பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
18. சேது -கங்கா திக் விஜயம்
AKC நடராஜன் என்பவர் ஒரு அற்புதமான கிளாரினெட் வித்வான். கிளாரினெட் ஒரு கடினமான மேலை நாட்டுவாத்யம். அதில் கர்நாடக சங்கீதம் கேட்க ஆனந்தமாக இருக்கும். நான் ரேடியோவில் தான் அவரைக் கேட்டிருக்கிறேன். வாசிக்கும்போது மூச்சு இழுத்து விடும் சத்தம் பலமாக கேட்கும். நாதஸ்வர, க்ளாரினெட் வித்வான்கள் மூச்சை இழுத்து வாசிக்கவேண்டி இருக்கும்.
இரவின் அமைதியில் நாதஸ்வரம் மெலிதாக கேட்பது ஒரு சுகானுபவம். நான் அடிக்கடி ஒலிநாடாவில் TAPE பில் கேட்டிருக்கிறேன். ரேடியோவில் இரவில் 9.30 மணிக்கு சில சமயம் நாதஸ்வர கச்சேரி வைப்பார்கள், ஆனந்தமாக குழிக்கரை பிச்சையப்பா , காருகுறிச்சி, திரு வீழிமிழலை சகோதரர்கள், ஷேக் சின்ன மௌலா எல்லோரையும் கேட்டிருக் கிறேன். TN ராஜரத்னம்பிள்ளை கச்சேரி எப்போவாவது ஒலி பரப்பும்போது கேட்பேன் .
நாதஸ்வரம் ரொம்ப கஷ்டமான வாத்யம். கொஞ்சம் சின்னதாக இருப்பது திமிரி. நடுத்தர நீளமானது பாரி நாயனம். பாரி நயனம் பற்றி தில்லானா மோகனாம்பாளில் கொத்தமங்கலம் சுப்பு அற்புதமாக விவரித்திருப்பார். அவரது கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரம் TNR ஐ மாடலாக MODEL ஆக சிருஷ்டிக்கப் பட்ட பாத்திரம் என்பார்கள். கோவில் கல்யாணங்கள், சுப காரியங்களுக்கும் மங்கள வாத்யம் நாதஸ்வரம் தவில் ஜோடி மிக முக்கியமானது. கும்பகோணம் மடத்தில் 15 அங்குல நீள திமிரி நாயனம் வாசிப்பார்கள். மடத்தில் சுப்பிர மணியம் என்பவர் பல வருஷங்கள் இந்த திமிரி நாயனம் வாசிப்பார். அப்போதெல்லாம் திமிரி நாதஸ்வர இசைக்கு மிருதங்கம் தான் பக்க வாத்யம்.
மஹா பெரியவாளுக்கு நாதஸ்வர இசை ரொம்பபிடிக்கும். நாராயணன் என்ற அற்புத வித்வான் சிறுவயது முதல் நாதஸ்வரம் வாசிப்பதில் சாமர்த்தியசாலி. இளம் வயதில் மறைந்தார். அப்புறம் கும்பகோணம் கந்தசாமி, அவர் மகன்கள் குமாரரத்னம், சின்னய்யா ரெண்டு பேரும் வாசித்தனர்.
1934ல் மஹா பெரியவா காசி சென்றபோது அங்கே ஹிந்துஸ்தானி சங்கீத மா
நாடு ஒன்று நடந்தது. அதற்கு கும்பகோணம் மட நாதஸ்வர வித்வான்கள் அழைக்கப்பட்டனர். மஹா பெரியவா ஆசியுடன் மாநாட்டில் நமது நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்றனர். ஹிந்துஸ்தானி மெட்டுகள் வாசித்துக் காட்டி பாராட்டுகள் பெற்றார்கள். மஹா பெரியவா ஆறு நாதஸ்வர குடும்பங்களை ஆதரித்தார். அவர்கள் 50 வருஷங்களுக்கும் மேலாக மடத்தோடு இணைந்தவர்கள்.
நாடு ஒன்று நடந்தது. அதற்கு கும்பகோணம் மட நாதஸ்வர வித்வான்கள் அழைக்கப்பட்டனர். மஹா பெரியவா ஆசியுடன் மாநாட்டில் நமது நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்றனர். ஹிந்துஸ்தானி மெட்டுகள் வாசித்துக் காட்டி பாராட்டுகள் பெற்றார்கள். மஹா பெரியவா ஆறு நாதஸ்வர குடும்பங்களை ஆதரித்தார். அவர்கள் 50 வருஷங்களுக்கும் மேலாக மடத்தோடு இணைந்தவர்கள்.
