Thursday, November 14, 2019

UPACHARAM



                          உபசாரமு.....J K SIVAN 

என்னுடைய மொபைலில் எப்போதோ சேமித்து வைத்த  தியாகராஜ ஸ்வாமிகளின் உபச்சாரமு என்ற பைரவி கீர்த்தனை கொஞ்சம் கேட்டபோது  ஏதோ ஒரு  பழைய ஞாபகம்  நெஞ்சிலிருந்து மேலெழும்பியது.....

என் சிறுவயதில்  அதாவது 75 வருஷங்களுக்கு முன்பு,  சொந்தக்காரர்கள்,  நண்பர்கள்  முன்கூட்டியே  சொல்லிவிட்டு  வரமாட்டார்கள். திடீரன்று வருவார்கள்.   ஏன் காக்கா விடாமல் கத்துகிறது? யாரோ வீட்டுக்கு விருந்தாளி வரப்போகிறார்கள் என்று அம்மா  சொல்வாள்..  அதே மாதிரி மூட்டை முடிச்சோடு  ஒரு நாலு டிக்கெட் வந்து வாசலில் குதிரை வண்டியிலிருந்து இறங்கும்.  '' அம்மாஞ்சி   ஒண்ணேகால் ரூபா  கொடுங்கோ வண்டிச்சத்தத்துக்கு.ரயிலடிலேருந்து வீட்டுக்கு  அவ்வளவா?''   என்று நம்மிடமே சில்லரை   கேட்டு வண்டிக்கு கொடுக்கும்.  சில உறவுகள்  நடந்து வந்து கதவை தட்டும். 

''அட  சின்னம்பி மாமாவா ... வாங்கோ வாங்கோ''  என்று வாய் நிறைய பல்லோடு வரவேற்பார்கள்.  
வீட்டில் எல்லோரும் ஓடிவந்து குசலம் விசாரிப்பார்கள்.  

'' என்னடி சுப்பு ரொம்பவே  இளைச்சு போயிட்டே.? நாகு என்ன ஊரோட வந்துட்டாளா? அவ ஆம்படையான் இன்னும் மளிகை கடைலேதான்  வேலை பார்க்கிறானா?  பெரியம்மா வீட்டோட இருக்காளா புள்ளே கிட்டே போய்ட்டாளா?  வாடா  கோபு  எத்தனாங்க்ளாஸ்  இப்போ ?''   இது மாதிரி எல்லாம் அடுக்கடுக்காக .... பல கேள்விகள். சிலது  உறுத்தும்.

''அம்மாஞ்சி உங்களைப்பார்த்து யுகமாய்டுத்து. '' என்று சின்னம்பி முதல் வந்த அனைவரும் உபவார்த்தைகள்  .. பிறகு    ரெண்டு  பக்கமும் சின்னவர்கள் பெரியவர்களுக்கு   நமஸ்காரம். பிறகு வந்தவர்  புடலங்காய், மாங்கா தொக்கு,  புளி , கடலை உருண்டை போல  சில  இத்யாதி  ஐட்டங்களை ஊரில்  தோட்டத்தில் விளைந்தது சிலவற்றை  பையிலிருந்து எடுத்து கொடுப்பார்.  தீபாவளிக்கு  ஒக்காரை பண்ணினேன்.... ஒரு எவர் சில்வர் சம்படம் திறக்கப்படும்.  பல  கைகள்  வாங்கிக்கொள்ளும். 

''போய் குளிச்சுட்டு வாங்கோ  சாப்பிடுவோம்.''   சுப்புலக்ஷ்மி வீட்டுக்காரம்மாளோடு சேர்ந்து சமைப்பாள் . எல்லோரும் வாழையிலை கொல்லையிலிருந்து நறுக்கி ஏடுகளாக்கி, தரையில் அமர்ந்து பரிமாறி சாப்பிட மதியம் ஒரு மணியாகிவிடும்.  எதற்கு சின்னம்பி குடும்பம்வந்தது. எத்தனை நாள் தாங்கும் என்று கவலைப்பட்டது கிடையாது. 

