'மனமே கணமும் மறவாதே... மாய வாழ்வு சதமா? -- நங்கநல்லூர் J K SIVAN --------
ஆங்கிலத்தில் ஒரு சிறு கற்பனை சம்பாஷணை வெகுகாலமாக வாட்சப்பில், முகநூலில், மின்னஞ்சலில் தொடர்ந்து சுற்றிவந்து. அதை ஒருமுறை படிக்க நேர்ந்தபோது என் மனம் மிகவும் நெகிழ்ந்தது. என்ன அற்புதமான ஒரு விஷயத்தை. வாழ்க்கை தத்துவத்தை, அவ்வளவு சுலபமாக ஒரு குட்டி சித்திரமாக யாரோ காட்டி இருக்கிறார்கள். சரி இதை நம்மால் முடிந்தவரை தமிழ் படுத்தி நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம் என்று தோன்றியது.
''ராமண்ணா பெரிய பிழைக்கத் தெரிந்த கெட்டிக்கார சாமர்த்தியமான பணக்கார மர வியாபாரி . கொள்ளை கொள்ளையாக சம்பாதித்து, கார் பங்களா வீடுகள் கட்டி, மனைவி குழந்தைக ளோடு சநதோஷமாக வாழ்ந்து, முடிந்தவரை பலருக்கு உதவியும் செய்தவன். ஒருநாள் திடீரென்று அவனை மரணம் ஆட்கொண்டது.
அவன் நல்லவன் என்பதால் எம தர்மராஜனே நேரில் வந்து அவனை தன்னுடைய உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போக வந்தான்.
ராமண்ணா வீட்டில் அவன் உடல் கிடக்க அவன் உறவு, சுற்றம் எல்லாம் அழுது கொண்டிருக்க அவன் சூக்ஷ்ம சரீரம் இதோ கிளம்பி விட்டது. எதிரே யார் வருவது?யமதர்மன் வருகிறான். இதோ தன் அருகே வந்துவிட்டதை ராமண்ணா பார்க்கி றான் (சூக்ஷ்ம சரீரத்தை அதன் பழைய பெயர் கொண்டே இந்த சம்பாஷணையில் அடையாளம் காண்போம்)
''வா ராமண்ணா போவோம், நேரமாகி றது'''
'யார் நீங்கள்?'''
'''நான் யமதர்மன், உன் காலம் முடிந்து விட்டது என்னோடு வா''
''இல்லை இல்லை, இப்பவேவா, எனக்கு நிறைய வேலைகள் இன்னும் பாக்கி இருக்கிறதே'
'''ஒன்றும் இனி மேல் கிடையாது. இருந்தால் நீ செய்யவும் முடியாது. பேசாமல் வா என்னோடு ''
''அதென்ன உங்கள் கையில், என்னிடம் எப்போதும் இருக்கும் நீல நிற பெட்டி மாதிரி இருக்கிறதே. அதில் என்ன இருக்கிறது?''
''ஆமாம் அப்பா அதில் தான் உன் உடமை உள்ளது'
'''ஓ, என்னுடையவையா, அப்படியென்றால், அடடே, என்னுடைய ஆடைகள், பணம் வைத்திருந்த பர்ஸ், பாஸ்போர்ட், ஆதார், PAN CARD அதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கிறதா?'
'என்ன சிரிக்கிறாய் யமா?''
நீ சொன்ன வஸ்துக்கள் நீ வசித்த பூமிக்கு அல்லவோ உபயோகமானவை. அதற்கு சொந்தமானவை, உனதல்லவே""
''என்னப்பா யமா சொல்கிறாய்? அப்படி யென்றால் என் எண்ணங்கள், அந்த பெட்டியில் நிரம்பி இருக்கிறதா?'
'''இல்லை ராமண்ணா, எண்ணங்கள் காலத்துக்கு சொந்தமானவை, உனதல்ல''
''ஓஹோ அப்படியென்றால் அதில் இருப்பது என்னுடைய திறமைகள், சாமர்த்தியங்களா , எனனை அதற்காக எல்லோரும் புகழ்வ துண்டு''
''பாவம் டா நீ, ராமண்ணா, உன் திறமை, சாமர்த்தியம் எல்லாம் அதற்கேற்ப அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அல்லவோ சொந்தம்? அப்புறம் செல்லாதே, எப்படி உனதாகும்?
''''என்ன சொல்கிறாய் யமா, நான் எதைச் சொன்னாலும் அது இல்லை இது இல்லை என்கிறாயே, ஒருவேளை அந்த பெட்டியில் என் நண்பர்கள் என் குடும்பம் சம்பந்தமாக ஏதாவது இருக்கிறதா?''
'உன் நட்புக்கள், மனைவி குடும்பம், குழந்தை கள் எப்போதும் உன்னுடையவை இல்லையே, உன் வழியில் நடுவே வந்தவை அல்லவா? கொஞ்ச கால பழக்கம்.''
