Monday, March 30, 2020

GOSWAMI



                 
    ஈடற்ற செல்வம்      J K  SIVAN


காசியில் எத்தனையோ பிராமணர்கள் வசித்தாலும்  நான் சொல்லும் கதை  ஒருவனைப் பற்றி மட்டும் ஏழை பிராமணனைப்  பற்றி.  அவனுக்கு ஒரு மகள்.  சீர் செயது, நகைகள் அணிவித்து  எப்போது, எப்படி கல்யாணம் பண்ணுவது "

 ''காசி விஸ்வநாதா, என் மகள் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம்  கொடு ?''

 “பணம் வேண்டுமா உனக்கு. நேராக  பிருந்தாவனம் போ. அங்கே  சனாதன கோஸ்வாமி என்று ஒரு   துறவி இருப்பார் அவரைக் கேள்''  என்கிறார் காசி  விஸ்வநாதர்.  பிருந்தாவனத்துக்கு நடந்து சனாதன கோஸ்வாமி எங்கே  என விசாரித்து தேடி, அவரை  யமுனா நதிக் கரையில்  காளிங்கன் எனும் விஷ நாகம் இருந்த வீடு அருகே மணல் மேட் டில்  பஜனை பண்ணிக்கொண்டு  இருந்தபோது  கோவணாண்டியாக  பார்க்கிறான்?  வீடு வீடாக சென்று பிக்ஷை வாங்குகிற, ஒருநாளைக்கு ஒரே ஒரு சப்பாத்தி உப்பில்லாமல் சாப்பிடுகிறவர் எப்படி கல்யாணத்துக்கு பணம் கொடுப்பார்? ஒருவேளை தப்பாக வந்துவிட்டோமா?
கோஸ்வாமி பார்வை பிராமணன்  மேல்  பட்டது. அருகே அழைத்தார்.
''யாரப்பா நீ  புதிதாக இருக்கிறாய் இந்த பக்கம்?''
''குருநாதா, என்  பெண் கல்யாணம்  எங்காவது நிச்சயம் செய்து கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். அதற்கு பணம் வேண்டும்.....காசி விஸ்வநாதனைக் கேட்டேன். அவர் உங்களிடம் அனுப்பினார்''

''அப்பனே, நானோ ஒரு கோவணாண்டி. சொத்து சுகம், செல்வம் எதுவும் இல்லாதவன்.  விரும்பாதவன் . காசி விஸ்வநாதன்  என் மனதில்   உறைபவன்.  அவன் என்னிடம் அனுப்பினான்  என்றால்  அதில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.  யோசிக்கிறேன்''
''ஆஹா   இப்போது  ஞாபகம் வருகிறது. எப்போதோ ஒரு ஞானி என்னிடம் ஒரு  மந்திரக் கல்லை கொடுத்து  இதனால் எதை தொட்டாலும் தங்கமாகும்  என்றார்.  எனக்கு தேவையில்லை என்பதால்  அதை இங்கே தான் எங்கோ மண்ணில் வீசினேன். புதைந்து போயிருக்கும்.  உனக்கு வேண்டுமானால் தேடி தோண்டி எடுத்துக் கொள்''

ஒரு வாரத்துக்கு மேலாக  அந்த ஏழை பிராமணன் யமுனாநதிக்கரை  மணலை எல்லாம் புரட்டி போட்டான். யாரிடமும் ரகசியத்தை சொல்லவில்லை. ஒருநாள் சிறிதாக மஞ்சளாக ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்து ஒரு இரும்பு துண்டின் மேல் தேய்த்தான். அது பொன்னாக மாறியது. அவனுக்கு எப்படி இருக்கும்??   யோசியுங்கள் என்று விட்டுவிடுகிறேன். மேலே  எழுதப்போவதில்லை.  பிராமணன்  காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு ஓடினான்.
''காசி விஸ்வநாதா என் பிரார்த்தனை வீண் போகவில்லை'' என்று நன்றியோடு வணங்கினான்.  வீட்டுக்கு திரும்பும்போது பாதிவழியில்  ஒரு எண்ணம்.  ஏன் கோஸ்வாமி இதை வேண்டாம் என்று தூர எறிந்தார்? நிறைய தங்க ஆபரணங்கள் அவரிடம் சேர்ந்திருக்குமே ?'' திரும்பி கோஸ்வாமியிடம் சென்றான்.

''ஏன் திரும்பி வந்துவிட்டாய்?''
''யோசித்தேன் குருநாதா.  இந்த 'தொட்டால் பொன்னாகும்'' மந்திரக்கல்லை நீங்கள் ஏன் வேண்டாமென்று தூக்கி எறிந்தீர்கள் . ஒருவேளை இதைவிட உயர்ந்த சாதனம் ஒன்று உங்களுக்கு கிடைத்து, நீங்கள் அதை வைத்திருக்கிறீர்களோ என்று ஒரு எண்ணம். அதைப்  பெற்றுக்கொள்ள விருப்பம்''''

''சரி. அப்படி என்றால் முதலில் இந்த மந்திரக் கல்லை யமுனையில் வீசி எறி'' பிராமணன் அவ்வாறே செய்தான்.
''இங்கே வா... உன் காதில்  ஒரு  மந்திரம் ரகசியமாக  சொல்கிறேன். உலகத்தில் எல்லோரும் தேடும் சாதாரண  பொன், வெள்ளி,  வைர ஆபரணத்தை விட  மிக மிக  உயர்ந்தது.  பிராமணன்  அருகே அமர அவன் காதில் உபதேசித்தார்:

''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண , கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ''  இதை நீ கெட்டியாக பிடித்துக்கொண்டால் ராதை, கிருஷ்ணன்  எனும்   ஈடிணையற்ற   விலை  மதிப்பில்லாத அபூர்வ  செல்வம் உன்னை வந்தடையும். இங்கேயே  இரு. உன் மகள் திருமணம் தானாகவே நடக்கும்.   பிராமணன் அப்படியே செய்தான். ஒரே வாரத்தில் அவன் முற்றிலும் மாறி விட்டான்.  அதற்குள்  அவன்  பெண்ணை யாரோ ஒரு கோடீஸ்வர  தனவந்தர் யாத்ரீகர் கோஸ்வாமியை  தரிசிக்க வந்தபோது  பார்த்து தனது மகனுக்கு  தனது முழுச்செலவில் திருமணம் செய்து கொண்டார்.

