This is the first recording of my speech to the HINDU THAMIZH DISAI - ANANDHAJOTHI, a spiritual channel, and the topic I spoke about is GOD IS NOW HERE
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Wednesday, July 27, 2022
GOD IS NOW HERE
This is the first recording of my speech to the HINDU THAMIZH DISAI - ANANDHAJOTHI, a spiritual channel, and the topic I spoke about is GOD IS NOW HERE
ADI AMAVASYA
ஆடி அமாவாசை - நங்கநல்லூர் J K SIVAN
நாளைக்கு ஆடி அமாவாசை. அமாவாசை என்றாலே சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் கூடும் நாள். ஜோசியர்கள் பேசும்போது சூரியனை ''பித்ருகாரகன்'' என்றும் சந்திரனை ''மாத்ருகாரகன்'' என்றும் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா? அர்த்தம் புரியாமல் நாம் தலை ஆட்டுவோம்.சூரியன் சந்திரன் இருவரும் நமது தந்தை தாய் போன்றவர்களாக, அவர்கள் அம்சம் கொண்டவர்கள் . எனவே தந்தை தாய் இல்லாதவர்கள் இவர்களை தந்தை தாயாக வணங்குகிறோம் . அன்று முன்னோர்களை இவர்கள் சேரும் நாளில் த்ரிப்திப் படுத்துகிறோம். இது தான் அமாவாசை தர்ப்பணம்.
அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் வெங்காயம்,பூண்டு, முட்டைகோஸ், முள்ளங்கி, நூல்கோல், போன்ற காய்கறிகளை உபயோகிப்பதில்லை.
சாதாரண அமாவாசையே இவ்வாறு ஸ்ரத்தையோடு செய்யப்படுகிறது என்றால் ஆடி அமாவாசை இன்னும் விசேஷமானது. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய 3 கிரகங்களும் ஒரு நேர் கோட்டில் (சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன்) அமையும் நாள் தான் ஆடி அமாவாசை திதி. பித்ருக்கள் சந்தோஷமாக நம்மால் திருப்தி செய்யப்பட்டு ஆசி வழங்கும் நாள். அவர்கள் ஆசியுடன் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு தான் நாம் தவறாமல் செய்யும் பித்ரு தர்ப்பணம்.
Tuesday, July 26, 2022
LET US GO TO TEMPLES
KALIYUGAM
அப்போதே சொன்ன சுகர்: நங்கநல்லூர் J K SIVAN
கலிகாலம் இப்படித்தான்.
ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரெண்டாவது காண்டம் 2ம் அத்தியத்தில் இருக்கிறோம். முழுதும் அல்ல. சில அற்புத பகுதிகளை மட்டும். நான் ஜவந்திப்பூ மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை. உங்களில் ஒருவன்.
சுகதேவரால் எப்படி கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால் உடனே பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே எதிரே வரும் தண்ணீர் லாரி கண்ணுக்கு தெரியவில்லையே.
இதைச் சொன்ன சுகதேவரை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான விஷயங்களை சுகப்ரம்மத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறானே.
''நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள்'' என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
அவனவன் ஆபிஸ் போகும்போது, ட்ரெய்னிலும் பஸ்ஸிலும் , ஆட்டோவிலும் காதில் ஒயரை ear phone wire செருகிக் கொண்டு பயணிக்கும்போது படிக்க ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால் அவன் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவன். அந்த நேரத்தில் அவனைப் பிடிக்க சிறிசாக சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம் பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும் என அறிவேன்.
மொபைல் போன், வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிக்கொண்டு சொல்கிறார்கள். யு ட்யூப், கட்சிக் கொடி பூசல் பற்றி கூட சுகருக்கு தெரிந்திருக்கும் போல் இருக்கிறது. முழுதும் தேடினால் பாகவதத்தில் ஏதோ ஒரு ஸ்லோகத்தில் பிடித்துவிடலாம்.
