Monday, July 6, 2020

gitanjali

கீதாஞ்சலி 8 J K SIVAN
தாகூர்

8 வேஷம் வேண்டாம்.

நண்பர்களே, ஒரு வார்த்தை.
ஆமை முயல் ஓட்டப்போட்டி கதை தெரியுமல்லவா? முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது. ஆமை கருமமே கண்ணாயினார் ரகம் . மெதுவாக விடாமல் நடந்து வெற்றி பெற்றது. நான் ஒரு கிழ ஆமை. வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து ஆன்மீக விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும் தீராத தாகம் என்னை செலுத்துகிறது. கீதாஞ்சலி நூற்றுக்கும் மேலானது. ஒவ்வொன்றாக அனுபவித்து இன்று எட்டாவது கீதாஞ்சலி பாடல் படித்து ரசித்து எழுதுகிறேன். அடிக்கடி சொல்வது போல் இது ஜுனூன் வசனமல்ல. நான் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும் ஆள் அல்ல. என் எழுத்தில் எனக்கு தெரியமாலேயே கிருஷ்ணன் உள்ளே தலை நீட்டுவான். தாகூர் கிருஷ்ணனை வாய் திறந்து ஒருமுறை கூட கூப்பிடவில்லை. பேர் மட்டும் கீதாஞ்சலி.
The child who is decked with prince's robes and who has jewelled chains round his neck loses all pleasure in his play; his dress hampers him at every step. In fear that it may be frayed, or stained with dust he keeps himself from the world, and is afraid even to move. Mother, it is no gain, thy bondage of finery, if it keep one shut off from the healthful dust of the earth, if it robs one of the right of entrance to the great fair of common human life. கிருஷ்ணா, நீ கன்றுக்குட்டிகளோடு மண்ணில் புரண்டு விளையாடியவன். உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு மஞ்சள் ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல் மண்ணில் பிறந்தவன் மண்ணோடு பழகி மண்ணிலே தானே மறையவேண்டும்.!! மண்ணின் வாசனையில் திளைத்து விளையாடி மகிழாமல் இந்த நாடக மேடை வேஷ வினோத அலங்காரம்..ஏன்? எல்லோருடனும் சேர்ந்து சுகமாக இயற்கையாக வாழாமல் இது என்ன மனித வாழ்க்கை!. என்ன மனித வாழ்க்கை. மண் வாசனை என்று எழுதுகிறோமே, பேசுகிறோமே , சொல்கிறோமே, படிக்கிறோமே அது என்னவாம்? எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்குமே தெரியும், கிருஷ்ணா, நீ வளர்ந்த கோகுலம் பிருந்தாவனத்தில் மண்ணில் படுக்கும் பசுக்கள், கன்றுகள் வாழும் இடம் தான் எங்கும். நடுத்தர கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வாழும் பகுதி. அநேகமாக சிறுவர்கள் சிறுமிகள் முழு ஆடை இன்றி, சந்தோஷமாக மண்ணில் புரண்டு விளையாடுபவர்கள். கிருஷ்ணா, உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல். உன்னைப்போன்று அந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஏழை பணக்காரன் வித்யாசம் தெரியாத தெய்வங்கள். ஒரு குழந்தையை பிடித்து குளிப்பாட்டி, எண்ணெய் தடவி தலை சீவி, முடிந்து, கிரீடம் வைத்து, உடல் முழுதும் சந்தனாதி வாசனை திரவியங்களை தடவி, பளபளவென்று புத்தாடை உயர்ந்த பாட்டில் அணிவித்து, காலில் கையில் அணிகலன்கள், காலுறை, மிதியடி எல்லாம் மாட்டி இளவரசனாக நடக்கச் செய்கிறாள் ஒரு தாய்.
''ஜாக்கிரதையாக நட. நகைகள் எதுவும் கீழே விழுந்து விடப்போகிறது'' கண் மண் தெரியாமல் ஓடி ஆடிய குழந்தை இப்போது அப்படி உற்சாகமாக சந்தோஷமாக நகர முடியுமா? கிருஷ்ணா எங்கள் ஊருக்கு வந்து இப்போது பார் தெரியும். எங்கள் ஊரில் தாய்மார்களைப்பார். கொளுத்தும் வெயிலிலும் குழந்தைக்கு மஹாராஜா வேஷம் போட்டு, தலைப்பாகை வைத்து, பட்டு சட்டை, காலில் சாக்ஸ், காலணி, அதற்குள் காலில் நிறைய தண்டை கொலுசு, மோதிரம், கழுத்து வலிக்க தங்க வைர நகைகள், தலையில் தொப்பி, கீழே இறக்கி விட்டால் விலை உயர்ந்த ஆடை அழுக்கு படும், கசங்கிவிடும் என குழந்தையை விளையாட தரையில் விடாமல் எதையும் தானே குடிக்காமல், சாப்பிடாமல் ( மேலே சட்டையில் அழுக்கு படுமே, கரை படுமே) கைக்குள்ளேயே சிறை...குழந்தை அழாமல் என்ன செய்யும்?. கோபத்தில் குழந்தையை புரிந்துகொள்ளாமல் திட்டும் அடிக்கும் தாய்களும் உண்டு. மேலே கதையில் சொன்ன குழந்தை தனது ஆடை, ஆபரணத்தை ரசிப்பானா? நடக்கவே பயப்படுவான். ஆடை அழுக்கு பட்டால்? ஆபரணம் ஏதாவது கழன்று கீழே விழுந்தால் ? அம்மா திட்டுவாள், அடிப்பாள். ''அம்மா, போதும் நீ செய்து விட்ட அலங்காரம்! எனக்கு இதெல்லாம் வேண்டாமே! என் சுதந்திரத்தை இது பறித்து விட்டதே. சந்தோஷத்தை தின்றுவிட்டதே. என் இயற்கையான வாழ்வின் சுகம் கொள்ளை போய்விட்டதே'' என்று குழந்தையின் மனம் கதறி இருக்குமோ? அது தான் அழுகையாக கண்களில் நீராக பேசி இருக்குமோ? தாகூர் தாத்தா அற்புதம் நீங்கள்!