THEERTHTHA NARAYANAR




தீர்த்த  நாராயணர்      J K SIVAN

              4.   துளஜா மகாராஜாவின் கைங்கர்யம் 

தீர்த்தநாராயணரைபற்றி  தெரியாமலே  அதிக வருஷங்கள்  வாழ்க்கையில்  எனக்கு வீணாகி விட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி எனக்கு. 
 வெகுகாலம் நாராயண தீர்த்தர் தான் தெரியும். அவரே இவர் என்று நினைத்திருப்பவர்களும் உண்டே.  அவர்களுக்காக தான் இந்த  சிறந்த  சிவபக்தர், அஷ்ட சித்திகள்  அடைந்த மஹான் பற்றி சொல்கிறேன்.

 எனக்கு தீர்த்தநாராயனரை  அறிமுகப்படுத்திய
வர்  சிவன் சார் என்கிற சாச்சு சாஸ்திரிகள்,
என்கிற சதாசிவ சாஸ்திரிகள்.   இன்னும் புரியவில்லை என்றால்  காஞ்சி மஹா பெரியவா ளின் உடன் பிறந்த சகோதரர். அண்மையில் சித்தியடைந்த மஹான். 

சிவன் ஸார்  எழுதிய  ''ஏணிப்படிகளில் மாந்தர்கள்''   என்கிற புத்தகத்தை  இந்த சிவனுக்கு , என் வீட்டருகே வோல்டாஸ்
காலனியில் வசிக்கும்   ஸ்ரீ எஸ். ராமமூர்த்தி  என்கிற ஒரு வக்கீல் அன்பர் பரிசளித்து அதில் அறிந்த விஷயங்கள் இவை. 

சென்ற கட்டுரையில் அவருடன் இருந்த  சடைச் சாமி  என்ற குழந்தையை பற்றி குறிப்பிட்டேன்.  அந்த குழந்தையை  பெற்றோர் தீர்த்த நாராயணரிடம் ஒப்படைத்தபோது அது வெயில் நிழல், காற்று, இருட்டு, குளிர், இரவு பகல் என்று ஒரு வித்த்யாசமும் இல்லாமல் அவரோடு  வளர்ந்தது.  பசியாக இருந்தால் வாய் திறக்கும்.  ஸ்வாமிகள் உயிர்ப்பித்த  தெய்வீக ஆடு தானாகவே  அந்த குழந்தையின் வாயில் பாலை சுரக்கும். சிதம்பரநாதன் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை எல்லோரும் சடைச்சாமி என்று தான் அறிந்தார்கள். 

அந்தக்காலத்தில் சோழராஜா மராத்திய வம்ச  துளஜாபான்ஸ்லே மஹாராஜா (1738-1787) அவர் ராணிக்கு  முதுகில்   மூன்று வருஷமாக  ஒரூ  சரும  ரோகம்.   ஸ்போடகம்  என்ற அந்த நோயை எந்த வைத்தியனாலும்   தீர்க்க முடியவில்லை. ராஜாவுக்கு ரொம்ப  வருத்தம். அந்த நேரம் ஒரு திருவையாற்று பண்டிதர் காசி முதல் ராமேஸ்வரம் செய்து க்ஷேத்ராடனம் சென்று திரும்புகிறார். அவரைப் பற்றி கேள்விப்பட்டு துளஜா மஹாராஜா அவரை அழைக்கிறார்.

''பண்டிதரே , உங்கள் ஸ்தல யாத்ரையில்  எங்காவது ஒரு    சித்தி வாய்ந்த, நோய் தீர்க்கும்   மஹான் யாரையாவதுபார்த்தீர்களா? 

'' இல்லை மஹாராஜா. ஆனால் இங்கே பக்கத்திலேயே   திருப்பூந்துருத்தியில் யாரோ ஒரு  தெய்வீக மஹான் இருக்கிறாராம். அமானுஷ்யமான  அதிசயங்களை புரிகிறார் என்று கேள்விப்பட்டேன்.''

'ஓஹோ அப்படியா, யார் அவர்?''

''தீர்த்தநாராயணர் என்று பெயர் கொண்ட சித்த புருஷர் ''

துளஜா மஹாராஹா, பரிவாரங்களை ஊருக்கு வெளியே  நிறுத்தி விட்டு கால்நடையாக   மந்திரியுடன் மட்டும் ஸத் குருவை  தேடி சென்றான்.   மரத்தடியில் பார்க்கிறான். நமஸ்கரித்து கைகட்டி  நிற்கிறான். 

''நீ யார்?  இங்கே எதற்கு வந்தாய்?''

''சுவாமி  நான்  இந்த ராஜ்ய  அரசன். உங்கள் அனுக்கிரஹம் பெற ஓடிவந்தேன். இத்தனை நாள் ஸ்வாமிகள் இங்கு இருப்பதை  அறியவில்லை.  என் அபசாரத்தை மன்னிக்கவேண்டும்'' எனக்கு.......''

''போதும் நிறுத்து.  உன் விருத்தாந்தங்கள் எனக்கு தெரியும். போய் உன் மனைவியை அழைத்து வா ''

துளஜா மகாராஜாவின் ராணி நான்குபேர்  உதவியுடன் கொண்டு  வரப்பட்டாள் .
தீர்த்தநாராயணர்  வலது  ஹஸ்தத்தால்  அனுகிரஹித்தார். ''போ''  என்கிறார்.  அடுத்த கணமே  ரோகம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. முன்பிலும் அவள் தேஹ காந்தி பளபளத் தது. ஆரோக்கியத்தோடு எழுந்தாள்  ஸ்வாமி களை பதினாறு தடவை ப்ரதக்ஷிணம் செய்து வணங்கினாள் . மஹாராஜா நன்றிப்பெருக்குடன்  கண்ணீர் உகுத்தார். 

