Wednesday, November 13, 2019

ASHTAPATHI




https://youtu.be/k3QdPbp-03g

                                                              
      6வது  அஷ்டபதியில் கொஞ்சம் ....J K SIVAN 

கிருஷ்ண பக்தர்களில் முதல் வரிசையில் பிரதானமாக நிற்பவர் ஸ்ரீ ஜெயதேவர். அவரது கீத  கோவிந்தம் படித்துவிட்டு தான் எனது கிருஷ்ணன் கதைகள் உங்களை அடைகிறது. சூர்தாஸ் ஜெயதேவர் போன்றவர்கள் கிருஷ்ணனை நேரில் பார்த்தவர்கள் போல் இருக்கிறது.  பார்த்தாலும் அதை வர்ணிக்க தெரியவேண்டுமே .?

ஒருவர்  தாஜ்மஹால் பார்த்துவிட்டு ''சார் தாஜ்மஹால் முதல் தடவை  இப்போது  தான் சார் பார்த்தேன்'' என்கிறார். 

''ஆஹா அப்படியா  எப்படி இருந்தது?''

''ரொம்ப தாராளமாக கட்டி இருக்கிறான் சார். தண்ணி வசதிகள், பெரிய ஹால். சுத்தமான தரை, காற்றோட்டமாக இருந்தது. மேலேகூரை சுவர்  உயரமா இருக்கு சார் நல்ல வெளிச்சம் ''    

அடப்பாவி,  ஏதோ  பிளாட் வாடகைக்கு சீப்பாக  கிடைச்சு அது வசதியாக இருந்தது மாதிரி சொல்கிறானே, இவனிடமிருந்து என்ன ரசனையை எதிர்பார்ப்பது!

இப்படி  ஜெயதேவரை ரசிக்க முடியாது.  அவரது கிருஷ்ணன்  ராதை கோபிகள் வர்ணனை  ஸ்ரிங்கார ரஸ பக்தி.  அதை பாடுபவர்கள்  நாட்யமாடுபவர்கள்  எழுதுபவர்கள்  ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.  அது  அன் சென்சார் ஐட்டம். நன்றாக  ஞாபகம் இருக்கட்டும்  கிருஷ்ணன்  பிருந்தாவனத்தை விட்டு வெளியேறும்போதே அவனுக்கு  வயது 12-13... ராதை அவனைவிட பத்து வருஷங்கள் பெரியவள்....  சினிமா கத நாயக நாயகிகளாக எடை போடவேண்டாம்.  காசு வாங்கிக்கொண்டு மரத்தை சுற்றும் காதல் அல்ல அவர்களது பிரேமை.


sakhee hE kESi madhana mudAram 2
ramaya mayA saha madana manOradha
bhAv  itAya sAvikAram|              |sakhee    2

nibhruta nikunja gruham gata yA        niSi rahasi nileeya   vasantam  2    

chakita vilOkita     sakala diSa       rati rabhasa bharENa hasantam                                                     SAKhee

pradhama   samAgama  lajjitayA paTu   chATu Satai ranukoolam
mrudu madhura smita     bhAshitayA Sithileekruta jaghana   dukoolam|       sakhee 

 kisalaya   Sayana       nivESita yA     chira murasi mamai vaSayAnam
kruta parirambhaNa chumbanayA parirabhya krutAdhara pAnam|   SAKEE  
                                                                                                                   
kOkila kalarava koojitAyA jita manasija tantra vichAram
Slatha kusumAkula kuntalayA nakha likhita ghana thana bhAram||                                  sakhee  

Sri jayadEva bhaNita mida matiSaya madhuripu nidhu vana Seelam
sukha mutkanThita gOpavadhoo kachitam vita  nOtu saleelam|                  |sakhee  


ஒரு நாள்  பொன்மாலை வேளையில் பிருந்தாவனத்தில் ஒரு கொடிகள் மண்டபம் போல் சூழ்ந்த சோலையின் ஒரு சிறிய  குடிலை கண்டேன். அங்கே தான் கிருஷ்ணன் அடிக்கடி வந்து ரகசியமாக உட்காருவான் . சுற்றி முற்றி பார்த்தால் யாரும் இல்லை.  அவன் மேல்  கண் மண் தெரியாமல் ஒரு மயக்கம் எனக்கு.  என்னை பார்த்ததும்  வாய் கொள்ளாமல் சிரித்தான்.  கண்ணா கருமை நிற வண்ணா. என்று கொஞ்சினேன். 

நான் கண்ணனை பார்த்திருக்கிறேன் ஆனால்  அது தான் முதல் முறை அவனோடு பேசுவது.  அவன் சகஜமாக சரளமாக பேசுபவன். எளிதில் எல்லோரையும் மயக்கும் பேச்சு. என் கையை பிடித்து இழுத்தான்.

தொப்பென்று  தரையில் ஒரு  கொடியின் மலர்கள் மேல்  விழுந்தபோது அது பஞ்சணை போல் இருந்து. என்னருகே வந்தான். என்னை கட்டி  அணைத்தான். குழந்தைக்கு ஆசையாக முத்தமிட்டேன்.  

குயில்கள் வாய் ஓயாமல் ஆனந்த ராகம் பாடின.  அழகன் கிருஷ்ணன் அருகில் இருப்பது எவ்வளவு சுகம்.  என் தலையை கலைத்து விட்டான்.  ஓட ஓட  துரத்தினான். அவனோடு விளையாடுவதில் எவ்வளவு ஆனந்தம்.

ஜெயதேவர் அருட்கவி.  கிருஷ்ணனை நேரில் பிருந்தாவனத்தில் ராதை மற்ற கோபியரோடு   ராசலீலையில்  விளையாடும்போது பார்த்தவர் போல் அல்லவா விவரிக்கிறார்.  அற்புதமான பாடல்கள் கொண்டது அவரது கீத கோவிந்தம். பொருத்தமான பெயர்.  அதை அருமையாக  இசையமைத்து  இந்த ஒரு அஷ்டபதியை ரசித்து  பாலமுரளி கிருஷ்ணா பாடுகிறார்.  அதை நானும் கொஞ்சம் பாடிப்பார்த்தால் என்ன என்று   தோன்றியது  எழுதி வைத்துக் கொண்டு  பாடுகிறேன்.... தப்போ தவறோ, எனக்கு மனதுக்கு பிடித்தால் அது போதுமே. நான் என்ன  மேடையிலா பாடி  திட்டு வாங்கப்போகிறேன்! .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...