Sunday, July 5, 2020

THEVITTADHA VITTALA

 தெவிட்டாத விட்டலா          J K  SIVAN   


                                                               பாப மூட்டை !!

மனித  ஸ்வபாவத்தில்  பொறாமை முக்கியபங்கு கொண்டது.   பிறரது அழகு, சந்தோஷம், செல்வம், அந்தஸ்து, தாராள மனப்பான்மை, சாமர்த்தியம்  எதைக் கண்டாலும் நம்மிடம் அது இல்லையே  என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.   தீ  எப்போதுமே  அருகிலே உள்ளதை தான் அழிக்கும் எரித்து சாம்பலாக்கும். இந்த பொறாமைத்தீ அப்படி யல்ல. பொறாமைப்படுபவனை அப்பளம்  மாதிரி வாட்டி வதைக்கும், துன்புறுத்தும், நிம்மதியில்லாமல் கோபப்  பெருமூச்சு  விட வைக்கிறது.  அப்படி ஒரு ஆசாமியை இந்த கதையில் இன்று பார்ப்போம்.

தேஹு  கிராமத்தில்  நாளுக்கு நாள்  பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது.  அவரது பக்தியைக்கண்டு வியந்து,  துக்காராமின் அபங்க பஜனையில் தனை மறந்து  ஆனந்த கண்ணீர் பெருக  பக்தியில்  மூழ்காதவர்களே கிடையாது.    எங்கிருந்து எல்லாமோ  வெளியூர்களிலிருந்து கேள்விப்பட்டு   சாதுக்களும்  பாகவதர்களும்  கூட  அவரிட மிருந்து  அபங்கம்  பாட கற்றுக் கொள்ள பெருகி விட்டனர்.

ஆனால்  அதே  தேஹு  கிராமத்தில்  வாழ்ந்த  ராமேஸ்வர  பட்  என்கிறபிராமணருக்கு  இந்த துக்காராம் விஷயங்கள் கொஞ்சமும்  பிடிக்க வில்லை.  அவருக்கு வடமொழி தெரியும். பிரசங்கங்கள் பண்ணுவார் .  தன்னுடைய பிரசங்கங்களுக்கு   கிராமத்து  ஆட்களே  வருவதில்லை,  துக்காராமின்  பஜனைக்கு மட்டும்  எத்தனையோ பேர் வருவது அவருக்கு  பொறுக்க வில்லை.  

துக்காராம் ஒரு படிக்காதவர்,  வைஸ்யர், ஸம்ஸ்க்ரிதமே  தெரியாதவர்,  மராத்தியில்  தானாகவே  இட்டு கட்டி  பாடுபவர், தன்னுடைய  அபங்கத்தால்  ஊரையே  கெடுக்கிறாரே!  என்று  புலம்பினார். இது  பரவலாக  துக்கா ராமின்  காதிலும்  விழ,  அவர்  ஓடி சென்று ராமேஸ்வர் பட் காலில்  விழுந்து  வணங்கினார்

"நான்  ஏதாவது  தப்பு செய்து விட்டேனா சுவாமி?"  

"தப்பைத்  தவிர வேறொன்றுமே செய்ய வில்லையே  ஐயா  நீ.     உனக்கு  கொஞ்சமாவது சாஸ்திரம் தெரியுமா?  புராணம்  தெரியுமா?, சொந்தமாக ஏதாவது கற்பனையாக  மற்றவர்க்கு  பிரசங்கம்  செய்வது  பெரும்  பாபம்.  இதை  கேட்பவர்க்கும் அந்த பாபம் போய்ச் சேருகிறதே? இதை உணர்ந்தாயா?''  கத்தினார் பட் 

"அப்படியா. இது எனக்கு தெரியவில்லையே. நான்  அறிவிலி,  நீங்கள்  நன்றாக படித்த மகான்.  தயவு செய்து  என் தவறுகளை மன்னித்து  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்" என்று கண்ணீர் மல்க  கேட்டார் துக்காராம்.

"இனிமேல் நீங்கள்  ஒரு  அபங்கமும்  எழுதவோ  பாடவோ வேண்டாம். இதுவரை எழுதியதை எல்லாம்  தூக்கி நீரில் எறியுங்கள்"

"விட்டலா,  பாண்டுரங்கா,  நான்   அறியாமல்செய்த  பிழையை  பொறுத்துக் கொண்டு  என்னை  க்ஷமிப்பாயா?    இனி  நன்றாக கற்ற  பண்டிதர்  ராமேஸ்வர் பட்    சொன்னது போலவே  நடக்கிறேன்.   எனக்கு
உன் நாமத்தை  தவிர  வேறு  எதுவும்  தெரியாதே.   அதைத்  தானே  எனக்கு தெரிந்த  மராத்தியில் மனம்  போன  போக்கில் இத்தனை நாட்களாக   பாடிக்கொண்டு  எனை மறந்திருந்தேன்.  அந்த பெரியவர்  எப்போது  நான்  செய்வது  பாபம்  என்று  உணர்த்தி விட்டாரோ  இனியும்  அதை பண்ண மாட்டேன்"  என்று  அழுது கொண்டே  தன்னுடைய  ஒரே  செல்வமான, கண்ணின் மணியான,  அபங்கங்களை எல்லாம்  எடுத்து மூட்டை கட்டி  இந்த்ராயணி  ஆற்றில் எறிந்துவிட்டார்.   
ஆற்றங்கரையில்  சோகமாக  அமர்ந்தார். 

