸ்வதாபிமானா வினுர வேமா
பெண்டாட்டி பேச்சில் மயங்கி, அவளுக்கு அடி பணிந்து அவள் சொல்வதில் ஞாயம் பார்க்காமல் உடன் பிறந்தாருடன் சண்டையிட்டு தனிக்குடித்தனம் வைபவன் பைத்தியம் தான். ஏண்டா வேமா, இவன் என்ன செய்கிறான்? நாயின் வாலை அக்கரை சேர்க்கும் என்று நம்பி, கெட்டியாக அதைப் பிடித்துக்கொண்டு கோதாவரி நதியை கடக்கப் பார்க்கிறானோ?
ஏமி கொஞ்சுவச்சே ஏமிதா கோனி போவு
புட்டு வேள நறுடு கிட்டு வேள
தனமு லேசடி கேக்கு தானெச்சடி கேக்கு
விஸ்வதாபிமானா வினுர வேமா
''ஏண்டா வேமா, என்னத்தை கொண்டுவந்தே, என்னத்தை கொண்டுபோகப் போறே ! நீ சேர்த்து வச்சதெல்லாம் எங்கேயோ போகப்போகிறது, நீயே எங்கேயோ போகப்போறே உனக்கே இது தெரிய போறதில்லே . ஏன், எதற்கு இந்த அகட விகட சாமர்த்தியம் எல்லாம். புரியல்லேடா. ஆச்சர்யமாயிருக்கு.
கங்கை பாறு னெபுடு கதலனி கதிதோட
முருகி வாகு பாரு ம்ரோத தோட
அதிகுபோர்ர்சு னட்டு லதாமு போற்பகலேது
விஸ்வதாபிமானா வினுர வேமா
ஏற்கனவே சொன்ன ஒரு வாசகத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த பாடலில் வேமனா தருகிறார். கங்கை பிரவாகமாக இருந்தாலும் அமைதியாக ஓடுகிறது ஓடுவதே தெரியவில்லை, நிற்கிறாற் போல தான் தெரிகிறது. சத்தம் இல்லை. ஆனால் தெருவில் கொஞ்சம் மழைத்தண்ணீர் சேர்ந்ததும் இந்த சாக்கடை நீர், எப்படி சுழன்று சுழன்று, குப்பை கோலத்தோடு ஒ வென்று சத்தத்துடன் ஓடுகிறது பார். கற்றுணர்ந்த ஞாநியின் மிருதுவான பேச்சையும் அரைவேக் காட்டின் ஆரவாரத்தையும் அல்லவா வேமா இது நினைவூட்டுகிறது.
கனக சொம்முலேன்னோ கனகம்ப தொக்கட்டே
பசுலவன்னே லென்னோ பாலொகட்டியே
புஷ்பஜாதுலேன்னோ பூஜ யொக்கடெ சுமா
விஸ்வதாபிமானா வினுர வேமா
என்னதான் அது உயர்ந்த ஜாதி , நாட்டு மாடு எதுவானாலும் அதன் பால் வெள்ளைநிறமான ஒன்று தானே. வித விதமா வேறே வேறே பேரிலே நீ நகை வாங்கினாலும் எல்லாம் ஒரே தங்கத்தினாலே தான் கேளும் பண்ணினது. அப்படியே தானேடா , வேமா, நீ கூடை நிறைய பூ வெவ்வேறு வண்ணத்தில், மணத்தில் வாங்கி பூஜை பண்ணினாலும், அந்த லிங்கத்துக்கு ஒரே ஒரு தும்பை பூவை போட்டு பண்ணினாலும் பூஜை ஒன்று தானேடா . என்னடா வித்யாசம் இதிலே?
வேமனாவை மீண்டும் ரசிப்போம்.
No comments:
Post a Comment