தென்னிந்தியாவில் பல ஊர்களுக்குச்சென்று மக்களை, பக்தர்களை சந்தித்து ஆசி வழங்க மஹா பெரியவா திட்டமிட்டார். அங்கங்கே பல ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தர்சனம், புஷ்கரணி ஸ்நானம் ராமேஸ்வரம் வரை சென்று சங்கல்பம் செய்துகொண்டு காசி வரை திக் விஜயம் மேற்கொண்டார். இந்த திக்விஜயம் முக்கால்வாசி காலால் நடந்து, அல்லது தேவைப்பட்டபோது பல்லக்கில் தான் . போகும் வழியெல்லாம் பக்தர்கள் மயம்.
நித்யகர்மானுஷ்டானம், பூஜை, பக்தர்களை சந்தித்து தரிசனம், ஆங்காங்கே பிரவசனம், மடத்து நிர்வாக சமாச்சாரம் அனைத்தையும் ஒன்று விடாமல் மஹா பெரியவா செய்தார். இந்த சேது- கங்கா திவ்ய யாத்திரை இருபது வருஷங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டது.
1919 மார்ச் மாதம், அமாவாசை அன்று கும்ப கோணத்திலிருந்து திக்விஜயம் துவங்கியது. பெரியவளோடு 200 தொண்டர்கள். பண்டிதர்கள் , மட நிர்வாகஸ்தர்கள், வைதிகர்கள், பணியாளர் கள், தவிர யானைகள், குதிரைகள், பசுக்கள், வேறு . கும்பகோணம் மடத்திற்கு தெற்கே உள்ள பிள்ளையாரை விடிகாலை வணங்கி, மூன்று ஆச்சார்யர்களின் பிருந்தாவனத்தில் வேண்டிக் கொண்டு புறப்பட்டது திக்விஜயம். புறப் படும் முன்பு பிராமணர்களுக்கு யாத்திரா தானம் வழங்குவது வழக்கம். காவேரி பகவதி படித்துறையில் டெபுடி கலக்டர் வி. துரைசாமி ஐயர் மகன் V D. ஸ்வாமிநாதய்யர் கட்டிக் கொடுத்த புதிய கட்டிடத்தில் பிக்ஷா வந்தனம் பாத பூஜை செய்தார் ஸ்வாமிநாதய்யர். அவரைத்தொடர்ந்த்து எண்ணற்ற கும்பகோண வாசிகளும் அவ்வாறே பாதபூஜை, பிக்ஷா வந்தனம் செய்தார்கள்.
ஆடி மாசம் பவுர்ணமி அன்று வியாச , குரு, பூர்ணிமா என்று கொண்டாடி ஆச்சார் யர்களுக்கு, குருவுக்கு வியாச பூஜை செய்வது வழக்கம். வெள்ளி மேடை ஆசனத்தில் மஞ்சள் அக்ஷதை தூவி, நடுவே கிருஷ்ண விக் ரஹம். மற்ற ரிஷிகள், தெய்வங்கள் விகிரஹங்கள் அதைச் சுற்றி வைத்து, (எலுமிச்சம்பழம் தான் விக் ரஹங்கள்) வைத்து பூஜை செய்வார்கள். எல்லா ஆலயங்களிலிருந்தும் மஹா பெரிய வாளுக்கு அன்று பிரசாதங்கள் வரும். மஹா பெரியவா செய்யும் வியாச பூஜையை தரிசிக்க நிறைய பக்தர்கள் கூடுவார்கள்.
1919 சாதுர்மாஸ்யம் வேப்பத்தூர் கிராமத்தில் (கும்பகோணத்திலிருந்து கிழக்கே ஐந்து மைல்) மஹாபெரியவா தாங்கினார். வேப்பத்தூர் பக்தர் கள், மகா பெரியவா, மடத்து தொண்டர் கள், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவ ருக்கும் தேவையான சௌகர்யங்கள் பண்ணி கொடுத்தார்கள்.
திக் விஜயம் தொடரும்
No comments:
Post a Comment