"வெகுநேரமாக உங்களை  காணோமே, இங்கே  அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள், வீட்டுக்கு" என்று  மனைவி  ஜீஜா  தேடிக்கொண்டு வந்து அவரை  வீட்டுக்கு  அழைத்துப்  போனாள். சிறகொடிந்த  பறவையாக  வாய்  மட்டும்  "பாண்டுரங்கா, விட்டலா" என்று  ஸ்மரணை செய்து கொண்டே  தூங்கிப்  போனார்  துக்காராம்.  இரவு கழிந்தது. பொழுது விடிந்தது.   சில மணிநேரங்களில் யாரோ  வந்து கதவை தட்டினார்கள். 

"யார்?

"துக்காராம், துக்காராம்,   இங்கே வாருங்கள்"  என்று  உணர்ச்சி வசத்தோடு  பாண்டுரங்கன் ஆலய
பிரதம அர்ச்சகர்  வாசலில் நின்றார்.  ஒரு கையில்  துக்காராம் ஆற்றில் எறிந்த அபங்க  மூட்டை!  

"இது என்ன?   ஏன்,  நான் செய்த  பாபங்களை  ஆற்றிலிருந்து  எடுத்து  கொண்டுவந்தீர்கள்?   என்று  அதிர்ச்சியோடு கேட்டார்  துக்காராம்.

"சுவாமி,  நாம் யாருமே   எந்த  ஆற்றிலிருந்து  எதையும்  எடுத்து வரவில்லை. பாண்டுரங்கன்  தானே போய்  ஆற்றில் இறங்கி  இந்த மூட்டையை  எடுத்து வந்து  தன்  தலையில் சுமந்து  ஈரம் சொட்ட சொட்ட  நின்று கொண்டிருந்தார்.   இன்று காலை  வழக்கம்போல்  கதவை திறந்து  சுப்ரபாதம் சேவை செய்ய  நுழைந்த போது  இதை  பார்த்து  திகைத்தேன்.  என்ன  மூட்டை  பாண்டுரங்கன் தலை மேல்  என்று   அதை எடுத்து  பார்த்த போது தான்  தெரிந்தது  நீங்கள் எழுதிய  அபங்கங்கள்  என்று. ஏதோ தவறு நடந்திருக்கிறது  என்று  எடுத்துக்கொண்டு  ஓடோடி வந்தேன்.  நீங்கள்  ஈடற்ற பாண்டுரங்க  பக்தர்  என்று எனக்கு தெரியுமே  என்கிறார் கோவில் அர்ச்சகர்.

"விட்டலா,  எனை  மன்னித்து விட்டாயா. உன் கருணையே  கருணை!!". துக்காராம் ஆனந்த கண்ணீர் வடித்தார் 

ஊர் முழுதும்  இந்த  அதிசயம்  காட்டுத் தீ போல்  பரவி  ராமேஸ்வர் பட் காதிலும் விழ அடித்து பிடித்து கொண்டு அவர்  துக்காராமிடம்  வந்து  கண்ணீர் பெருக காலி விழுந்தார். 

 "நீங்கள்  எவ்வளவு  பெரிய  மகாத்மா,  பாண்டு ரங்கனின்  அபிமானம்  நிறைந்த பக்தர்  அவரே  உங்கள்  அபங்கங்களை  ஆற்றி லிருந்து மீட்டு  தன் தலையில் சுமந்து நின்றார்  என்ற போது  என்  அறியாமையை உணர்ந்தேன்.  நானே  மகா பாபி.  என்னை மன்னிக்க வேண்டும்"  என்று கதறினார்  

"நீங்கள்  சாஸ்த்ரங்கள் உணர்ந்த  பண்டிதர்.  பிராமணர். அறிவிலி  என் காலில்  விழுவது அபசாரம்".  பாண்டுரங்கா,   விட்டலா"  என்று  கண்களில்  நீர் பெருக  அவனை  நன்றியோடு வணங்கினார் துக்காராம்.

THIRUKKOLOOR PEN PILLAI



திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள் 
J K SIVAN

   80 .தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

 ஸ்ரீரங்கத்தையும்  திருச்சியையும்  பிரித்துப்  பார்க்க முடியாதபடி ஒன்றோடொன்று ஆன்மீகத்தால்  இணைந்தவை.    காவேரி  அதன் உபநதி கொள்ளிடத்தோடு சேர்ந்து  இவற்றை பிரிக்கவில்லை, இணைக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 

