Sunday, November 3, 2019

THIRUKKOLOOR



திருக்க
ர் பெண்பிள்ளை ரஹஸ்யம்
J K SIVAN

1 நான் என்ன அக்ரூரரைப் போலவா?

நமக்குள் ஒரு பழக்கம். பண்பாடும் கூட. எந்த ஊரில் பிறந்தோமோ அந்த ஊர் கோவிலின் பிரதான சுவாமி பெயர் வைப்பது. குலதெய்வம், இஷ்ட தெய்வம் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது..
பழனியில் நிறைய முருகன், கந்தன், தண்டபாணி, சுப்ரமணியன்கள் , சுவாமிமலையில் நிறைய ஸ்வாமிநாதன்கள் , மதுரையில் நிறைய சுந்தரம், சுந்தரேஸ்வரன், மீனாட்சி சுந்தரம், சொக்கலிங்கம், சிதம்பரத்தில் நடராஜன்கள், இது போல் நிறைய. ஒருவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பெயரை கேட்டேன். ''வைத்த மாநிதி'' என்கிறார். நான் முதலில் அதை சரியாக கேட்கவில்லையா, சரியாக கவனிக்க வில்லையா தெரியவில்லை.. ''ஸார் புரியவில்லை, உங்கள் பேரை சொல்லுங்கள்'' ''வைத்த மாநிதி '' மிகவும் தமிழ் வாசனை வீசும் பெயராக இருக்கிறதே. ''உங்களுக்கு எந்த ஊர்''? என்றேன். ''திருக்கோளூர்'' என்றார் . ஸ்ரீ ராமானுஜர் சம்பாஷித்த அந்த பெண் ஏன் திருக்கோளூரை விட்டு செல்கிறாள் என்ற காரணம் தெளிவாக அல்லவோ சொல்லிவிட்டாள் . அந்த 81 வாசகங்களில் அந்த திருக்கோளூர் பெண் வைணவத்தைச் சாறாக, மோராகப் பிழிந்து தருகிறாள் பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்ட காலகட்டத்தில், தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்த அப்பெண்ணின் வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்து போகிறார் இராமானுஜர், பூரண உண்மைதான். திருக்கோளூரில் ஒரு சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த அளவுக்கு ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது எல்லோரும் ''புக'' வேண்டிய ஊர்தான் என அந்த பெண்ணை ப் பணிகிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தின் முழு சரித்திரத்தையும், அதன் கொள்கைகளையும் 81 வரிகளில் அசாதாரணமாக விளக்கிய உன்னை விட இவ்வூரில் வாழ தகுதியானவர் எவர் இருக்க முடியும்?!" - என்று கூறி, அப்பெண்ணின் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பெண்ணும், பகவான் இராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்கி ( பகவான் இராமானுஜர் வெளியிடங்களில் உணவு உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவர். மேலும் எங்கும் கேட்டு உணவு உண்ணாதவர்.) உணவு பரிமார, சுவாமி இராமானுஜர் மனதார உண்டுவிட்டு, அப்பெண்ணிற்கு ஆசிகள் வழங்கிச் சென்றார். . பிறகு ராமானுஜர் அவளுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி அவள் திரும்பி திருக்கோளூர் ஊருக்குள் செல்வதை பற்றி யோசிக்க வைக்கிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார் அப்போது அந்த பெண் ராமாநுஜரிடம் ஒரு கண்டிஷன் போடுகிறாள். 'நான் இந்த ஊரில் இருப்பதாக இருந்தால் இங்கு ஆலயம் சிறப்பாக விழாக்கோலங்களோடு வைபவங்களோடு நடைபெறவேண்டும். மதுரகவி ஆழ்வாரின் பெருமை உலகளவு பரவ இங்கே உற்சவங்கள் பூஜா விதிமுறைகள் நடக்கவேண்டும். அவற்றை நீங்கள் கவனிப்பீர்களா?'' என்று கேட்கிறாள்? ஆலய அன்றாட பூஜை , வைபவ நடைமுறைகளை காலா காலங்களில் முறையாக நடத்த சீர்திருத்தம் செய்ய வேண்டுகிறாள். ++ ஒரு துக்கடா விஷயம். நான் திருக்கோளூர் ஆலயத்தில் ஒரு வயதானவரைப் பார்த்தேன். எங்களை அழைத்து பாசுரங்கள் பாடி அர்த்தம் சொன்னார். அழகிய சிற்பங்களை, நுண்ணியவையாக கண்ணில் எளிதில் படாதவைகளை கோவில் சுவர்களில், இடுக்கில், அடியில், தூணில் எல்லாம் காட்டினார். அற்புதமாக இருந்தது. T V