Thursday, February 3, 2022

BHARATHI

 


ஒரு   அபூர்வன்  நினைவு      -   நங்கநல்லூர்   J.K. SIVAN


இன்று  என்ன காரணம் என்று தெரியவில்லை.  விடிகாலை கண் விழித்தது முதல்  மஹா கவி பாரதி மனதில் நிற்கிறான்.? இன்று அவன் பிறந்த நாளோ, மறைந்த நாளோ இல்லை.  மனதில் நிறைந்த நாள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வேன்.  ஓஹோ  நேற்று இரவு அவன் கவிதைகள் கொஞ்சம் படிக்க தோன்றி  ஒரு சில பக்கங்கள் படித்ததன்  விளைவோ?  அற்புதமான ஒரு பாடல்   ''எத்தனை கோடி இன்பம்  வைத்தாய்  இறைவா......''  அது இன்னமும் மனதில் சுற்றிச் சுற்றி வந்து  சுழன்று கொண்டே இருக்கிறது.   
அதை ரசித்து மனம் அசைபோடுகிறது இப்போது. 
++
காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரமாகிக்  கொண்டு வந்தது. திருவல்லிக்கேணியில் எப்போதுமே கூட்டம் உண்டு.   அதுவும் பார்த்தசாரதி கோவில் பக்கம் கேட்கவே வேண்டாம். அன்று சனிக்கிழமை என்பதால்  பக்தர்கள்  அதிகமாக  கூடினார்கள். 
அது  வெள்ளைக்காரன் காலம். சுதந்திர தாகம் அநேக இந்தியர்களிடையே பரவலாக தொத்திக் கொண்டு வெள்ளையர்களுக்கு நடுக்கம் தந்த வேளை.

கோவில் வாசல் எதிரே  உள்ள  அந்த வீட்டில் வீட்டுக்  கவலையே   துளியும்  இல்லாத பொறுப்பற்ற பிராமணர் ஒருவர் சதா ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்தவராக இருந்தார். மனைவி குழந்தைகள் பற்றி பிரஞையே  எப்போதும் கிடையாது.    நிறைய புத்தகங்கள் யாரிடமாவது கிடைக்கும். அவற்றை வாங்கி  படிப்பது.    மனதில் தைத்ததை  காகிதங்களில் கிறுக்கி  வடிப்பது,  இதே வேலை. அன்றும் அதே  போல் தான்  எதையோ  எழுத உட்கார்ந்து விட்டார்.   காலையில்  ஒரு   பெரிய  டம்பளர் மோரில் கரைத்த  பழைய சாத நீர், மிதமான உப்பு கலந்து,  பெருங்காய , கருவேப்பிலை  கொத்தமல்லி வாசனையோடு  மனைவி கொண்டு வந்து கொடுத்ததை வெறும் வயிற்றில் மடக் மடக் என்று குடித்தார்.  நார்த்தங்காய் சுருள், மொட்டை மடியில் நன்றாக  உப்பு ஏறி காய்ந்து இருந்தது. அதை ஒரு துண்டு கடித்து விழுங்கி விட்டதில் வயிறு நிரம்பிவிட்டது.   மனதில் ஓடிக்கொண்டிருந்த  கவிதை  எழுது வடிவம் பெற்றது....  ''எத்தனை கோடி இன்பம் வைத்தாய்..''  நோட்டுப்புத்தகத்தையும் ,  பேனாவையும் எடுத்துக்கொண்டு திண்ணையில் எழுத உட்கார்ந்தார்.   

அடிக்கடி   அவரது  நண்பர்கள் சிலர் வருவார்கள்.  திண்ணையில் உட்கார்ந்திருக்கும்  அந்த மீசைக்கார ப்ராமணனிடம்  ஓரிரு வார்த்தைகளாவது  பேசி விட்டு போவார்கள்.  அந்த பிராமணர்  மனைவி சாது. எதிர்த்து  ஒரு வார்த்தை பேசமாட்டாள்.

அன்று காலை  ஒரு  தாடிக்கார குடும்ப நண்பர் வந்து திண்ணையில்  பிராமணர் எதிரே  அமர்ந் தார்.  மீசைக்காரரோ   அவர் வந்ததையே  லக்ஷியம் பண்ணாமல்   மும்முரமாக  எதையோ எழுதிக்  கொண்டி ருந்தார்.   அதிதியாக வந்த  தாடிக்காரரை பார்த்த மீசைக்காரர் மனைவி  சிரித்த முகத்துடன்  'வாங்கோ மாமா . தீர்த்தம் சாப்பிடறேளா?'' அது தான் இருந்தது வீட்டில்.

''என்ன சமையல் இன்னிக்கு?.

''வாயு பக்ஷணம். மணி அரிசி இல்லை, பருப்பு புளி நெய் தீர்ந்து போய் பல நாள் ஆகிறது. இவர் ஒன்றுமே கவனிப்பதில்லை. நானும் சொல்லிப்  பார்த்தாகி விட்டது. இன்று தோட்டத்தில் சில கீரைகள் பறித்தேன். அது தான்.  இன்றைக்கு மெனு    கீரை மசியல்.   சாதம். சுட்டப்பளம். நாளை எப்படியோ?   நாராயணன் செயல்.  ''

தாடிக்காரர் எப்போது ம்  இடுப்பில்  வேஷ்டியில் முடிந்து , ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்  நாணயம்  வைத்திருப்பார்.     அன்று அதுவும் இல்லை சுப்ரமணிய சிவா விடம். கடவுளே என்று வருத்தப்பட்டார்.

அவர்கள் பேச்சை  காதில் வாங்காதது மாதிரி இருந்த மீசைக்காரர் தலையை தூக்கினார். தாடிக்காரரை பார்த்து '' சிவா, இதை பாருங்கோ, தான் எழுதியதை காட்டினார் மீசைக்காரர்.
தாடிக்காரர் படித்து வியந்து போனார். அந்த காகிதத்தில், அந்த மோசமான வறுமை நிலையில் மீசைக்கார பாரதியார் எழுதியது '':

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
(எத்தனை)

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

பாரதி ஸ்தித ப்ரஞன். ஜீவன் முக்தன். பசியில் வயிறு வாடியபோதும் இறைவா எத்தனை கோடி இன்பம் தந்தாய் என்று நன்றியுடன் சொல்லும் ஒரே தமிழன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை  யென்றால் இந்த ஜகத்தையே அழித்து விடு.என்று பொதுநலமே குறியாக கொண்ட அக்னிக் குஞ்சு மஹாகவி பாரதியார்.

ஐந்து வயதில் அம்மாவை இழந்த சுப்ரமணிய பாரதிக்கு எல்லா பெண்களும் தாய். பெண்கள் விடுதலைக்கு பாடு பட்ட முதல் வீரத் தமிழன். பாரதியின் புதுமைப்பெண் எப்படி இருப்பவள் தெரியுமா?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

வெள்ளையனிடம் இருந்து தப்பி புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்க இடத்துக்கு சென்ற பாரதிக்கு அங்கும் சில நண்பர்கள் உண்டு. எப்போதும் ஒரு கை ரிக்ஷாவில் வேலைக்கு போவார். அவரைக்   கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும். முக்யமாக ஏழைகளுக்கு. இந்த ரிக்ஷா இழுப்பவனுக்கும் அதே போல் அவர் மேல் பிரியம். அவரைப்  பாடச்  சொல்லி கேட்பார்கள். அவரைச்  சித்தராக பார்த்தார்கள்.

''சாமி,  உங்களை என் ரிக்ஷாவில் இழுத்துகிட்டு போறதுக்கு காசு வாங்கமாட்டேன் என்றான் அந்த கூலியாள். இந்த மாதிரி நிறைய ரிக்ஷாகாரர்களுக்கு தன்னுடைய மேல் அங்கவஸ்திரத்தை கொடுத்திருக்கிறார். அவர் வஸ்திரத்தை போட்டுக்கொண்டால் அவரைப்போல் தமிழ் எழுத பேச கொஞ்சமாவது வரும் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

பாரதிக்கு தமிழ், ஹிந்தி, ஸம்ஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, இங்கிலிஷ் , லத்தீன், கிரீக், லத்தின், அரபிக், உருது என்று 32 மொழிகள் தெரியும். இருந்தாலும் அவர் மார் தட்டி சொன்னது என்ன ஞாபகம் இருக்கிறதா?
''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்''
நம் எல்லோரையும் இந்த நாட்டின் மன்னர்களாக்கிய இந்த கவிஞன் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தனது அனைத்து பாடல்களும் தேசியமயமாக்கப்பட்ட பெருமைக்குறியவர்.

சம்பளம் வாங்கிக்கொண்டு சுதேச மித்ரன் ஆபிசிலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது ரிக்ஷாக் காரர் தனது வறுமையை சொல்லிக்கொண்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறார்.
 ''இந்தா இதை வீட்டுக்கு கொண்டு போ ''என்று தனது சம்பளம் முழுதும் அவனுக்கு கொடுக்க யாருக்கு தோன்றும். அது பாரதியார்.
ஜாதி அடிப்படையில் அரசுகள் தோன்ற ஆரம்பித்ததும்,   நன்றி மறந்த தமிழ் தமிழ் என்று நைச்சியமாக பேசுபவர்கள்,  பாரதியைச்   சிறப்பிக்க தவறிவிட்டனர். அந்த மா பெரும் கவிஞன் உயர்ந்த பரந்த நோக்கம் கொண்டவன் என்பது ஏனோ மறந்து விட்டது:

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

பாரதி புதுமை பித்தன் மட்டுமல்ல, சித்தனும் கூட.

