விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் (76-90)
பீஷ்மருக்கு எப்படி விஷ்ணுவின் இத்தனை நாமங்கள் தெரிந்தது?. அவரோ ஒரு க்ஷத்திரியன். ப்ரம்மச்சாரி . கௌரவர்களுக்கு பாதுகாப்பாக அரணாக தன்னை அர்ப்ணித்துக் கொண்ட ஒரு மஹா வீரன். அவ்வளவு தானா? இதற்கும் மேல் தெரிந்து கொள்ளவேண்டியது அவர் அஷ்ட வசுக்களில் ஒருவனான ப்ரபாஸன். விஷ்ணு பக்தன். விஷ்ணுவின் பெயர்கள் தெரியாமலா இருக்கும்?
இங்கே கொடுத்திருப்பது ஒரு சின்ன அர்த்தம். புரிந்து கொள்வதற்காக ஒரு சாம்பிள். இதையே முழு அர்த்தமாக ஒவ்வொரு நாமத்தையும் பல பக்கங்களில் சொல்ல விஷயம் இருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஒவ்வொரு நாமத்துக்கும் பூரா அர்த்தமாக விளக்க வாழ்நாள் போறாது. சில பண்டிதர்கள் வித்வான்கள் வருஷம் பூரா சொல்கிறார்கள்.
76. தன்வீ: சார்ங்கம் எனும் தனுஸை ஏந்தும் வில்லாளி.வில்லாளி. ராமனாக கோதண்டம் தரித்த கோதண்டபாணி அல்லவா அது போல;
77. மேதாவி: திரிகால ஞானியாக சாஸ்திரம் அறிந்த மேதாவி.
78. விக்ரமா: எந்த சக்தியாலும் வெல்லமுடியாதவன். வெற்றியை தவிர வேறொன்றும் அறியாதவன்
79.க்ரமா: எதையும் நேர்த்தியாக புரிபவர். கிரமமாக பணிபுரிபவர்
80. அநுத்தமா: ஈடு இணை இல்லா உத்தமன்
81. துராதர்ஷா: எந்த சக்தியாலும் வெல்லவோ எதிர்க்கவோ முடியாதா பரமாத்மா
82. க்ரிதஞன் : எந்த ஒரு காரியத்திலும் மூல சக்தி. ஆதாரம். எல்லாமும் அறிந்து தானே அது ஆனவர்.
83. க்ரிதி: நமது நற்செயல்களை மெச்சி நமக்கு மோக்ஷமளிப்பவர். தீய செயல்களுக்கு தவறாமல் தண்டனை அளிப்பவர்.
84. ஆத்மவான்: .எல்லா ஜீவன்களிலும் ஆத்மாவாக பரிமளிப்பவன்.
10. ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: ||
85. ஸுரேஸ :சுரர்களுக்கு ஈசனான சுரேசன்.
86.சரணம்: சகல துன்பங்கள்,துக்கங்கள் போக்கும் தஞ்சம்.அடைக்கலம் அவனே.
87. ஷர்மா: சத் சித் ஆனந்த மயமானவன்.
88. விஸ்வரேதா: பிரபஞ்ச ஜீவன்கள் தோன்ற வித்தானவன்
89. ப்ரஜாபவா: .அவனிலிருந்தே அனைத்தும் அனைவரும் உருவாகும் பிரஜாபவான்.
90. அஹா: பிரபஞ்சத்தில் நேரம் வரையறுக்கும் காலம் அவரே.
No comments:
Post a Comment