''ஸ்வாமி,   இந்த சந்நிதானத்துக்கு என்னாலான ஏதாவது ஒரு கைங்கர்யம் செய்ய அனுக்ரஹிக்க வேண்டும்''

''இந்த உலகில் எதனாலும் எனக்கு ஆக வேண்டி யது ஒன்றும் இல்லை.  உனது ராஜ்யத்தை  எப்பொழுதும் போல நேர்மை நீதியோடு  பரிபாலித்து வா''

''சுவாமி ஏதாவது ஒரு சின்ன கைங்கர்யம் செய்ய அனுமதிக்க வேண்டும் ''

''சரி   இந்த ஆடு சுற்றி வரும் இடத்தை கொடு. போதும்''

சுவாமி ஆட்டை தட்டிக் கொடுக்க  அது ஓடியது. நாலு வேலி  பரப்புள்ள நிலத்தை  ஒரே ஓட்டமாக  சுற்றி வந்து நின்றது ஆடு. ராஜாவின் ஆட்கள்  ஆட்டின் குளம்படி பட்ட இடத்தில் எல்லாம் முளை அடித்து அடையாளம் செய்ய, 

''சுவாமி  இந்த நிலம்  நாலு வேலி  அளவு உள்ளது.  அதை  யார் பேரில்  பட்டா எழுதுவது?

  ராஜா கேட்கும்போது சுவாமி அருகே பார்க்கி றார். எதிரே  வெண்பொங்கல் கொண்டு தந்த  பஞ்சநத சாஸ்திரிகள், சடைச்சாமி இருவர்  தென்பட, 
''இந்த ரெண்டு பேர் மேலே தலா  ரெண்டு  வேலி  எழுது.''
அப்படியே பட்டா எழுதுகிறேன் சுவாமி. ஆனால் ...
''என்ன ஆனால் ?''
''ஸ்வாமிக்கு ஏதாவது கைங்கர்யம் பண்ண வேண்டும் ?'

''ஆஹா  அதற்கென்ன, ஒன்று செய்,  நான் இந்த இடத்திலேயே  சமாதி இருக்க எண்ணம். தக்கபடி ஒரு இடம் தயார் செய்''துளஜா மஹாராஜா காலத்தில் அங்கே ஒரு ஆலயம் உருவானது. கர்ப்ப கிரஹத்துக்கு வாயு திசையில் அபிஷேகம், புனித ஸ்னானத்துக்கு  ஒரு கிணறு வெட்டினான். கைங்கர்யம் பூர்த்தியானது.

ராஜா வந்தபோது சடைச்சாமி, எனக்கு நிலம் வேண்டாம், இந்த ஆலய பூஜைக்கு புஷ்பம் பறித்துவர, சந்தனம் அரைக்க விளக்குகள் ஏற்ற, ஆலயம் சுத்தம் செய்ய எனக்கு ஆணையிட்டால் போதும்'' என்கிறார்.   சடைச்சாமிக்கு அளிக்கப் பட்ட நிலம்  ஆலயத்தின் பெயரில் பட்டாவாகியது.   

''பஞ்சநதம்   நீ  இந்த  ஆலய  அதிஷ்டான  பூஜை யை  விடாமல் விதிப்படி நடத்தி பக்தர்களை உபசரித்து அன்னமளி.   சடைச்சாமிக்கு  உதவியாக சேவை செய்''

துளஜா மஹாராஜா  கைகட்டி நின்றார்.  ஸத்குரு அவர் பக்கம் திரும்பி 

''ஹே  ராஜா, வருகிற  மாசி மாதம் சுக்ல பக்ஷம், அஷ்டமி திதி, கிருத்திகை நக்ஷத்ரம், குருவாரம்,  பகல் பதினைந்து நாழி, அபிஜித் முகூர்த்தத்தில்  யோக சமாதியில் அமர உத்தேசித்திருக்கிறேன். அன்றைக்கு வந்து தரிசனம் பெறலாம் போய் வா''. 



துளஜா ராஜாவும் குணமடைந்த ராணியும் சென்றார்கள்.     

Sunday, March 29, 2020

NARAYANEEYAM




நாராயணீயம்    J K  SIVAN
ஐந்தாவது தசகம்
                                             

                         ப்ரபஞ்ச  காரணன்
குருவாயூரப்பா,  எங்கு நோக்கினும்  உலகில் இப்போது துயரம் துன்பம் தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை.  வேறு விஷயம் காதில் விழவில்லை.  கண்கள் கலங்கிக் காண்கிறது. உன் அருளால் மீண்டும் இன்ப நிலை பெறவேண்டும்.  சோதனை போதுமடா சாமி.

உன் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

சுதபா  என்று ஒரு ராஜா. ப்ரிஷ்ணி அவன் மனைவி. பிரம்மாவிடம் குழந்தை வேண்டியபோது அவர்களது  உண்மையான பக்தியை மெச்சிய  ப்ரம்மா விஷ்ணுவிடமிருந்து ஒரு  கிருஷ்ணன் விக்ரஹம்  வாங்கி சுதபாவிடம் கொடுக்கிறான். எந்த வேளை கிருஷ்ண விக்ரஹம் பிரமன் கையில் பட்டதோ  அதிலிருந்து சிருஷ்டியில் பிரம்மனுக்கு எந்த சங்கடமும் இல்லாமல் தொடர்ந்தது.

''சுதபா உனக்கு என்ன தேவை சொல் ?  என்கிறான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா ,நீயே  என் மகனாக பிறக்கவேண்டும்!''  மூன்று முறை அழுத்தி சொன்னான் சுதபா.

''சுதபா, நீ மூன்று முறை என்னை மகனாகப் பெற வேண்டிவிட்டாய். உனக்கு மூன்று பிறவிகள் அதனால் உண்டு. ஒவ்வொன்றிலும் நான் உன் மகன். போதுமா?'' என்கிறார் மஹா விஷ்ணு வான  கிருஷ்ணன். .