விவரமாக படிக்க இங்கே யாரும் இல்லை. அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகளால் பதில் சொல்ல மட்டுமே முடிகிறது. மீம்ஸ் memes என்பது வடிவேல் சுவாமிகளால் உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார் சுகப்ரம்மம் படிப்பார்கள்?
vittam eva kalau nrnam janmacara-gunodayah dharma-nyaya-vyavasthayam karanam balam eva hi
''பரீக்ஷித், கலியுகத்தில் மனிதனின் குணத்தை பணத்தை வைத்து தான் சொல்வார்கள். கையில் காசு நிறைய இருப்பவன் (நேர்மையாக கணக்கு காட்டினால் அவ்வளவு எப்படி கையில் வைத்துக் கொள்ள முடியும்?) ''குணத்தை'' , சமூக அந்தஸ்தை, பதவி நாற்காலியில் அமர்வதை அவனால் தான் அடைய முடியும். ,அவனால் எதுவும் செய்ய முடியும்''
அப்போதெல்லாம் சாஸ்திரம் வேதம் கற்ற அரசர்கள் ஆண்டார்கள். நீதி நியாயம், நேர்மை தெரிந்திருந்தது. ஆள்வதற்கு ஒரு குலம் க்ஷத்ரியர் என்று இருந்தது. கலிகாலத்தில் அப்படி கிடையாது. குலம் அப்புறம் ''கும்பல்'' ஆகிவிடும் என்கிறார். ஐந்தாவது வரை படித்தாலே போதும் . அதுவே அதிகம் நாட்டை ஆள'' என்கிறார். எந்த கூட்டம் பலம் மிக்கதோ நீதி நியாயம் எல்லாம் அது சொல்வது தான் நியாயம், நேர்மை, உண்மை என்கிறார். காசே தான் கடவுளடா, அதுவே எதையும் சாதிக்கும் என்கிறார்.
FASTING
நமது மதம் மிகவும் வினோதமானது. எண்ணற்ற பண்டிகைகள், விரதங்கள், உபவாசங்கள், விருந்துகள், எல்லாமே தன்னுள் கொண்டது.
இங்கு ருசிக்கும் பஞ்சமில்லை, ருசியை வெறுக்கும் மன உறுதியும் உண்டு
.இரவும் பகலும் இடைவிடாமல் ஓய்வின்றி பல வருஷங் கள் உழைக்கும் இந்த தேகத்துக்கு அவ்வப்போது சற்று ஓய்வும் தேவை. ஒய்வு என்று அதை வெட்டியாக வீணாகி எ செலவழிக்காமல் இறைவன் மேல் சிந்தனையோடு செலவிடுவது தான் உபவாசம் விரதம் எல்லாம். எதையாவது நிறைவேற்ற, எதையாவது ரூ பலனை அடைவதற்கு வேண்டி அதற்காக அனுஷ்டிப்பது விரதம். உபவாசம் வெறும் இறை சிந்தனைக்காக
மேற்கொள்வது.
உபவாசம் என்றால் இறைவனோடு ஒன்றி இருக்க முயல்வது, அதாவது பாபங்களிலிருந்து விலகுவது, தீய செயல்களை, தீமைகளை எண்ணாமலிருப்பது, ஆகாரங்களை ஒதுக்குவது. அமைதியாக இறைவனை தியானிப்பது, கூட்டாக பஜிப்பது, பஜனை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது. வாசனாதி திரவியங்களை உபயோகிக்காமல், அலங்கரித்துக் கொள்ளாமல், சுத்தமான வஸ்திரம் மட்டும் அணிந்து, பகலில் படுத்து உறங்காமல், அதிகமாக நீராகாரம், நீர் எதுவும் அருந்தாமல் இருப்பது உபவாசம்.
முக்கியமாக என்றெல்லாம் உபவாசம் இருக்கிறோம்?
இந்து மதப் புராணத்தில் பல வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
,
ரம்ஜான் சமயத்தில் இஸ்லாமியர்கள் எச்சிலைக்கூட விழுங்க மாட்டார்கள். நம்மவர்கள் நிர்ஜல உபவாசம் அதாவது உபவாச தினத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது. அனுஷ்டிப்பார்கள்.யோகிகள் முனிவர்கள், ரிஷிகள் பல நாட்கள் சேர்ந்தாற்போல் உபவாசம் இருந்தவர்கள். இதை உண்ணாவிரதம் எனலாம்.
காந்தியடிகள் பல நாள் உண்ணாவிரதம் இருந்தவர். சிலர் தேன், இளநீர், பசுவின் பால், ஏதாவது ஒன்று மட்டும் சேர்த்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பார்கள்.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருக்கும் வழக்கமும் உண்டு.
காலை நேரம் மட்டும், பகல் நேர உணவை மட்டும், இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருப்பவர்களும் உண்டு. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கிறவர்களும் உண்டு. .
தேய்பிறை கிருஷ்ணபக்ஷம் அன்று ஆரம்பித்து வளர்பிறை சுக்ல பக்ஷம் முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருக்கும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. .