''எனக்கு தலை சுற்றுகிறது யமதர்மா, நீ ஏதோ புதிர் போடுகிறாய்? அந்த பெட்டியில் இருப்பது அப்படியென்றால் என் மனைவி மகன் ரெண்டு பேர் தானே? உண்மையைச் சொல்?''
''ராமண்ணா, நான் விளையாடவில்லையப்பா, உன் மனைவி மகன் எல்லாரும் சில காலம் உன் இதயத் துக்கு தொடர்புடைய சில ஜீவன்கள் அவ்வளவு தான். எப்போதும் உன்னுடையவர்கள் அல்ல. வேறானவர்கள்.''
''யமா, நாம் வெகு தூரம் வந்துவிட்டோம், இப்போதாவது சொல் அந்த பெட்டியில் என் பூலோக உடல் வைக்கப் பட்டிருக்கிறதா?
''ராமண்ணா, உன் உடல் பஞ்ச பூதத்திலிருந்து வந்தது ஆகவே ஜாக்கிரதையாக வந்த இடத்துக்கே போய்விட்டது. உனதெப்படி ஆகும்?
''எனக்கு புரிந்து விட்டது யமா. அப்படியென் றால் எஞ்சி இருப்பது என் ஆத்மா தான். அது தான் அந்த பெட்டியில் இருக்கவேண்டும், வேறு எதுவும் தான் இல்லை என்கிறாயே யமா''
''ராமண்ணா உன் சாமர்த்தியத்தை என்னி டமே காட்டுகிறாயா? ஆத்மா என்று எப்படி உனதாகும்? உன்னிடம் சில காலம் இருந்த தால் அது உனதாகி விடுமா, அது பரமாத்மா வின் அம்சம் அல்லவா? அது கூடவா உனக்கு தெரியாது?''
''யமா, எனக்கு என்னவோ பண்ணுகிறது, ஒன்றுமே புரியவில்லை, சொல்லவும் தெரிய வில்லை, அந்த பெட்டியில் என்னதான் என் உடைமை இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. கொடு அந்த பெட்டியை. நானே திறந்து பார்த்துக் கொள்கிறேன்''
'' சரி, இந்தா உன் பெட்டி ''
''யமா என்ன இது? இத்தனை நேரம் என் னோடு இந்த வெறும் காலி பெட்டியை வைத்துக் கொண்டா என்னை மல்லுக்கு இழுத்தாய்?. இந்த பெட்டியில் ஒன்றுமே இல்லையே. சொல் யம தர்மா, எனக்கு பயமாக இருக்கிறது. அது என்ன என் உடமை, என் கண்ணுக்கே தெரியாமல் இதில் இருக்கிறது என்றாய் ? ராமண்ணா அழுதான்.
''வாஸ்தவம் ராமண்ணா, உனதென்று ஒன்றுமே இல்லை. அது தான் உன் உடைமை''
''ஐயோ வீடு வாசல், சொத்து, மனைவி, சுற்றம், பேர் புகழ், ஆடை, அந்தஸ்து, .... என்ன சொல் கிறாய் யமதர்மா, எனக்கு என்று எதுவுமே கிடையாதா?"'
''அது தான் உண்மை ராமண்ணா, உனக்கு என்றிருந்தது சில கணங்கள் மட்டுமே. அந்த கணங்களில் நீ வாழ்ந்தாய். உன் வாழ்க்கை பூலோகத்தில் அந்த சில கணங்கள் தான். நீ வாழ்ந்த அனுபவித்த ஒவ்வொரு கணத்தில் நீ கண்டவை, கொண்டவை, எல்லாம் உனது போல் தோன்றியது. பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடும் குழந்தை அதை நிஜ மாடு, யானை குரங்கு என்று நம்பி விளை யாடும். நீ கண்டதை, சேர்த்ததை, சில கணங்கள் அனுபவித்தாய் அவ்வளவு தான். உனது போல் , என்றும் நிலையானது என்று , சாஸ்வதம் போல் உனக்கு ஒரு மாயத் தோற்றம் அளித்தது. நீ அதில் மகிழ்ந்தவன். இந்த உண்மையை உணராமல் நீ வாழ்ந்த தால் உனக்கு இப்போது அதை அறிந்ததும் ஏமாற்றம் தாங்கமுடியவில்லை.
ராமண்ணா, உலக வாழ்வில் ஒவ்வொரு கணமும் அந்த பரமன் தந்தது, அதை அவன் நினைவிலேயே ஆனந்தமாக நன்றியோடு கழிக்க தெரியவில்லை உனக்கு. வாழ்க்கை அவன் அளித்தது, நீ சுகம், இன்பம் சொந்தம் என கருதியதெல்லாம் அவன் உனக்கு விளை யாட அளித்த பொம்மைகள்... நன்றியோடு அவற்றை விட்டுவிட்டு வா..அடுத்தவர்கள் விளையாட வேண்டாமா?அவனிடம் நீ காட்டும் நன்றி உணர்வு ஒன்றே உன்னோடு எப்போதும் இருப்பது... அது இது, உருவம், எடை, அடையா ளம், காலம் நேரம் எதுவும் இல்லாத ஸாஸ்வதம் .....
No comments:
Post a Comment