திருச்சி பக்கம் அழகான கண்கவர்  மலைக்கோட்டை, உச்சியில் பிள்ளையார் கோவில் எங்கிருந்து பார்த்தா லும் தெரியும்.  காவிரியின் பாலத்தின் மீது டடங்  டடங்  என்று ரயிலில் போகும்போது கீழே அகண்ட காவிரி, மேலே  உச்சி பிள்ளையார் கோயில் இன்னொரு பக்கம் சோலைகள் மிகுந்த  ஸ்ரீரங்கம் ஆலய கோபுரம், மற்றொரு பக்கம் திருவானைக்கா  சிவாலய கோபுரம் ..  என்று   பார்க்காத ரயில் பிரயாணி இருக்கமுடியாது. 
ஒருபக்கம்  திருவானைக்கோவில் என்ற பழம்பெரும்  சிவாலயம். இன்னொருபக்கம் ஸ்ரீரங்கம். ரெண்டும் அருகருகே தான்.
ஸ்ரீரங்கம் கோவில் உற்சவாதிகள் பக்தர்களை மகிழ்த்துபவை,  எம்பெருமான் பல்லக்கில்  அற்புதமான திருவாசி, மேலே குடை, இருபக்கமும்  கவரி வீசுபவர்கள்,  நான்கு பிரதான வீதிகளில் அவர் காட்சி தந்துகொண்டு வரும்போது தான் எத்தனை விதமான  அலங்காரங்கள், தீப ஒளி,   பழங்காலத்தில் தீவட்டிகள் எண்ணெய்  ஊற்றப்பட்டு  தீவட்டிக்குக்கு எண்ணெய்  ஊற்றுவதற்கென்றே  ஒருவன்  எண்ணெய்  சட்டி,  கரண்டியோடு கூடவே  வருவான்.     மூங்கில், அல்லது   கனமான  மரத் தடியிலான  தீவட்டி  முனையில்  பிரகாசமாக  தீ எரியும்.   நாதஸ்வர  தவில் சத்தம் எம்பெருமான் எங்கோ வரும்போதே இங்கே கேட்கும். சத்தம் கேட்டு  தெருவின் இருமருங்கிலும் வீட்டிலிருந்து எல்லோரும் வெளியே வந்து, முன்னேற்பாடாக  வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு வைத்திருப்பார்கள். தயாராக கையில் வெற்றிலை பாக்கு தேங்கயோடு  அர்ச்சனைக்கு  காத்திருப்பார்கள்.  வேதகோஷம் ஒரு புறம் இருந்தாலும், கணீரென்று  திவ்ய பிரபந்தம் தான் செவிக்கினிமையாக கேட்கும்.  பெண்கள் சேர்ந்து பாடிக்கொண்டு வருவார்கள், சிலர் கோலாட்டம் ஆடிக்கொண்டு முன் செல்வார்கள்.  ஸ்வாமி பல்லக்கை  தாங்கும்  பாதம் தாங்கிகள்  பல்லக்கின்  இருபுற  கனமான மூங்கில் தடியை  தோளில்  துணிமேல் வைத்து தூக்கிக்கொண்டு,   நடக்கமாட்டார்கள், ஆடுவார்கள்,  ஒருவர் கையை மற்றொருவர்  கோர்த்துக்கொண்டு, தோளில்  கை  போட்டுக் கொண்டு பல்லக்கை   வையாளி இசைக்கேற்ப  அசைந்து  ஆடிக்கொண்டே வருவார்கள், பெருமான் நடனமாடி வருவது போல்  அசைவு கொடுப்பார்கள்.  மணிகள் ஒலிக்கும், கற்பூர  தீபாராதனை ஒவ்வொரு வீட்டின் முன்னே நடக்கும்,  பெண்கள் ஆண்கள் சேர்ந்து  தெருவில்  பல்லக்கின் முன் விழுந்து நமஸ்கரிப்பார்கள்.  ரங்கா  ரங்கா என்று குரல் ஒலி எங்கும் கேட்கும்.  

ஓரிருவர்  பெரிய சவுக்கை வீசிக்கொண்டே  பாதம் தாங்கிகள் முன்னால் தரையில் சோடெர் சொடேர்  என்று வீசி  அடிப்பார்.   துணி துவைப்பது போல் இருக்கும் அது. 
ஒரு முறை ஸ்ரீரங்க வீதி உலாவில் இப்படி வீசப்பட்ட சவுக்கு  அருகே இருந்த பராசர பட்டர் தோள் மீது விழுந்தது. நல்ல அடி .  சவுக்கை வீசியவன் பதறிப்போனான் .  
''ஐயோ சுவாமி இந்த மஹா பாவி இப்படி பண்ணிவிட்டேனே. என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று காலில் விழுந்தான்.
பட்டர் துளியும் அந்த சம்பவத்தை  தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.கோபப்படவில்லை. 
''அப்பனே, நீ  ஒரு தவறும் செய்யாதபோது ஏன் கலங்குகிறாய்?   நீ செய்தது எம்பெருமானுக்கு கைங்கர்யம். அப்படி நீ வழக்கமாக செய்யும்  கைங்கர்யத்தில் எனக்கு  ஒரு  தோளில் பரிசாக கிடைத்தது.  மற்றொரு தோளிலும்  விழவில்லையே  என்று தான் வருத்தம். இந்த  பாதம் தாங்கிகள் அனைவரின் தோள்களையும் பார்  எப்படி தடித்து, காய்த்து போய் இருக்கிறது. ஒரு தோள்  மாற்றி இன்னொரு தோள்  என்று அவர்கள் எம்பெருமானை சுமக்கும் கைங்கர்யம் தந்த பரிசு அல்லவா அது. வைகுண்ட வாசல் அவர்களுக்காக எப்போதும் திறந்தே இருக்குமே''  என்கிறார்.
இந்த சம்பவத்தை நமது திருக்கோளூர்  மோர் தயிர் வியாபாரம் செய்யும்  பெண்பிள்ளை    பார்த்தாளோ , தெரிந்து வைத்திருக்கிறாளோ என்னவோ  அறியமுடியவில்லை.  அதனால் தான்  ராமாநுஜரிடம்  தான்  ஏன்  இந்த  எல்லோரும் ''புகும்'' ஊர்  திருக்கோளூரில் வசிக்க அருகதை இல்லாதவள் என்று விளக்கும்போது  80வது  உதாரணமாக  இந்த  சவுக்கடி சம்பவத்தை நினைவுகூர்ந்து  நான் என்ன பராசர பட்டர் போல் ஒரு தோளில்  சவுக்கடி விழுந்தும்  இதோ இன்னொரு தோள்''   என்று சந்தோஷமாக  மற்றொரு  தோளைக் காட்டிக்கொண்டு வந்தவளா? எப்போது எந்த கைங்கர்யம் செய்திருக்கிறேன் இந்த புண்ய பூமியில் வாழ்வதற்கு?  என்கிறாள். 

