வள்ளலார் J K SIVAN
1. ஒரு ஆச்சர்யமான மனிதர் .
நெய்வேலி, வடலூர் பக்கம் போகும்போதெல்லாம் கால் தானாகவே வள்ளலார் வாழ்ந்த இடத்தை நோக்கி இழுக்கிறது. வள்ளலாரை .மனிதர் என்று எப்படி சொல்வது? தெய்வம் மானிடனாக வந்த உரு என்பது தான் பொருத்தமாகும். காவி உடை அணியவில்லை, தாடி மீசை உருத்ராக்ஷமாலை, கையில் கிண்டி இல்லை. எந்த குருவிடமும் தீட்சை
பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள்.
ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். அவரது ஒரு
பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட
அடியோடு அதை
விட்டனர். அவர் பார்வை எக்ஸ்ரே தன்மை
கொண்டதோ என்னவோ?. பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. திடீரென்று மறைவார், தோன்றுவார். எங்கிருக்கிறார்
என்று
அறியமுடியாது. விசித்ரமானவர்..
பார்ப்பதற்கு, மாநிறம்,
ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.நீண்ட மெல்லிய மூக்கு.
விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி.
முகத்தில் ஏதோ சதா எதைப்பற்றியோ கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம்.
நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த
காலத்தில் ஆற்காடு ஜோடு
என்று அதற்குப்
பெயர்) உடம்பை மூட ஒரு
வெள்ளைத் துணி. நீளமாக வேட்டியோடு சேர்ந்து உடம்பு மேலும் போர்த்தப்பட்டிருக்கும்.
ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு
கவளம் அதுவும் ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து அது
தான் ஆகாரம். சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின் தோளில் இருந்தபோதே
சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி,
பரமஆகாசம்) புரிந்துவிட்டது.
பல பாடல்களில் அது அவரது திருவருப்பா பாடல்களில் வெளிப்பட்டது.
சந்நியாசியாய் இருந்தும் உலக இயல் பிடிக்கவில்லை,
பட முடியவில்லையே
இந்த மானிட வாழ்வின் துயரம்
என்று கதறல். போதும் போதும் பட்டதெல்லாம். நிதானமாக படித்தால் அர்த்தம் புரியும் என்பதால் நான் விளக்கம் தர முயலவில்லை.
''படமுடியாதினித் துயரம் பட
முடியாதரசே
பட்டதெல்லாம் போதும்
இந்த
பயம்
தீர்ந்து
இப்பொழுதே
என்
உடல் உயிராகிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல்
உயிராகிய எல்லாம் உவந்தெனக்கே
அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே,
குரு மணியே, மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன்
மணியே, பொன் மணியே, நடராஜ
மணியே
இந்தப்பாட்டில் கண்டபடி தானே இறைவனின் உடல் உயிர் ஆவியானவர் அந்த மா
மனிதர். சித்தர். ஞானி.
இன்னும் வள்ளலார் பற்றி சொல்கிறேன்.
No comments:
Post a Comment