Wednesday, August 3, 2022

 


நாம்   அன்றாடம் பேசும் வார்த்தைகளில்  சமஸ்க்ரிதம்  ஒன்றிரண்டாவது நிச்சயம் கலந்திருக்கும்.  சமஸ்க்ரிதம் கலக்காத மொழியே இந்தியாவில் கிடையாது. ஒரு காலத்தில் சமஸ்க்ரிதம் எல்லோரும் பேசும் மொழியாக இருந்தது என்பது நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

இன்று  ஹிந்து தமிழ் திசை ஆன்மீக  காணொளி  ''ஆனந்த ஜோதிக்கு''  நான் அளித்த ஒரு  ஐந்து நிமிஷ  உரையில் ஒரு சில சமஸ்க்ரித வார்த்தைகளை நாம் உபயோகிப்பதை பற்றி நினைவுக்கு வந்தவரை  எடுத்துரைத்தேன்.



ADI PERUKKU


 இன்று பதினெட்டாம் பெருக்கு எனும் ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வடக்கே எப்படி கங்கை முக்கியமோ அந்த அளவு தென்னிந்தியாவில் காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி. தஞ்சை ஜில்லா டெல்டா தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி தீர்ப்பதில் மிகப் பெரியது. வெகு ஆவலாக விவசாயிகள் பயிர்த் தொழிலாளர்கள், பொது மக்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவகாற்றின் விளைவாக பெருகும் மழை நீர் ப்ரவாஹமாகி ஓடி காவிரியை நிரம்பச்செயது அணைக்கட்டுகள் திறந்தோ திறக்காமலோ உபரி நீர் ஆடி மாதம் தமிழகத்தை அடைவது ஒரு அற்புதமான நாள் அல்லவா? அதைப்பற்றிய ஒரு சிறு வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.


PLEASE LEAVE YOUR COMMENTS AT THE COMMENTS COLUMN IN ;;THE HINDU TAMIL THISAI - CHANNEL ANANDHAJODHI'' WHICH HAD RELEASEDTHIS VIDEO.

https://youtu.be/Qcef0Lt_-08

Tuesday, August 2, 2022

AADI 18

 

ஆடி பதினெட்டு  -   #நங்கநல்லூர்_J_K_SIVAN 


இன்று விடியற்காலை  கதவை திறந்தேன். லேசாக மழை வரவேற்றது.  மகிழ்ச்சி  மனத்தையும் குளிர்வித்தது.

ஆஷாட மாசம் எனப்படும் ஆடி  தெய்வீக மாசம்.  லௌகீகம் ரொம்ப  கலக்காதது.  கடை வியாபாரிகள் மட்டும்   கவனத்தை ஈர்க்க   ''ஆடி விசேஷ தள்ளுபடி'' கொடுப்பதாக  தங்கள் பக்கம் இழுப்பார்கள். இந்த ஆடியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நாள் ,

எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் நாள் ஆடிப்பெருக்கு எனும் 18ம் பெருக்கு. அது இன்று.  இந்த ஒரு பண்டிகை தான்  நக்ஷத்ரம் திதி எல்லாம் பார்க்காமல்  வெறும் தமிழ் தேதியை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கொண்டாடுவது.  பஞ்சாங்கம் இதற்கு தேவையில்லை.  எல்லா வீடுகளிலும் பலவித சித்ரான்னம், வாசலில் வண்ண கோலங்கள் காணப்படும் நாள்.

ஆங்கில மாதம் ஜூன்-ஜூலை முதல்  தென்னகத்தின்  மேற்கே  மலைகளில் தென்மேற்கு பருவக் காற்றால் உந்தப்பட்டு பொழியும்  மழைநீர்  மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருகி ஆறுகளாக  ஓடும். இருக்கும் அத்தனை ஆற்றிலும் நீரின் வரத்து அதிகமாகும். 

பதினெட்டு தேதிகளில்  அணைக்கட்டு நிரம்பி  காவிரிக்கு நீர் திறந்து விடுவார்கள்.  தஞ்சை ஜில்லா டெல்டா பிரதேசங்களில்  கொண்டாட்டம்.  

இந்த ஆடி 18ம் நாள் தான் ஒரு மஹா வீரன் குதிரை மேல் ஏறிக்கொண்டு  வீராணம்  ஏரிக்கரையில் வந்து கொண்டிருந்தான்  என்று  வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை தனது அமர காவியமான  ''பொன்னியின் செல்வனில்''  கல்கி அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

அந்த ஏரி கடல் போல் விரிந்து பரந்து காணப்படுவது. தமிழகத்துக்கு முக்கியமாக  சென்னை மாநகரத்துக்கு  இப்போது நீர் தரும் வள்ளல்.  

