Wednesday, November 27, 2019

VISHNU SAHASRANAMAM



ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 



                                                                     ஆயிர  நாமன்   (186 - 201)

186. சுரானந்தன்: தேவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளி தருபவன்.

187. கோவிந்தன்: கோவிந்தன் என்று அர்த்தம் எழுத வாழ்நாள் போதாது. நான்கு அர்த்தங்கள் மட்டும் சொல்கிறேன்: கோ என்றால் பூமி, பசு, வாக்கு, வேதம். பூமி எப்படி அகழ்வாரையும் எல்லாவற்றையும் தாங்குகிறதோ அப்படி நம்மை தாங்குபவன். பசு ரக்ஷகன். அவனன்றி ஒரு அக்ஷரமும் வாயை விட்டு சொல்லமுடியாதோ அந்த கோவிந்தன். வேதமே உருவானான். எல்லாமே கோவிந்தன். மஹா விஷ்ணு.

188. கோவிதாம்பதி: ரிஷிகள், முனீஸ்வரர், யோகிகள், குரு, மஹான்கள், ஞானிகள் இவர்கள் தொழுதேத்துபவன். பரமாச்சார்யன்.

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||

189. மரீசி: பிரகாசிப்பவன். உள்ளுணர்வு காணும் யாவற்றையும் ஒளி வீசச் செய்கிறது.

190. தமனன் : நம்முள் கிளம்பும் ராக்ஷஸ உணர்வை அழுத்தி அமுக்கும் சக்தி. தச அவதாரங்களில் எத்தனை எத்தனை ராக்ஷஸர்களை விஷ்ணு வதம் செய்த்திருக்கிறார்! ஆத்மாவாக உள்நின்று இன்ப துன்ப சுக துக்கங்களை மீறி நமது ஜீவனை ரக்ஷிப்பவர்.

191. ஹம்சன் : நமது ஜீவன் பந்தங்களிலிருந்து விடுபட்டால் பிரம்மமாக வழியுண்டு. ஜீவாத்மாவை ''அஹம் ப்ரம்மாஸ்மி'' யாக பரிசுத்தமாக்குபவர் தான் விஷ்ணு எனும் ஹம்சர்.

192. சுபர்ணன்: அழகான வெண்மையான இறகுகள் கொண்ட ரெண்டு பறவைகள் ஒரு கிளையில். ஒன்று பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க ஒன்று பழங்களை, காயை, புளித்ததை, இனிப்பை உண்டு கழிக்கிறது. தின்கின்ற பறவை ஜீவன், மற்றது சாக்ஷியான ஆத்மா.
193. புஜகோத்தமா: அனந்தன் நாகங்களில் உத்தமன். ''சர்ப்பங்களில் நான் அனந்தன் ''என்றான் கிருஷ்ணன் கீதையில்.

194. ஹிரண்யநாபன்: நாபி கமலத்தில் பிரமன் தோன்ற காரணன். ஹிரண்ய கர்பன். பத்ம நாபன்.

195. சுதபா: மேன்மையான தபஸ்வி. தவஸ்வரூபன். சித்தத்தில் சங்கல்பத்தால் சகலமும் தோற்றுவித்தவர்.

196. பத்மநாபன்: நாபியில் தங்கத் தாமரை கொண்டு சகல ஜீவன்களும் பிறப்பித்தவன்.

197. பிரஜாபதி : சகல ஜீவர்களையும் படைத்து காத்து அழிக்கும் தலைவர் அவர் . அன்னவர்க்கே சரண் யாங்களே .

22.அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா ||

198. அம்ரித்யு: அழிவற்றவன். பிறப்பு இறப்பற்றவன். அம்ருதன். தோன்றி அழுவுறுபவைகளை படைத்து காத்து அழித்தாலும் தான் அவற்றிலிருந்து தனித்தவன்.

199. சர்வத்ருக்: எதையும் அறிபவன் உணர்பவன் காண்பவன். சர்வஞானி.சர்வ சாக்ஷி.

200. சிம்ஹா: த்வம்ஸன். மாயையை அடக்கி ஆள்பவன். மனம் வாக்கு காயம் அனைத்தையும் கடந்தவன்.சம்ஹாரன். மனக்குகையில் கர்ஜனையோடு சஞ்சரிப்பவன். ''மிருகங்களில் நான் சிம்மம்'' என்கிறார் கிருஷ்ணன்.

201. சந்தாதா : கர்மம் -கர்மபலன் இதை எல்லாம் நிர்ணயிப்பவன். கர்மபலனே கர்மம் தான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...