Wednesday, May 12, 2021

CHATRAPATHI SIVAJI

 சிவாஜி கதை  -   நங்கநல்லூர்     J K  SIVAN 


2.  அன்னை பவானி  அருள்  

விதோஜியும்  மாலோஜியும்  காலத்தின்  பிடியில் சிக்கி  உயிர் தப்பி   நிஜாம் சமஸ்தானத்தில்  ஜாகிராக இருந்த  ஜாதவ்  ராவிடம்  வேலைக் கமர்கிறார்கள். அவர்களுக்கு என்றாவது ஒருநாள் நமது ஊரில் மீண்டும் ராஜ்யத்தை கைப்பற்றி படை   போன்ஸ்லேக்கள் பலத்தோடு முகலாயர்களை வென்று விடுதலை பெறவேண்டும் என்று  தீராத தாகம்.

மாலோஜியின் பிள்ளை ஷாஹாஜியை    ஜாதவ்  ராவுக்கு ரொம்ப பிடித்தது. அவனது செல்லபிள்ளை மாதிரி  ஷஹாஜி.  கொஞ்சுவான். 

ஒருநாள்  ஜாதவ் ராவ் ஒரு விழா கொண்டாடினான் அனைவரையும் அழைத்தான். அதில் மாலோஜியும்  குடும்பத்தோடு கலந்துகொண்டாதால்  ஷாஹாஜி அவன் செல்லம் என்பதால்  ஓடிப்போய்  குழந்தை ஷாஜாஜி ஓடிப்போய்  ராவின் மடியில் உட்கார்ந்துகொண்டான் .   இதைப் பார்த்துவிட்டு   ஜாதவ் ராவின் பெண் ஜிஜாவும் ஓடி வந்து அப்பாவின் மடியில் ஏறி பங்கு போட்டு உட்கார்ந்து  கொண்டாள்.   ரெண்டு குழந்தைகளையும் மடியில் தாங்கிய  ஜாதவ் சந்தோஷத்தின் உச்சியில்  அந்த ரெண்டு அழகான குழந்தைகளையும் கட்டிக்  கொண்டான். 

விளையாட்டாக  தன் பெண்  ஜிஜாவிடம்  ''இதோ இந்த ராஜகுமாரன்  ஷாஹாஜியை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்டான்.    பிறகு  சபையோர்கள் அனைவரையும்  பார்த்து: 

''சபையோர்களே  எவ்வளவு அற்புதமான குழந்தைகள் இவர்கள். சரியான ஜோடிகளாக படைக்கப்பட்டவர்கள்'' என்றான். இருவரும்  கணவன் மனைவியாக  வாழ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்''  என்றான். அந்த குழந்தைகளும் ஒருவர் மேல் ஒருவர்  வண்ணப்  பொடிகளை தூவி மகிழ்ந்தனர். சபையோரும்  ஆனந்தத்தில் அந்த குழந்தைகளின் விளையாட்டை ரசித்தார்கள்.

மாலோஜியும் விதோஜியும்  ''ஆஹா  இது தெய்வ சங்கல்பம்.  போன்ஸ்லேக்களாகிய  நாங்களும்  ஜாதவ் ராவ் குடும்பமும் சம்பந்திகளாக போய்விட்டோம். ஜிஜா எங்கள் மருமகளாக வருவது எங்கள் பாக்கியம் .பெரிய மனிதர்கள் தமது வாக்கில் பிறழமாட்டார்கள். இது  தெய்வ சங்கல்பத்தால்  நிச்சயம் நடக்கும் '' என்கிறார்கள்.

ஜாதவ் ராவின் மனைவி மல்சா பாய்  ஆத்திரம் கொண்டாள் . மாலோஜி எவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறான். ஒரு சாதாரண  வேலையாள் அவன் மகனுக்கு என் பெண்ணை கொடுக்க நாங்கள் தரம் தாழ்ந்துவிட்டோமா  ?  என  கத்தினாள்.  கணவனை பிடி பிடி என்று  பிடித்துவிட்டாள் . 

''எப்படி அந்த மாலோஜி, ஒரு சாதாரண வேலைக்காரன்,   மகனுக்கு உன் பெண்ணை கல்யாணம் செயது கொடுக்க வாக்கு கொடுத்தாய். அவன்  சபையில் எழுந்து  இனி  நாம் சம்பந்தி, இந்த கல்யாணம் நடக்கும் என்று சொன்னபோது எப்படி  சும்மா இருந்தாய்''  . நமது  உயர்ந்த அந்தஸ்து, கௌரவம் குடும்ப உயர்வு  என்ன ஆகும்?''

