அறுபது அழைத்தது J K SIVAN
இன்று ஒரு விசேஷமான வைபவத்துக்கு அழைப்பு வந்ததால் சென்றேன். மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தை சுற்றி அநேக கல்யாண மண்டபங்கள் உள்ளன. எல்லாமே நடுத்தர வர்க்கம் விரும்பி செல்பவை. ஒரு 150-200 பேரை சமாளிக்க கூடியவை. அங்கே ஒரு நண்பருக்கு இன்று 60 வருஷங்கள் பூர்த்தியான வைபவம்.
அந்த நண்பர் என் நண்பர் மட்டுமல்ல. நம் நண்பர். ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பண சேவா நிறுவன நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்பவர். நமது முகநூல் வாட்ஸாப்ப் குழுவில் அங்கத்தினர் என்பதால் விடாமல் ஆன்மீக செயதிகளை வாசிப்பவர். கிருஷ்ண சேவை மனப்பான்மை கொண்டவர்.
யார் என்று சொல்லவில்லையே, தாராபுரம், பெல்லம்பட்டி சேஷாத்திரி ஐயங்காரின் ரெண்டாவது புத்ரன் ஸ்ரீ வேங்கடேசன். சுறுசுறுப்பானவர். இனிமையாக பழகுபவர்.
என்னை மண்டபத்தில் பார்த்ததும் தம்பதி சமேதராக நமஸ்கரித்து உபசரித்து கட்டாயம் இருந்து சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் நிர்பந்தித்து விடை பெறும்போது ஒரு போட்டோ என்னோடு எடுத்துக்கொண்டு கையில் ஒரு பையில் தேங்காய் சில பக்ஷணங்களை கொடுத்து அனுப்பியவர்.
க்ரிஷ்ணார்ப்பணம் சேவா குழுவில் நட்பு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது ஒவ்வொருவருடனும் என்று தெரிவிப்பதற்காக, அறிவிப்பதற்காக இந்த செயதியை வெளியிட்டேன். அதற்கு தான் நான் அடிக்கடி சொல்வது நாம் ஒரே குடும்பத்தினர். ஸ்ரீ வசுதேவ குடும்பத்தினர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யன்றி வேறொன்றுமறியேன் பராபரமே கொள்கையுள்ளவர்கள்
வேங்கடேசன் தம்பதியர் குடும்பம் ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ண சேவையில் தொடர்ந்து ஈடுபட கிருஷ்ணனையே வேண்டி ஆசிர்வதித்தேன்.
ஸ்ரீ வெங்கடேசன் சதாபிஷேகத்திலும் நாம் எல்லோரும் கலந்து கொள்வோம். கிருஷ்ணன் அருள்வான்.
ஒரு விஷயம். என்னால் முடிந்தபோதெல்லாம் என்னை அழைத்தவர்கள் அழைப்பை நான் தட்டுவதில்லை. என்னையும் மீறி சில சந்தர்ப்பங்கள் என்னை உடலோடு நேரில் சென்று கலந்துகொள்ள விடா விட்டாலும் என் மனம் அவர்களோடு இருக்கும், வாழ்த்தும் வணங்கும்
No comments:
Post a Comment