ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் ( 138-143)
இன்னும் சில தினங்களில் விஷ்ணுலோகம் செல்லப்போகும் பீஷ்மர் வாயார விஷ்ணுவை ஆயிர நாமங்களால் போற்றுகிறார். யுதிஷ்டிரனுக்கு சொல்வது போல் தனக்கே முதலில் மகிழ்ச்சியோடு இந்த நாமங்களை நினைவு கூர்கிறார். நமக்கும் அற்புதமாக அவை கிடைக்க வழி செய்து விட்டார்.
138. சதுர்வியூகன்: சத்ய ஸ்வரூபரான விஷ்ணு நான்கு சக்திகளை உருவாக்கியவர். வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன். (கிருஷ்ணன், சகோதரன் பலராமன், கிருஷ்ணன் மகன் பிரத்யும்னனாக,,கிருஷ்ணனின் பேரன் அநிருத்தனாக ). தன்னை நான்காக பிரித்துக்கொண்டவர்.
139. சதுர்தம்ஷ்ட்ரன்: பலம் வாய்ந்த கோரைப்பற்களை கொண்ட சிம்மமாக, பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தவர். நான்கு பாதங்கள் (சதுஷ்பாதம்) கொண்ட ஐராவதம் என்றும் சொல்வதுண்டு. ஐராவதம் விஷ்ணு அம்சம்.
140. சதுர்புஜன்: நான்கு கரங்கள் கொண்டு ஆயுதம் தாங்கியவர்.சங்கம், சக்ரம், வாள்,கதாயுதம் ஆகியவை அவை.
16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: ||
141. ப்ராஜிஷ்ணு: தானே ஒளிரும், ஸ்வயம்பிரகாச உணர்வு எங்கிருந்தும் ஒளியை தேடவோ நாடவோ வேண்டாமே. அதன் ஒளியின் முன் மற்றவை ஒளிராது. அதுவே விஷ்ணு.
142. போஜனன்: போஜனம் வெறும் உணவை மட்டும் குறிக்காது. மாயையால் கட்டுண்டவற்றை, உலகத்தின் பொருள்களை நாம் அனுபவிப்பதால் போஜனம் செய்வது என்று எடுத்துக் கொள்ளலாம்.
143. போக்தா = அனுபவிப்பவன். உணவை மட்டும் அல்ல. உலக சுக துக்கங்களை.
144. ஸஹிஷ்ணு= துன்பங்களை, துக்கங்களை கஷ்டங்களை சகித்துக் கொள்பவன். பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியவன்= விஷ்ணு. ஹிரண்யகர்பன். விராட் புருஷன் அவனிலிருந்தே சகல உயிர்களும் தோன்றின. அவனே விஷ்ணு. அகம், மலம் என்பன பாபம் , ஆகியவற்றை குறிக்கும். அனகன் ,அமலன் பரிசுத்தன் பாபமற்ற விஷ்ணுவைகுறிக்கிறது. . ஸஹிஷ்ணு: உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு செயல்கள் எல்லாவற்றையும் சரி சமமாக சகித்துக் கொள்பவர்.
145. ஜெகதாதிஜா: மேலும் கீழும் உள்ள லோகங்களை, ஜகத்தை வென்றவன் விஜயன். விஷ்ணு.
146. அனகா: பாபங்கள் தன்னை அணுகாதவர்.
147. விஜயா: வெற்றி, ஜெயம், என்பதன் திரு உருவம் ஸ்ரீமந் நாராயணன்
148. ஜேதா : விஷ்ணு. வெற்றியே எதிலும் என்றும் கொண்டவன்.
149. விஸ்வயோநி: பிரபஞ்சம் உருவாக காரணன். விஷ்ணுவின் சங்கல்பமே.
150. புனர்வசு: மீண்டும் மீண்டும் தோன்றுபவன். அவதரிப்பவன். விஷ்ணு:
17.உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர் ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:||
151. உபேந்திரன்: இந்திரன் தம்பி:
152. வாமனா:அதிதியின் மகனாக வாமனனாக தோன்றிய விஷ்ணு. வாமனனாக சிறிய உருவினனாக என்று சொல்லும்போது இதய குகையில் வாழ்பவன் சிறிய உருவான ஆத்மா என்று பொருளாகிறது. அருமையான நாமம்.
153. ப்ராம்சு : அளவில் பெரியது. வாமனன் த்ரிவிக்ரமனானான். மூன்றுலகும் வியாபித்தான் .
No comments:
Post a Comment