முதலில்  ப்ரிஷ்ணி கர்பனாக  பிறக்கிறான்.  பிரம்மச்சர்யத்தை மேன்மையை, மஹிமையை எல்லோருக்கும் உபதேசிக்கிறான்.   இரண்டாவது முறை காஸ்யப ரிஷி  அதிதிக்கு   மகனாக வாமனனாக  அவதரிக்கிறார்.
மூன்றாவதாக  வசுதேவர் தேவகி தம்பதியர் மகன் கிருஷ்ணனாக பிறக்கிறார். இப்படி ப்ரம்ம கொடுத்த கிருஷ்ணன் விக்ரஹம் தான் வாசுதேவரிடமிருந்து பெறப்பட்டு  த்வாரகையில் பிரதிஷ்டை செய்தது  என்பார்கள்.   4 அடி  உயரம்.  பாதாள அஞ்சனம்   BLACK BISMUTH  எனும் கல்லிலிருந்து வடிக்கப்பட்டது.  நின்ற திருக்கோலம்.சதுர்புஜம். ஒரு கரத்தில் பாஞ்சஜன்யம்.  ஒன்றில் சுதர்சன சக்ரம், ஒன்றில் கௌமோதகி, இன்னொன்றில் தாமரை.

குருவாயூரப்பா  நீ பூரணஸ்வரூபன். குழந்தையாக  தோன்றியபோது  வசுதேவர் தேவகிக்கு கம்சனின்  சிறைச்சாலையில் அளித்த தரிசனம்   விக்ரஹமாக  பின்னர் கிருஷ்ணனால்  வழிபடப்பட்டு  துவாரகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாராயண பட்டத்ரி உன்னை போற்றி உன் எதிரே குருவாயூரில் அமர்ந்து பாடிய  ஐந்தாவது தசகம் இனி தொடர்வோம்:

व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये
मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।
नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-
स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

1. வ்யக்தாவ்யக்தமிதம் ந கிஞ்சிதபவத் ப்ராக் ப்ராக்ருத  ப்ரக்ஷயே
மாயாயாம் குண  ஸாம்ய ருத்த விக்ருதெள த்வய்யாகதாயம் லயம்
நோ ம்ருத்யுஸ்ச ததாம்ருதம் ச ஸமபூ நாஹ்நோ    ந ராத்ரோ:   ஸ்த்திதி:
 தத்ரைகஸ்த்வமஸிஷ்யதா: கில பராநந்த ப்ரகாசாத்மநா ||   (1)

  குருவாயூரப்பா,   இந்த ப்ரக்ருதி  மஹா பிரளயத்தின் போது  எங்கும் நீர்மயமாக  வேறெந்த ஜீவராசி இல்லாமல் இருந்தது.  கிருஷ்ணா,  விஷ்ணு, நாராயணா , உன்  மாயையினால் சர்வமும் ஒவ்வொன்றாய் மீண்டும் உயிராக தோன்றியது.   ஆத்மா பரமாத்மா  வேறாகியது.  பிறப்பு  இறப்பு  உருவாகியது.  பகலும் இரவும் வித்யாசம் தெரிந்தது. எல்லாவற்றிற்கும் காரணனாக  நீ  ஒளிமயமாக நின்றாய்.  எதற்கு இதை சொல்கிறேன்... எல்லாம் உன் செயல். நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. சிருஷ்டி மட்டும் அல்ல அதை க்ஷேமமாக பாதுகாக்கும் கடவுள் நீ. எங்கள் குறையை தீர்த்து ரக்ஷிப்பாயாக.  லோக ஸமஸ்தா  சுகினோ பவந்து: 


2.  काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो
चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।
तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां
नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

காலா: கர்ம குணாஸ்ச ஜீவநிவஹா  விஸ்வஞ்ச கார்யம் விபோ
சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா நிர்லீநதாமாயயு:
தேஷாம் நைவ வதந்த்யஸ்த்த்வமயி போ: ஸக்த்யாத்மநா திஷ்ட்டதாம்
நோ சேத் கிம் ககநப்ரஸூந ஸத்ருஸாம் பூயோ பவேத் ஸம்ப்பவ:  (2)  
வாதபுரீசா,  பிரளய காலத்தில், காலம், ஆகாசம்,  கர்மா, சத்வ ரஜோ தமோ குணங்கள் எல்லாம்  உன்னில் மறைந்தன.  தாவரம், ஜங்கம , உயிர்கள் மாயையினால் வேறு வேறாக உருவெடுத்து ப்ரக்ரிதியில் உலவின. 
ஒன்றோடு ஒன்று இசைந்து, இணங்கி, சமநிலையில் இயங்க அவற்றின் குணம், உருவம் எல்லாம் கொடுத்தாய். ஆத்மா பரமாத்மா உன் அம்சமாக  ஒவ்வொன்றிலும்  தனித்து விளங்கியது.  குணங்கள் அவற்றை இயக்க, கர்மாக்கள் வேறுபட்டு உலகம் துவங்கியது.

3.  एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां
बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।
मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च
प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

ஏவஞ்ச த்விபரார்த்தகால விகதாவீக்ஷாம்   ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
பிப்ப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபவநீ  பாவாய மாயா ஸ்வயம்.
மாயாத: கலு காலஸக்தி: அகிலாத்ருஷ்டம் ஸ்வபாவோபி ச
ப்ராதுர்ப்பூய குணாந் விகாஸ்ய விதது: தஸாயா: ஸஹாயக்ரியாம்  (3)  

குருவாயூரப்பா,  காலத்தை சாவி கொடுத்து முடுக்கிவிட்டாய். ஓட ஆரம்பித்துவிட்டது. மாற்றங்கள் காலத்திற்கேற்ப மாறும்  என்ற நியதி உருவாக்கினாய்.  இதற்குள்  ரெண்டு 'பரார்த்தம்''  (இது ப்ரம்மாவின்   ப்ரம்ம லோக வருஷங்களில்  நமக்கு  பல மடங்கு  அதிகமான  ஆண்டுகள்.  அதாவது ப்ரம்மாவின் ஒரு நிமிஷம் நமக்கு ஒரு வருஷம்  மாதிரி..) நீ சிருஷ்டியை கண்காணிக்க பிரம்மாவை  உருவாக்கி,  எண்ணற்ற  ஜீவன்களை பிறப்பித்தாய். உன்  மாயை உனது சங்கல்பத்தை நிறைவேற்றியது. மூவுலகும் இவ்வாறு    அறிமுகமானது.  சிருஷ்டி கையினால் செய்வது அல்ல. மனதில் நினைத்தாலே உருவாவது. அதைத்தான்  சங்கல்பம் என்று சொல்வது.  விஷ்ணுவின் மாயையை அடிப்படையாக கொண்டது பிரபஞ்சமும் அதில் சிருஷ்டியும். 