ஆடிப்பெருக்கின்  போது  சோழ நாட்டு நதிகளில் எல்லாம்  தண்ணீர்  வெள்ளமாக  நிரம்பி, கொள்ளிடம் வழியாக  வீராணம் ஏரிக்குள் நீர் குபுகுபு என்று புகும். அழகே தனி.  விவசாயிகளுக்கு குதூகலம்,  ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அல்லவா?  ஆறுமாதத்தில் தைமாதத்தில் அறுவடை, பொங்கல் விழா நடக்கும்.
ஆடிப்பெருக்கு அன்று கிராமத்தில் குழந்தைகள்  தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு விலாயுடுவதை மக்கள்  கும்பலாக ரசிப்பார்கள்.  பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங் எல்லோரும்  புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய்  அவர்கள் சிரங்களை  அலங்க ரிக்கும். வட்டமாக  முட்டு முட்டாக  குடும்பத் தினர், நண்பர்களோடு,  கரையோரங்களில் பாக்கு மட்டை களில், வாழை இலைகளில்,  வித வித  சித்திரான் னம் உண்பார்கள். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால்  சோழ நாட்டு வயல்கள் செழிக்கும், தமிழக மக்கள் வயிறு நிரம்பும். நடந்தாய் நீ, இப்போது  ஓடம்மா, வாழி காவேரி  என்று பாட தோன்றும்.

ஆடிப்பெருக்கு தான்  ஆரம்பம். இனிமே மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டி தீர்க்க போகிறது என்று எல்லோரும் மகிழும்  நாள் ஆடி பதினெட்டு. 

SANDHYAVANDHANAM

 சந்தியாவந்தனம்  --  #நங்கநல்லூர்_J_K_SIVAN 



 தினமும்    संध्यावन्दनम्,   sandhyāvandanam,  சந்தியாவந்த
னம்,  பண்ணவேண்டும் என்று எல்லோரும் சொல்கி றார்கள். சந்தியா என்பது யார் பெயரோ அல்ல. அவளுக்கு   குட் ஈவினிங்  என்று வந்தனம் செலுத்து வதாக  நினைக்க வேண்டாம்.

ஸந்த்யாதேவி  ப்ராஹ்மி, ரௌத்திரி, வைஷ்ணவி  என்ற மூன்று உருவும் பெயரும்  கொண்டவள். பிரணவ ரிஷி ஸந்த்யாவனந்த ரிஷி.

உபநயனம் எனும் பூணல் போட்டுவிட்டபின்  ஆரம்பிக் கும் இது அவன் கடைசி மூச்சு வரை தொடர்கிறது. மோக்ஷ மார்க்க வழிபாடு.  ராமாயணம்   மஹா பாரதம் ரெண்டுமே  ராமனும் கிருஷ்ணனும் சந்தியாவந்தனம் செய்ததை சொல்கிறது. ராமாயணத்தில் பால காண் டம்  (23.2, 23.2)  ஸ்லோகம்  விஸ்வாமித்ரர்  ராம லக்ஷ்ம ணர்களை துயிலெழுப்பி  ''பொழுது விடிந்தது. எழுந்திருங்கள் சந்தியாவந்தனம் பண்ணுங்கள்'' என்று  சொன்னதை  கூறுகிறது. 

மஹா பாரதத்தில் உத்தியோகபர்வத்தில் (82.21) கிருஷ்ணன் சந்தியாவந்தனம் செய்ததை சொல்கிறது. அந்திவேளை என்று சொல்கிறோமே  இரவும் பகலும் சந்திக்கும் வேவேளை சந்தியா காலம்.

காலையில்  காயத்ரி,  வெண்ணிறம் கொண்டவள். நண்பகல்  சாவித்ரி, சிவப்பு நிறத்தவள்,  சாயந்திரம் சரஸ்வதி, கருநீலக்காரி . 

 காயத்ரி மந்திரத்தை சொல்லி அர்க்கியம் விடுவது தான் சந்தியாவந்தனம்.

காயத்ரி மந்திரம்  24 அக்ஷரங்களை கொண்டது.1.tat (तत्), 2.sa (स), 3.vi (वि), 4.tur (तुर्), 5.va (व), 6.re (रे), 7.ṇi (णि), 8.yaṃ (यं), 9.bhar (भर्), 10.go (गो), 11.de (दे), 12.va (व), 13.sya (स्य), 14.dhī (धी), 15.ma (म), 16.hi (हि), 17.dhi (धि), 18.yo (यो), 19.yo (यो), 20.naḥ (नः), 21.pra (प्र), 22.co (चो) 23.da (द) and 24.yāt (यात्).

ஒரு நாளை,24 மணி நேரத்தை,  ஐந்தாக பிரிக்கிறோம்.  ஒவ்வொரு பிரிவும்  2மணி 24 நிமிஷ காலம்.அவற்றுக்கு பெயர்கள் உண்டு.

ப்ராதக்  காலம். prātaḥ-kālaḥ  விடிகாலை. 
பூர்வாஹ்ன காலம்  pūrvahna   முற்பகல்.
 மத்யானம்  madhyāhna   உச்சி வேளை .
அபராஹ்ன காலம்.  aparāhna  சாயந்திரத்துக்கு முற் பகல்.
சாயஹ்ன  sāyāhna  சாயந்திரம்.