S நிர்வாகத்தின் ஒவ்வொரு புதிய வண்டியும், வாகனமும் இங்கே முதலில் வந்து பெருமாள் ஆசி அருள் பெற்ற பிறகு தான் வெளியே செல்லும் என்று கேள்விப் பட்டேன் . அவர்கள் வெற்றியின் ரகசியம் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் போல் வியக்க வைக்கிறதே. ++ திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எந்த ரகசியமும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும் அந்த பெண் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 வார்த்தைகள். வைணவத்தை சேர்ந்த பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. திருக்கோளூர் பெண்பிள்ளை முதலில் யாரை அடையாளம் காட்டுகிறாள் தெரியுமா. அக்ரூரரை. 1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே''
"அடியேன் அவர்களைப் போல் ஞானமும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தேன் என்றால் நானும் இவ்வூரில் தங்கலாம். ஆனால் அவர்களைப் போல் ஞானம் கொன்டவள் இல்லை. அழகிய மரமாகும் திறன் இல்லா விதை வயலில் இருந்தால் என்ன பாலைவனத்தில் இருந்தால் என்ன? இரண்டும் அதற்கு ஒன்று தானே. அடியேன் கூறிய நற்காரியங்கள் ஏதும் செய்திராமல், எவ்வாறு நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக இருக்கமுடியும்? என்னுடைய இருப்பின் காரணமாக திருக்கோளூர் தன் புனிதத்தை இழந்துவிடக்கூடாது. அதனால்தான் நான் இந்த ஊரை விட்டு வெளியே செல்கிறேன்]
கோகுலத்தில் பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் லீலைகள் பல புரிந்து வாழ்ந்தபோது, கம்சனால் அனுப்பப்பட்ட மஹா சக்தி பலம் வாய்ந்த அரக்கர் அரக்கியை கொன்றான். இதனால் ஏமாற்றமும் கோபமும் கொண்டு எப்படியாவது கிருஷ்ணனை, பலராமனை, மதுராவிற்கு அழைத்து அவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டினான். பட்டத்து யானையினைக் கொண்டோ அல்லது பட்டத்து மல்யுத்த வீரர்களான சநுரன் மற்றும் முஷ்டிகன் கொண்டோ கிருஷ்ணன் பலராமனை கொன்று விடலாம் என்பதே கம்சனின் எண்ணம். மதுராவில் ஒரு தனுர் யாகம் நடத்த ஏற்பாடு செய்து அதில் பங்கேற்க கிருஷ்ணன் பலராமன் இருவரையும் நேரில் சென்று அழைப்பதற்கு, தனது மந்திரி அக்ரூரரை அனுப்புகிறான் கம்சன்.
ஒரு விஷயம் அக்ரூரர் கிருஷ்ணனின் அப்பா வசுதேவரின் சகோதரர். கிருஷ்ணன் மீது அலாதி அன்பும் ப்ரேமையும் பக்தியும் கொண்டவர். கம்சனின் நோக்கம் என்னவென்று அவருக்கு தெரியும். அனால் அது நிச்சயம் நடக்காது என்றும் அறிவார். ஆகவே தான் கிருஷ்ணனை நேரில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நழுவ விடாமல் புறப்படுகிறார். இதுவரை பார்க்க முடியாத கிருஷ்ணனை, அவன் அருமை பெருமைகளை மட்டுமே காதால் கேட்டவருக்கு நேரில் பார்க்கும் பாக்யம் அல்லவா இது? போகும் வழியெல்லாம் க்ரிஷ்ணனைப்பற்றியே சிந்தனை.
கோகுலம் சென்று நந்தகோபன் யசோதையின் அனுமதியோடு, ஆசிர்வாதத்தோடு பலராமன் கிருஷ்ணன் இருவரையும் மதுராவுக்கு அழைத்து செல்கிறார். ஆனந்தமாக கிருஷ்ண தரிசனம். மனதில் பரமதிருப்தி. அவனது அருளும் கிடைத்து மோக்ஷம் எய்தினார் அக்ரூரர்.
இப்போது சொல்லுங்கள் ஸ்ரீ ராமானுஜரே , நான் என்றாவது ஒருநாள் அக்ரூரர் போல் மாறா பக்தியும் அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு எந்நேரமும் அந்த கிருஷ்ணனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேனா?. இந்த திருக்கோளூர் புண்ய க்ஷேத்ரத்தில் தங்கி இருக்க என்ன அருகதை எனக்கு? ", என்பதை ஒரு வரியில் கேட்கிறாள் திருக் கோளூர் அம்மாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...