ஜாதவ் ராவ்  பெண்களை  சமாளிக்க முடியாமல்  ''அது விளையாட்டுக்காக சொன்னது. அதை எப்படி சத்யம் என்று எடுத்துக் கொள்ளமுடியும்?"' என்று  ஒரு ஆளை அனுப்பி மாலோஜியிடம்  உன் பேச்சு  தவறு.  இந்த கல்யாணம் நடக்க முடியாது. உன் லெவலுக்கு நீ   வேறு பெண் தான் தேடிக் கொள்ள வேண்டும் '' என் று  சேதி அனுப்பினான்.  

மாலோஜி பதில் கடிதம் போட்டான்:  ''சபையில்   கொடுத்த   சத்ய  வாக்கு மதிக்கப்பட வேண்டும். அதை எப்படி  நிராகரிக்க முடியும். அது அவமானம் அல்லவா? இந்த கல்யாணம் நடக்கவேண்டும் ''என்று அழுத்தமாக சொன்னான்   மாலோஜி 

அப்புறம் என்ன.  மாலோஜி வித்தோஜி சகோதரர்கள்  அரசாங்க பணியிலிருந்து நீக்கப்பட்டு   நாடு கடத்தப்பட்டார்கள்.  நாம்  அடுத்தவரிடம் கை நீட்டி சம்பளம் வாங்கி வாழ்ந்ததால் தானே இந்த அவமானம் என்று வருந்திய மாலோஜி எப்படியாவது  வாழ்வில் முன்னேறி  ஒரு ராஜ்யதிபதி ஆகவேண்டும். என வேண்டினார்.  மராத்தா  சமூகத்திற்கு ஒரு  முன்னேற்றம் கொண்டுவரவேண்டும் என்று  எண்ணினார்கள்  இருவரும். 


ஒரு நாளிரவு வயல்காட்டில்  மாலோஜி வித்தோஜி  இருவரும் காவல் காத்து படுத்திருந்தனர்.  மாலோஜிக்கு  ஒரு கனவு.  

அவர்  படுத்த இடத்தின் அருகே ஒரு புற்று.   அந்த புற்றிலிருந்து ஒரு  கை  வெளிப்பட்டது. பளபளவென்று ஏராள ஆபரண ங்களோடு அந்த கை  வெளியே தெரிந்து மாலோஜியை  ''வா''   என்று அழைத்தது.  அன்னை பவானியின் கையோ?  அடுத்த கணம் மறைந்தது. திடுக்கிட்டு எழுந்த  மாலோஜி  விதோஜியை எழுப்பி கனைவில் கண்ட கை  பற்றி சொன்னான் .

''பேசாமல் படு.  ஏதோ  கற்பனைக் கனவு ''  என்று  சொன்ன விதோஜிக்கும் ஒரு கனவு.   எதிரே  அன்னை பவானி நிற்கிறாள்.  வெள்ளைக்கலை யுடுத்து  நெற்றியில்  புருவத்தை மறைத்த  வாறு பெரிய  குங்கும  தீற்று,   சர்வாபரண பூஷிதை.   விதோஜியின் முதுகை தடவிக் கொடுக்கிறாள்.  எழுப்புகிறாள். பேசுகிறாள்:  

 "ஏ, மனிதா,  உனக்கு  சகல சௌபாக்கியங்களும் தரப்போகிறேன்.  இந்த புற்றில் உன் கண்ணில் படும்  நாகம் வேறு யாரோ அல்ல, நானே.   அந்த நாகத்தை வணங்கி புற்றைத் தோண்டு . நாகத்திற்கு தீங்கு செய்யாமல் தோண்டு . அதுவே போய்விடும்.  உனக்கு வேண்டிய செல்வம் அந்த புற்றில் கிடைக்கும்.  உனக்குப்பிறகு  27 தலைமுறை  இந்த பிரதேசத்தை ஆளும். 

இரு சகோதர்களும்   தாம் கண்ட கனவுகளைப்  பரி மாறிக்கொண்டனர்.  திகைத்தனர்.   அருகே  பார்த்தபோது ஒரு   பெரிய  புற்று இருந்தது.   அதைத்  தோண்டியதில் ஏராளமான தங்கம் நவரத்தினங்கள்  கிடைத்தன.  ஒரு பெரிய நாகம் வெளிப்பட்டு  மறைந்தது.  புதையல் செல்வம் அனைத்தையும் கொண்டு வந்து  ஜாக்கிரதையாக ஒரு இடத்தில் ரகசியமாக  புதைத்து வைத்தார்கள்.  மாலோஜிக்கு இப்போது புது தெம்பு வந்துவிட்டது.  வீரர்களைத்  திரட்டினான். அன்னை பவானி அருளால்  ஒரு நல்ல  சாம்ராஜ்யம் எழப்போகிறது  வீரர்களை அழைத்தான்.    ஒரு மஹா வீரன் அந்த வம்சத்தில் தோன்றப்போகிறான். நாடு சுபிக்ஷம் அடையும் என்று வாக்களித்தான்.   ஸ்ரீகொண்டே  என்கிற ஊரில் சேஷாவை நாயக் பாண்டே  பெரும் தனவந்தர்.  உறவினர்.  ஆயிரம்  குதிரைகள் வாங்கினார்கள் . படைவீரர்களை திரட்டி  பயிற்சி அளித்தார்கள்.   நிர்வாக  அதிகாரி களை நியமித்தார்கள்.  புற்று இருந்த இடத்தில் ஒரு ஆலயம் உருவானது.  