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்
பாரதி புத்தனைப்  போல  தான்.  என்றும் இறவாத ஞானி.

PESUM DEIVAM



 பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN


111. காசியில் ஒரு பொன்னான அறிவுரை.

1934ம் வருஷம் அக்டோபர் மாதம் முழுதும் மஹா பெரியவா கோகாட் எனும் இடத்தில் ஸ்ரீ ராவ் சாஹேப் மாதவராம் சாந்த் இல்லத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு தர்சனம் தந்தாரல்லவா?அப்புறம் அங்கிருந்து ஹனுமான் காட் டில் இருந்த சங்கரமட த்துக்கு சென்றார். அங்கு சிலநாள் இருந்தார்.

அந்த வருஷம் தனுர் மாதம் 17ம் தேதி டிசம்பரில் ஆரம்பித்தது. மஹா பெரியவா வேத வ்யாஸர் தரிசனத்துக்காக வ்யாஸ காசிக்கு சென்றார். 27ம் தேதி டிசம்பர் அங்கே சென்று கௌரி கும்பத்தில் ஸ்னானம். கிட்டத்தட்ட ஐந்தரை மாத காலம் காசியில் வாசம். ஒவ்வொரு நாளும் விசேஷ நாளாக கழிந்தது. ஏதோ ஒரு முக்கிய சம்பவம் விடாமல் தொடர்ந்து நடக்கும். விவரங் களை எழுதி வைக்க தான் எவரும் இல்லாமல் போய்விட்டார்கள்.

''பெரியவா அவசியம் காசி ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவேண்டும்'' என்று பண்டிட் மதன் மோகன் மாளவியா அழைத்தார். அழைப்பை ஏற்று மஹா பெரியவா அங்கே சென்றார். மஹா பெரியவா வருகை பற்றிய சேதி கிடைத்து காசி ஹிந்து ஸர்வ கலாசாலையில் எல்லா கட்டிடங்களும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாளவியா, ஸர்வகலா சாலை உயர் அதிகாரிகள், பண்டிதர்கள், ப்ரொபஸர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவருமே பெரும் கூட்டமாக கூடியிருந்தார்கள். மஹா பெரியவாளை வரவேற்க ஏராளமானோர் காத்திருந்தார்கள்.

மாளவியா முக்கியமானவர்களை, பிரமுகர்களை, மஹாபெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சர்வ கலாசாலை கட்டிடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று அங்கு நடத்தும் கல்வி வழி முறைகளை விவரித்தார். பிறகு விசேஷமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அழைத்து வந்தார்.
அதில் மஹா பெரியவா, ஜகத்குரு அமர்வதற்கு ஒரு ஸிம்மாஸனம் போடப்பட்டிருந்தது.

தனது ஸம்ஸ்க்ரித வரவேற்புரையை அந்த விழாவில் பண்டிட் மதன் மோஹன் மாளவியா ஐந்து ஸ்லோகங்களுடன் வாசித்தார். அவை அவர் ஸம்ஸ்க்ரிதத்தில் மஹா பெரியவா மேல் இயற்றியவை. ஸமஸ்க்ரிதத்தில் எழுதியது கிடைக்கவில்லை, ஆங்கிலத்தில் அது இது தான்:

“yadvaachaam lasithaihi triloka janathaa mohaandhakaarakshayaha
padaabja smaranena yasya kalushadh vamsaath praasadaha sthiraha|
tasyaadvaita giram guroho bhagavathaha Sri Sankarasyonnathham
Kanchi peetapatham yateeswaramahan sthane twayaadhishtitham|| (1)

Tathva gnaana tapaha samaadhi karunodhaarya prasaadaadhibhihi
Punyam bhaaratha varshamethadhanagam praapnothi laabham param|
Keerthyate amalayaa yateendra! Mahataamaadarshathaam praapthayaa
Santaha santatamullasanthi cha dishaha sarvaahaa samudhbhaasithaha|| (2)

Swaamin! Swaagathamasthuthe shivapuri shree vishwavidyalaye
Shikshaakendra varetra bhaarata bhuvam vidyaarteenaam sarvataha|
Sreemadvaktra saroruhoditha shubhasheergeehi sudhaadhaarayaa Saapalyam
shrutijanmano bhavatu nah shaantyai shravantayaa bhuvaha|| (3)

Ghore kalau prathidhisham bhuvi satya dharmo
hantaapakarsha madhunaa nitaraamupaithi|
Tasyonnathihi punarihaakilamangalaarthaa
bhooyaadhyathaa, karunayopadishethi yaache|| (4)

Praanchya prateechyashubhamaavasamanyavena
bhogaapavargadha sukshina dhaanasheelaha|
Eshokhilabhyu dhayakrudhyathivarya!
Vishwa vidyaalayastava shubhaagamanena dhanyaha|| (5)
Maaga shukla sapthami sam -iti nivedayathi – malaviyo madanamohanaha|”

இந்த ஸ்லோகங்கள் என்ன சொல்கிறது?
ஸ்ரீ ஆதி சங்கரரின் காஞ்சி பீடத்தில் அலங்கரிக்கும் இந்த மஹா புருஷரின் தாமரைப் பாதைகளை தியானித்தால், அறியாமை விலகும், அவரது பொன்னான மொழிகள் உலகெங்கும் எதிரொலிக் கிறது. சகல சாஸ்திரங்களையும் அவற்றின் உள்ளடங்கிய தத்துவங்களையும் கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் மஹா புருஷர் மஹா பெரியவா.

இந்த புண்ய தேசம் பாரதம் செய்த அதிர்ஷ்டத்தால், மஹா பெரியவாளின் ஞானம், ஆன்மீக எளிமை, தவம், தயாளம், இரக்கம், கனிவு ஆசீர்வாதங்கள் நாடு முழுக்க வியாபித்து எல்லோரை யும் புனிதப்படுத்துகிறது.

எங்கள் ஸர்வகலாசாலை சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும், மஹா பெரியவாளை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நாடு முழுக்க பலவேறு இடங்களிலுருந்து சகல கலைகளும், , ஸாஸ்த்ரங்களும், பண்பாடு, விஞ்ஞானம், காவியம் அனைத்தும் திரட்டி இங்கே பாடம் புகட்டுகிறோம். கலியுகத்தில் தர்மம் தாழ்வுற்று வரும் வேளையில் பகவான் தங்கள் மூலம், பொன்னான அறிவுரைகளைப் பெற்று பயனுற கொடுத்து வைத்திருக்கிறோம். என்றும் அழியாத ஞானம் இது. இந்த ஸர்வ கலாசாலை நிறுவனம் எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவு ஆன்மீகம் செழிக்க பாடுபடும். கிழக்கு மேற்கு என்று பல பாகங்களில் உலகில் வாழும் மக்களின் வாழ்வு சிறக்க பாடுபடும். நல்ல கல்வியை பரப்பும்.

இந்த தேசம், மக்கள், இந்த கல்வி நிலையம், எல்லாமே தங்கள் விஜயத்தால், மிகவும் பயனுறும் என்று பெருமைப்படுகிறோம்.

மஹா பெரியவா தன்னுடைய ஏற்புறையில் குறிப்பிட்டது:

“நமது ஹ்ருதயத்தில் அமைதி சாந்தம் நிரம்பியிருந்தால், வாழ்வில் சந்தோஷம் பொங்கி வழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படிப்பட்ட பக்தி நிறைந்த சாந்தம், எல்லோரின் மனதிலும் நிரம்ப ரொம்ப முயற்சிக்க வேண்டும். அனுபவமாக அதைப் பெறவேண்டும். மனதில் அமைதி சாந்தம் குறைந்தால் தான் கஷ்டங்கள், ஏக்கம், துக்கம், துயரம் என்று பல சங்கதிகள் நம்மை வாட்டும். அமைதியின்மை, சந்தோஷமின்மையை விரட்டுகிறேன் என்று முனைபவர்கள், மற்றவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். அவர்களுக்கும் அமைதியில்லாத நிலையை தந்துவிடுகிறார்கள். இது தொடர்ந்தால் சமூகத்தில் நிம்மதியின்மை தான் விளையும். அரசாங்கம் இதை கட்டுப்படுத்த ஆயுதம், அதிகாரம், சட்டம், நீதி, தண்டனை ஆகியவற்றை பயன்படுத்த நேரிடும். அமைதி, நிம்மதி, குறையக் குறைய கெடுபிடிகள், சட்ட திட்டங்கள், அதிகாரம், தடுப்பு, கட்டுப்பாடு அதிகரிக்கும்.
வெளியே ஈர்க்கும் லோகாயத சமாசாரங்களிலிருந்து விடுபட்டு, உள்நோக்கி பிரவேசித்தால் அங்குள்ள ஏராள, தாராள அமைதி கிடைக்கும், மனதிலிருந்து துயரங்கள் கோபம், தாபம் சகலமும் நீங்கும், அந்த இடத்தை அமைதி, சாந்தம் பிடித்துக் கொள்ளும். நல்ல குரு வழிகாட்டுவார். இது போன்ற அருமையான கல்வி கேந்திரங்கள் அதற்கு சரியான வழி கோலும் .அதெல்லாம் கற்று வாழ்வில் முன்னேற இந்த நிறுவனத்தோடு இணைந்த மாணவர்களாகிய நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். காசியில் அற்புதமான மன அமைதி கிட்ட இது உதவும். இங்குள்ள பெரியோர்கள் குழந்தைகளுக்கு இதை எல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும். அது அவர்கள் கடமை. எல்லோரும் சாந்தமாக அன்போடு பரஸ்பர நேசத்தோடு வாழ்ந்தால், அரசாங்கத்துக்கு பளு குறையும். செலவு குறையும். போலீசுக்கு வேலை மிச்சம் நீதி நேர்மை நிலவினால் கோர்ட் கேஸ் இருக்கவே இருக்காது. அமைதியான தேசம் நமக்கு மிஞ்சும்.

