Thursday, November 14, 2019

SHIRDI BABA



மனிதருள் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா

முதல் ஹிந்து முஸ்லீம் ஒருங்கிணைப்பாளர்

ஷீரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே ஒரு கேள்வி பக்தர்களிடையே எழுந்தது. பாபா யார் ? ஹிந்துவா முஸ்லிமா? பாபா சில சமயம் அல்லா ஹூ அக்பர், அல்லா மாலிக் என்பார். அப்படி சொல்வார் என்று எதிர்பார்த்து போனால் அவர் வாய் நிறைய தத்தாத்ரேய மாலிக் என்பார். இதனால் அவரை எண்ணற்ற முஸ்லீம் மக்கள் வணங்கினார்கள். அதே சமயம் ஹிந்துக்களும் அவரை ஈயென மொய்த்தார்கள்.
அவர் வாழ்ந்த மசூதியில் முஸ்லிம்கள் அதிகம் வந்தனர். பார்ப்பதற்கும் அவர் ஒரு முஸ்லீம் போலவே தானே இருந்தார். ஹிந்துக்களும் வந்து அவரை வணங்கி சாம்பிராணி ஆரத்தி எல்லாம் எடுத்தனர். முஸ்லீம் பக்தர்களுக்கு ஹிந்துக்கள் இப்படி பாபாவை வழிபடுவது பிடிக்காது. ஹிந்துக்களுக்கும் பாபாவை முஸ்லிமாக்க மற்றவர்கள் முயல்வது பிடிக்கவில்லை. இந்த இருவகை பக்தர்களுக்கும் ஒருவர் மீது மற்றவர்களுக்கு கசப்பு வளர்ந்து கொண்டு வந்தது.
ஒருநாள் மாலை மஹாலசாபதி பாபா அருகே உட்கார்ந்து அவருக்கு ஏதோ சிச்ருஷை செயது கொண்டி
ருந்தார். அவர் தான் கண்டோபா கோயில் அர்ச்சகர். திடீரென்று ஒரு முஸ்லீம் பக்தர் கூட்டம் கட்டைகள் கயிறுகளோடு அங்கே வந்து உள்ளே நுழைந்தது. முஸ்லிமாகிய பாபா அருகே ஒரு ஹிந்து அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டிருக் கிறானே என்று மஹாலசாபதியை தாக்கினார்கள். ஒவ்வொரு அடி அவர் மேல் விழும்போதும் அவர் துடித்துக்கொண்டு ''பாபா பாபா'' என்று தான் கத்தினார். அப்படி அவர் கத்தும்போதெல்லாம் அந்த அடிகளை எல்லாம் பாபா வாங்கிக்கொண்டார். மஹாலசாபதி தரையில் விழுந்தார். பாபா வெளியே வந்தார்.
ஹிந்துக்களை போலவே முஸ்லீம் பக்தர்களுக்கும் பாபாவின் மேல் அளவுகடந்த மரியாதை, பக்தி. வெளியே கும்பலாக நின்றுகொண்டிருந்த முஸ்லிம்களை பார்த்து பாபா '' சைத்தானே ஒரு பக்கம் என்னை வணங்குகிறாய் இன்னொருபக்கம் என்னை அடித்து வெளுத்து வாங்குகிறாயே இதுதான் உங்கள் பக்தியா?'' என்கிறார். பாபா உடலெல்லாம் அவர்கள் அடித்த காயம்,ரத்தம்,
முஸ்லிம்கள் ஓடிவந்தார்கள். ''பாபா என்ன இது. எப்படி உங்கள் மேல் இவ்வளவு காயம், ரத்தம் எல்லாம்? என்ன ஆயிற்று ? என்று வருந்துகிறார்கள்.
''நீங்கள் தானே என்னை அடித்தீர்கள், என்னையே என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களே என்று கூட்டத்தில் சிலரை கை காட்டுகிறார் பாபா.
'' ஐயோ பாபா இதென்ன அக்கிரமம். நாங்கள் உங்கள் பக்கமே வரவில்லையே, அந்த மகாலசாபதியை அல்லவா அடித்தோம்" என்றனர் அடித்தவர்கள்.
''மஹாலசாபதி என்று யாரும் தனியாக இல்லையே. நான் தானே அவருள் இருந்தவன் '' என்கிறார் பாபா. அவர் என்னை சரணடைந்த பின் அவர் கஷ்டங்கள் என்னுடையதாகாதா?''
கோபத்தோடு தாக்கிய முஸ்லிம்கள் பாபாவின் காலடியில் கண்ணீர் மல்க விழுகிறார்கள். மன்னிப்பு கேட்கிறார்கள். பாபா ஹிந்துக்கள் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கூட்டி
''என்னருமை குழந்தைகளே நீங்கள் இருசாராரும் ஒரு தாய் மக்கள். பகவான் அப்பா. நீங்கள் எல்லோரும் சகோதரர்கள் என்கிறார். எந்த வித்தியாசமும் உங்களுக்குள் வேண்டாம். உங்கள் எல்லோருக்கும் உள்ளே ஒரே ஒரு அருமையான வஸ்து இருக்கிறது இதயம் என்ற ஒன்று . எவன் அந்த இதயத்தில் மதத்தை மட்டும் காண்கிறானோ அவன் மாதவனை காண முடியாது. உங்களுக்குள் வசிக்கும் பகவானை எந்த பெயராலும் நீங்கள் காணலாம்.அவர் ஒன்றே.பெயரகள் பல.
இப்படிப்பட்ட ஹிந்து முஸ்லிம்களை இணைத்த மஹான் அந்த காலத்திலேயே 80 வருஷங்கள் ஷீர்டியில் வாழ்ந்தவர்.
பாபாவின் வாழ்க்கை சரிதம் எழுதியவர் ஹேமத்பந்த். பாபாவின் வாழ்க்கை குறிப்புகளை கேட்டபோது பாபா ஒரு விவரமும் தரவில்லை. எப்போவோ ஒருமுறை மஹாலஸாபதியிடம் தன்னுடைய பிறந்தநாள் பொறந்த ஊர், யார் பெற்றது யார் வளர்த்தது எல்லாம் சொல்லி இருக்கிறார்.
மஹாலசாபதிக்கு வெறும் பூஜை மந்திரங்கள் மட்டும் தான் தெரியும். நல்லவேளை ஒரு சிறு காகிதத்தில் பாபா சொன்ன குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அது பின்னர் சாய் சத்சரித்திரம் புத்தக ம் எழுத உதவியது.
பாபா பற்றி வெளியுலகம் எதுவும் அறியாது. அவருடைய 16 வயதுக்கு பிறகான விஷயங்கள் மட்டும் கொஞ்சம் தெரியவந்தது. பாபா பிறந்த நாள் 27 செப்டம்பர் 1838. சமாதி யடைந்தது 1918 விஜயதசமி அன்று. , இந்த 80 வருஷங்கள் அடாடா எத்தனை அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறார். எத்தனை பேருக்கு நன்மை கிடைத்திருக்கிறது. எத்தனை பேருக்கு துன்பம் எல்லாம் விலகியிருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...