ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஒரு பக்திநூல். பகவான் அருளால் பீஷ்மர் எனும் ஞானி தர்ம தேவதையின் அவதாரமான யுதிஷ்டிரனுக்கு, பகவான் எதிரிலேயே, உபதேசித்த உயர்ந்த ஸ்தோத்ரம். அதற்கு அர்த்தம் எழுத முனையும் முன்னர் நானும் சர்வ ஜாக்கிரதையாக பல மஹான்களின் வியாக்யானத்தைபடித்து புரிந்து கொண்டு தான் சுருக்கமாக தந்துள்ளேன்.
16. க்ஷேத்ரஞ : . எல்லா உடல்களிலும் உள்நிற்கும் சத்யம் அவனே. க்ஷேத்ரஞன். தோற்றுவித்து வாழவைப்பவன்.
17. அக்ஷரா: வெல்லமுடியாதவன். கொல்ல முடியாதவன். சாஸ்வதன். நிரந்தரன்
3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம:
18. யோகோ: யோகத்தின் பயனானவன்.
19. யோகவிதாம் நேதா: யோகிகளுக்கு குருவானவன். சர்வ ஜீவன்களுக்கும் ப்ரக்ரிதிக்கும் தலைவன்.
20. பிரதான புருஷேஸ்வரா : பிரதானமானவன். தனக்கும் உயர்ந்த ஒருவர் இல்லாத தனிப்பெரும் கருணாகரன்.
21. நாரஸிம்ஹ வபு: : நரனாகவும் சிம்மமாகவும் அவதரித்தவன்.
22. ஸ்ரீமான்: திரு என்றும் ஸ்ரீ என்றும் பெயர் கொண்ட லட்சுமி தேவியை பிராட்டியாக கொண்டவர். ஸ்ரீ நிவாஸன்
23 கேசவன்: அலை அலையாக கேசங்களை கொண்டவன் என்றும் கேசி என்னும் ராக்ஷஸனை கொன்றதால் கேசி என்ற பெயரும் கொண்டவன் என்றும் பொருள்.
24. புருஷோத்தமன்: புருஷர்களிலேயே சிறந்தவன். இந்த பிரபஞ்சத்திலேயே புருஷன் என்று அழைக்கப்படும் மஹாசக்திமான்.
4. ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: ||
25. ஸர்வ: எங்கும் நிறைந்திருக்கும் சர்வ ஆதாரமானவன்.
26: ஸர்வஸ் : யாதுமாகி நின்றவன். பரமாத்மா.
27. சிவ: விஷ்ணுவே தான் சிவன்
28. ஸ்தாணு: . அடிமுடி காணா ஸ்தாணு. மாற்றமில்லாதவன் . நிரந்தரன் . ஸாஸ்வதன் .
29.பூதாத் : பஞ்ச பூதங்களுக்கு காரணமான ஆதாரம் அவனே. சர்வ பூதங்களிலும் உயிரானவன் பிரளய காலத்தில் சகல ஜீவராசிகளும் இணைந்து மறைந்து மீண்டும் தோற்றுவிப்பவன் .
30. நிதிர் அவ்யயா: அழியா செல்வந்தர். ஆரம்பமும் அவனே, முடிவும் அவனே. தான் தோன்றி. நினைத்தபோது தோன்றுபவன். சகல ஜீவன்களிலும் அவற்றின் கர்ம பலன் அளிப்பவன்

No comments:
Post a Comment