கருட புராணம் J K SIVAN
பரமேஸ்வரா, இன்னும் நாராயணனை பற்றி சொல்கிறேன்.
ஆயிரம் நாமன் அவன். பரப்ரஹ்மம். அவனது நாம ஜபம் பாபங்களை அகற்றும். அவனே வாசுதேவன், விஷ்ணு, வாமனன், சக்தி வாய்ந்த பலபத்ரன். வேதங்களின் உருவம், வேதங்களின் உட்பொருள், வரமருள்பவன், பரம ஆத்மா. பத்ம நாபன். தேவாதிதேவன். எங்கும் நிறைந்தவன், சர்வ ஜீவன்களிலும் உயிர் சக்தியானவன். லோக ரக்ஷகன். துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்பவன். காக்கும் கடவுளும் அவனே. மூவுலகிலும் இருக்கும் சகல உயிர்களும் அவனே. மாதவனும் அவனே, மகாதேவனும் அவனே. யாக யஞங்களில் பிரதான தேவதை அவனே. பெரும் காற்றும்,சீறிடும் அலைகள், கடலும் அவனே. சர்வாலங்கார பூஷணன் அவன். அவனே ராமன். கிருஷ்ணன். தங்க நிறத்தவன்.
நீண்ட இறக்கைகள் கொண்டவனும் அவனே. விநதையின் புத்திரனான கருடன் அவன் அம்சம் தான். புராணங்கள் சாஸ்திரங்கள் போற்றுபவன். யமன், ஈசானன் அவனே. யக்ஷ ராக்ஷஸர்களை உண்டாக்குபவனும் சம்ஹரிப்பவனும் அவனே. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவன். கம்ச, சாணூர, முஷ்டிகர்களை வதம் செய்தவன். பஞ்ச பிராணனும் அவனே. சகல ரிஷிகளும் அவனே. சங்கு சக்ர கதாபாணி. அவனை ராமன் கிருஷ்ணன், கோவிந்தன், உபேந்திரன், நரசிம்மன், சௌரி, ஜனார்த்தனன், தாமோதரன் என்று எண்ணற்ற பெயர்களில் போற்றலாம். புண்ய நதிகளில் சாளக்ராமமாகவும் அவதரிப்பவன். பக்தவத்சலன் என்ற பெயர் பக்தர்களை மகிழ்வூட்டுவதால் பெற்றவன். அவர்களால் விரும்பி வணங்கப்படுபவன், அவர்கள் மேல் பரிவும் பாசமும் உள்ளவன்.
அவனே சூர்யன், அவனை காயத்ரி மந்திரத்தோடு சேர்த்து வணங்குகிறார்கள். நவ கிரஹங்களும் அவனே.
அவனே சூர்யன், அவனை காயத்ரி மந்திரத்தோடு சேர்த்து வணங்குகிறார்கள். நவ கிரஹங்களும் அவனே.
சர்ப்பங்களால் கடிபட்டு மரணம் சம்பவிப்பதை தவிர்க்கும் மந்திரத்தை ஹரி ருத்ரனுக்கு சொல்கிறார். ரொம்ப விவரமானது, என்பதால் அதை தொடவில்லை.
சில புரியாத விஷயங்கள் சொல்கிறேன். பெயரை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். பின்னால் அவரவர் விருப்பமிருந்தால் ஸ்ரத்தை இருந்தால் மேற்கொண்டு உயரலாம்.
சில புரியாத விஷயங்கள் சொல்கிறேன். பெயரை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். பின்னால் அவரவர் விருப்பமிருந்தால் ஸ்ரத்தை இருந்தால் மேற்கொண்டு உயரலாம்.
கருடன் தனது மந்த்ரங்களை மூவுலகையும் ரட்சிக்கும் பொறுப்பில் இருந்ததால் வெளியே சொல்லவில்லை. கொடிய நாக சர்ப்பங்களை கொல்வதற்கு கருடன் பிரணவ மந்திரத்தை தனது வாய்க்கு அளித்தான். குரு என்ற மந்திரத்தை தொண்டைக்கு அளித்தான். குண்டா என்ற மந்திரத்தை கால் சதைகளுக்கு கொடுத்தான். ஸ்வாஹா மந்திர சக்தியை தனது பாதங்களுக்கு தந்தான். ந்யாஸம் என்பது யுகாஹா எனவும் சொல்லப்படுகிறது. இந்த மந்திரம் எழுதப்பட்ட இல்லங்களை சர்ப்பங்கள் நெருங்காது. ஆயிரம் தடவை இந்த மந்த்ரங்களை உச்சரித்து காதில் ஒரு நூலை தரித்துக்கொண்டு வீட்டில் சர்க்கரையை தெளித்தால் அவ்வளவு தான். எல்லா சர்ப்பங்களும் விடுவிடுவென்று இடத்தை காலி செய்த்துவிடும் என்று கருட புராணம் சொல்கிறது.
இதையே ஏழு லக்ஷம் தடவை சொன்னால் தேவர்களும் அசுரர்களும் சித்தி அடைவார்கள் என்று சொல்வதால் நமக்கு அது சம்பந்தமில்லை. நாம் கொஞ்சம் அசுரர்களாக இருந்தாலும் பரவாயில்லை..
பல யுகங்களுக்கு முன் பெரிய பெரிய நீளமான சர்ப்பங்கள் நிறைய எங்கும் இருந்தபோது இந்த மந்திரங்கள் அவசியமாக இருந்தது. அதனால் அப்போது அப்போலோவும் காவேரியும் தேவைப்படவில்லை.
இதையே ஏழு லக்ஷம் தடவை சொன்னால் தேவர்களும் அசுரர்களும் சித்தி அடைவார்கள் என்று சொல்வதால் நமக்கு அது சம்பந்தமில்லை. நாம் கொஞ்சம் அசுரர்களாக இருந்தாலும் பரவாயில்லை..
பல யுகங்களுக்கு முன் பெரிய பெரிய நீளமான சர்ப்பங்கள் நிறைய எங்கும் இருந்தபோது இந்த மந்திரங்கள் அவசியமாக இருந்தது. அதனால் அப்போது அப்போலோவும் காவேரியும் தேவைப்படவில்லை.
மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கருடபுராணத்தை நைமிசாரண்யத்தில் சூத மகரிஷி மற்ற ரிஷிகளுக்கு எடுத்து சொல்லும்போது அந்த புராணத்தை யார் யாருக்கு எடுத்து சொன்னார் என்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அடுத்து பரமேஸ்வரன் சொன்ன ரஹஸ்ய சக்தி மந்த்ரங்கள். அந்த மந்த்ரங்களை எப்படி உச்சரிக்கவேண்டும், எப்படி மலர்களில் ஆவாஹனம் செய்யவேண்டும். உபாஸிக்க வேண்டும், அங்க ந்யாஸங்கள் பற்றி எல்லாம் வருகிறது.
பரமேஸ்வரன் சிவனை எப்படி போற்றுவது என்று அடுத்து வருகிறது. சர்வ வியாபி. மந்திரங்கள் ஜபித்து பூஜை செய்வதை சொல்லுகிறார் கருடன். தொடர்ந்து அக்னி வளர்த்து யாகத் தீயை வணங்குவது, சக்தி ஆவாஹனம் எல்லாம் வருகிறது.
இன்னும் மேலே போவோம்.
No comments:
Post a Comment