ஒரு நாள் முழுவதும் வில்வ தளத்தையும் நீரையும், அல்லது துளசி ஜலம் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
இப்படி அவரவர் சம்ப்ரதாயம் பின்பற்றி வழக்கத்தை கடைபிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்பதை அவரவர் உடல் நிலை, சூழ்நிலைக்கும் தகுந்தபடி ஏற்றுக்கொண்டு பின்பற்றலாம். வெறும் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
விரதமிருப்பவர்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்கள். எந்தெந்த தெய்வத்துக்கு விரதமிருக்கிறார்கள் என்று வகைப்படுத்தலாம்.
பிள்ளையாரை வழிபடுபவர்கள், அவரை தியானித்து அனுஷ்டிக்கும் விரத தினங்கள்:விநாயக சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம்
பரம சிவனை வேண்டி பகதர் உபவாசம், விரதம் இருப்பது ஆனி உத்தரம், ஆருத்ரா, திருவாதிரை, சிவராத்திரி, ப்ரதோஷ விரதம், கேதாரகௌரி விரதம்
அம்பாள் உபாசகர்கள் அனுஷ்டிப்பது: நவராத்திரி, வரலட்சுமி நோன்பு, ஆடிப்பூரம்,ஆடிச் செவ்வாய்
பங்குனித் திங்கள், மாசி மகம்
முருக பக்தர்கள் பின்பற்றும் உபவாச விரத தினங்கள்: கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை வைகாசி விசாகம்
தைப்பூசம், திருக்கார்த்திகை விரதம்
வைஷ்ணவர்கள், விஷ்ணு பக்தர்கள் அனுஷ்டிக்கும் விரத உபவாசங்கள் : ஏகாதசி விரதம்,உபவாச, விரத தினங்களில் வெந்நீரில் குளிக்கமாட்டார்கள். ஸ்ராத்த தினங்களிலும் அப்படித்தான். துவாதசி அன்று பாரணை. தான தர்மங்கள் செய்து காக்கைக்கு போஜனமளித்து கோவிலுக்கு சென்று பகவானை தரிசித்துவிட்டு உணவு சாப்பிடுபவர்களும்அநேகர் இன்றும் இருக்கிறார்கள். ஒரு வேளை உணவை மட்டும் சாப்பிடாமல் விடுவது: ஏக புக்த உபவாசம்.நீர் மட்டும் பருகி உபவாசம் இருப்பது திரவ ஆஹார உபவாசம்.பழங்கள் மட்டும் சிலவற்றை சாப்பிடும் உபவாசம் பல ஆஹார உபவாசம். பல என்றால் பலவிதமான, எல்லாவற்றையும் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை, பலம் என்றால் பழம். விஹித ஆஹார உபவாசம், கொஞ்சூண்டு கொஞ்சூண்டு சாப்பிடுவது. மித ஆஹார உபவாசம் மிதமாக லிமிடெட் சாப்பாடு நிர் ஆஹார உபவாசம், எதையுமே சாப்பிடாமல் இருக்கும் உபவாசம்.நிர்ஜல உபவாசம் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது.
உபவாசம் இருப்பவர்கள் உடல் சிக்கென்று இருக்கும். எந்த வியாதியும் அணுகாது. மஹாபெரியவாளே ப்ரத்யக்ஷ உதாரணம். அவர் எதையும் தனக்கென வேண்டி உபவாசம் இருந்ததில்லை. லோக க்ஷேமத்துக்காக உபவாசம் இருந்த தெய்வம்.உபவாசத்தில் ஒவ்வொருநாளும் ஒரு தெய்வம் தியானம் செயது உபவாசம் இருப்பதுண்டு சிவபக்தர்கள் திங்கக்கிழமை , சோமவார உபவாசம் இருப்பார்கள். பரமேஸ்வரன், பார்வதிக்குகந்த நாள் செவ்வாய் மங்களவாரம் , ஹனுமான், முருக, துர்க்கை பக்தர்கள் அங்காரக உபவாசம் இருப்பார்கள்.
புதன் கிழமை கிருஷ்ணன், பாண்டுரங்கனுக்கு உகந்தநாள். வியாழன் குருவாரம், ப்ரஹஸ்பதி வாரம்.
Thursday (Guruvar or Vrihaspativar) தக்ஷிணாமூர்த்தி உபாசகர்களும் அன்று உபவாசம் இருப்பார்கள்.வெள்ளி சுக்ரவாரம் எனப்படுவது. அம்மனை வழிபடுபவர்கள், சக்தி உபாசகர்கள், துர்க்கைக்கு, காளிக்கு, சந்தோஷி மாதாவுக்கு என்று உபவாசம் இருப்பார்கள்.