ஸந்த்யாகாலம்  மொத்தத்தில் 72 நிமிஷ நேரம். ப்ராதஸ் சந்தியா  நேரம்  சூர்ய உதயத்துக்கு முன்பு.  அதாவது காலை 6 மணிக்கு சூர்யாஉதயம் என்று வைத்துக் கொண்டால்  5.12 am ஆரம்பம். மத்தியானம் அதே போல் 11.24  am  முதல் 12.36pm  வரை. சாயங்காலம் சந்தியா வந்தன நேரம்  5.36 pm -6.48pm  வரை. குறித்த நேரத்தில் பண்ண முடியாவிட்டால்  2 மணி நேரம் அவகாசத்தில் பண்ணிவிடலாம். இது concession

கிழக்கே பார்த்து அமர்ந்து சந்தியா வந்தனம் பண்ணவேண்டும்.

மத்தியானம் வடக்கு பார்த்து.

சாயந்திரம் மேற்கே பார்த்து. 

ஒரு ஸ்லோகம் என்ன சொல்கிறது""yatsandhyāmupāsate brahmaiva tadupāsate" யத் சந்தியா முபாஸதே  ப்ரஹ்மைவ  ததுபாஸதே-   அதாவது  எவன் இப்படி ஸந்த்யாவந்தன உபாஸனையை பண்ணுகிறானோ,  காயத்ரியை வழிபடுகிறானோ, அவன் பரப்ரம்மத்தை அல்லவோ  வழிபடுகிறான். மோக்ஷம் அவனுக்காக காத்திருக்கிறதே.

காசு பணம் செலவில்லாமல் இப்படி மோக்ஷம் கிடைக்கும் வழி இருக்கும்போது யாராவது இதை  தவிர்க்கலாமா?

KALIYUGAM

 

அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  
கலிகாலம்  6


என்ன நடக்கிறது  இங்கே?

''பரீக்ஷித் மஹாராஜா,    கலியுகம் என்பது எப்படி இருக்கும்,  மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று மேலும் சொல்கிறேன். கேளுங்கள்  என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி.   ஸ்ரீமத் பாகவதம்  12.2. 6  ஸ்லோகம் இது தான்  

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥

dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

ஊரைக்கூட்டுற அளவு  மூக்கைத் துளைக்கிற  சென்ட்,  பளபள  ஜிலுஜிலு  பட்டு சட்டை வேஷ்டி, புடவை நகைகள், இதனால்  அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள்.   இயற்கற்கையான  இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் அழகு புறக்கணிக்கப்படும்.  இது தான் கலிகாலத்தில் நடக்கும்.

முரட்டுத்  தனமான  பொய் நிறைய கலந்த அடாவடி பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், வெறித்தனமாக  மேலே மேலே  எல்லோரையும் பிடித்து காசு கொடுத்து  ஆட்களை மதம் மாற்றி  தமது மதத்தாராக சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லக்ஷ்யமாக கொண்டிருக்கும். இதெல்லாம் கலிகாலத்தில் சர்வ சாதாரணம் என்பதை நாம் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். ஆனால் சுகப்ரம்மம் அப்போதே  இதை அறிந்திருக்கிறாரே !  (பாகவத புராணம் 12.2.6)

க்ஷேத்ரம்  என்றால்  பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம்,  பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த,  வாழ்ந்த  இடம், சில  நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம்  என்பதெல்லாம் ஏனோ  கலிகாலத்தில்  நமக்கெல்லாம்  மறந்து விடும், எல்லாம்  போகப்போக   மறைந்துவிடும்.  எங்கோ  ஒரு  இடத்தில்  பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால் அந்த குட்டை  தான்  புனித ஸ்தலம், க்ஷேத்ரம்  என்று கலியுகத்தில் மக்கள்  நம்பி  மகிழ்வார்கள்.  இது அவர்கள் தப்பில்லை.  இப்படி  கொஞ்சம் கொஞ்சமாகி  அழிவை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம்.

அழகு  என்பது சாமுத்திரிகா லக்ஷணம்  இல்லை.  ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி  இருக்கிறதோ  அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும்.  இப்போது  MKT  பாகவதர்  கிராப்  யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா?  யாராவது  கிருஷ்ணன், ராமன்  மாதிரி  நீளமாக தலைமுடி வளர்த்துக் கொள்கிறோமா?  ஒரு காலத்தில் கை  ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட  அப்படி  ஒரு தலை முடி வளர்த்து   ''மன்மத லீலையை'' பாடிக்கொண்டு  போவதை  நானே சிறுவபதில் கோடம்பாக் கத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது எவனாவது  பாகவதர் படம் வீட்டில் வைத்திருக்கிறானா? அவர் பாட்டை பாடுகிறானா? அவர்போல் ஜில்பா, கடுக்கன், அங்கவஸ்திரம், ஜவ்வாது பொட்டுடன்  திரிவானா? ஊரே அவனைக் கேலியாக  பார்க்காதா??  இது தான் கலி முற்றிக்கொண்டே வருவதன் அடையாளம்.
 