அன்பர்களே, அடுத்த  பதிவு  81வது உதாரணத்தோடு நாம் திருக்கோளூர் பெண்பிள்ளையிடமிருந்து விடை பெறுகிறோம். இத்தனை நாட்கள் அன்றாடம் ஒரு பிரதியாக வந்தவள் இனி புத்தகமாக வரும் கைங்கர்யத்தில்  பங்கு பெற விரும்புவோர்கள்  உத்தேசமாக ஒரு பிரதிக்கு நூறு ரூபாய்  RS  100் என்று   (கூடவே ஆகும் 200 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவரும்போது )  எத்தனை பிரதிகள் வேண்டுமோ உங்களுக்கு அவ்வளவு பிரதிகளுக்கு பணம் செலுத்தி  முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.  குழந்தைகளுக்கு,  நூல் நிலையங்களுக்கு,  படிக்க விரும்புவோர்க்கு  இலவசமாக கொடுங்கள். நாங்கள் அப்படி தான் செயகிறோம்.  புத்தகம் அச்சேறி வெளிவந்தவுடன் தேவைப்பட்ட புத்தகங்கள் உங்களை அடையும்.  ஆயிரம் பிரதிகள் அச்சிட எண்ணம் கொண்டிருக்கிறேன்.  புத்தகத்துக்கு விலை கிடையாது. விற்பனைக்கு எங்கும் கிடைக்காது. ஆயிரம் பிரதிகளும் முன் பதிவு செய்தவர்களுக்கு எத்தனை பிரதி தேவையோ அத்தனை பிரதிகள் விநியோகம் செய்யப்படும்.   நன்கொடை அளிப்பவர்கள் வங்கியில் செலுத்திவிட்டு 9840279080ல் எனக்கு  விவரம் விலாசத்தோடு அனுப்பவும். குறித்து வைத்துக் கொள்கிறேன்.  நன்கொடைக்கு ரசீது உண்டு.  வருமானவரி விலக்கும்  80G  பிரிவில் உண்டு.   இப்படி கிடைக்கும் நன்கொடை அடுத்த புத்த வெளியீட்டுக்கு உதவும்.  Bank Account :  SREE KRISHNARPANAM SEVA TRUST,   CURRENT ACCT NO.510909010114902 , CITY UNION BANK,  NANGANALLUR BRANCH.  IFSCODE  CIUB0000104



MIRACLE AT BORDER.



தெய்வத்தின் பாதுகாவல் J K SIVAN
இந்தியா பாகிஸ்தான் எல்லை இந்தியாவின் வடமேற்கே, ராஜஸ்தான் ஜெய்சல்மேர் பக்கம் லோங்காவலா என்கிற ஊர் பக்கம் இருக்கிறது.
அந்த எல்லைப்பகுதியில் ஒரு அம்மன் கோவில். தானொத் மாதா என்று அந்த சக்தி தேவிக்கு பெயர். 51 சக்தி பீடங்களில் ஒன்றை சார்ந்தது அந்த ஆலயம். ஜெய்சால்மீர் 120 கி.மீ. தூரம். அங்கு தான் தீவிரமாக இந்தியா பாகிஸ்தான் யுத்தம் 1971ல் நடந்தது. பாலைவன பகுதியில் உள்ள இந்த ஆலயம் தெய்வீக சக்தி வாய்ந்தது என்றும் அதிசயங் கள் நடந்தது . 1965ல் பாகிஸ்தான் தாக்குதல் புது தானோத் மாதா ஆலயம் அருகே 8 இந்தியவீரர்கள் தான் காவல் இருந்தனர். பாக் ராணுவம் 3000 பேருடன் மோதியது. எட்டுபேரும் மாதாவின் ஆலயத்தில் வேண்டி நின்றனர். அவர்களுக்கு அப்போது மாத தோன்றி இங்கேயே இருங்கள் வெளியே போகவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாளாம். பாக் ராணுவம் 3000 குண்டுகளை வீசியது. ஒரு குண்டும் வெடிக்கவில்லை. ஒரு குண்டு வெடித்தால் கூட அந்த பகுதியே சின்னாபின்னமாகி இருக்கும். அது தான் மாதாவின் சக்தி. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டிவிட்டார்கள். 1971ல் இந்த பகுதியில் அம்பாள் சக்தியால் ஜெயிக்கமுடியவில்லை என்று பாக் ராணுவம் அருகே இருந்த லோங்கோவால் பகுதி யில் தாக்கியது. தானொத் சக்திமாதா ஆலயம் அருகே தானே லோங்கோவால். அங்கும் பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை. அந்த கோவிலில் பூஜை செய்பவர்கள் எல்லை ராணுவ வீரர்கள் மட்டுமே. உலகில் எங்காவது இந்த அற்புதம் நிகழ்ந்ததுண்டா?.
எதோ தெய்வ சக்தி பாரதத்தை காக்கிறது. பாக் ராணுவ தளபதி ஷாநவாஸ் கான் இந்திய பகுதி அனுமதியுடன் தானொத் அம்மனை தரிசிக்க வந்து இந்த அதிசயத்தை கண்டு அந்த அம்மன் ஆலயத்துக்கு வெள்ளி கூரை வழங்கினார் என்று செய்தி. ஏராளமானவர்கள் 2500 ரூபாய் கொடுத்து டாக்ஸி பிடித்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள் என்று ஒரு சிறிய வீடியோ கிளிப்பிங்கில் படித்தேன். அதை இணைத்திருக் கிறேன் . https://youtu.be/oqM8y1Lrlkk
பாரதத்தை தர்மம் நியாயம், நீதி நேர்மை காக்கிறது. எண்ணற்ற சித்தர்கள் ஞானிகள் மஹான்கள் வாழ்ந்த பூமி. ஒரு சில புல்லுருவிகளால் இதை அழிக்க முடியாது.