4.  मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्
भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।
कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं
माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥

மாயா ஸந்நிஹிதோ ப்ரவிஷ்டவபுஷா  ஸாக்ஷீதி கீதோ பவாந்
பேதைஸ்தாம் ப்ரதிபிம்பதோ விவஸிவாந்  ஜீவோ பி நைவாபர:
காலாதி ப்ரதிபோதித த பவதா  ஸஞ்சோதிதா ச ஸ்வயம்
மாயா ஸா கலு புத்திதத்வம் அஸ்ருஜத் யோ ஸெள மஹாநுச்யதே. (4)  

கிருஷ்ண பரமாத்மா,   நீ  மாயாவி. வேதங்கள்  உன்னை  மாயையின்  சிருஷ்டிக்கு சாக்ஷி பூதம்  என்கிறது.  மாயையின் தோற்றங்களில்,  ஜீவன்களில்,  நீ  உள்நின்று  ஆட்டுவிக்கும்  ஜீவாத்மா.  நீ  அந்த மாயையாலோ, அதன் விளைவுகளாலோ  எந்த சம்பந்தமு மில்லாதவன்.  எல்லாவற்றையும்  அறிந்தும் அதில் எந்த பங்கேற்பும் இல்லை. மாயையின் எல்லாத்தோற்றங்களிலும்  தனித்தனியாக  ஜீவாத்மாவாக ஒளிர்கிறாய்.

5.  तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं
जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।
चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ
सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥

தத்ராஸெள த்ரிகுணாத்மகோ பிச மஹாந் ஸத்வப்ரதாநா: ஸ்வயம்
ஜீவே ஸ்மிந்கலு நிர்விகல்பமஹமித் யுத்போத நிஷ்பாதக:
சக்ரே ஸ்மிந் ஸவிகல்ப போதகமஹந்தத்வம் மஹாந் கல்வஸெள
ஸம்புஷ்டம் த்ரிகுணைஸ் தமோ திபஹுலம் விஷ்ணோபவத்ப்ரேரணாத்
                        
குருவாயூரப்பா, இந்த மாயையின் சமாச்சாரங்களில் ஒன்று புலனாகிறது.  அது சத்வ ரஜோ, தமோ குணங்களில் ஒன்றாக  கலந்து இருந்தாலும் சத்வ குணம் தான் தலை தூக்குகிறது.  அது   புத்தியோடு ஈடுபட்டு  அஹங்காரம்  உருவாக காரணமாகிறது.  நான்,  எனது , என்னுடைய, எங்களது என்று சுயநலம் பெறுகி  மனம் இருளடைகிறது.  தவறுகள்  தொடர ஆரம்பிக்கிறது. பாபம் வளர்கிறது.


6.  सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको
भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना
देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो
वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥

ஸோ ஹஞ்ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம் ஆஸாத்ய வைகாரிகோ
பூயஸ்தஜைஸ தாமஸாவிதி பவந்நாத்யேந ஸத்வாத்மநா
தேவாநிந்த்ரிய மாநினோ க்ருத திஸாவாதார்க்க பாஸ்யஸ்விநோ
வஹ்நீந்த்ராசாயுத மித்ரகாந்  விது விதி ஶ்ரீருத்ர ஸாரீரகாந்.   (6)

ஹே,  குருவாயூரப்பா,  இந்த அஹம்காரம் இருக்கிறதே  அது வெவேறு  விகிதத்தில் சத்வ  ரஜோ தமோ குணங்களோடு  கலந்து, வித விதமான உணர்ச்சிகளின்  கலவையாகிறது.  சத்வ குணம் அதிகமாக இருந்தபோது  வைகாரிகம் எனும்  தன்மை,   ரஜோ குணம்  தூக்கலாக இருந்தால்   தைஜஸா ,  தமோகுணம் மிகுதியானால்  தாமஸா என்று குணம்  வெளிப்படுகிறது.  வைகாரிக, அதாவது சாத்வீக குணம் படைத்தவர்கள் தெய்வங்கள்.  மனத்தையும் புலன்களையும் கட்டுக்குள் கொண்டவர்கள்.  ஞானேந்திரியங்களை செயல் படுத்துபவர்கள்.  அவர்களே, திக் தேவதைகள்,  புலனுணர்வுகளுக்கு  அதிபதிகள்  வாயு, என்றால்  ஸ்பரிசம், கேட்டல்  ஆகியவற்றை  புரியச் செய்பவர்,   பார்வைக்கு  சூர்யன்,  சுவைத்தலுக்கு  வருணன். வாசனை அறிய  அஸ்வினி தேவதைகள். அதேபோல் கர்மேந்திரியங்களின் செயலான  பேச்சுக்கு  அக்னி,  கரங்களுக்கு  இந்திரன், கால்களின்  இயக்கத்துக்கு  விஷ்ணு,  கழிவுகளை  வெளியேற்ற  மித்ரன்,   சிருஷ்டி உற்பத்திக்கு பிரஜாபதி, மனம் , புத்தி, அஹங்காரம், சித்த ம் எனப்படும்  உள்ளுணர்வுகளை  (அந்தக்கரணம்)  கண்காணிக்கும் தேவதைகள்,  அதாவது  மனதுக்கு சந்திரன்,  புத்திக்கு ப்ரம்மா, அஹங்காரத்துக்கு  ருத்ரன், சித்தத்துக்கு  க்ஷேத்ரஞர்  என்று  வெவ்வேறு  பிரிவுகளுக்கு  அதிகாரிகள் உண்டானார்கள். 