அமெரிக்காவில் புதுப்  புது  HAIR ஸ்டைல்.  ஏன்  நாம்  பார்க்கும்  IPL  விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  பங்கேற்கும் சில  வீரர்கள், வீராங்கனைகள் தலையே  பொட்டுக்கூடை  தகவல் சொல்ல வில்லையா?  அதற்கென்றே  நிறைய  பணம் செலவு  செய்து  நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி  அலங்கரித்துக் கொண்டு வந்து,  வீட்டில் தாத்தா  பாட்டிகளிடம்  சாபம்  வாங்குவது தெரியாதா?   இப்போது கரோனா சமயத்தில் பலர் தலைகள்  முகங்கள்  எல்லாமே   ரிஷிகள் தலைகளாக  காண்கிறதே. அப்படியே  ஒருவேளை நிலைத்துவிடுமோ? அப்படித்தான்  தோன்றுகிறது. அட கலிகாலமே !


KABEER DAS

 ஞானி கபீர் தாஸர்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 



காசி அருகே  ஒரு குளம் அதன் பெயர் லஹர் தாலாப்.   அதில் ஒரு பெரிய தாமரை இலைமேல் ஒரு சின்ன குழந்தை.    அந்த ஊரில் ஒரு  ஏழை இஸ்லாமிய நெசவாளி   நீரு  என்பவருக்கு வெகுகாலம் குழந்தை இல்லை, அவர் கண்ணில் இந்த குழந்தை படுவானேன்!  

அளவிலா சந்தோஷத்தோடு இந்த குழந்தையை எடுத்துக்கொண்டு நீரு  வீட்டுக்கு ஓடி மனைவி நீராவிடம்  ''இந்தா ஒரு அழகிய குழந்தை. இன்று  எனக்கு கிடைத்தது. நாம் வணங்கும்  பகவான்  நம் மேல்  பரிவோடு தந்த பரிசு நமக்கு ''  என்று அவளிடம் கொடுத்தார்.  

நீருவின்  இஸ்லாமிய  குடும்பத்தினர் உறவினருக்கு  இப்படி ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்ப்பது பிடிக்கவில்லை.  யாரோ  ஒருவர்  ''நீரு,  இந்த குழந்தை  சாதாரண குழந்தை இல்லை. சைத்தான். உடனே கொன்றுவிடு ''என்று கூட  நச்சரித்தார்.   நீரு  காதில் வாங்கவில்லை.  திடீரென்று பலர் முன்னிலையில் அந்த  இஸ்லாமிய வெறியர்  ஒரு கூரான கத்தியை அந்த சிறிய சிசுவின் நெஞ்சில் பாய்ச்சினார்.   குழந்தைக்கு ஒன்றுமே  ஆகவில்லை, ஒரு சொட்டு ரத்தமும் வெளியேறவில்லை. வலிக்கவில்லை. சிரித்தது.
 அப்போது அந்த குழந்தை ஒரு  ரெண்டடி ஸ்லோகம் வேறு சொல்லியது.  அந்த குழந்தை மானுட ரகம் அல்ல.  தெய்வீக சக்தி வாய்ந்தது என்று புரிந்தது. அதிசயித்தனர்.  

அந்த குழந்தைக்கு எல்லோரும் ''கபீர்'' என்று பெயர் வைத்தார்கள்.  அரேபிய மொழியில்  ''உன்னதமான'' என்று அர்த்தம்.

ஹிந்து மதத்தை சார்ந்தவராக   இருந்திருக்கலாம் என்றாலும் இஸ்லாமிய குடும்பத்தால் எடுத்து வளர்க்கப் பட்டதால் கபீர்  ஒரு  இஸ்லாமியர்  என்றே  அடையாளம் காணப்படுகிறார். ஒரு பாடலில் கபீர்  தான்  எந்த மனித தேகத்திலும் பிறவாதவன் என்கிறார். ஆகாரம் இல்லாமலேயே வளர்ந்த குழந்தை கபீர்.  அவரது வளர்ப்பு பெற்றோர்  கவலை  கொள்ளவே  ஒரு பசுவின் பாலில் வளர்ந்தார்.  

கபீர் யார், அவரது உண்மையான  பெற்றோர் யார், எந்த ஊர், எதுவுமே  தெரியாத ரகசியமாகவே இருக்
கிறது.சிக்கந்தர்  லோடி  ஆண்ட காலத்தில் காசியில் இருந்தவர் என்று மட்டும்  அறிகிறோம். அவர்  ஸ்ரீ ராமானந்தரின் பிரதம சீடர் என்பது தெரிந்த விஷயம்.