Saturday, July 4, 2020

RAMANUJA THE SUPREME SAGE

Dear Friends, - J K SIVAN

I am happy to wish you all a ''happy stay at home'' to enjoy the company of all family members which is a rare opportunity and to communicate with friends only through whatsapp, facebook, and mobile phone keeping socially distant with one another.

I am also happy to share with you a news.
In Today's DINAMALAR, a book review has appeared about my book RAMANUJA, THE SUPREME SAGE, in English in the form of a gripping story, detailing the actual life events of the great saint for children and elders to know about Him.

The book, as is customary and usuall with us, is not priced and not sold . It is distributed to those who desire to have it on a meagre donation to meet the paper cost as SREE KRISHNARPANAM SEVA TRUST is not a profit making or seeking organisation and aims to spread the spiritual information concerning our great matchless HINDU SANATHANA DHARMA. Please donate and obtain as many copies you can and distribute same to the deserving interested readers at your end. Receipts will be issued for all donations.

Our publication list and book review attached. - Please circulate the information to all your contacts and help and assist our FREE BOOK PROJECT MISSION.

OUR PUBLICATION LIST WITH BANK ACCOUNT DETAILS
PLEASE DONATE GENEROUSLY FOR THE FREE BOOK PROJECT to distribtue such spiritual books to interested persons.

SREE KRISHNARPANAM SEVA TRUST 15 KANNIKA COLONY 2ND ST.NANGANALLUR, CHENNAI 600061
/MOB 9840279080 EMAIL: jksivan@gmail.com krishnarpanamtrust@gmail.com
ALL THESE PUBLICATIONS ARE NOT FOR SALE. BROUGHT OUT ON DONATIONS ONLY. PL DONATE ATLEAST THE MINIMUM FIXED FOR EACH BOOK TO MEET THE PRINTING COST.
TAMIL BOOKS - by J.K. SIVAN AMT REPRESENTS ATLEAST MIN .DONATION (Rs) FOR EACH BOOK FOR ITS PUBLISHING COST.
1 KALADIYIL KIDAITHTHA KAI VILAKKU (Prasnothra Rathnamalika of Adisankarar) 50.00
2 THEVITTADHA VITTALA (100 Pandurangan stories) 175.00
3, PAAVAIYUM PARAMANUM (Andal story) col.pictures 150.00
4. RAMAPATHIYUM UMAPATHIYUM - slokas/narration 100.00
5. VISWAROOPANIN VAMANA KADHAIGAL (100 Krishna stories) 150.00
6. MUKUNDHA NIL MOOVAR (Meera,Andal,Radha stories) 100.00
7. RAME RAME MANORAME - ADHYATHMA RAMAYANAM -STORIES COL PICS 200.00
8. ENDHAIYE NANDHALALA (Bharathiyar Kannan pattugal stores) 100.00
9. KATHIDA VA KESAVA (Bharathiyar Panjali sabatham story) 100.00
10.ENTHAIYE RAMANUJA (Ramanuja life story - Latha Ramanujam/Sivan) 150.00
11.PESUM DHEIVAM VOL.1 (Maha Periyava devotees experience collections) 100.00
12.PESUM DHEIVAM VOL. 2 -DO- 100.00 13.VISWAROOPAN KATTUM VAZHI (GITA 18 PARVA NARRATION) 100.00
14.PARMESWARAN PAADUM PARAMATHMA 50.00
15. AVASARA KELVIYUM AVASIYA BADHILUM (Yaksha Prasnam) 50.00
16.AYIRAM NAMAN (Vishnu Sahasranamam narration ) 100.00
17.AMUDHAN EENDHA AZHWARGAL (12 Azhwargal stories) 100.00
18.ORU ARPUDHA GNANI (Seshadri Swamigal mahathmiyam) 100.00
19. KAMBAN KANDA RAMAN (Ramayana paadalgal selected/ Keeranur Ramamurthi) 150.00
20. ADHI SANKARA PRASADAM (Selected slokas of Adhi sankara, narration ) 50.00
21. NADHA BRAHMAM( Thiyagaraja swami life anecdotes 251) 25.00
22 AINDHAM VEDHAM ( Complete Maha Bharatham stories) vol. 1 & 2 - 1000 pages in col. 1,000.00
23 ENGAL BARATHI VAMSAM.- COMPLIMENT COPY FOR DONORS

ENGLISH BOOKS BY J.K. SIVAN
1. YOU I AND KRISHNA (100 Krishna stories) ART PAPER+ MULTICOL PICS 200.00
2. VITOBA THE NECTAR (Pandurang stories 100) 200.00
3. GOVINDHA'S GARLANDS (Radha, Meera, Andal stories) multicolor pictures 150.00
4. HARE KRISHNA (Bharathiyar Panjali sabatham stories) R. GAYATHRI - Multicol.pictures 150.00
5. GLORIES OF GITA ( gita 18 stories) artpaper +MULTICOL PICTURES - R. GAYATHRI 100.00
6. ETERNAL QUESTIONS AND EVERLASTING ANSWERS (Yaksha prasnam) 50.00
7. ACHARYA AND ACHYUTHA (Sankara's Bhajagovindam) narration 50.00
8. RAMANUJA, THE SUPREME SAINT (life of Ramanuja, stories) 150.00

POSTAGE/COURIER EXTRA WITHIN INDIA depending on weight of parcels
books issued against donations which are exempt under section 80G of I.T Act. Receipts will be issued to donors.
Bank Account : SREE KRISHNARPANAM SEVA TRUST, CURRENT ACCT NO.510909010114902