இப்போது யார் வீட்டுக்கு போவதாக இருந்தாலும் முன்பே  போன் பண்ணி நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டு தான். எத்தனை பேர் வரப்போகிறாரக்ள் என்று முன்னெச்சரிக்கையோடு.  அதுவும் சொன்ன நேரத்திற்கு. அதற்கு தகுந்தாற் போல தான் காபி டீ  பிஸ்கட், உப்புமாவா , பொங்கலா , வெளியிலிருந்து சாப்பாடா, என்று தீர்மானமாகும்.  உத்யோக, குடும்ப விஷயங்கள் பேசுவது அநாகரிகம்.  வருபவர்களும்  சின்னதாக ஒரு கிப்ட்  gift பார்சலோடு தான் வருவார். வெறுங்கையோடு போவதில்லை.  பழங்கள் வாங்கிக்கொண்டு போவது குறைந்து விட்டது. 

தனி மனிதன் உபச்சாரம் இம்மட்டு.   பகவானுக்குஉபச்சாரம்  16 வகை. ஷோடசோபசாரம் என்று பெயர். அது இல்லாமல் பூஜை நிறைவு பெறாது.  கோவில்களில் பார்த்திருப்பீர்கள். கோவில்களில் சந்நிதியில்  அதிக பக்ஷம் ரெண்டு மூன்று நிமிஷங்கள் நிற்கும் பழக்கம் வந்து விட்டது. அபிஷேகம் அர்ச்சனை முழுதும் நின்று பார்ப்பவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அந்த பதினாறு  உபசாரங்கள் என்ன தெரியுமா?:
முதலில்  பகவானை வாங்கோ என்று ஆவாஹனம் பண்ணுவது.
வந்தால்  உட்காரவேண்டாமா,   ஆசனம் சமர்ப்பிப்பது 
பாதங்களை தொட்டு  அலம்புவது 
கைகளை சுத்தம் செய்து கொள்ள  அர்க்கியம் விடுவது. 
வாய், உதடுகளை தொட்டு, ஒரு துளி  விழுங்க ஆசமனம் என்று ஜலம் அளிப்பது.
ஸ்நானம் பண்ண புண்ய ஜலம் சமர்ப்பிப்பது 
புது அல்லது சுத்தமான வஸ்திரம் சமர்ப்பிப்பது
புது  உபவீதம், பூணல் அணிவிப்பது.
வாசனாதி திரவியம் சமர்ப்பிப்பது 
புஷ்பங்களால் அலங்கரிப்பது
தூப புகை  காட்டுவது.
தீபங்களை காட்டுவது -  இது ஒருவித முத்திரை.தீபங்களை அசைத்து காட்டுவது பார்க்க திவ்யமாக இருக்கும். சும்மா  ரௌண்டாக  காட்டும் அர்ச்சகர் விஷயம் அறியாதவர்.
பிரசாதம் பிரத்தியேகமாக மடியாக ருசி பார்க்காமல் வாயை மூக்கை கட்டிக்கொண்டு  கொண்டுவந்து நைவேத்யம்.  வாசனை பிடிக்க கூடாது என்பதற்காக துணியால் மூக்கை மூடிக் கொள்வது. 
சாப்பிட்டாகி விட்டதே. தாம்பூலம். வெற்றிலை பாக்கு பழம் சமர்ப்பிப்பது 
கற்பூர  தீபாஞ்சலி  புஷ்பாஞ்சலி 
அப்புறம் ப்ரதக்ஷிணம்.
பிரார்த்தனை யோடு நமஸ்காரம்.  
இப்படி ஒருத்தர்  உங்களுக்கு பண்ணினால் எவ்வளவு சுகமாக  சந்தோஷப்படுவீர்கள் .அப்படி தான் பகவானும் சந்தோஷப்பட்டு பக்தர்களின் கோரிக்கைகளை வேண்டுதலை  நிறைவேற்றுகிறார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...