சனிக்கிழமை அநேகர் சனிபகவான் அனுக்கிரஹம் வேண்டி உபவாசம் இருப்பார்கள். எள்ளு மூட்டை கட்டி நல்லெண்ணெய் விளக்கேற்றுவார்கள்.ஞாயிறு சூர்யனுக்குகந்த நாள்.
KALIYUGAM
அப்போதே சுகர் சொன்னது.நங்கநல்லூர் J K SIVAN
கலியுகம்
''ஸார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
''கோடம்பாக்கம்''
இப்படி சொன்னால் புரியும், அதில் ஆச்சர்யம் இல்லை. ''நான் கலியுகத்தில் இருக்கிறேன் '' என்றால் அவரை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக அவரைப் பார்த்து விட்டு ''ஐயோ பாவம்,சின்ன வயசிலேயே புத்தி ஸ்வாதீனம் இல்லை....'' என்று நகர்வோம்.
உண்மைதான். நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம், இப்போது என்னவெல்லாம் நடக்கிறது என்று முன்பே ஐயாயிரம் வருஷத்துக்கு முன்பு யோசித்து ஸ்ரீமத் பாகவதம் சுகப்பிரம்ம ரிஷி சொன்னதாக ஒரு பதினைந்து விஷயங்களை சொல்லியிருக்கிறது. அதை படித்து 'ஆஹா'' என்று பிரமித்துப் போக உங்களை அழைக்கிறேன்..
துவாபர யுகத்தில், கிருஷ்ணன் காலத்தில் பரிக்ஷித்துக்கு சுக ப்ரம்மம் சொன்னது.....
யார் இந்த பரீக்ஷித்?
அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை. ''தக்ஷன் என்ற பாம்பு கடித்து இன்னும் ஏழு நாளில் நீ சாகப் போகிறாய் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன். நம்மைப் போல வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக் கட்டிக்கொண்டு ''ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே'' என்று அழாமல் சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து துளைத்து எடுத்துக் என்னென்னவோ நிறைய விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.
பரீக்ஷித் நல்ல ராஜா. அவனால் நாம் எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித் சுகர் சம்பாஷணையை கேட்போம்.
''மகரிஷி, அடுத்ததாக ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா சாஸ்திரங்கள் அதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ''
ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥
tatas canu-dinam dharmah satyam saucam ksama daya kalena balina rajan nanksyaty ayur balam smrtih .12.2.1.
''ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக மதம், சத்யம், உண்மை, நாணயம் ( காசு இல்லை நேர்மை) சுத்தம், மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும். (நாமே இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும் வேறு நிறைய இருக்கிறதோ?)
ஆரம்பத்தில் சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம். யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை. எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.
இப்போது கலியுகம் நடக்கிறது. இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100. இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டது. நூறு வயதே ஜாஸ்தி. சராசரி 70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு நாளும் போனஸ்.
இன்னும் போகப்போக 20 வயது 30 வயது ஆனாலேயே அவன் தொண்டு கிழவன். தாத்தா.
மதம், பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும்.
இப்போதே மதம் என்று எவனாவது எசகு பிசகு பண்ணினால், சொன்னால், உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்......மத சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இன்னும் புரியவில்லை. கோவில்கள் சிலரது வாழ்க்கைக்கு சவுகரியங்களை தேடித்தரும் சுலப வழியாகி விட்டதே. கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது. கோவில் நிலங்கள் பிளாட் ஆகிவிட்டன. அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில் களில் பிச்சைக்காரர்கள், உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு இலவச உணவு சுத்தமாக கிடைக்குமோ?.
கருணையாவது, காருண்யமாவது, தயையாவது. ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள். அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச்சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தையை பாலின வன்மையில் கொல்கிறார்கள். பத்திரிகை டிவி எல்லாமே நிமிஷத்
ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்திலிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக சுகர் சொல்ல முடிந்தது அதுவும் 5000 வருஷங்களுக்கு முன்னால் .....!
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
PAMBAN SWAMIGA, THE SAINT - Nanganallur J K Sivan i have told about this incident sometime ago and yet it is worth repeating for the be...
-
ABHIVADHANAM. - J K SIVAN A couple of days ago I wrote about performing Abhivaadhanam to elders as directed in Vedhas and traditional...
-
காமாக்ஷி திருப்புகழ் தெரியுமா?- நங்கநல்லூர் J K SIVAN ''திருப்புகழ் தெரியுமா? ''ஓ, தெரியுமே, அதான் அந்த '...