பண்டைய கல்வி முறை, எதிர்பார்ப்பு எல்லாமே, மன அமைதி. அதற்காகவே குருமார்கள் ஆசிரமங்களை சப்தமில்லாத காடுகளில், சந்தடி இல்லாத இடங்களில், மலைகளில் நிறுவியிருந்தார்கள். நமது கல்வி முறை இதை அறிந்து, விஞ்ஞான வளர்ச்சியோடு ஆன்ம வளர்ச்சியும் பெறுக உதவினால் அதைவிட சிறந்த எதிர்கால வாழ்வு குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு கொடுக்க முடியாது. உணர்ச்சிகளை தூண்டும், ஐம்புலன்கள் இழுக்கும் பக்கம் சாய அனுமதித்தால் தேவையில்லாமல் மன அமைதி இழப்போம், நிம்மதியைத் தேடி அலைய வேண்டியது தான். நல்ல கல்வியினால் தான், நல்லொழுக்கங்களை கற்பித்தால் தான், சமூகம் முன்னேறும், அதன் மூலம், நாடு சிறக்கும். நல்ல பாதையில் வளரும் சுபிக்ஷம் அடையும்

Wednesday, February 2, 2022

OUR TRADITION

 ஹிந்து ஸநாதன தர்மம் - ஈடிணையற்ற ஒரு தத்வம்.

நங்கநல்லூர் J K SIVAN
மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி.
அட்வைஸ் அனந்தராமன் சொன்ன சில விஷயங்கள் பழைய டயரியில் அகப்பட்டது. எங்கே இருந்து இதெல்லாம் பிடித்து, படித்து, சொன்னானோ?, அவனுக்கே வெளிச்சம். அதில் சில உண்மைகள் பொதிந்திருப்பதை, இப்பவும் பொருந்துவதை, 60 வருஷங்களுக்குப் பின்னும் உணர முடிந்தது. அனந்தராமன் சின்ன வயதில் மறைந்தவன் அப்புறம் என்ன பிறவி எடுத்தானோ?, இன்னும், இப்போது, எங்கே யாருக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறானோ? யானறியேன் பராபரமே.
''சாமி மேலே நம்பிக்கையா. நீ ஆஸ்திகன்'' --- ஒப்புக்கொள்கிறேன்.
''சாமியாவது பூதமாவது, ஒண்ணும் கிடையாது'' -- -- நீ நாஸ்திகன் பா''
''இது தான் சாமி, வழிபடணும் . பூஜை பண்ணனும் ''--- நீ மூர்த்தி உபாசகன். சரி
''சாமி கல்லுலே, படத்திலே எல்லாம் இல்லே'' ---- ஓஹோ அதனாலென்ன.. நீ உருவ வழிபாடு இல்லாத நிர்குண ப்ரம்மனோ? சரியப்பா.
''மதத்தை பற்றி விவாதிக்கணுமா? சரி. தர்க்கவாதியோ, குதர்க்க வாதியோ, இருந்துட்டு போ. பரவாயில்லை''
'' இல்லே, காலா காலமா இருக்கிற பழக்க வழக்கத்தை நான் நம்பறேன். -- ரொம்ப சந்தோஷம் கன்டின்யூ பண்ணு .
''கீதை படிக்க ஆரம்பிச்சு என் வாழ்க்கையை துவங்கப்போகிறேன்'' --- பரம சந்தோஷம். செய்யப்பா''
'' கீதை மட்டும் இல்லை ஸார் , எனக்கு உபநிஷதங்களும் தெரிஞ்சுக்க விருப்பம் தான். அதையும் படிப்பேன்'' -- ஆஹா நல்ல பையன். உடனே ஆரம்பி.''
'' புராணங்களில் இருந்து தான் ஆரம்பிக்கணும் ஸார் , அது தான் படிப்படியா வளர்க்கும்'' --- அப்படியா? செய்யலாமே. வா என் வீட்டிலிருந்து படிக்கலாம் ''
''சார், எனக்கு அதிலே எல்லாம் உடன்பாடு இல்லே. புராணமோ வேறே எந்த புஸ்தகமுமோ வேண்டாம். டைம் கிடைச்சா, கண்ணை மூடிண்டு சாமியை நினைச்சா போதும்ங்கரேன்'' --ஓஹோ பக்தி மார்க்கமா? நடக்கட்டும் நடக்கட்டும்.
''கண்ணை மூடிண்டு உட்கார்ந்தா எல்லாம் சரியாயிடுமா? நெற்றி வியர்வை நிலத்திலே சிந்தி உழைக்கணும் ஸார். உழைப்பில் தான் உலகநாதன் தெரிவான்'' --- ஓஹோ நீ கர்மயோகி. பக்தி மார்க்கம் வேறேயாச்சே.
''இதோ பாருங்க ஸார் , இந்த உலகத்திலே பிறந்தது எதுக்கு? நன்றாக யோசியுங்க. சுகமா தின்னுட்டு தூங்க. வேறே எதைப்பத்தியும் யோசிக்கவே வேண்டாம். அவசியமில்லை ' ----' அப்பனே உன்னை தான் சார்வாகம் தத்துவவாதி என்று சொல்றாங்க.
''அவன் சொல்றதை எல்லாம் கேட்காதீங்க. இனிய சுக போக வாழ்க்கை வாழ நாம் பிறக்க வில்லை. உடலை லக்ஷியம் செய்யாமல் எல்லாவற்றையும் துறக்கவேண்டும். வாழ்வே மாயம். --- அடேயப்பா, நீ துறவி. சாது. சந்தோஷம். அப்படியே ஆயிடு.
''ப்ராக்டிகலா பேசணும். சாமி எங்கே இருக்குன்னு முதல்லே தெரிஞ்சுக்கணும்?. எதிரே பாருங்கோ, எத்தனை மரம் செடி கொடி , புல்லு பூண்டு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கை வளம். அது தான் சாமி. மரமே மஹாதேவன்.'' ---- ஆஹா இயற்கை உபாசகனா நீ. பலே பேஷ்.
''அவன் சொல்றது வாஸ்தவம். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லாம் அவர் ஒன்று தான், உன்னையும் என்னையும் சேர்த்து. கண்ணுக்கு தெரியாத ஒரு பரம்பொருள், பரம சக்தி '' ---- நீ தான் பா ஆதி சங்கரர் சொன்ன அத்வைதி.
''எது என்ன செய்தாலும் ப்ரயோஜனமே இல்லைங்க . எல்லாவற்றுக்கும் ஒரு குரு வேணும் . அவரை வணங்கி தான் ஆசியோடு வாழ வேண்டும்.'' ---- அப்பா நீ பக்தன். ஞானி.
''குரு என்று ஒருவர் அவசியமே இல்லை. உனக்கு நீயே குரு. சிஷ்யனும் கூட. -- ஓஹோ ப்ரம்ம ஞான, ஆத்ம ஞான தேடலா? சபாஷ். தியானம் பண்ணு .
''எல்லோரும் உண்மையை மறந்துட்டு என்னென்னவோ பேசறீங்க. இந்த உலகம் இயங்குவதே
அம்பாள் ஒருவளால் தான். அவளில்லையேல் எதுவுமில்லை. சக்தியே சிவன். '' நீங்கள் தான் சக்தி உபாசகர்..
'எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓருடல், சம உரிமை எதிலும் எல்லோருக்கும் இருக்கு சார். நாம் ஒரே குடும்பம். '' மனித உரிமை ஸமத்வம் கொண்டாடுவதை தான் வஸுதைவ குடும்பகம் என்று சொல்வது'' -----. பரந்த மனசுப்பா உனக்கு ''
''சார் பண்டிகை எல்லாம் கொண்டாட நேரமில்லை. வருஷம் பூரா ஏதேதோ பண்டிகை எல்லாம் வருதே, அதிலே ஏதாவது கொண்டாடிக்கோங்கோ....-- விசேஷங்களை இப்படி அலசுபவரா நீங்கள்?. அவ்வளவு பிசியா நாள் கிழமை கூட கொண்டாட முடியாமல்? பரவாயில்லை ஒத்துக்கிடுவோம். அப்பவும் நீங்க ஹிந்து தான் .
கோயிலுக்கு போக நேரம் இருக்கா, போகணும்னு விருப்பமானது இருக்கா. உங்க பக்தியை மெச்சிடுவோம்.
கோவிலுக்கு போவதில் இஷ்டமில்லையா. பரவாயில்லை சார். அப்போவும் நீங்க ஹிந்து தான்.ஏன்னு கேட்டா, ஹிந்துயிசம் மதம் இல்லை. ஒரு நெறிமுறை. நிறைய சுதந்திரம் வாரி வழங்கி இருக்கு.
எல்லாமே கடவுள், எல்லோருமே கடவுள்னு சொல்றோமே. உங்க அப்பா அம்மாவை, வாத்யார், குரு, நதி, மரம், பூமி, பிரபஞ்சம் எல்லாத்தையும் வழிபடலாம் ஸார். எல்லாம் ஓகே தான்.
உங்களுக்கு எதிலுமே நம்பிக்கை இல்லையா, அப்பா அம்மாவை கூட. அப்போ கூட உங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் சார். ஓகே.
"Sarve jana sukhino bhavantu " (May you all live happily) எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே தான் எங்க தாரக மந்திரம்.
என் அன்புள்ள ஹிந்து வே, நீ மேலே சொன்ன எதுவாக இருந்தாலும் சுபிக்ஷமாக வாழவேண்டும் என்பது தான் எங்கள் உள்ளார்ந்த விருப்பம்.
இப்படி பெருந்தன்மையோடு தாராள உள்ளத்தோடு காலாகாலம் இருப்பதால் தான் ஆல் போல் தழைத்தோங்குவது நமது ஹிந்து சனாதன தர்மம். எத்தனை எதிர்ப்புகள், கத்தி வெட்டு, நெருப்பு, அழிப்பு, காயங்கள், நாச கார்யங்கள், எல்லாம் அமைதியாக ஏற்ற எம் முன்னோர் வாழ்க..
பொறுமையின் பூஷணம் அவர்கள். வெளியே இருந்து வந்த ஆபத்துகள் நீங்கி உள்ளேயே உடலில் புற்றுநோய் போல் தோன்றினாலும் பொறுத்தார் பூமி ஆள்வாராக இருக்கிறோம்.
காணும் யாவும் கண்ணனின் லீலையே என்று ஏற்கிறோம். நாம் அழிவற்ற சிரஞ்ஜீவிகள்.
மனித குலத்தின் முதல் வேதாந்த புத்தகம் ரிக்வேதம் என்ன சொல்கிறது காதில் விழுகிறதா:
आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतः -" Ano bhadrah Krathavo Yanthu Vishwathah"- Let the knowledge come to us from every direction " உலகத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் ஞானம் நம்மை வந்தடையட்டும்.