இளம் வயதில் தியானத்திலும் தனிமையிலும் அமைதியாக கழிந்தது.  சாதுக்களை பக்தியோடு  அணுகி அவர்களோடு சம்பாஷித்து ஞானம் பெற்றவர்.  அவர்களுக்கு சேவை செய்து  ஆசி பெற்றவர்.  பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். ஆயினும்  குடும்பத்தில் பற்று ஏற்படவில்லை. காசியில் அவரை எங்கும் காணலாம். நெசவுத்தொழில் கற்று அதில் ஜீவனம் நடத்தியவர்.  மதத்திற்கு அப்பாற்பட்டவர் கபீர்.
அன்பு,  இறை நம்பிக்கை, மக்கள் சேவை,  தயை, சத்யம்,  எளிமை,  பக்தி,  எல்லாம் எந்த மதத்திற்கும் அடிப்படை ஆதாரம், பொதுவானது,  என்று உணர்ந்தவர். ஆகவே  ஹிந்து சனாதன தர்மம், இஸ்லாமிய நம்பிக் கைகள் இரண்டையும் வித்தியாசமின்றி சமமாக  ஏற்றவராக  விளங்கினார்.  கபீர் ஒரு வேதாந்தி, கவிஞன், ஆன்மீகவாதி.  கபீர் தாசர்   ஹிந்தியில் இயற்றிய    உயர்ந்த தத்துவ, எளிய, ஞானப்  பாடல்கள் இன்றும் பலரால் பாடப்பட்டு வருகிறது.
கபீரின்  ஞான வாக்கியங்களில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

''தேசமுழுதும்  க்ஷேத்ர யாத்திரை போகிறேன் என்று மனதில் இறைவனைத்தவிர  மற்ற எண்ணங்கள் நிறைந்து சுற்றுவது வீணான செயல்.  ஆசை, பேராசை, பொறாமை எண்ணங்களோடு காசிக்கு போய் , விஸ்வநாதர் முன் நிற்பது தரிசனம் பெறுவதாகுமா, ஆசி பெறுவதாகுமா ?''

''வைர வியாபாரி நிபுணனுக்கு தான் ஒரு கல்லின் பெருமை மஹத்வம் தெரியும்? தூய்மையான பக்தி நிறைந்த உள்ளம் உள்ளவனுக்கு தான் பக்தியும் பகவானும் புரியும்''

''அழியும் உடலாய் மற்ற .  நம்பாதே.  உன் பஞ்சாபிராணனும் பகவானை நினைக்க உதவினாலுனக்கு பரகதி நிச்சயம்''

''இரக்கம், தயை உள்ள இதயத்தை  கொண்டவனிடம் தான் நற்குணம் நிலைக்கும்.  சுயநலம், பேராசை தீய குணங்கள் கெட்டவனின் சொத்து''

''பொறுமையே  பூஷணம்.  காலத்தில் நல்லது, நன்மை  தானே தேடிவரும்.  தோட்டக்காரன் பல நாள் பொறுமையாக  நீர், மண் ஆகியவற்றை  விடாமல்  அளித்தாலும் தக்க காலம் வந்தால்  தான் செடி மரமாகி கனி தரும்.''

''இன்றே  முடிந்ததை செய், நாளைக்கு என்று தள்ளிப்போடாதே.  நாளை நடப்பதை யார் அறிவார்?
ஐம்புலன்களை  வென்றவன் தான் ஜிதேந்திரியன்.  அவனால் தான் பகவானை நெருங்கமுடியும்.

சர்க்கரை பொம்மையில்  எங்கும், முழுதும், சர்க்கரையின் இனிமையே . அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுதும்  பிரம்மம், ப்ரம்மம்,  பிரம்மம்  ஒன்றே தான்''.

Monday, August 1, 2022

MY SCHOOL DAYS. NOSTALGIA

 


எங்க கால  பள்ளிக்கூடம்   -   நங்கநல்லூர்  J K   SIVAN 

நான்  சொல்றது   75-76 வருஷம் முன்னாலே. அப்போ  எந்த பள்ளிக்கூடத்திலேயும்  யாரும்  சாகலே.  காசும்  பள்ளிக்கூடம் வாங்கலே.   அப்போ  இது மாதிரி பள்ளிக்கூடங்களில் படிச்ச சில   பெரிசுகளுக்கு மட்டும் தான் இது  ஞாபகம் வரும்.

பள்ளிக்கூடம்  கூரை கொட்டகை தான்.  மண் தரை.  பாதிநேரம்  வெளியிலே மரத்தடி நிழலில் தான் காற்றாட  வட்டமாக உட்கார்ந்திருப்போம்.   கிளாஸ் ரூம் என்று தடுப்பு கிடையாது. பென்ச் கிடையாது.  ஸ்லேட் என்ற  பலகை வைத்திருப்போம். அதை மடியில் வைத்துக்கொண்டு  தான்  பலப்பத்தால்  எழுதுவோம்.  ஹெட்மாஸ்டர்  ரூமில் மட்டும் தான்  கரும்பலகை  என்று  கருப்பு  பெயிண்ட் அடித்த மர  போர்டு  முக்காலி மாதிரி  ஒன்றின்  மேல்  ஒரு  மூலையில்  நிற்கும்.  அதன்  வலது கோடியில்  மேலே   மொத்த  மாணவர்கள்   எவ்வளவு, வந்தவர்கள் எவ்வளவு  என்று  ஒரு  நம்பர்  மட்டும்  சுப்ரமணிய அய்யர் எழுதி வைப்பார்.  

