Tuesday, November 19, 2019

VISHNU SAHASRA NAMAM



ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்  J K SIVAN

                           ஆயிர   நாமன்    (106 - 121) 

பீஷ்மர்  யுத்தகளத்தில் கௌரவ சைன்யம்  முற்றிலும் அழிந்த நிலையில்  அதன் பாதுகாவலனாக இருந்து இனி தனக்கு எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் விண்ணுலகம் செல்ல விழைகிறார். தக்ஷிணாயம் முடிந்து உத்தராயணம் துவங்கி விட்டது. இனி தாமதிப்பதில் பயனிலை எனக் கருதி  இன்னும் சில நாளில் மரணத்துக்கு  காத்திருக்கிறார்.  கிருஷ்ணன் அறிவுரையின்படி யுதிஷ்டிர ன்  பீஷ்மரை அணுகி  தனக்கு  ராஜரீகம், மற்றும் நீதி நெறி உபதேசம் செய்யும்படி  கேட்கிறான்.
  உபதேசிக்கிறார்: அவர் கடைசியாக உபதேசிப்பது ஸ்ரீ விஷ்ணு   ஸஹஸ்ரநாமம். 

106. சத்யா:  சத்யம், ஞானம், ஆனந்தம், ப்ரம்மம் அனைத்துமாகியவன். 

107. ஸமாத்மா:  எந்த ஜீவனிலும் ஒரே சமமான ஆத்மன். ஒப்புமையற்ற , சத்யன், சம-ஆத்மன்.

108. ஸம்மிதா : எல்லோராலும் சம்மதித்து ஏற்ற உண்மையானவன்.

109. ஸமா : சரி சமானமாக லக்ஷ்மிதேவியோடு இணைந்தவன். சகல ஜீவராசிகளையும் சமமாக மதித்து காப்பவன்

110. அமோகா:  வற்றாத வளமும் ஆனந்தமும் அருளும் வழங்குபவன்.

111. புண்டரி காக்ஷன்: தாமரை மலர் போன்ற அழகிய கருணை மிகுந்த குளுமையான நேத்ரன்

 112. வ்ரிஷகர்மா: நேர்மையான சாத்தியமான, நியாயமான தார்மிக செயல்களை புரிபவர்.  
 
113. வ்ருஷா க்ரிதி:  தர்ம ரக்ஷகன். தர்மத்தை போஷிக்க அவதரிப்பவன். தர்மமே உருவானவன்

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: ||

114.  ருத்ரா:  ருத்ரன் மரண, பிரிவு, துன்ப, துக்க வேளையில் சகலரையும் கண்கலங்கச் செய்பவன். ருத்ரர்களில் நான் சங்கரன் என்கிறார் விஷ்ணு. எல்லோரையும் சுகிக்க செய்பவன், மங்களம் அளிக்கும் சங்கரன். இங்கு அதுவே விஷ்ணு என்கிறார் வியாசர்.

115. பஹு ஸிரா:  புருஷ சூக்தம் ஆயிர சிரசு கொண்டவன் புருஷன் என்பதைப் போல் அநேக சிரம் கொண்டவன் விஷ்ணு என்று வியாசர் சொல்கிறார். எங்குமே காணும் கால்கள், கைகள், உடல், சிரம் கொண்டவன் விஷ்ணு. சுருக்கமாக சர்வவியாபி. . இந்த ப்ரக்ரிதியின் நிலையற்ற தன்மைகள் நெருங்காதவன்.  

116. பப்ருர்:  லோகங்களை எல்லாம் ஆளும் லோக நாயகன்

117. விஸ்வயோநி: அவனில் எல்லாமும் ஜனிப்பதால் அவன் தான் ஜீவகாரணன்

118. சுசி ஸ்ரவா :அழகிய செவியன். எங்கும் செவியுடையவன்.  
குறை கேட்டு நிவர்த்திப்பவன். நல்லதையும் பரிசுத்தமான பக்தி வேண்டுதலை கேட்பவன். புனித நாமங்களை உடையவன் , நாம் அவற்றை செவிமடுக்க செய்பவன்.

119. அம்ரிதா: அழிவற்றவன். சாஸ்வதன்

120. ஸாஸ்வத  ஸ்தாணுர்: . மாற்றம் அற்றவன். நிலையானவன்

121. வராரோஹா: மோக்ஷம் அளிப்பவன். பெருமையும், புகழும் ஆனந்தமும் நிலைக்கும் மோக்ஷ காரகன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...