sri lalitha sahasranamam

 மூக  பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஆர்யா சதகம்  -   ஸ்லோகங்கள்  71-80


ल क्ष्योऽस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥ ७१॥

71. Lakshyosmi kama peeti lasikaya gana krupambu rasikayaa,
Sruthi yuvathi kunthalee mani malikaya thuhina saila balikaya.

லக்ஷ்யோ‌ஸ்மி காமபீடீலாஸிகயா கனக்றுபாம்புராஶிகயா |
ஶ்ருதியுவதிகுன்தலீமணிமாலிகயா துஹினஶைலபாலிகயா ||71||

லாசிகா என்றால் நர்த்தகி.  காமாக்ஷி  காமபீடத்தில் ஆனந்தமாக  நர்த்தனமாடுபவள்.  சகல வேதங்களுக்கும்  ஆதார  பூர்வமான  விளக்கம் அவளே. வியாக்யானமும் அவளே.  கருணா சமுத்ரம் அவள். வேதங்களை எல்லாம் யுவதிகளாக  கற்பனை செய்துகொண்டு   அந்த  ஸ்த்ரீகள் அலை  அலையான அழகிய கூந்தலில்  அணிந்துள்ள   நவமணிகளை மாலையாக தொடுத்தால், அது தான் அம்பாள்.  ஸ்த்ரீகளாகச்  சொன்ன அனைத்து வேதங்களும்  அம்பாளின் திருப்பாதத்தில் விழுந்து  நமஸ்கரிக்கும்போது,  அம்பாளின் திருவடிகளில் அணிந்துள்ள சிவப்பு செம்பஞ்சு குழம்பு அந்த ஸ்த்ரீகள் சிரசில் நெற்றி  நடுவே, வகிட்டில்  பட்டு அது  ''சீமந்த சிந்தூர'' மாக  காட்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட  அம்பாளின் பக்தனாக  அவள் அருள் வேண்டி நான் அவளை நமஸ்கரிக்கிறேன். 

लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥ ७२॥

72. Leeye pura hara jaaye maaye thava tharuna pallava cchaye,
Charane chandrabharane Kanchi sarane natharthi samharane.

லீயே புரஹரஜாயே மாயே தவ தருணபல்லவச்சாயே |
சரணே சன்த்ராபரணே காஞ்சீஶரணே னதார்திஸம்ஹரணே ||72||

திரிபுரமெரித்த த்ரி நேத்ரன், சிவனின் பத்னி, பிரபஞ்சத்தை இயக்கும்  மஹா மாயை,  சிவந்த இளந்தளிர், மலர்க்கொடி, பிறை சூடி,  காஞ்சி காமபீட வாஸினி, அம்பா, உன்னை வணங்குபவரகளின்  துயர் தீர்ப்பவளே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

मूर्तिमति मुक्तिबीजे मूर्ध्नि स्तबकितचकोरसाम्राज्ये ।
मोदितकम्पाकूले मुहुर्मुहुर्मनसि मुमुदिषाऽस्माकम् ॥ ७३॥

73. Moorthi mathi mukthi bheeja moordhni sthaba kitha chakora samrajye,
Modhitha Kampa koole muhurmuhu manasi mumudhishaa asmakam.

மூர்த்திமதி முக்திபீஜே மூர்த்னி ஸ்தபகிதசகோரஸாம்ராஜ்யே |
மோதிதகம்பாகூலே முஹுர்முஹுர்மனஸி முமுதிஷா‌உஸ்மாகம் ||73||

புராணங்களில், இதி ஹாசத்தில் ,  வரும் மூன்று பக்ஷிகள் ஞாபகமிருக்கிறதா?  ஹம்ஸம் , (இது வாத்து இல்லை ) சாதக,  சகோர பக்ஷிகள் .  இவை மூன்றுமே  ஆகாசத்தில் மட்டுமே  வாசம் புரிபவை. பூமியில்  இறங்காதவை.  மழைநீரை, பனித்துளி,  நிலவின் ஒளிக்கிரணங்கள்  மட்டுமே  சாப்பிட்டு  உயிர்  வாழ்ந்த  வேதகால பறவைகள்.  சந்திரன்  சகோர பறவைகளின்  சாம்ராஜ்யம் என்கிறது  இந்த ஸ்லோகம்.   இந்த பறவைகளைப்  பற்றி பூமியில் நம்மால் பார்க்க முடியாதவை. கற்பனை கூட  செய்ய முடியாதவை.   சகோர பக்ஷியின் ஆகாரமான  நிலவொளியை பிரகாசமாக  பிறை  சூடியாக கொண்டவள் அம்பாள் என்று சொல்கிறது இந்த ஸ்லோகம்.  

वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् ।
मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥ ७४॥

74. Veda mayim, Nada mayim, Bindu mayim para padhodhya dhindhu mayim,
Manthra mayim, thanthra mayim, prakruthi mayim , Naumi viswa vikruthi mayim,

வேதமயீம் னாதமயீம் பின்துமயீம் பரபதோத்யதின்துமயீம் |
மன்த்ரமயீம் தன்த்ரமயீம் ப்ரக்றுதிமயீம் னௌமி விஶ்வவிக்றுதிமயீம் ||74||

அம்பாளை  வேதமயமாகவும்,  நாத மயமாகவும், மோக்ஷ காரணியாகவும், மந்த்ர, தந்த்ர,ப்ரக்ருதி ரூபமாகவும்,  எல்லாமே அவளாகவும்  காணும் யாவையும் காமாக்ஷியே  என்றும் தோன்றும் அவளை நமஸ்கரிக்கிறேன்.

पुरमथनपुण्यकोटी पुञ्जितकविलोकसूक्तिरसधाटी ।
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥ ७५॥

75. Pura madhana punya koti, punjitha kavi loka sookthi rasa dhati.
Manasi mama Kamakoti, viharathu karuna vipaka paripati.

புரமதனபுண்யகோடீ புஞ்ஜிதகவிலோகஸூக்திரஸதாடீ |
மனஸி மம காமகோடீ விஹரது கருணாவிபாகபரிபாடீ ||75||

முப்புரமெரித்த முக்கண்ணனின்  புண்யங்களின்  எல்லை,  விளிம்பு,  அம்பாள்.   பண்டிதர்கள், கவிஞர்களின்  வாக் சாதுர்யத்தின்  சாறாக, ரசமாக இருப்பவள், கருணையின் வடிவமாக  இருப்பவள்,  காமகோடி பீடத்தில் அலங்கரித்து என் மனதை ஆட்கொள்ளும் அம்பாளை  நமஸ் கரிக்கிறேன். 

कुटिलं चटुलं पृथुलं मृदुलं कचनयनजघनचरणेषु ।
अवलोकितमवलम्बितमधिकम्पातटममेयमस्माभिः ॥ ७६॥

76. Kutilam, chatulam, pradhulam kacha nayana jagana charaneshu,
Avalokitham avalambitham adhika Kampa thata mameya masmabhi.