பாதிக்கு  பாதி  தான் நம்பர்  அது காட்டும்.  மேலே  கூரை. வகுப்பின் எல்லையாக  ரெண்டு பக்கமும் மண் சுவர்  இடுப்பளவு  எழுப்பி இருக்கும்.   இடையே இருக்கும் இடைவெளி  தான்  வாசல்.  ஒரே  ஒரு  மர   நாற்காலி  முக்கால் வாசி  கையில்லாமலோ,  கை  காணாமல் போனதோ  இருக்கும்.    ஒரு வகுப்புக்கும்  அடுத்த வகுப்புக்கும்  வித்யாஸம்  பையன்கள் பெண்கள்  திரும்பி உட்கார்ந்து இருப்பது தான்  அடையாளம்.

குரல்  அங்கிருந்து  இங்கே, இங்கிருந்து  அங்கே  தாராளமாக   கேட்கும்.  பெண்கள் ஒரு  பக்கம்,  ஆண்கள்  ஒருபக்கம்  என்று சில வகுப்புகளில்  இடம்  இருந்தால்  மாற்றி  அமர்வோம். இல்லையேல்,  அனைவரும்  பக்கத்தில்  தான் உட்காருவோம்.  வகுப்பில்  மின்சாரம் கிடையாது, லைட்   FAN  எல்லாம் தெரியாது. நிறைய  நேரங்களில்   காற்றில்லாமல்  வெளியே  மரத்தடியில்  வகுப்பு நடக்கும்.   கரும்பலகை  அங்கே  வராது.  ஆசிரியர்  வாயில்  சொன்னதை  எழுதிக் கொள்வோம். 

வரதராஜ முதலியார்  என்று  ஒரு  சார். எனது  மூன்றாம்  வகுப்புக்கு  ஆசிரியர்.  ஒரு சிறிய குட்டி  மாட்டு வண்டியில் தான் வருவார்.  ஒரே  ஒரு  மனிதன்  மட்டும்  அமரும்  குட்டி  வண்டி.  அவருக்கு  இடது  கால்  யானைக்கால்  என்ற FILARIA வியாதி.  வேஷ்டியால் அதை மூடிக்கொண்டு  நடக்க முடியாமல்  வண்டியை  விட்டு  இறங்கி  வருவார். அந்த  வண்டியை  ஒரு மரத்தடியில் விட்டு, அந்த  குள்ள   காளைக்  கன்றை  பள்ளிக்  கூடத்தில்  புல் தரையில்  மேய விடுவார்.  நாங்கள்  அவ்வபோது  அதற்கு ஒரு  பக்கெட்டில்  தண்ணீர்  காட்டுவோம். அது  எங்களிடம்  நட்போடு  பழகாது.  கொம்பில்லாமலேயே முட்ட வரும். முதலியார் மேல் உள்ள கோபத்தை எங்களிடம் காட்டும்.

 காளைக்கன்றின்  கழுத்திலே  சிவப்பு   பட்டு நூல்  கயிறு  கட்டி வைத்திருப்பார்.   ''ராமா''   என்பார். திரும்பி பார்க்கும்.  அவர்  எப்போதும்  முணுமுணு   என்று  வெளியே  புரியாமல்  யாரையோ  திட்டிக்கொண்டே  இருப்பார்.  கையை  ஆட்டி  ஆட்டி  அந்த  உருவமில்லா  மனிதனையோ, மனிதையையோ  மனைவி யையோ, கோபிப்பார்.  

வரதராஜ முதலியார்  தனது  குடும்ப  வாழ்க்கையின்  துன்பத்திலிருந்து  சற்று  விலகி இருக்கவே  விடாமல்  பள்ளி  வந்திருக்கிறார்  என்று  இப்போது  புரிகிறது.   அவர்  பாடம்  நடத்துவது கொஞ்ச நேரம்  தான் .  எல்லார்  பலகையையும் (  சொல்ல மறந்து விட்டேனே.  பலகை  என்றால்  ஸ்லேட். அதில்  எழுதும்  ஆயுதம்  பலப்பம்.  ஸ்லேட்டுக்குச்சி என்போம்.  கோவைப்பழம்,  போட்டு பலகையை  துடைத்தால் மினு மினு  என்று கறுப்பாக  இருக்கும்.  மாவு  பலப்பம்  என்பது  வெள்ளையாக  அச்சு கொட்டி  எழுதும்.)  அதில்  தான்  வாய்ப்பாடு  எழுத வைப்பார்.  எனக்கு  தெரிந்து  அவர்  எங்களுக்கு வாய்ப்பாடு எழுத   வைத்து  அதை  திருத்தி கொடுப்பது  ஒன்றை  மட்டுமே பலகாலம் செய்து  வந்தார்  இன்று இப்போது  தெரிகிறது.  வாய்ப்பாடு எழுதும்போது  சத்தம் போடாமல்  தலை  குனிந்து எங்கள்  மண்டையை  குடைந்து கொண்டு  கூட்டி   கூட்டி எழுதும்போது  நேரம்  நிறைய  தேவை  என்று தெரிந்து  வைத்துக்கொண்டு   இந்த உத்தியை  கையாண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் தனது சொந்த கவலையை சிந்திக்க அது உதவி இருக்கிறது.