CITY UNION BANK, NANGANALLUR BRANCH. IFSCODE CIUB0000104

ABIMANYU

\ விதி  விட்ட  வழி     J K   SIVAN

ஒவ்வொரு மனிதன் மனத்திலும்  எண்ணற்ற ஆசைகள்.  அவை அத்தனையும் நிறைவேற வேண்டும் என்பது அதற்கெல்லாம் மேலான பேராசை.  அப்படி நடந்து விட்டால்  உலகத்தில் அனர்த்தம் விளையும்.  கூடாத ஆசைகள்  மனதை விட்டு அகலவேண்டுமே தவிர நிஜமாகக் கூடாது. இதில் இறைவன் கவனமாக இருக்கிறான்.  அடிக்கடி நான் கேட்கும் பாட்டு ஒன்று அர்த்தம் நிறைந்தது.  இதை விளக்குவது:   ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்  தெய்வம் ஏதுமில்லை''

"அண்ணா,  என் வயிற்றில் ஒரு மாவீரன் வளர்கிறான்  உனக்கு  தெரியுமா?"  என்று ஆர்வத்தோடு  சொன்னாள்   சுபத்ரை  கிருஷ்ணனிடம்.
"ஆஹா, அப்படியென்றால் இனி  உன் வீட்டில்  ரெண்டு  அர்ஜுனர்கள்!!!  அடே யப்பா,  பாண்டவ குலத்துக்கு  தான்  எவ்வளவு பெருமை"     ஒரு  அர்ஜுனன்  இருக்கும்போதே  பாண்டவர்களை  எவரும்  வெல்ல முடியாது அப்பறம்  ரெண்டு  அர்ஜுனர்கள்  என்றால்  கேட்கவே வேண்டாம்...'   என்று  சிரித்தான் கிருஷ்ணன்.
அப்போது அங்கே  அர்ஜுனன் வந்தான்.
"வா, அர்ஜுனா  தக்க  சமயத்தில்  வந்தாய்.  நாங்கள்  உன்  வீர  வாரிசை  பற்றி தான்  பேசிக் கொண்டிருந்தோம்" என்று  அர்ஜுனனை  வரவேற்றான்  கிருஷ்ணன்.
"கிருஷ்ணா,  கௌரவர்களோடு  யுத்தம் நிச்சயம் ஒருநாள் யுத்தம் வரத்தான்  போகிறது.  அதில்  கௌரவ சேனையின்  தூண்களான  பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன்  ஆகியோர் எங்களை எதிர்த்து போரிடப் போகிறார் கள்.   அதற்கு முன்பு  யுத்தரங்கத்தில் வெற்றி தரக்கூடிய  அம்சங்களை பற்றி யோசித்தேன்.
சக்ர வியுஹம்  அமைக்கும் எதிரியின்   சேனை யை  அழிப்பது  பற்றி சிந்தித் தேன்.  சரி உன்னிடம் அது பற்றி சில  விஷயங்களை  பேசுவோம் என்று  தோன்றியதால் உன்னை பார்க்க வந்தேன். இருந்தோமல்லவா.  அது  பற்றி  நன்றாக  யோசித்தேன். ஒரு  யுத்தத்தில் எதிரிப்படை  சக்ர வியுஹம் அமைத்தால்  அதை நாம்  எந்த  வியுஹம்  அமைத்து  எதிர் கொள்வது, எப்படி  முன்னேற வழி என்பதை உன்னோடு  கலந்து பேசத் தான்  வந்தேன்" .
கிருஷ்ணன் சக்ர வியுஹத்தை  உடைத்து  முன்னேறுவதில்  எத்தனை  முன்னெச் சரிக்கை தேவை. யார்  யார் அதன்  ஒவ்வொரு  முனைப்பிலும்  தாக்க கூடும்,  எந்த இடத்தில் முதலில்  தாக்கி வியூஹத் தை  உடைக்க முடியும்  என்று  விலாவா ரியாக  கிருஷ்ணன் அர்ஜுன னிடம்  எடுத்து சொல்லிக் கொண்டி ருந்தது  அத்தனையும்  சுபத்ரா வெகு ஆர்வமாக  கேட்டுகொண்டிருந்தாள்.