குடிலம் சடுலம் ப்றுதுலம் ம்றுதுலம் கசனயனஜகனசரணேஷு |
அவலோகிதமவலம்பிதமதிகம்பாதடமமேயமஸ்மாபிஃ ||76||

செதுக்கிய   பொற் சிலையாக,   சாமுத்ரிகா  லக்ஷணங்கள் சகலமும் பொருந்திய  பதுமையாக  வளைந்து நெளிந்து ,மயிலென அசைந்து  ஆர்ப்பரித்து,  கம்பா நதி தீரத்தில் காணப்படும்  காமாக்ஷி தேவி தரிசனம் பெற அவள்  மிருதுவான  பாசமிக்க திருவடிகளில் சரணமடைகிறேன். 

प्रत्यङ्मुख्या दृष्टया प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥ ७७॥

77. Prathyang mukhya drushtya, prasada deepangurena Kamakshya,
Pasyami nisthulamaho pachelim kimapi para shivollasam.

ப்ரத்யங்முக்யா த்றுஷ்டயா ப்ரஸாததீபாங்குரேண காமாக்ஷ்யாஃ |
பஶ்யாமி னிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ||77||

பரமேஸ்வரன்  அம்பிகையின்  அனுக்ரஹத்தால், அவளுடைய  அந்தர்முகமான பார்வையால் ஈடிணையற்ற   புத்துணர்ச்சி,  உத்ஸாஹம், உல்லாசமான  மகிழ்ச்சி அனைத்தும் பெறுகிறார் என்கிறார் மூகர் .  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்   அம்பாளை  ''சிவஞான ப்ரதாயினி''  என்ற  நாமம் அலங்கரிக்கிறது.  அம்பிகையின்  கடாக்ஷத்தால்  அனுக்ரஹத்தால்  உபாஸிக்கும்  பக்தன் ஸர்வ ஞானமும் பெறுவான். 

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥ ७८॥

78. Vidhye vidhathru vishaye kathyayini Kali Kamakoti kale,
Bharathi Bhairavi Bhadre sakini shambhavi shive sthuthe bhavathim

வித்யே விதாத்றுவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே |
பாரதி பைரவி பத்ரே ஶாகினி ஶாம்பவி ஶிவே ஸ்துவே பவதீம் ||78||
 
ப்ரம்மாவின்  நாவில்  உறைந்து பிரம்மாவை மகிழ்விக்கும்  ஸரஸ்வதி தேவி அம்சமும்  நீயே  அம்பா.  தேவர்களுக்கு  உதவ, காத்யாயன  மகரிஷி மகளாக  உருவெடுத்து காத்யாயனி என பெயர் கொண்டவளே.  கரிய நிறம் கொண்ட  கோபமான  காளியும்  நீயே.    கலாமாலா , கலாநாதா, காலாத்மி
கா,  கலாவதி  என்று  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்  பெயர் கொண்டவளே,   வித்யா, விதாத்ருவிஷயா,  பாரதி  என்பவை ஸரஸ்வதியாக  நீ அழைக்கப்படும் பெயர்கள் அல்லவா?   சிவனின் மனைவியாக  பைரவி, மங்களரூபிணி, பத்ரா என்றும் பெயர் கொண்டவளே, சாம்பவி, சிவை,  யோகினி,  சாகம்பரி என்றெல்லாம் புகழப்படுவளே , உன்னை நமஸ்கரிக்கிறேன். 

मालिनि महेशचालिनि काञ्चीखेलिनि विपक्षकालिनि ते ।
शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोऽस्तु ॥ ७९॥

  79. Malini, Mahesa chalini, Kanchi Khelini, Vipaksha kalini they,
Soolini Vidhruma salini sura jana palini Kapalini Namosthu

மாலினி மஹேஶசாலினி காஞ்சீகேலினி விபக்ஷகாலினி தே |
ஶூலினி வித்ருமஶாலினி ஸுரஜனபாலினி கபாலினி னமோ‌உஸ்து ||79||

52   அக்ஷர ரூபங்களாக  மாலை தரித்த  மாலினி,  மஹேஸ்வரனின் பத்தினியாக,  மஹேச சாரிணீ,  சூலம் கபாலம் ஏந்தி  சூலினி, கபாலினி,   காஞ்சி நிவாஸினி, காமாக்ஷி,  காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

देशिक इति किं शंके तत्तादृक्तव नु तरुणिमोन्मेषः ।
कामाक्षि शूलपाणेः कामागमसमयदीक्षायाम् ॥ ८०॥

80. Desika ithi kim shankhe thath thadrukthwa nu tharunee monmesha,
Kamakshi, soola pane, kamagama thanthra, yajna deekshayaam.

தேஶிக இதி கிம் ஶம்கே தத்தாத்றுக்தவ னு தருணிமோன்மேஷஃ |
காமாக்ஷி ஶூலபாணேஃ காமாகமஸமயதீக்ஷாயாம் ||80||

அம்பாள்  சந்தேகத்திற்கு துளியும் இடமில்லாமல்  சர்வ லோக  குரு,   யௌவன ஆசார்ய ஸ்வரூபிணி.  த்ரிசூலநாதன்  ஸாக்ஷாத்  பரமேஸ்வரனுக்கு  ஞானோபதேசம் செய்பவள்.  மன்மதனின் சக்தியையும் , அவனது  பஞ்சபாண அஸ்திரங்கள், தனுசு, எல்லாம்  பெற்று அவனைப்  போலவே  காந்தசக்தி கொண்டு  பிரபஞ்சத்தை கவரும்  காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.


Tuesday, February 1, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ  லலிதா  ஸஹஸ்ரநாமம்   -   நங்கநல்லூர்   J K   SIVAN

ஸ்லோகங்கள்:  169-170   நாமங்கள்  912-922

सव्यापसव्य-मार्गस्था सर्वापद्विनिवारिणी ।
स्वस्था स्वभावमधुरा धीरा धीरसमर्चिता ॥ १६९॥

Savyapasavyamargasdha sarva padvi nivarini
svasdha svabhavamadhura dhira dhirasamarchita – 169

ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா 169

चैतन्यार्घ्य-समाराध्या चैतन्य-कुसुमप्रिया ।
सदोदिता सदातुष्टा तरुणादित्य-पाटला ॥ १७०॥

Chaitanyardhya samaradhya chaitanya kusumapriya
sadodita sadatushta tarunadityapatala – 170

சைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா
ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா 170

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   ஸ்லோகங்கள்  912-922   அர்த்தம்.

*912* सव्यापसव्य-मार्गस्था  ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா
எங்கள் குடும்பத்தில்  சிலரை  அபசவ்யம் என்று பெரியோர்கள் திட்டியதை கேட்டிருக்கிறேன். கிறுக்கன் என்று சொல்வதை போல்  இடது கைக்கு  அபசவ்யம்  என்று பெயர்.  வேத கார்யங்கள் வலது காயாலும்  தாந்த்ரீக வழிபாடுகள் இடது கையாலும்  செய்யப்படுவது.  அம்பாள் வலது இடது இரெண்டுமில்லாத நேரான நடுவழியில் செல்பவள் என்கிறது இந்த நாமம்.   தக்ஷிண மார்க்க  பக்தர்கள் எல்லா கடவுள்களையும்  வழிபடுபவர்கள்.  சக்தி அளிக்கும் எல்லாமே  தெய்வம் நமக்கு.  நீர், அக்னி பூமி, ஆகாசம், சூரியன் சந்திரன், வாயு, கிரஹங்கள், நதிகள்,  மலைகள், சமுத்திரங்கள் எல்லாமே  உப தேவதைகள். பிரபஞ்ச இயக்கத்துக்கு அத்தியாவசியமானவை.   இப்படிப்பட்ட உபதேவதைகள் தங்களுக்கு உரித்தான முறையில் வழிபட்டால்,  உலக வாழ்க்கையில் தேவையான பயன் தருபவர்கள்.  பூஜை ஹோமங்களில்  த்ருப்திஅடைபவர்கள். இவர்கள்  இஷ்ட தேவதைகளாக அருள்பாலிப்பவர்கள்.  இஷ்ட தெய்வம்  குலதெய்வமாக இருக்க வேண்டியதில்லை.  பாரம்பரியமாக வணங்கப் படுவது தான்  குலதெய்வம்.   வருஷத்துக்கு ஒரு தடவையாவது  குடும்பத்தோடு சென்று வணங்கவேண்டிய தெய்வம்.   இடது கை  உபாசகர்கள்  தாந்த்ரீக  வழிபாட்டில் ஒரே தெய்வத்தை தான் கொண்டாடுவார்கள்.  குரு  உபதேசத்தோடு செய்வது.   பெரும்பாலும்  சக்தி தேவதைகளை,  தான் வழிபடுபவர்கள். இந்த தெய்வங்கள் முக்தி அளிக்காது.  எந்த உபதேதவத்தையை உபாசித்தாலும்,  அது கடைசியில் பரமாத்மா மஹா விஷ்ணுவான  கேசவனைத் தான் சென்றடைகிறது.  ஸந்த்யாவந்தன மந்த்ரத்திலும் இது  தான் சொல்லப்படுகிறது. ''
 sarva deva namaskāraḥ śrī keśavaṁ prati gacchati (सर्व देव नमस्कारः श्री केशवं प्रति गच्छति)   அம்பாளை  தக்ஷிண மார்க்க, வாம மார்க்க பக்தர்கள்  கூட வித்தியாசமின்றி  வழிபடுகிறார்கள்.