''திருத்துவது''  என்றால்  ஒவ்வொரு பையன், பெண்ணிடமிருந்து  பலகையை வாங்கி  அவரிடம்  கொடுக்க வேண்டும்.   இடது காலை  நாற்காலி  மேல்  வைத்து  அதை  பிடித்துக்கொண்டே உட்கார்ந்து இருப்பார். முழுக்கை  சட்டை  தான்  போட்டுக்கொண்டு வருவார்.  வண்டி மாடு  ஓட்டும்  குச்சி  கையில்  இருக்கும்.  அது  எங்கள் மேல் பதம்  பார்க்கும்.  கோவம் அதிகம் அவருக்கு. சிரித்தே  நான்  பார்த்ததில்லை.  நெற்றியில் ஒரு  சிகப்பு  கோடு  தான்  இருக்கும்.  தலை  வாராமல்  வெள்ளையும்  கருப்புமாக   தாடி மீசையோடு  தான்  வருவார்.  என்றாவது ஒருநாள்  க்ஷவரம்  பண்ணிய  முகத்தோடு  வந்தால்  எங்களுக்கு  அவரை  அடையா ளம்  கண்டு பிடிக்க முடியாதவாறு மாறியிருப்பார்.  

ஒன்றிலிருந்து  10 வரை  வாய்ப்பாடு  மட்டுமே  கற்று தந்து ஏழெட்டு  மாதங்கள்  ஓடிவிட்டது.  ஒருநாள்  அவர்  வரவில்லை.  அதற்கப்புறமும்  அவர் தொடர்ந்து வரவில்லை.  மணியடிக்கும்  அய்யாசாமி  அவர்  ''செத்துட்டார்''  என்று சொன்னபோது   எங்களுக்கு  அதன் அர்த்தம்  சரியாக புரியவில்லை.

நாலாம் க்ளாஸ்  காவேரியம்மாள் தொடர்ந்து  எங்கள்  வகுப்பையும் பார்த்துக்கொண்டாள் .  காவேரி  டீச்சரை  எங்களுக்கு பிடிக்கும்.  காது  மட்டும்  திருகுவாள் .  வீட்டிற்கு வந்து  என்  அம்மாவுடன்  பேசும்போது  நான்  ஓடிவிடுவேன்.  அவளை  ஒரு  தூரத்தில்  மரியாதையோடும்  பயத்தோடும்   தான்   பார்த்து வந்தேன்.  அவள்  தனது  குடும்ப  கஷ்டங்களை  எல்லாம்  சொல்லி  என்  அம்மாவிடம்  அழுவாள்.  அம்மா  ஏதேதோ சொல்லி  அவளை  ஆறுதல்  படுத்துவாள். நிறைய தடவை  எங்கள்  வீட்டில்  காவேரி  அம்மாள்  சாப்பிட்டி ருக் கிறாள்.  

கவர்மெண்டில்  பால்  தருகிறார்கள்  என்று  சொல்லி  ஸ்கூல்   காவலாளி அய்யாசாமி  ஒரு  பெரிய  தவலையில்  நிறைய  நீர்  கலந்து  பால்  பவுடர்  போட்டு  காய்ச்சி  சர்க்கரை  இன்றி  அனைவருக்கும்   அலுமினிய  டம்ப்ளரில்  பால்  வரிசையாக  நிற்க  வைத்து  கொடுப்பார்.  வரிசையிலிருந்து யாராவது  அசைந்தாலே   சத்தம் போடுவார்.  நல்ல  மனிதர்.  நிறைய  பையன்கள்   இதற்காகவே காலை வகுப்பை  உதறி விட்டு  மாலை  வகுப்புக்கு  வருவார்கள். 

 தாமோதரன்  என்ற  பையன்  பள்ளிக்கூடத்திற்கு  அடுத்த  குடிசை  வீட்டில்  வசிப்பவன்.  அப்போதே  பிழைக்க தெரிந்தவன்.  பால்  விநியோக  நேரத்திற்கு  மட்டும்  வகுப்புக்கு  வருவான்.  அவன்  வரும்போது பள்ளிக்கூடத்தில் படிக்காத   அவன்  தம்பி  தங்கைகளையும்  கூட்டிக்கொண்டு வருவான்.  அய்யாசாமி கண்டு கொள்ள மாட்டார்.  அனைவருக்கும்  பால்  விநியோகம். 

தனியாக  ஒரு  பொட்டலத்தில்  பால் பவுடர்  தன் வீட்டுக்கு   என்று  மூட்டை  கட்டி  வைத்திருப்பார். அதை  ஞாபகமாக  வீட்டுக்கு  கொண்டு  செல்வார்.