7.  भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वितं
तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।
जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-
स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥

பூமந் மாநஸ புத்த்யஹங்க்ருதி மிலச்சித்தாக்க்ய வ்ருத்த்யந்விதம்
தச்சாந்த: கரணம் விபோ தவ பலாத் ஸத்வாம்ஸ ஏவாஸ்ருஜத்
ஜாதஸ்தைஜஸதோ தாஸேந்த்ரியகண: தத்தாமஸாம்ஸாத் புந:
தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதை ஸப்தோ ஜநி த்வத்பலாத். (7

என்னப்பா,  வாதபுரீஸ்வரா, இன்னொன்று புரிகிறது.   சாத்வீகம் சேர்ந்த அஹங்காரம் தான்  அந்தகரண சித்தம்  எனும்  உள்ளுறுப்பை நிறுவுகிறது. ரஜோகுணம்  மிகுந்த  அஹம்காரம்,  ஐந்து  கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும் கொண்ட  குணக் கலவைகளை,   தமோ குணம் கொண்ட அஹம்காரம்  சப்தத்தையும்  நிறுவியது.   சப்தத்திலிருந்து  ஆகாசம், ஸ்பர்சம்,  காற்று, தீ, ருசி, நீர், வாசனை, மண்  எல்லாம் உருவானது.  மூலகங்கள் தானாக எதையும் சிருஷ்டிக்க முடியாது.  நீ தானே அப்பா, உயியர்களின்  உயிராக உள்நின்று  இயக்குபவன்.   நீயல்லவோ எல்லை கடந்த  பிரம்மாண்டம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். 

8.  श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं
तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।
एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं
भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥
 
ஸப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ  ஸ்பர்ஸம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹோ த ச ரஸம்  தோயஞாச கந்தம் மஹீம்
ஏவம் மாதவ பூர்வபூர்வகலனாத்  ஆத்யாத்ய தர்மாந்விதம்
பூதக்ராம மிமம் த்வமேவ பகவந்  ப்ராஙாஸயஸ் தாமஸாத்  (8)
 
ஹே குருவாயூரப்பா  என்னவெல்லாம்  நீ கற்றுத்தருகிறாய்.   சப்தங்களுக்கு  காரணமான  தன்மாத்திரைகள் மூலம்  ஆகாசம் எனும் அகண்ட வெளி உருவாக்கினாய்.  ஸ்பரிசம் காற்றுடன் தொடர்பு கொண்டது. உருவங்கள் அக்னி மூலமாக,   அதிலிருந்து ருசி போன்றவை தோன்றின.  ரஸம் எனப்படும் ருசி தன்மாத்திரை மூலம்  நீர்  அறியப்பட்டது.  வாசனை தெரிய ஆரம்பித்தது.  அதிலிருந்து  மண் உருவானது.  மாதவா எல்லாம் உன் சங்கல்பம் ஒன்றே. பஞ்ச பூதங்களை இப்படி நிறுவினாய் . உயிர் வாழ இதெல்லாம் இன்றியமையாததாகியது 

9.  एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥

 ஏதே  பூதகணாஸ்ததேந்த்ரியகணார தேவாஸ்ச ஜாதா: ப்ருதக்
நோ ஸேகுர்ப்புவநாண்ட நிர்மிதிவிதெள தேவைரமீபிஸ்ததா
த்வம் நாநாவித ஸூக்திபிர்நுத கணஸ்தத் வாந் யமூன் யாவிஸம்
 ஸ்சேஷ்டா ஸக்திமுதீர்ய தாநி கடயந்  ஹைரண்யமண்டம் வ்யதா:(9)
என்னப்பனே , குருவாயூர் குட்டா,  என்ன ஆச்சர்யம்.  சிருஷ்டி ரகசியத்தை பார்க்கும்போது,  இந்த பஞ்சபூதங்கள், புலனானுபவிக்கும்  இந்திரியங்கள்,  அவற்றின் செயல்பாடுகள், அதற்கான  அதிபதியான தேவதைகள், இதெல்லாம் உருவானாலும்  அவை ப்ரம்மாண்டமாகுமா?   அவை எல்லாம் ஒன்று கூடி உன்னை பிரார்த்தித்தன. அவைகள் தானே  என்னென்னவோ  ஸூக்தங்கள்.   அவற்றில் நீ  உள்புகுந்தாய்.  செயல்படுத்தினாய், ஆட்டுவிப்பவன் அல்லவா நீ கிருஷ்ணா?  எல்லாவற்றையும்  ஒன்று கூட்டி சேர்த்து அல்லவோ  இந்த பெரிய பிரபஞ்சம், ஹிரண்ய அண்டம் உருவாக்கினாய்.  
अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:
निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।
साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको
निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

அண்டம் தத்கலு பூர்வ ஸ்ருஷ்டஸலிலே திஷ்ட்டத் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பிந்நக்ருதாஸ்சதுர்தஸ ஜகத்ரூபம்  விராடாஹ்வயம்
ஸாஹஸ்ரை: கர பாத மூர்த்த நிவஹைர் நி: ஸேஷ ஜீவாத்மகோ
நிர்ப்பாதோ ஸி மருத்புராதிப ஸ மாம்  த்ராயஸ்வ ஸர்வாமயாத். (10)
 
குருவாயூர் கிருஷ்ணா,  இந்த  பிரம்மாண்டம் இன்றா  நேற்றா உருவானது?  கணக்கற்ற ஆயிரம் ஆண்டுகள்.  மேலும் கீழுமாக  ஈறேழு உலகங்கள் உணடாக்கினாய்.   விராட் புருஷன்  எனப்படும்  ஆயிரக்கணக்கான  கரங்கள்,  கால்கள், தலைகள், எனும்  அறியவொண்ணா  உருவெடுத்தாய்.  நீ  என்  நோய்  தீர்த்து என்னை  காப்பாற்ற வேண்டும்.


JIMMY



                                         JIMMY's worry   J K  SIVAN 


Jimmy is  restless.  She finds suddenly a good lot of changes.  Why no children are  chasing and throwing stones at her.

Why there is no noise on the streets and movement of any vehicle. She is  upset with someone  spraying some strong smelled gas  all over the street.  She  runs here and there.  No house is open.  Jimmy  finds a gap between floor and the gate's bottom in  Nandakumar house and usually  enters  the  house and rests under the chikkoo tree  The old houseonwer, Rayar, will not drive her out but today he  came out  wearing a mask  and chased  her out. 

Jimmy was regular and used to wait outside the Murugan  temple at the end of the street for someone to throw some food for her.  No one is there and the temple door is also shut. Her experience taught her that if some one in the houses close to the temple died, the temple would remain closed until the body is taken out and the place is  water washed.  Why now closed,  when there is no death around.

