ஆதி சங்கரர் J K SIVAN
நிர்வாண மஞ்சரி -2
ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி 16 ஸ்லோகங்களில் முதல் நான்கு ஸ்லோகங்களை நீங்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டுவிட்டீர்கள். இதோ இரண்டாவது ஈடு. சுடச்சுட அத்வைத சித்தாந்தம். இன்னும் எட்டு ஸ்லோகங்கள் இப்படி நான்கு நான்காக இரண்டு பதிவுகளாக வரும் சங்கரர் புரிகிறாரா?
Na mey loka yathra pravaha pravruthy,
Rna mey bandhabhuddha dureeha nivurthy,
Pravuthy nivurthasya chithasya vruthy,
Ryathasthanvaham thathswaroopa shivoham 5
Nidhanam yada jnana karyasya karya,
Vina yasya sathvam swatho naiva bhathi,
Yadhyantha madhya antharalantharala,
Prakasathmakam syatha devaham asmi., 6
இதோ ஒரு உபாயம். அறியாமை அஞ்ஞானம் எனும் அழுக்கு நீங்கவேண்டுமா? அஞ்ஞானத்தினால் புரியும் செயல்க, எண்ணங்கள் அகல வேண்டுமா? அறியாமை அஞ்ஞானமே அறவே விலக வேண்டுமா, உண்மை, சத்யம் அறியாமல் புரியாமல் இருளில் மூழ்கி ஒளி தேடுகிறாயா? முதல் இடை கடை என்று ஒன்று மாற்றி உன்னை பின்னல் போல் சம்சார தொடர்புகள் பிடித்து உன் மனம் வாடுகிறதா, இதிலிருந்து விடுதலை பெற சில தெய்வங்களை நாடினாயா, அந்த தெய்வம் நான் தான். சிவோஹம். நான் சிவன்.
Yathoham na budhir na mey karya sidhi,
Yatho nahamangam na mey linga bhangam,
Hrudhakasa varthi, gathanga thrayarthi,
Sada Sachidananda murthy Shivoham., 7
நீ தேடும் அறிவாக, ஞானமாக என்னை பார்க்கிறாயா, உன் கர்மா அல்லது கார்ய சித்தி, பலனாக, என்னை பார்க்காதே. நான் அதல்ல . உன்னுள் விளங்கும் ஹ்ருதய ஆகாசம் நான். உருவமோ அருவமோ நான் தான் அது. புலன்களின் சுகமோ துக்கமோ அல்ல. பரமானந்தம், பிரம்மானந்தம், சதானந்தம், சித்தானந்தம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாயா. நான் தான் அது சிவன். சிவோஹம்.
Yadaaseedvilasad vikaram jagadha,
Dwikarasrayam naa dwithyathwath syath,
Mano budhi chithahamakara murthy,
Pravruthiryatha syatha devaham asmi., 8
உலகம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக பேதமாக காண்கிறதா அந்த பேதம் சிவனாகிய நான்; என்னிலே அந்த பேதம்; ஆனால் நான் அபேதன் . ஏனென்றால் என்னை ரெண்டாக பார்க்க முடியாது. ஒன்றே பலவாக காண்பவன். பலனாக காணும் யாவும் ஒருவனாகிய நான். சிவன். சிவோஹம். ''
The attached picture is by the immortal artist Raja Ravi Varma depicting the teaching of Adhi Sanara to his prime disciples centuries ago on the banks of Ganga.
No comments:
Post a Comment