 எங்கள் பள்ளிக்கூடத்தில் குடிநீர்  வசதி  எப்படி தெரியுமா?ஒரு  சிறிய  சிமெண்ட் தொட்டி  கட்டி  வைத்திருப்பார்கள்.  அதில்  அய்யாசாமி  நிறைய  குடம் குடமாக  கிணற்று  நீர் நிரப்பி வைப்பார்.  மேலே   தகர  மூடி   போட்டு  வாய் மூடி  இருக்கும்.  கீழே  பித்தளை  குழாய்கள்  ரெண்டு சின்னதாக பொருத்தி  இருக்கும்.  ஒன்று  நீர்  கசிந்து  கொண்டே  இருப்பதால்   குழாயின்   உடம்பு பூரா  துணி  சுற்றி  வைத்திருப்பார். எனவே  ஒரு  குழாய் வழியாக  வரும்  தண்ணீர் தான்  குடிநீர்.    அலுமினிய டம்பளர்  ஒன்று  ஒரு  துளை போட்டு  கயிற்றினால்  அந்த  குழாயோடு  பிணைந்திருக்கும்.  வாய்  வரை வரும்  அளவுக்குத்   தான்  கயிறு  இருக்கும்.   நெட்டையான பையன்கள்  குனிந்து  குடிக்க வேண்டும்.   

அய்யா சாமிக்கு  என்றைக்காவது   குஷி வந்தால்  கிராமத்து  கரகப்பாட்டு,  தெருக்கூத்து  பாட்டு எல்லாம்  உரக்க  பாடுவார்.  அதையும்  கேட்போம்.  எனக்கு  சில   வரிகள் இன்னும்  நினைவிருக்கிறது.  

''பீம சேன   மவராசா  மரத்தேப்பு  டிங்கினானே''  என்று  ஆலாபனை நடக்கும்.  பீம சேன  மகா ராஜா   கோவத்தில்  அருகே  இருந்த  ஒரு  மரத்தை வேரோடு பிடுங்கி  எதிரியை  அடித்திருக்கிறான்  போல் இருக்கிறது.   அய்யாசாமி  ராகத்திற்காகவும்  தாளத்திர்காகவும்    ''மரத்தேப்பு''  என்றும்   ''டிங்கினானே''   என்றும்  பாடும்போது  அர்த்தம்  அனர்த்தம் தான்.  யார்  இதையெல்லாம் அப்போது  கண்டது.  அந்த  ராகம் குரல்  அதில்  உள்ள பாவம், அவர் நடிப்பு,  எல்லாம்  எங்களை ஏதோ  ஒரு  இன்ப புரிக்கு    இட்டுச்   சென்றது.  

அய்யாசாமி  பாதிநாள்  அரை  வேட்டி  கணுக்காலுக்கு மேல்  கட்டிக்கொண்டு  ஒட்டிய வயிறுடன்,  அரை வழுக்கையோடு,  காதில் வெள்ளி   கடுக்கனோடு,  முண்டாசு மட்டும் கட்டிக்கொண்டு  வருவார். சட்டை போட்டு பார்த்ததில்லை.  

ஒருநாள்   தலைமை  ஆசிரியர்  சுப்ரமணிய  அய்யரை  மாற்றிவிட்டார்கள்.  எனவே  காவேரியம்ம்மா  தான்   ஆல்  இன்  ஆல்  அந்த  பள்ளிக்கூடத்திற்கு.  அவளைப்பார்க்கும்போது  மட்டும்  அய்யாசாமியின்  முண்டாசு அவிழ்ந்து  தோளுக்கு  தாவி விடும்.  நான்  படிக்கும்போது  இந்தியா  சுதந்திரம்  அடையாததால்  எங்கள்  பள்ளியில்  ஆகஸ்ட்  15 கிடையாது.  மிட்டாய்   கொடி   எல்லாம்  கொடுக்கவில்லை. 

'' நீங்க  அத்தினி  பெரும்  நல்ல  புள்ளேங்க .  எப்பவும்  நல்ல புள்ளேங்களாகவே இருக்கோணும்.   புள்ளை யாருக்கு  தினமும்  தோப்புக்கரணம்  போடணும்''   என்று  ரெண்டு  காதையும்  கைகளால்  மாற்றி பிடித்துக்  கொண்டு   தோப்புகரணம் போட  எல்லாருக்கும்  சொல்லிக்கொடுப்பாள்  காவேரி  அம்மாள்.    பள்ளிக் கூடத்தில் ஒரு  சுவற்றில்  மாடப்  பிறையில்  பிள்ளையார்  சிலை  வைத்திருந்தார்கள்.  அதற்கு  விளக்கேற்றி வைப்பது  அய்யாசாமியின்  வேலை.   

பள்ளிக்கருகே  நிறைய    வெள்ளெருக்கு செடி  இருந்ததால்.  எருக்கம்பூ  பறித்து   நூலில் கோர்த்து
மாலை  கட்டிக்கொண்டு  வருவோம்.  வெள்ளிக்கிழமை  எல்லோருக்கும்  பொரி  கடலை,  நாட்டுசக்கரை கலந்து  கை நிறைய  கொடுப்பார்கள்.  

''கைத்தல  நிறைகனி '' பாட்டு   தினமும்  காலை   வேளையில்  காவேரியம்மாவோடு  சேர்ந்து  பாடுவோம். ஆகவே தான் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.  இக்காலத்தில் பள்ளிகளில்  பிரேயர்  என்ன என்றே புரியவில்லை.

  

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...