One day two day and three days .. almost over,   ..... What happened, when will normalcy be restored for himto live the life Jimmy  is used to?.  She could not find other dogs and cattle also on the street.   Jimmy ran for a while hoping  the next street will atleast be as before.  Everywhere why it is same as in the street she lives?.

 Summer is catching up and there is need water and food. Jimmy thought of the school which is one of the places  she used to haunt in the lunch hour for children to move about . Certainly she would get variety of food there.  But to her surprise the school gate was also closed with no  noise of the children.

Jimmy can recognise human sound and has lived old enough to understand what people speak.  She is  now alone with no specific place to call her own to rest.  Jimmy has two regular places where she can confidently sleep at nights or sometimes during the day for a few hours.  One was the western corner near the stagnated  gutter water in the ditch behind Ramu’s Tea shop.  She had an advantage in having chosen that place. Some of the visitors to the tea shop would sometimes throw away a few broken biscuits and rusks,   or remants and bits of  vadas and bonda from their plates, found  near the ditch.  So it was both cool  place  protecting her against the sun rays and an uninhabited spot where food was also sometimes available for her.  It was ofcourse a rude shock thart Ramu always  shouting  at others, is not there and his tea shop door is closed with no visitors and tea smell. Where to go for crumbs of bread or biscuit bits.?

But luckily she can sleep undisturbed and there is no mischievous  boys  to throw stones at her  for which she was well  prepared always  and escaped running away, the moment  she observed their bending to pick up stones.

The other place to rest for her was the gap between the Corporation school compound at the North street end where a big neem tree had spread its branch above the compound wall. The gap between the tree trunk and the wall was enough for her to enter, rest and sleep undisturbed. Tiger her friend and older than her  used to give company.

Unfortunately during the last 3 days she had faced a big problem as she could not sleep and rest  or roam about for finding  food because  Ramu had closed his Tea shop. Why he has closed now the tea shop which he used to close only during Diwali time to sell crackers and sparklers  instead of tea.

She remembered the horrible time during Diwali wheren  there was a huge rush there and some of the  buyers had used the adjoining street corner to  fire the crackers which made hell of a noise continuously.

Jimmy was very much scared,  afraid and shuddered  at this unsual silence.  This is something not Diwali and no noise? Can silence also be killing as the noise?

Diwali was  something  common though unbearable once a year but the biggest problem  is  though she has full freedom  now  to run wherever she liked with no disturbance, she is not used to this.  She used to be afraid of strangers in her street and at other places, but now there is no one known or unknown and the absence of anyone  troubled her.

Jimmy peeped into a house through an open  door  and found to her shock the TV displaying many people  wearing the mask and preventing the people from using the road  etc,  She heard the word Corona , Corona and Corona in the last three days.?  What is this?  Why people are afraid of it when I am not?  she thought and  ran way looking out for some one to throw food for her.



ENDHAIYE NANDHALALA







My dear Friends,

I am  very happy with you all as my good friends.  We are more than six thousands  in number.  I am  astonished to observe that there are over three lakhs viewers  globally  for the posts made by me in SREE KRISHNARPANAM SEVA TRUST,   J.k.Sivan  and  J.k.Sivan friends group and FB pages besides there being regular readers in the blog  https://jksivansaalayadharshan.blogspot.com/   I have posted over  2600 articles on various topics as usual, Pilgrimage, moral stories, Slokas and Sthothras, Tamil poems, About Acharyas, National leaders, great personalities, epics, great works of scholars, etc., besides my nostalgic thoughts.    I have written over  75 books of which 35 are already printed and some re-printed for free circulation and we thrive on donations received for meeting the subsidised cost of printing.  I solicit your continued support. 

I am extremely happy to be in communication with many friends who call on me personally at my residence in Nanganallur, many over phone and through whatsapp/video chat.  It is really a proud moment to realise the warmth of true friends.  

Vidhya Srinivasan one of our friends, from Devakottai,   has  volunteered to  post chapter by chapter some of my books and she has so far  sucessfully posted THEVITTADHA VITTALA,  VISWAROOPANIN VAMANA KADHAIGAL, AND NOW RAME RAME MANORAME  is appearing in FB with many readers interested in her presentatiion.

I am equally thankful to Smt. Rangamani C.R.  who is interested in posting one of my books in parts for the benefit of readers.  I am glad that my book ENDHAIYE NANDHALALA  will therefore be posted by her daily or periodically at her convenience in FB. This book represents my narration of  Mahakavi Bharathiyar songs on Krishna, and with every narration there will also be the concerned Krishna song by Bharathiyar.  I am sure you will all enjoy and thank you once again.  Mrs and Mr Rangamani visited me  at our SREE KRISHNARANAM SEVA TRUST  stall at  the recent HINDU SPIRITUAL AND SERVICES FAIR, held for a  week  at Guru Nanak College complex,  Velachery. They also visited me at my residence in Nanganallur.

On my part I am regularly writing to you on more than one topic, GEETANJALI, THIRUKOLOOR PEN PILLAI RAHASYAM,  SUR DAS, MAHA PERIYAVA EXPERIENCE,  TEMPLES,  LALITHA SAHASRANAMAM,  SHEERDI SAIBABA,  THIRUPALLANDU, BESIDES MY NOSTALGIC RECOLLECTIONS OF GREAT PERSONALITIES, STORIES AND BOOKS I REMEMBER, AND  WHAT NOT...
thank  you all once again. hoping that you all enjoy my articles.

rgds  
J.K.Sivan 






Saturday, March 28, 2020

KALABAIRAVASHTAKAM




காலபைரவாஷ்டகம் J K SIVAN
ஆதி சங்கரர்
                                                               
            அட்டகாச சிரிப்பு 
                           
ரிக் வேத காலத்திய ஹிந்துக்களுக்கு  தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும் மட்டுமே.. பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன்.