சதாரா  ஜில்லாவில்   சம்பு  மஹாதேவர் குன்றில்  ஒரு  கோவில்  இப்படித்தான் தோன்றியது.  சித்திரை மாதம்  ஒரு பெரிய  விழா நடைபெற்றது.  ஐந்தாறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தண்ணீர்  கொண்டுவரப்பட்டது.   நீர்  கஷ்டம் தீர  மாலோஜி ஒரு ஏரி வெட்டி அமைத்தான்.  தர்மசாலா, சத்திரம் எல்லாம் கட்டி  பிராமணர்கள்  யாத்ரிகர்களுக்கு  வசதிகள் செயது கொடுத்தான்.   வெருள்  எனும் ஊரில் இருந்த சிதில மடைந்த கிருஷ்ணன் கோவில் புதுப்பிக்கப்பட்டது.  நிறைய குளங்கள், கிணறுகள் தோண்டப்பட்டது. மாலோஜியை மக்கள் மனமார புகழ்ந்து தலைவனாக ஏற்றனர். 

1200 குதிரைபடை வீரர்கள் தயாரானவுடன்  மாலோஜி  மீண்டும்  ஜாதவ் ராவிடம்  தன் மகன் ஷாஹாஜிக்கு ஜிஜாவை மனைவியாக்க  கோரிக்கை அனுப்பினான்.   ஜாதவ்  ஒப்புக்கொள்ளவில்லை.  இது பொருந்தாத சம்பந்தம் என்று  மறுத்தான்.   மாலோஜி  மராத்தா  வீரர்கள், நிம்பல்கர்கள்  ஆகியோரிடம்   ஜாதவ் ராவ் தனக்கு இழைத்த அநீதியை எடுத்து சொல்லி குடும்ப கௌரவத்தை அவமதித்தற்கு  பழி வாங்க வேண்டும் என்று  2000 குதிரை வீரர்களை அவர்களிடம் கேட்டான். அவன் பக்கம் நியாயம் இருந்ததால் ஜாகிர்தார்கள்  ஒத்துழைத்தார்கள் 

ஜாதவ் ராவ் பிரதேசத்தின் மீது குதிரைப்படை தாக்குதல் நிகழ்ந்தது.  ஸ்ரீகொண்டே  வழியாக படை சென்றது.  நிம்பதேவரா வழி சென்று  கோதாவரி நதியை கடந்தார்கள்.   நேவாஸே  கிராமம் அடைந்தார்கள். அஹ்மத் நகர்  நிஜாம் அரசுக்கு சேதி பறந்தது.  நிஜாம் சமஸ்தான  ஜாகிர் தான்   ஜாதவ் ராவ்.    சபையில் எல்லோர் முன் கொடுத்த வாக்கை பெண்கள்  எதிர்த்ததால்  மறுத்தது தெரிந்து  ஜாதவ் ராவ் மீது  நிஜாமுக்கு  கோபம் வந்தது. 

குடும்ப  விஷயத்தில்  தவறு செய்ததால்   ஜாதவ் ராவ் மூலம் ஒரு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கருதினான்.  டில்லி   முகலாய ராஜாவுக்கு   விஷயம் எட்டி  ஒரு கலவரம் அனாவசியமாக ஏற்பட்டது தெரிந்தால்  நல்லதல்ல.   நிஜாம்  மாலோஜி  ஜாதவ் ராவ் இருவரையும் அழைத்து  மத்தியஸ்தம் செய்தான்..அந்தஸ்து காரணமாக குடும்ப கௌரவம் காரணமாக இது நின்றது என்று ஜாதவ் ராவ் சொன்னான்.  

நான் உனக்களித்த உத்யோகத்தால் தானே  நீ  மாலோஜியை அவமானம் செயதாய் என்று அந்தக்கணமே  ஜாதவ் வகித்த  மான்சாப்  ஜாகிர் பதவியை  மாலோஜிக்கு   ஜாதவ்  ராவ்  பதவி  நீக்கப்பட்டான். மேற்கொண்டு நடந்தவை  சரித்திர முக்யத்துவம் வாய்ந்தவை...

தொடரும்  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...