*913*  सर्वापद्-विनिवारिणी   ஸர்வாபத் விநிவாரிணீ
போறாத  காலம்,  கஷ்ட தசை,  துன்பம், துரதிர்ஷ்டம் என்கிறோமே அதெல்லாம் போக்குபவள் அம்பாள்.  சரியான  இடதோ,   வலதோ  (தக்ஷிண/வாம) மார்கத்தில்,  ஏதோ ஒரு  பாதையில் செல்லாததால்   வருவது மேலே சொன்ன இடையூறுகள்.   பிருஹதாரண்யக உபநிஷத்   (VI.ii.16),  ''இந்த  இரு பாதைகளை அறியாதோர், அதன் வழியில் செல்லாதவர்கள், புழு, பூச்சி , வண்டாக பிறக்கிறார்கள்.''என்கிறது.   அவளை தியானித்தால்  தான் மோக்ஷம் கிட்டும்.

*914*  स्वस्था   ஸ்வஸ்தா 
இயல்பு நிலையை இருப்பது தான் ஸ்வஸ்தமாக  இருப்பது.  உடம்பு ஸ்வஸ்தமாய்விட்டதா?  என்றால் நார்மலுக்கு வந்துட்டதா என்று அர்த்தம்?  இதை  ''சொஸ்தமாயிட்டுதா?'' என்கிறோம்.

*915*  स्वभाव-मधुरा   ஸ்வபாவமதுரா    
அம்பாள் மதுர பாஷிணி.  இனிமையானவள். காந்த சக்தி கொண்டவள்.   அழகு பிம்பம்.  
எப்போதும்  குதூகலம், உத்ஸாகத்தோடு  இருப்பவள்.  அவள் பக்தர்களைக் கவர இதற்கு மேல் என்ன வேண்டும்.  இந்த  நாமத்தை   ஸ்வ+பா+அவம+துரா  என்று பிரிக்கலாம்.  ஸ்வ :  அவள்.  பா:  ஒளி  அவம:  ஞானிகளில் முதன்மையானவள்,   துரா :   நுகத்தடி.   அம்பாளின்  ஞான ஒளி  வழிநடத்துகிறது.

*916*   धीरा   தீரா.
அம்பாள்  தைரியம் மிக்கவள்.    படைத்தலைவி.  அவளது பலம்  அவளது ஞானம், ஆத்மபலம்.  எல்லாம் ஒன்றேயானவள்.   ஆகவே  அத்வைதம்  அறிய  அவளே  காரண non-duality is attained through Her.

*917*  धीर-समर्चिता 
 தீரஸமர்ச்சிதா    
கற்றோரால், பண்டிதர்களால்,  போற்றப்படுபவள்  அம்பாள்.   ஆத்ம ஞானம் பெற்றவர்கள் தான் அவளது பெருமையைப் பாடி  போற்றி வணங்குபவர்கள்.  

*918*  चैतन्यार्घ्य-समाराध्या  சைதந்யார்க்ய ஸமாராத்யா.
மிக உயர்ந்த  ஆத்ம  ஞான நிலையை  சுத்த சைதன்யம் என்போம்.  எந்த  காட்டப்படும் இல்லாத சுதந்திரமானது.  எல்லா ஜீவன்களும் அடைய வேண்டிய  கடைசி நிலை.  அர்க்கியம்  என்பது  அதிதிகள், விருந்தினர்களுக்கு, வரவேற்று அளிக்கும்  வரவேற்பு ஜலம்.   ஒருவருக்கு ஞானம் புகட்டுவதே  சிறந்த அர்க்யம்  என்கிறது   பாவனோபநிஷத்.(10).    புவனேஸ்வரி மந்திரம்  சைதன்ய மந்திரம் என்று பெயர் பெற்றது.  பத்தாயிரம் தடவை உச்சரித்தால் பாபங்கள்  தொலையும் என்பார்கள்.  ரெண்டு வித புவனேஸ்வரி மந்த்ரங்கள் இருக்கிறது.  ஒன்று ஒத்தை பீஜ மந்திரம்   ஹ்ரீம் ह्रीं . மற்றது  மூன்று பீஜ மந்த்ரம்   ஐம் ஹ்ரீம்  ஸ்ரீம் ..ऐं ह्रीं श्रीं).

*919*  चैतन्य-कुसुम-प्रिया    சைதந்ய குஸுமப்ரியா
அம்பாள்   குஸுமாத்ரி பூவை  விரும்புபவள் . இது ஒரு வகை தேனை வழங்கும்  மலர். இன்னொரு உள்ளர்த்தம்  எட்டு புஷ்பங்கள் சேர்க்கை என வர்ணிக்கப்படுகிறது. இதெல்லாம் அந்த எட்டு புஷ்பங்கள்?  

ahimsā prathamam puṣpam puṣpam indriya-nigraha:
sarva-bhūta-dayā puṣpam kṣamā puṣpam viseśata: |
jnānam puṣpam tapa: puṣpam dhyānam puṣpam tathaiva ca
satyam aśṭavidham puṣpam viṣṇo: prītikaram bhavet ||

अहिम्सा प्रथमम् पुष्पम् पुष्पम् इन्द्रिय-निग्रह:
सर्व-भूत-दया पुष्पम् क्षमा पुष्पम् विसेशत: ।
ज्नानम् पुष्पम् तप: पुष्पम् ध्यानम् पुष्पम् तथैव च
सत्यम् अश्टविधम् पुष्पम् विष्णो: प्रीतिकरम् भवेत् ॥

அஹிம்சை,  இந்திரிய வெற்றி, தயை, காருண்யம்,  அறிவு, தவம், சத்யம், த்யானம்  இவற்றை ஒன்று சேர்த்தால் அது தான்  சைதன்யம்.  அதை குஸும புஷ்பம் என்கிறது இந்த நாமம். அம்பாளுக்கு செடியில் பூத்த  புஷ்பங்கள் தேவையா?  மனதில்  பூத்தவை அல்லவோ  பிரியம்.

*920*  सदोदिता ஸதோதிதா
எப்போதும்  ஒளிவிடும்  மேனியள் .  ஞானிகள்  மனதைப் போல். என்கிறார் ஹயக்ரீவர்..  சாந்தோக்ய உபநிஷத்  ஒரு விஷயம் சொல்கிறது:  ப்ரம்மலோகத்தில்  சூரியன்  உதயமாவதும் இல்லை,  அஸ்தமிப்பதும் இல்லை,   சூரியன் இல்லை இரு அர்த்தமில்லை, சூரியன்  ஒரே மாதிரியான  ஒளியோடு பிரகாசிப்பவன் என்கிறது (III.xi.2). 

*921*  सदा-तुष्टा  ஸதாதுஷ்டா 
தமிழில் ஒரு   சங்கடம்.   குறில் நெடில்  ரெண்டுக்கும் ஒரே    உயிர் மெய்யெழுத்துக்கள். 
 து thu   dhu  இரண்டுக்குமே ஒரே எழுத்து,  துஷ்டா இப்படி ரெண்டு விதமான அர்த்தங்களை கொடுத்துவிடும். து thushta  என்பது திருப்தி, சந்தோஷம் எனும் அர்த்தத்தில்  மேலே சொல்லப்பட்டிருக்கிறது. து   dhushta  என்றால்  கெட்டவன், பொல்லாதவன், கொடியவன் என்று பொருள் தரும்.   பக்தர்களின் பக்தியில் அம்பாள் த்ரிப்தியடைந்து சந்தோஷமாக உள்ளாள். என்று இந்த நாமம் சொல்கிறது. 

*922* तरुणादित्य-पाटला  தருணாதித்ய பாடலா
பாடலா  என்றால்  அதிக சிவப்பில்லாத,  இளம் சிவப்பு,  ஆரஞ்ஜ்  நிற   உதய சூரியன் வர்ணத்தில் செந்நிறத்திலும் காண்பவள்  அம்பாள்.  ப்ரஹதாரண்யக உபநிஷத்   மஞ்சள்  நீரில் தோய்த்த  வஸ்திரம் போன்று,  பழுப்பு நிற  செம்மறியாட்டின்  கம்பளி  சருமம் போல், வெண் தாமரை போல்,  கண்ணைப்பறிக்கும் மின்னல் போல், தங்கநிறம்  என்றெல்லாம்  அவள் நிறம் மாறும் என வர்ணிக்கிறது. 

சக்தி பீடம்:     ஸ்ரீ  வஜ்ரேஸ்வரி  யோகினி தேவி  ஆலயம்.    வஜ்ரேஸ்வரி.  மகாராஷ்டிரா 

இந்த ஆலயம்  மும்பையிலிருந்து  75 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.  இந்த ஊரின் முந்தைய  பெயர்  வட்வாலி, பின்னர்  அம்பாளின் நாமத்தை சூடிக்கொண்டிருக்கிறது.   தானே  ஜில்லாவில்  பிவாண்டி என்ற ஒரு நகரத்தில்  ஓடும்   தன்ஸா  நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.  மேற்க்கத்திய  ரயில் மார்கத்தில்  விரார்  என்ற  ரயில் நிலயத்திலிருந்து 27 கி.மீ. தூரம் இந்த ஊர். 
ஆலயம் அமைந்துள்ள  குட்டி  மலைக்கு பெயர்   மந்தகிரி.  எந்த காலத்திலேயோ  ஒரு எரிமலையினால் பொங்கி எழுந்த மலை இது என்பார்கள்.  அம்பாள் சம்பந்தப்பட்ட எதுவுமே  உஷ்ணம், தீ, அக்னி, எரிமலை  தானே.  சுற்றிலும் மலைகள்.  