சுக்ல யஜுர்வேதத்தில் சத ருத்ரீயம் என்று ஸ்லோகங்கள் சங்கரன் என்று ருத்ரனை, நமசிவாய என்று அவன் புகழ் பாடுகிறது. நமக்கு அவனிடம் வேண்டுவது என்ன என்று பட்டியல் போட்டு சமகம் என்றும் அவனைப்பற்றி வணங்க நமகம் என்றும் 11 அனுவாகங்களும்  சொல்லி யிருக்கிறது. அவசியம் எல்லோரும் படித்து அர்த்தம் புரிந்து உரிய முறையில் முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் உச்சாடனம் செய்யவேண்டிய ஒரு பிரார்த்தனை ஸ்தோத்ரம் இது.  சில  வருஷங்கள்  எத்தனையோ சிவாலயங்களுக்கு  SMART  எனும் ஸ்ரீ மஹா ருத்ரம் டிரஸ்ட் குழுவில் ஒருவனாக  சென்று ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்திருக்கிறேன்.  ஏதோ சில வருஷங்கள் அந்த பாக்யம் எனக்கு கிடைத்தது.

என் அம்மா   நன்றாக பாடுபவர். அவர் அடிக்கடி பாடும் ஒரு பாடல் .   இந்த சிவன் பாடலை எழுதியவரும் ஒரு சிவன் தான். ஸ்ரீ பாபநாசம் சிவன். 
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்? சதா
சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? (சிவனை)

மௌன சித்தர்கள் முதல் ஸனக முனிவர்கள் தம்
வசத்தில் அனுதினமும் வசித்தருளும் பரம (சிவனை)

மன பயங்கரம் கொண்டு அமரர் வெருண்டு விழ
மருட்டி வந்த விடத்தைத் திரட்டியுண்டு வெம்பிக்
கனைத்தலறிய தெய்வக்கன்னியர்கள் திருமடங்கலத்தைச்
சுந்தரமிசை நிலைக்கச் செய் தருள் பரம (சிவனை)

சிரித்துத் திரிபுரத்தை எரித்தழித்தும் தக்கன்
சிரத்தை அறுத்திட்டு அழல்தனில் ஒழித்தும் அஹங்க
ரித்து முனிவர் விட்ட வரிப்புலியைக்கொன்று தோல்
உரித்து இடையில் தரித்த நிருத்தனெனும் பரம (சிவனை)

இரும்புத்தம்பத்தைச் செல்லரித்திடுமோ? நெருப்
பிடையிற்புழு வந்துயிர் தரித்திடுமோ? மன
வருத்தமின்றிக் கண் மலர் பதித்துப் பூசனை செய்த
மாலுக்கு நேமி தந்து பாவித்து அருள் புரிந்த (சிவனை)  

திருமூலர் வெகு அழகாக ஒரு மந்திரம் சொல்லியிருக்கிறார்:

''தேவர் பிரான் தன்னை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார், அறிந்தபின்
ஓதுமின், கேண்மின், உணர்மின், உணர்ந்து பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.''

தேவாதி தேவன் சிவன் யார், அவனது சக்தி, பெருமை, காருண்யம், கம்பீரம் என்று எவன் ஒருவன் அறிந்து கொள்கிறானோ, அவன் அவ்வாறு அறிந்தபின் வாய் ஓயாமல் சிவனை பஜிப்பான், சிவனைப்பற்றி என்னவெல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவற்றைக்  கேட்பான், தனக்குள்ளே சிவனை உணர்வான், பின்னர் அவனே சிவனாகி உயர்ந்த நிலையை அடைவான்.

நான்கு வேதங்களின் மையக்கருத்தான, உட்பொருளான சிவனை எவன் மனமுருகி அன்போடு கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாக பெருக ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை விடாது சொல்லி உபாசிக்கிரானோ அவன் வாழ்வில் நல்ல மார்கத்தில் உய்வான் என்கிறார் திருஞான சம்பந்தர்.

''காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.''

இனி  ஆதி சங்கரரின்  காலபைரவாஷ்டகத்தில் 7வது ஸ்லோகம்

अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं
दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् ।
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥

அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.  
ஆதிசங்கரரின் கால பைரவாஷ்டகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து மனதில் ஒரு புத்துணர்ச்சி எழும்பியது. இந்த ஏழாவது ஸ்லோகத்தில் கண்முன்னே மஹா கால பைரவரை கொண்டுவந்து நிறுத்துகிறார் சங்கரர்.  . 

கோபத்தில் சிரிப்பது  மஹா வீரர்களால் தான் முடியும்.  ''ஹா ஹா ஹா''   என்று  உயர்ந்து நின்று, இடுப்பை  கைகளில் தாங்கி, சிரத்தில்  ஜடாமகுடத்திலிருந்து பின்னோக்கி கங்கை வழிந்தோட, அகண்ட மார்பில் கழுத்தை சுற்றி அணிந்த  நாகம் முப்புரி நூல்  நடுவே  படமெடுத்த தலையை காட்ட, இடுப்பில்  புலித்தோல் பளபளவென்று ஒளிவீச  காது குண்டலங்கள் கழுத்து நிறைய  ருத்திராக்ஷ மாலையோடு வெண்ணீறணிந்த  நெற்றிக்கண்ணின்  நடுவே  அக்னிக்கண்  திறந்து விட்டதே. சிவன்  சிரிக்கிறான்.  அந்த சிரிப்பின் விளைவை இதோ எதிரே  த்ரிபுரம்  அனுபவிக்கப்போகிறது.
 காலம்  காலமாக அசையாத கல்லும் வெட்கப்படும் சிலையாக அசைவன்றி பனிமலையில் மோனத்திலும் காணப்படுபவர். தாமரை இலை நீர்க்கொப்புளமாக பட்டும் படாமலே அநித்தியமான அண்ட மாயலோகங்களையும் சின்னா பின்னம் பண்ணக்கூடிய சக்தியுடையவராகவும்  சிஷ்ட பரிபாலன துஷ்ட சம்ஹார மூர்த்தியாகவும், பாபிகளை அழிப்பவரும், கபாலங்களால் ஆன மாலையை மலர்மாலையாக அணிந்தவரும் கையில் கபாலமேந்தி கருணை பொழியும் காலபைரவா. உன்னை சர்வ புண்ய க்ஷேத்ரமான காசி மாநகர அதிபதியாக வணங்குகிறேன். அடி பணிகிறேன்   



GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...