ஆதி சங்கரர் J K SIVAN
நிர்வாண மஞ்சரி
ஆதி சங்கரர் நிர்வாணமஞ்சரி என்று 12 ஸ்லோகங்களை அத்வைத சாரமாக அற்புதமாக எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றிலும் கடைசி வார்த்தை சிவோஹம் என்று முடியும். நானே சிவன் என்று த்வனிப்பது. அத்வைத சித்தாந்தத்தை அமுலாக்கும் வார்த்தை. யாதும் ஒன்றே.
நான்கு ஸ்லோகங்களை இன்று தருகிறேன். எனது நண்பர் ஸ்ரீ பி ஆர் ராமச்சந்தர் இந்த ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை கூகுளில் பிடித்து படிக்கலாம்.
நிர்வாணம் என்றால் ஆடையின்றி என்று மட்டும் புரிந்துகொள்ளாமல் ஆசையின்றி, எதிலும் பற்றற்று எல்லாம் ஒன்றே அது ஒரே தெய்வமான அவனே என்று புரிந்துகொண்டு படித்தால் சுலபமாக விளங்கும்.
Aham na amaro naiva marthyo na daithyo,
Na Gandharva Yaksha, pisacha prabhedha,
Pumanniva na sthree naiva shanda,
Prakrushta prakasa swaroopa Shivoham.
நீ யார் ? இது தான் கேள்வி. அதற்கு விடை விசித்திரமாக வருகிறது. நான் கடவுளோ, தேவனோ அல்ல, அதற்காக என்னை அசுரன் என்றோ மானுடன் என்றோ நினைத்து தவறு செய்யாதே. நான் அதுவுமல்ல. ஓஹோ யக்ஷ, கந்தர்வ, பைசாச வகையராவோ என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லை
யப்பா. நிச்சயம் நீ ஆணுமல்ல பெண்ணுமல்ல பொதுஇடத்தில் கை தட்டி கன்னத்தை கிள்ளி காசு கேட்கும் அலி எனும் ரெண்டும் கெட்டான் தானே? அட முட்டாளே, உன் புத்தி இப்படியா போகவேண்டும். உயர்ந்த வகையில் நினையேன். நான் சிவோஹம் என்று சொல்லிக்கொள்ளும் ஒளி மயன். இயற்கை.
Aham naiva balo, yuva naïva vrudho,
Na varni , na brahmachari na Grahastha,
Vansdhobhi naham sanyasa dharma,
Jaga jjanma nasaika hethu Shivoham. 2
நான் பால்குடிக்கும் குழந்தையோ, வாலிபனோ, கிழவனோ அல்ல. நான் எந்த வர்ணத்தவனும் இல்லை, கல்யாணமாகாத பிரம்மச்சாரி இல்லை. குடும்பஸ்தனுமல்ல..காட்டை தேடிப்போய் மரத்தடியில் உட்கார்ந்து தவம் செய்யும் ரகம் இல்லை. தாடி மீசை,மொட்டை தலை, ருத்ராக்ஷ சன்யாசியுமில்லை. இன்னுமா தெரியவில்லை, பிறப்பு பிறப்பற்ற சிவன், சிவோஹம், சம்ஹார மூர்த்தி.
Aham naïvameyasthiro bhoota maya,
Thadaivekshithum maam pradhangaasthupaya,
Samaslishta kayo thryo apyaadhwitheeya,
Sada athindriya sarva roopa shivoham. 3
''அடேய், என்னை எதாலும் எதிலும் அளக்க முடியாதடா. எவராலும் எந்த உருவிலிருப்பேன் என்று கற்பனை செய்யக் கூட முடியாது. எவர் கண்ணுக்கு நான் எப்படி வெவ்வேறாக தெரிந்தாலும், நான் எல்லாவற்றின் ஒட்டு மொத்த சேர்க்கை, பலவற்றை ஒன்றாக சேர்த்து காட்சியாக தருபவன். நான் அந்த த்ரிமூர்த்திகளில் ஒன்றானவன் என்று கருதப்பட்டாலும் நான் எந்த எண்ணிக்கை யிலும் இல்லாதவன், எவருக்கும் நா
ன் தாழ்ந்தவன் அல்லன். பின் வரிசையில் இல்லை. நான் சிவோஹம். சிவன். எங்கும் எதிலும் எதுவுமாக இருப்பவன். புலன்களுக்கு எட்டாதவன்.
ன் தாழ்ந்தவன் அல்லன். பின் வரிசையில் இல்லை. நான் சிவோஹம். சிவன். எங்கும் எதிலும் எதுவுமாக இருப்பவன். புலன்களுக்கு எட்டாதவன்.
Aham naiva mantha na gantha na vaktha,
Na kartha , na bhoktha, na muktha asramastha,
Yadaaham mano vruthi bheda swaroopa,
Sthadha sarva vuthi pradheepa, shivoham. 4
நான் யோசிப்பவன் அல்ல. எங்கும் எதையோ நாடி தேடி அலைபவனல்ல. பேசிப்பேசி நாளை ஓட்டுப வனல்ல. நான் எதையும் செய்ய வேண்டிய தில்லை, எதையும் உட்கொள்ளுபவனும் அல்ல. ஆஸ்ரமவாசியாகி எதையோ நோக்கி எதிர்பார்த்து தேடுபவனுமல்ல. மனத்தில் ஆடும் எண்ணங்கள் அவற்றின் தோற்றங்களாக காணப்படுபவன். நான் உண்மையில் அவையல்ல. நான் சிவன், சர்வ காரணன்.
to continue
No comments:
Post a Comment