வட்வாலி  ஊருக்கு  ராமரும்  பரசுராமரும்  வந்திருக்கிறார்கள். வட்வாலியில்   பரசுராமர்  ஒரு யாகம் வளர்த்திருக்கிறார்.  அந்த  பெரிய  யாகத்தீ தான் எரிமலையின் சாம்பலாக இன்னும் அந்த  பிரதேசத்தில் இருக்கிறது.   வஜ்ரேஸ்வரி அம்பாளை  வஜ்ராபாய்,  வஜ்ர யோகினி என்றும்  வணங்குகிறார்கள்.   ஆதி மாயா,  பார்வதி அவதாரம்  என்பார்கள்.  இந்திரனின் வஜ்ராயுதம்  இடியும் மின்னலும் சேர்ந்தது. அதுபோல் சக்தி வாய்ந்து  ஒளி வீசுபவள் அம்பாள்  வஜ்ரேஸ்வரி.

கலிகாலன்  என்ற  ஒரு ராக்ஷஸன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  இருந்து  தேவர்களை துன்புறுத்தி,   எல்லோரும்  அவனை  அழிக்க  வசிஷ்டர் தலைமையில் ஒரு த்ரி சண்டிஹோமம் நடத்தினார்கள்.  இந்திரனுக்கு இந்த யாகத்தில்  ஆஹுதி கொடுக்கவில்லை.  அவனுக்கு கோபம். எவராலும் தடுக்க முடியாத, எதிர்க்க முடியாத  வஜ்ராயுதத்தை  அந்த ரிஷிகள் மேல்  வீசினான்.  யாகத்தை அழிக்க அது நெருங்கியபோது  ரிஷிகள்  அம்பாளை வேண்டினார்கள்.  அம்பாள் அந்த வஜ்ராயுதத்தை வாயைத் திறந்து விழுங்கிவிட்டாள் . இந்திரன்  பணிந்தான்.  அசுரனை அழித்தாள் . பரசுராமர்  ''தாயே  நீ இங்கேயே  தங்கி இருக்கவேண்டும்  என்று வேண்டிக்கொண்டார்.  வஜ்ரேஸ்வரி அதனால் வட்வாலியில் இன்றும்  இருக்கிறாள்.

  மச்சேந்திரநாதர் இங்கு ஒரு மாச காலம் தங்கி  வஜ்ரபகவதியை  வெந்நீர்  ஊற்றில் அபிஷேகம் செய்து,   தியானம் செய்து பூஜித்தார். இந்த ஊருக்கு நாத பூமி என்றும் ஒரு பெயர்.   இங்கே  21  வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. 

 ஆரம்பகாலத்தில் இந்த ஆலயம்  குஞ்ஜ்  என்ற ஊரில் இப்போது இருக்கும் இடத்தில்  இருந்து 8 கிமீ தூரத்தில் இருந்தது. வழக்கம்போல் இந்த ஆலயத்தையும் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டார்கள்.  இப்போது இருப்பது அப்புறம் உருவான  ஆலயம். 1739ல்   முதலாவது பேஷ்வா பாஜி ராவ்  தம்பி  சீமாஜி அப்பா, இந்தப்பக்கமாக  வந்து  வஸை  எனும்  இடத்தில் போர்ச்சுகீசியர்களின்   பாஸீன் கோட்டையை பிடிக்க வந்தான்.  மூணு வருஷம் சண்டை. கோட்டை பிடிபடவில்லை.  அம்மா தாயே  வஜ்ரேஸ்வரி, உதவி செய்யம்மா. ஜெயித்தால் இங்கே உனக்கு ஒரு கோயில் கட்டுகிறேன்  என்று  சீமாஜி வேண்டினான்.  வஜ்ரேஸ்வரி அவன் கனவில் தோன்றி அவன் எப்படி  தாக்குதல் செய்தல் கோட்டை வீழும், பிடிபடும் என்று சொல்லிக்கொடுத்தபடியே  செய்தான்.  16.5.1739 அன்று கோட்டை தகர்ந்தது.  
போர்ச்சுசியர்கள்   தோற்று ஓடினார்கள்.    சீமாஜி நன்றியோடு,  அவனது   சுபேதார்  கேஷவ் பட்கேயிடம் இங்கே வஜ்ரேஸ்வரிக்கு  கோவில் கட்ட  ஆணையிட்டான்.  
ஆலய  பிரதான வாசலில் இருப்பது போல்   நகரா  எனும்  பெரிய தோல்  வாத்யம் ஒலிக்கும்  அறை. சுற்றிலும் கோட்டை சுவர்கள்  போல் உயர்த்த மதில்.   52  படிகள்.   தங்க ஆமை.  ஒரு படி   கூர்ம  அவதார  அம்சம். வஜ்ரேஸ்வரி  குங்குமப்பூ  வர்ணம்.  வாள் , கதை, திரிசூலம்  ஏந்தியவள். ரேணுகா தேவி.  சப்த ஸ்ருங்கி ,மஹாலக்ஷ்மி, புலி வாகனம். காளிகாம்பாள்,  பரசுராமர், கணேசர், பைரவர், ஹனுமான்,  சிம்ம வாஹனம்  எல்லோரையும் தரிசிக்கலாம்.   நவராத்ரி வைபவம் ரொம்ப விசேஷம்.
ஒரு அரசமரம்  பிள்ளையார் போல் உருவில் இருப்பது  அதிசயம். 

TULSI DAS

 துளசி தாஸர் -   நங்கநல்லூர்  J K  SIVAN


3.  பயப்படாதே கண்ணா 

ரெண்டு பேரைப்  பற்றி சொல்லும் விஷயம் இது.  இருவரும் சம காலத்தவர்கள்.  அக்பர் நமது தேசத்தை ஆளும்  அவன் ஆட்சிக்குட்பட்டவர்கள்.   ஒருவர்  ராம பக்தர். இன்னொருவர்  கிருஷ்ண பக்தர். இருவரும்  ஒருவரை ஒருவர்  பற்றி அறிந்து சந்தித்து மகிழ்ந்தவர்கள் . இதில் ஒரு சௌகர்யம் என்னவென்றால் இருவருமே  வடநாட்டில்  ஹிந்தி பேசுபவர்கள்.  ஒருவர்  ஸூர் தாஸ். மற்றொருவர்  துளசி தாஸ்.  ஒருவர்  ராமனை  கண்ணால்  நேரில் கண்டவர்.  இன்னொருவர் கண்ணில்லாமலேயே மனதில் எப்போதும் கிருஷ்ணனை கண்டவர். 

சூர்தாஸ்  பற்றி எழுதும் போதெல்லாம்   அவர்  பார்வையின்றி கிருஷ்ணன் சரித்திரம்  பாடுவதை கிருஷ்ணனே சிறு குழந்தையாக அவர் எதிரே அமர்ந்து கேட்கும் படத்தோடு வெளியிடுகிறேன்.  நீங்களும் ஆர்வத்தோடு  படிக்கிறீர்கள். அற்புதமான மனத்தைக் கவரும் படம். கருத்தாழம் மிக்க  ஓவியனின்  வெளிப்பாடு.  

இன்றைய விஷயம்:    துளசிதாஸ்  ஸூர்தாஸ் சந்திப்பு 
 
ஒருநாள்  துளசி தாசர் எங்கோ செல்லும்போது வழியில்  ஆற்றங்கரையில்  ஸூர்தாஸ்  வழக்கமாக ஒரு மூலையில் அமர்ந்து  கிருஷ்ணன் பாடல்களை இயற்றி மனதில் சந்தோஷமாக ரசித்து பாடிக் கொண்டிருப்பதை  பார்க்கிறார்.  அருகே சென்றார்.   ஸூர்தாஸ்  பாடல் அவரை ஈர்க்கிறது.   வெகுநேரம் அருகே நின்று  அமைதியாக கேட்டு தன்னை மறக்கிறார். தன்னுடைய  பாடல்கள்  மூலம்  துளசிதாஸை  பிருந்தா
வனத்துக்கே  அழைத்துச் செல்கிறார்  ஸூர்தாஸ்.  பாட்டு முடியும் வரை சிலையாக நின்று  கண்களை மூடி ரசித்த துளசிதாசர்  ஸூர்தாஸை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

''ஓ  நீங்கள்  தான்   துளசிதாசரா.  உங்களை பற்றி  நிறைய  சொல்வார்கள். அற்புதமான ராம பக்தர். உங்களை தரிசிக்கும் பாக்யம் எனக்கு இல்லை. தொட்டு பார்த்து வணங்கலாமா?

''  ஸூர்தாஸ்,  மஹானுபாவா , நான் பாக்யசாலி. இனி தொடர்ந்து உங்களோடு நட்பு கொண்டு நான் உங்களோடு இருப்பேன்'

''ஆஹா அது என் அதிர்ஷ்டம்.   நாம்  இருவருமே  கிருஷ்ணன் மேல் கீர்த்தனைகள் நிறைய சேர்ந்தே பாடுவோம் '' என்கிறார் உற்சாகமாக ஸூர் தாஸ் .

