திருக் கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்: J K SIVAN
14 ''சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே''
தெரியாத விஷயங்கள் ''ரஹஸ்யம்'' எனப்படுவது வாஸ்தவம். திருக் கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் என்ற 81 அற்புத விஷயங்கள் ராமானுஜரால் நமக்கு ஒரு பெண்ணிடமிருந்து வந்ததாக அமைந்திருக்கிறது.இப்போது 1 4வது ''வார்த்தையாக '' அந்த திருக்கோளூர் பெண் சொன்னதை அறிவோம். ''சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே ''
நம்மாழ்வார் இணையற்ற ஒரு ஞானி. அழகு தமிழில் பாசுரங்கள் இயற்றயவர். ஆழ்வார் திருநகரியில் பிறந்த மாறன் என்ற இயற் பெயர் கொண்டவர். அவரை விஷ்வக்சேனரின் அம்சம் என்பார்கள். விவேகானந்தர், ஆதி சங்கரர் போல இந்த அற்புத ஞானியும் இளவயதில் மறைந்தவர். முப்பத்திரண்டு வயது. ஒரு புளியமரத்தடியில் முதல் 16 ஆண்டுகள் கழிந்ததாம்.மதுரகவியால் அவர் பாசுரங்கள் நமக்கு கிடைத்தன.
நம் ஆழ்வார் என்று பெருமாளால் போற்றப்பட்டவர் பேசிய முதல் பேச்சு மதுரகவி ஆழ்வாரை அவர் சீடனாக்கியது.
மதுரகவி: "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எதைத் தின்று எங்கே கிடக்கும்?"நம்மாழ்வார் : "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"
ஜடமான இந்த உயிரற்ற ''செத்த'' உடலில் ஜீவன் என்கிற சிறிய ஆத்மா பிறந்தால் அது அந்த மனிதன் செய்த பூர்வ ஜென்ம வினையின் பயன்.
“அத்தை தின்று'' : உடலில் குடி புகுந்த ஜீவன் (ஆத்மா) அந்த வினைகளின் பயனை அனுபவித்துக் கொண்டி இருக்கவேண்டியது தான். பரமாத்மாவின் நினைவு வந்து அவனை சரணடைந்து வினைப்பயன் தீர்ந்து உய்யும்''
நம்மாழ்வாரின் திருவாய் மொழி கொஞ்சும் தமிழில் இனிமையான பக்திரசம் ததும்பும் ஈடிணை யற்ற பாசுரங்கள் கொண்டது. முடிந்தபோது திருவாய் மொழியில் சில பாடல்களை எழுதவேண்டும் என்று ஒரு விருப்பம்.
நம்மாழ்வார், "அடியேன் சிறிய ஞானத்தன்'' ''அறிவிலேன்'', '' பாவி'' ''சிறியேனுடைய சிந்தையுள்'', என்றெல்லாம் தன்னை இகழ்ந்து சொல்லிக் கொள்கிறார்.
இப்படிப்பட்ட மஹா ஞானி நம்மாழ்வாரே, தன்னை சிறியவன் என்று சொல்லிக்கொண்டபோது, நான் ஒரு முறையாவது அவ்வாறு அந்த ''பெரும் ஆளை'' நினைத்து என்னைப்பற்றி சொல்லிக்கொண்டதுண்டா? நான் எப்படி இந்த திவ்ய தேசத்தில் வசிக்க தகுதி வாய்ந்தவள்? நீங்களே சொல்லுங்கள்'' என்று ஸ்ரீ ராமானுஜரை கேள்வி கேட்கிறாள் திருக்கோளூர் பெண்மணி.

No comments:
Post a Comment