அவள் மட்டுமா  கேட்டாள்?  அவள் வயிற்றில் இருந்து கொண்டு  வீர  அபிமன்யுவும்  ஆர்வமாக  கேட்டு கொண்டிருந்தான்.
இதை கிருஷ்ணன் கவனிக்க தவறவில்லை.
"உனக்கு  தூக்கம்  வருகிறது சுபத்ரா,  இது  எங்கள் பாடு, பாவம், நீ  ஏன்  மெனக்கெடு கிறாய்.  உள்ளே  போய்  படுத்து தூங்கு"  என்று  சுபத்ரையை  உள்ளே அனுப்பிவிட்டான்  கிருஷ்ணன்.
பிறகு  அர்ஜுனனும்  கிருஷ்ணனும்  அந்த  சக்ர வடிவ  வியுஹத்தை  எப்படி உடைத்து  உள்ளே யிருந்து வெளிவருவது  என்பது பற்றியும்  விவாதித்தனர்.
பல வருஷங்கள்  கழித்து  அர்ஜுனன்  ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்த யுத்தம் வந்துவிட்டது.
மகாபாரத  யுத்தத்தில் 13ம்  நாள்  யுத்தத்தில் அபிமன்யு   வீராவேசமாக துரோணரின்  சக்ர வியுகத்தை  தாக்கிக்  கொண்டிருந்தான்.  அர்ஜுனன் எங்கோ ஒரு புறம்  த்ரிகர்த்தர்களை துரத்திச் சென்று  அவர்களோடு  போர்  புரிய  அர்ஜுனன் மகன் அபிமன்யு  குரு க்ஷேத்ரத்தில்   யுதிஷ்டிரருடன் சேர்ந்து  கௌரவ சேனையின்  சக்ர வியூஹத்தை உடைத்து  உள்ளே  முன்னேறிவிட்டான்.
"அபிமன்யு  உள்ளே  செல்லாதே,  அர்ஜுனன் வந்த பிறகு  உள்ளே போகலாம்”  என்று யுதிஷ்டிரன் சொன்னதை அபிமன்யு,  காதில் போட்டுக் கொள்ளவே யில்லை"பாவம்,  அந்த  சிறுவன்  வெளியே  வர  வழி தெரியாமல்  மாண்டான்.
கிருஷ்ணனிடம்  பிற்காலத்தில்  இது பற்றி கேட்டவுடன்  தான்  கிருஷ்ணன் வருத்தத்தோடு சொன்னான்.
“அர்ஜுனன் மகன் அபிமன்யு  சந்திரனின்  அம்சம்.  முனிவர்  கர்கரால்   சாபம் பெற்றவன் அவனுக்கு  16 வயதில்  மரணம் என்பது முடிவான விஷயம்.  சக்ர வியுஹத்தில் அவன்  உள்ளேறிய  அன்று  அவன்  பதினாறு வயதை பூர்த்தி செய்து விட்டான். அவனை  யாரும்  காப்பாற்ற முடியாது. இதற்காகவே, அவன்  சுபத்ரை வயதில் இருந்தபோதே  அவன்  சக்ர வியூஹத்தில்  இருந்து வெளியேறும்  வழியை  கேட்டு  தெரிந்து கொள்ளாமல்  இருக்க  சுபத்ரையை  தூங்கச்  செய்தேன். அவனுக்கு  உன் உதவியோ  என் உதவியோ  கிடைக்கா தவாறு  நாம்  அவனை  தனியே  விட்டு விட்டு சென்று விட்டோம்.  இது  விதி.   வருவதை  எதிர்கொள்ள  தயங்க கூடாது" என்றான் கிருஷ்ணன்

GITANJALI

கீதாஞ்சலி  6                             J K   SIVAN                                                                                  தாகூர்                                                                          
                                                
                        6   அம்மாவின் தீனமான பார்வை ....

 6 The rain has held back for days and days, my God, in my arid heart. 
The horizon is fiercely naked---
not the thinnest cover of a soft cloud, 
not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm, 
dark with death, if it is thy wish, and 
with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, 
call back this pervading silent heat, 
still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above 
like the tearful look of the mother 
on the day of the father's wrath.

 ''சென்னையில்  ஜோ  என்று  விடாத  பெரிய  மழை...''   இது   மே- ஜூன்   மாத  செய்தி அல்ல.  மழை வராதா  மறுபடியும்.  நின்று போய்விட்டதே  என்ற நினைப்பு,  ஒரு இனிமையான கனவு .  தூக்கத்திலாவது சில்லென்று காற்று வரட்டுமே.   மேலே  மின் விசிறி  அதிக சப்தம் போடுகிறதே தவிர காற்றை விரட்டுகிறது.   துரோகி.  வானத்தை அண்ணாந்து பார்த்தால்  வெறிச்சென்று வெளிச்சமாக கண்ணை கூசுகிறது. கருப்பு மேகம் வராதா?  

இப்போது தாகூரோடு கல்கத்தா  செல்வோம்:   
இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னைக்  காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழைகாணாத  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை எட்டியவரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். மேக  ஆடை இல்லாத நிர்வாண வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி  கருப்பு  மேகம்..    ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்...ஹுஹும்.  

கிருஷ்ணா. உன் கோபமான  சூறைக்   காற்றை கிளப்பி விடு.  உடனே  ஓ வென்ற சப்தத்தோடு  மரங்களை முறித்து வீசும் அளவுக்கு  அனுப்பு.  இருண்ட  கரு நிறத்தோடு  மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க  தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  நீண்ட சாட்டை அடியா?  எதையோ செய்.  ஆனால் இந்த அமைதியான ,  நீரற்ற நிலத்தில் வீசும்  காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு.   இந்த வெறுமை  கொல்கிறது . உன்னிடமே இந்த வறட்சியை திரும்பப்  பெற்றுக்கொள்.  யார் கேட்டார்கள் இதை?   எங்களுக்கு வேண்டாம்.  அசையாமல் எல்லாம் வெப்பத்தில்  வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல்.  இதயத்தை ஏமாற்றத்தால்  எரிந்து  துயரால் வாடி துடிக்கச்  செய்யாதே.  இனி தாங்க முடியாதப்பா இந்த  அக்கிரமத்தை.

உன் கருணை மேகம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  பூமியை நோக்கி இறங்கட்டும்.  என் மனதில் தோன்றும்  ஒரு காட்சியைச்  சொல்கிறேன் கேள். 

 அப்பா  கொடியவராக கோபத்தோடு  எடுத்ததற்கெல்லாம் கோபித்து,  அடித்து , திட்டி,  சித்ரவதை பண்ணும்போது அம்மா பாவம் பேசாமல் நிர்க்கதியாக , கதவோரம், சுவற்றோரம், தலை குனிந்து  நின்று அத்தனையும் வாங்கிக்கொண்டு கண்களில் நீர் ததும்பி  தரையில் சொட்ட சொட்ட  பிறகு  வாய் பேசாமல் தீனமாக  வேறு வழியின்றி பார்ப்பாளே............  அந்த பார்வை தான் என் பார்வை இப்போது,   உன் வருகைக்காக, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா மேகநாதா,  கண்ணா வா...

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...