ஒரு  நாள் ராஜாவின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து தெருவில் ஓடிவருகிறது.   வழக்கமாக அவர் அமரும்  கோவில் அருகே  ஸூர்தாஸ்  துளசிதாஸோடு  நிற்கிறார்

''ஓடுங்கள் ஓடுங்கள்  யானை வருகிறது. எதிரே யார் இருந்தாலும் கொன்றுவிடும்'' சில பேர்  கத்திக்கொண்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

''யானை என்பது பெரிய மிருகமாமே, எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே'' என்கிறார்  ஸூர்தாஸ் 

''ஸூர்தாஸ்,   நாம் இருவரும் கவலைப்பட  வேண்டாம். நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் அவன் பார்த்துக் கொள்வான்.   ஒரு ஓரமாக நிற்போம்''

கிருஷ்ணனை  தியானித்து கண்மூடி துளசிதாஸ்  சிலையாக அமர்ந்திருக்க  யானை அருகே வந்துவிட்டது.  அவர்களைப் பார்த்தது. ஒருகணம் நின்றது. மெதுவாக அவர் எதிரில் நின்றது தும்பிக்கையால் அவரை வணங்கியது அமைதியாக அவரை சுற்றி வந்து திரும்பியது. எல்லோரும்  ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் துளசிதாஸ்  மெதுவாக தியானத்திலிருந்து கண் விழித்தார்.

துளசிதாஸுக்கு  அப்போது தான் ஸூர்தாஸ் பற்றி நினைப்பு வந்தது.  ''எங்கே ஸூர்தாஸ் ? காணோமே.''  

சற்று தூரத்தில்  மரத்தின் அருகே  இரு கைகளாலும் நெஞ்சை மறைத்துக் கட்டிக்கொண்டு ஸூர்தாஸ் நிற்பது தெரிந்து அவரை அழைத்துக்  கொண்டு வருகிறார்  துளசிதாஸ்.   கண் தெரியாத அவருக்கு எல்லோரும் விஷயம் சொல்கிறார்.

''ஸூர்தாஸ்,  எனக்கு ஒரு சந்தேகம் உங்களை நேரடியாக கேட்டு  விடுகிறேன்?''  ஏன் எல்லாரையும் போல்  நீங்களும் யானையை கண்டு பயப்பட்டு நடுங்கினீர்கள்?'' நான் தான் நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்றேனே ''  

''துளசிதாஸ்,  நீங்கள் ஒரு உன்னத கிருஷ்ண பக்தர்  என அறிவேன்.  உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன்   நீங்கள்  கண்ணை மூடி  தியானத்தில் இருக்கும்  போது  வந்த அந்த பொல்லாத  கோபமான  யானையை கிருஷ்ணன்  விரட்டி விடுவான் என்று தைரியமாக  இருந்தீர்கள்.  
ஆனால்,  என் மனதில் இருக்கும் கிருஷ்ணன் ஒரு  குட்டிப்  பயல். இதுவரை எனது மனதில் அவனை குழந்தையாகவே நான் அறிவேன்.  அவனது சிரித்த விளையாட்டு முகம் ஒன்றே நான் அறிந்தது. பல பாடல்கள்  அப்படியே தான்  அவனைப் பற்றி பாடியுள்ளேன்.  நீங்கள் சொன்னது போல் யானை மிக பெரிய மிருகம்,  அதற்கு மதம் என்று ஏதோ சொன்னீர்களே அது பிடித்தால் ரொம்ப ஆத்திரமடைந்து எல்லோரையும் தாக்கிக்  கொன்று விடும் என்று சொன்னீர்களே..
ஒருவேளை என் மனதில் உள்ள குழந்தை கிருஷ்ணன் அந்த பெரிய  யானையை பார்த்து பயந்து அழுது விட்டால்??  நான் எப்படி  அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியும்? எனக்கு சிரிக்கும் கிருஷ்ணன் தான் பிடிக்கும். அழுபவர்களை கண்டாலே பிடிக்காது.   ஆகவே  என் இரு கைகளாலும் என் நெஞ்சை மூடி மறைத்து கொண்டேன்.  என் நெஞ்சின் உள்ளே இருக்கும்  அவனுக்கு யானை கண்ணில் படாது அல்லவா, பயம் தோன்றாது அல்லவா, அழுகை வராது அல்லவா? '' என்கிறார் ஸூர்தாஸ்

இதை கேட்டதும்  உங்களுக்கு  ஸூர்தாஸ்  மனநிலை எப்படி என்று புரிகிறதா ?  அப்புறம் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததை , அவர்  ஸூர்தாஸின்  கிருஷ்ண பக்தியை உணர்ந்ததை, சிலையாக நின்று ரசித்து அவர் பாதங்களில் விழுந்ததைப்  பற்றி நினைப்போம்.

SURDAS

 ஸூர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''நீயே உனக்கு என்றும் சமமானவன்  '

ஒரு கேள்வி  மனதில் எழலாம்?  எதற்கு,  ஏன் இவனுக்கு   எப்போது பார்த்தாலும் கிருஷ்ணன் கிருஷ்ணன் என்று ஸ்மரணை?  இப்படி ஒரு கேள்வி எழும்பினால்  அதற்கு ஒரு விடை இருக்கிறது.
''க்ருஷ்ணனைப்  போல்  மற்றொருவர் இதுவரை  அறியப்படவில்லை.  அவனது  மஹிமை, அவனது மேன்மை.''
''ஓஹோ  அப்படியா? யார்  அந்த கிருஷ்ணன்?
'' ஸர்வ லோக நாயகன். சகலருக்கும் தந்தை, எவ்வுயிர்க்கும் அதிபதி,  அகம்பாவம், கர்வம் எல்லாம் இருந்தாலும்  சிரித்துக்கொண்டே  நம்மை  ஏற்பவன்''
''எப்படிச் சொல்ல முடியும்?''
''அதற்ககாகத் தான்  ஒரு பழங்கதை சொன்னால் தானே புரியும்''.

ஒரு கோபக்கார,  பிடிவாதம்  கொண்ட   முனிவர் பிருகு என்று  பலர்  சொல்வார்கள். ஆனால்  அவர்  ஒரு  சிறந்த பக்திமான்.  திரிமூர்த்திகளும் அவர் பக்தியை மெச் சுபவர்கள், தவ வலிமை மிக்கவர்.   எனினும் ப்ரம்மாவை , சிவனை தூஷித்து அவமதித்து பிருகு நடந்து கொண்டதை இருவருமே எதிர்த்தார்கள். கோபம் கொண்டார்கள் முனிவர் மீது.
பிருகு அதோடு விட்டால் பரவாயில்லையே.
நேராக மஹா விஷ்ணுவிடம் வந்தார். அவரை வரவேற்று கவுரவம் தந்து உபசரிக்கவில்லை என கோபம் கொண்டு காலைத்  தூக்கி படேர் என்று விஷ்ணுவின் மார்பில் உதைத்தார். சிவன் ப்ரம்மா மாதிரியா   கிருஷ்ணா நீ, விஷ்ணுவாக இருந்தும்  கோபம் கொண்டாயா? இல்லையே. நீ  என்ன செய்தாய் அப்போது  என  உனக்கு  ஞாபகமூட்டுகிறேன்.'

''முனிவரே, என்ன விருட்டென்று காலைத்  தூக்கி என் மார்பில் உதைத்து விட்டீர்களே. கால் வலிக்குமே உங்களுக்கு?'' என்று சொல்லி உதைத்த  அவர்  காலைப்  பிடித்து விட்டு, தடவிக் கொடுத்தவனப்பா நீ.,. வேறு எந்த தெய்வம் பக்தனுக்காக இப்படி தன்னைத்  தாழ்த்திக்கொண்டு விட்டுக் கொடுக்கும்?.

தன்னலமின்றி அன்போடு பழகுவதில், நேசிப்பதில்,  கண்ணா நீ ஒருவனே உனக்கு உதாரணம்.

ராமனாக நீ வந்தபோதும் இப்படித்தான் செய்தாய்.    ராக்ஷஸன்,  தனக்கு தீங்கு செய்த,  ராவணனின் தம்பி என்ற போதிலும் விபீஷணனை நெஞ்சார அணைத்து மார்புற கட்டிக்கொண்டாய். அவனுக்கும் உன் தம்பி பரதனுக்கும் அப்போது உனக்கு வித்யாசமே தெரியவில்லையே?

உன்னைக் கொல்ல வந்த கொடிய ராக்ஷஸி பூதகிக்கும் மோக்ஷம் கொடுத்தாய் கிருஷ்ணா.!

இப்போது தெரிகிறதா ஏன் இந்த கிழவன் ஸுர்தாஸ் உன்னை ஈடிணையற்ற கருணா மூர்த்தியாக தெய்வ மாக ஏற்றுக்கொண்டு உபாசிக்கிறேன் என்று?''   என்கிறார் அற்புத கவிஞர் கிருஷ்ண பக்தர் ஸுர் தாஸ் .

அவர் பாடிய இந்த பாடல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாக கீழே தந்திருக்கிறேன். ஹிந்தி பாட்டு கிடைக்கவில்லை.  இருந்தால் அர்த்தத்தோடு யாரவது எனக்கு நிறைய  அனுப்புங்கள் தமிழில் திருப்பித் தருகிறேன் இது மாதிரி.  என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

See the greatness of Krishna;
though Lord, Father and Master of the world
he willingly bears the arrogance of his close devotees
Shiva and Brahma were roaring mad
when Bhrigu kicked them,
but he gently pressed the sage's foot
when it struck his breast!'
Which of the gods
can emulate him?
He befriends selflessly;
Embracing his foe Ravana's brother, Vibhisana' as lovingly as his own
brother Bharata, sending to heaven the demoness Putana
who tried to kill him'-
Such is Sura's Lord,
the selfless Giver.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...