ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் ( 154-169)
154. அமோகன்: விஷ்ணுவின் காரியங்கள் சிறந்த காரணங்களுக்காகவே, சங்கல்பத்தை முழுதும் நிறைவேற்றவே.
155. சுசி: சுத்தமானவன். ஆத்மா கறை படியாதவன். ஒட்டாதவன். பரிசுத்தன். விஷ்ணு:
156. ஊர்ஜிதன்: அளவற்ற சக்திமான்.வீரியன்.ஆத்ம சக்தி. ஆதார சக்தி.விஷ்ணு:
157. அதீந்திரன்: இந்திரனிலும் சிறந்தவன். பரம -ஆத்மன். விஷ்ணு.
158. சங்க்ரஹன் : சர்வலோகத்தையும்,, ஜீவராசிகளையும், காத்து அணைப்பவன். இணைப்பவன்.விஷ்ணு. அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.
159. ஸர்கா: இந்த பிரபஞ்சத்தையே தன்னிலிருந்து ஸ்ரிஷ்டித்தவன்
160. த்ரிடாத்மா: தானே தனக்கு ஆதாரமானவன் .
161. நியமா: அதிகார பூர்வமானவன். நடத்தி வைப்பவன்
162. யமா: சர்வ ஜீவன்களையும் ஆளுமை செய்பவன். இயற்கையை ஆட்டுவிப்பவன்.
18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
163. வேத்யோ :எது அறியப்படவேண்டுமோ அது. விஷ்ணு.
164. வைத்யா: சகல வித்யைகளையும் கற்று அறிந்த வித்தகன். ஞானாதிபதி.
165. சதாயோகீ : சர்வ காலமும் யோகத்தில் மூழ்கி இருப்பவன். விஷ்ணு.
166. வீரஹா: எதிரிகளை சம்ஹாரம் செய்பவன். துஷ்ட நிக்ரஹம் செய்து ,சாதுக்களை, சிஷ்டர்களை காத்தருள் பவன்.
167. மாதவன்: லட்சுமி மணாளன்
168. மது: தேன் போன்று இனிப்பவன். பாற்கடலில் இருந்து அம்ருதம் கொண்டுவந்தவன். விஷ்ணுவை வழிபட சிறந்த மாதமாக ஏப்ரல்-மே (சித்திரை) நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
169. அதீந்திரியன்: ஐம்புலன்களால் அணுகமுடியாத. அவற்றை ஆட்டிப் படைப்பவன். விஷ்ணு. எங்கும் எதிலும் உள்நின்றவனாக செயல் படுத்துபவன்
No comments:
Post a Comment